அக்கறையை உருவாக்குதல்

நம்மைப் போன்ற உணர்வுகளைக் கொண்ட மனிதர்களே மற்றவர்களும் என்பதை கருத்தில் கொண்டு, நம்முடைய செயல் மற்றும் பேசும் முறைகள் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்பதற்கு ஏற்ப நம்முடைய அக்கறை மற்றும் பரிவை மேம்படுத்தலாம்.

விளக்கம்

சுவாசித்தலில் கவனம் செலுத்தி அதன் மூலம் நாம் நம்முடைய மனதை ஒரு முறை அமைதிப்படுத்தினால், எந்த வகையான தியானத்திற்கும் அதுவே முன்நிபந்தனையாகும், நாம் இப்போது நேர்மறை, ஆக்கப்பூர்வமான மனநிலையை உருவாக்கத் தயாராக இருக்கிறோம். மற்றவர்களுடன் கலந்துரையாடும் போது மிக முக்கியமானது என்னவென்றால் அவர்கள் மீது உண்மையான கவனம் மற்றும் அக்கறை கொண்டிருத்தல். இதன் பொருள் நம்மைப் போலவே உணர்வுகளைக் கொண்ட அவர்களும் மனிதர்கள் என்பதை  தீவிரமாக எடுத்துக்கொள்ளுதல். இந்த உண்மை மீது பார்வை படமாமல் இருப்பது எளிது, எப்படி இருப்பினும், நாம் ஓய்வில்லாமல், அழுத்தத்தில் அல்லது ஏதோ ஒரு வழியில் நமமைப் பற்றியே சிந்திக்கும்  இருக்கும் போது உணர்வற்றவராக மாறுகிறோம். ஆனால் மிக குறுகிய பார்வையில் நம் மீதும் நம்முடைய சொந்த பிரச்னைகள் மற்றும் உணர்வுகள் மீதும் கவனம் செலுத்திப் பார்த்தால், நாம் துன்பமானவராக மாறுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் பரந்துபட்ட யதார்த்தத்தின் தொடர்புக்கு வெளியே நாம் இருக்கிறோம்.   

மனிதர்களான நாம் சமூக விலங்குகள்; நம்முடைய நலன் மற்றும் நல்வாழ்விற்காக ஒருவரையொருவர் மற்றவர்களை சார்ந்து இருக்கிறார்கள். நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, மற்றவர்களுடன் யதார்த்தமான மற்றும் ஆரோக்கியமான விதத்தில் தொடர்புகொண்டு, உண்மையில் நாம் அவர்களுடைய நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக அவர்களின் சூழ்நிலை மற்றும் உணர்வுகளின் யதார்த்தத்தை அறிந்து உணர்வுள்ளவராக நடந்து கொள்ள வேண்டும், முக்கியமாக பதிலுக்கு நாம் அவர்களுடன் எந்த வகையில் தொடர்பு கொள்கிறோம் என்பது அவசியம். 

நாம் ஒருவரை பார்க்கும் போது, அந்த நாளின் தொடக்கத்தில் நாம் என்ன அனுபவம் கொண்டோமோ அது நாம் இருக்கும் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கும் அதே நிலை தான். நாம் அவர்களை சந்திக்கும் போதும் கூட அவர்கள் அதில் இருந்து வெளிவந்திருக்க மாட்டார்கள். நம்மைப் போலவே, அவர்கள் இருக்கும் மனநிலை நாம் தொடர்பு கொள்ளும் போது பாதிப்பை ஏற்படுத்துகிறது.   உண்மைக்கும் இந்த யதார்த்தத்திற்கும் நாம் உணர்வற்றவர்களாக இருந்தால், நமக்கும் அவர்களுக்கும் என இருதரப்பிற்குமே, நாம் விரும்புவதை விட இந்தத் தொடர்பானது சற்றே வேறு விதமான மாறக்கூடும். மேலும், நாம் அவர்களுடன் எவ்வாறு பேசுகிறோம், அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பவையும் கூட அவர்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் நம்மிடம் பேசுவது மற்றும் நம்மை நடத்தும் விதமும் கூட நம்மை பாதிக்கும். 

நமக்குள்ளாகவே நாம் இந்த உண்மைகளை நினைவுபடுத்தினால் நாம் மற்றவர்களுடன் இருக்கும் போது அது நண்பர்களோ, அறியாதவர்களோ அல்லது நமக்கு பிடிக்காதவர்களோ அவர்களை நினைவில் கொள்ளலாம் – இதனால் நமக்கும் மற்றவர்களுக்கும் என இரு தரப்புக்குமே நாம் தொடர்பு கொள்ளும் போது அவைகூடுதல் இனிமையானதாக மற்றும் திருப்தியானதாக மாறும்.  

தியானம்

  • அமைதியாக உட்கார்ந்து சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள்.
  • அமைதியான மனதுடன், எந்த தீர்மானமும் எடுக்காமல், உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றி சிந்தித்து அவருடன் இருப்பதைப் போன்று நினைத்துப்பாருங்கள்.
  • நீங்கள் மனிதர் உணர்வுகளைக் கொண்டவர் என்ற புரிதலுடன் அவர்களைக் கருதுங்கள். 
  • நான் செய்ததைப் போலவே. 
  • நீங்கள் இருக்கும் மனநிலை நம்முடைய தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்,
  • என்னுடைய மனநிலை பாதிக்கப்பட்டதைப் போல
  • நான் உங்களை எவ்வாறு நடத்துகிறேன் மற்றம் என்ன சொல்கிறேன் என்பது உங்களுடைய உணர்வுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • எனவே, நாம் கலந்துரையாடும் போது நீங்கள் என்னையும் என்னுடை உணர்வுகளையும் மதிக்கிறீர்கள் என்று நான் நம்புவதைப் போலவே, நானும் உங்களைப் பற்றி அக்கறைப்படுவேன். நானும் உங்களுடைய உணர்வுகளைப் பற்றி அக்கறை கொள்வேன். 

சுருக்கம்

இந்த தியானம் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டது மேலும் பரந்த அளவில் விரிவாக்கம் செய்யப்படக் கூடியது. மேலும் நாம் வெவ்வேறு வயதினர், வெவ்வேறு பாலினத்தவர், வெவ்வேறு இனத்தினர் உள்ளிட்ட மேலே கூறப்பட்ட மூன்று வகைகள் மீதும் கூட கவனம் செலுத்த முடியும். நமக்குள்ளாகவும் கூட தியானத்தில் கவனம் செலுத்தலாம். நாமும் கூட உணர்வுகளைக் கொண்டுள்ள மனிதர்களே;நம்முடைய மனதில் நம்மை நாம் எப்படி நடத்துகிறோம் நம்மைப்பற்றியே எவ்வாறு பேசுகிறோம் என்பவை நம்முடைய உணர்வுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வழியில் நம் மீதே நாம் அக்கறையான அணுகுமுறை காட்டுவதை கூட வளர்த்துக் கொள்ள முடியும். 

Top