பௌத்தர்களின் பயிற்சி என்ன?

What%20is%20buddhist%20practice

பௌத்தத்தின் குறிக்கோளே நம்முடைய சொந்த குறைபாடுகளைக் கடந்து வருவதற்கு செயலாற்றி, நம்முடைய நேர்மறைத் திறன்களை உணர்வதாகும். குறைபாடுகள் என்பது தெளிவின்மை, உணர்வுகளின் ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது, இவையே வாழ்க்கை பற்றி நமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கலக்கம் தரும் உணர்வுகளான கோபம், பேராசை மற்றும் அனுபவமின்மையால் இயக்கப்படும் நாம் முடிவில், வலுக்கட்டாயமாக நடந்து கொள்கிறோம். நம்முடைய நேர்மறைத் திறன்களானது தெளிவாக தொடர்புபடுத்துதல், யதார்த்தத்தை புரிந்து கொள்தல், மற்றவர்களோடு உறுதியாக இருத்தல், நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வதாகும்.

பௌத்த பழக்கத்தின் தொடக்க புள்ளியே நமது மனதை அமைதிப்படுத்துவது மற்றும் கவனத்துடன் இருப்பது, அதாவது நாங்கள் செயல்படும்போது, மற்றவர்களிடம் பேசும் போது மற்றும் தனிமையில் இருக்கும் போது நாங்கள் எப்படி சிந்திக்கிறோம் என்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம். ஏதோ செய்கைக்காக எங்களின் செயல்பாடுகளை கவனித்து விட்டு அதனை அப்படியே விட்டுவிட மாட்டோம். நாங்கள் கவனத்துடன் இருந்தால் மட்டுமே ஆக்கம், அழித்தல் இரண்டிற்குமான வேறுபாடுகளை பாகுபாடு செய்ய முடியும். இது அகங்காரமல்ல : நாங்கள் உண்மையில் பிறர் மீது அக்கறையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறோம்.

சுயசோதனை மற்றும் சுய விழிப்புணர்வு மூலம்  பிரச்னைகளுக்கான காரணங்களைத் தேடுதல். வெளிப்புற காரணிகள் மற்றும் மக்கள் பிரச்னைகள் எழும் சூழலை தங்களுக்குள்ளாகவே சில தருணங்களில் ஏற்படுத்துகின்றனர் –ஆனால் பௌத்த அணுகுமுறையானது முயற்சித்தல் மற்றும் ஆழ்ந்த காரணங்களை அடையாளம் காணுதல், இதற்கு நம்முடைய மனதை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. நம்முடைய மனப்பழக்கங்கள், அதே போன்று நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், நாம் வாழ்வை அனுபவிக்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், தனிமை மற்றும் பாதுகாப்பின்மையை அனுபவித்தல் ஆகியவை நம்முடைய பணியால் மட்டும் வருவதல்ல, நமது மனம் மற்றும் உணர்வுகளின் நிலையில் இருந்தும் வருகிறது. வாழ்வில் ஏற்படும் முடிவில்லா சவால்களை கையாள சிறந்த வழி நமது மனதை அமைதிபடுத்துதல், உணர்வுகள் சமநிலையைப் பெறுதல் மற்றும் தெளிந்த மனதுடன் இருப்பதுதான்.

மனது முழுவதும் உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளைப் பற்றி சிந்திப்பவராக நாம் மாறிவிட்டால், அதுவே விரக்திக்கும், கஷ்டங்களுக்கும் காரணமாகிவிடுகிறது, அதற்கான நிவாரணங்களை நாம் செய்ய முடியும்.

யதார்த்தம் பற்றிய தெளிவான புரிதல் மற்றும் மனதின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் உணர்வுகளை தூய்மை படுத்தமுடியும்  – 14வது தலாய் லாமா

நாம் அனைவருமே உடலின் தூய்மை பற்றி அக்கறை கொள்கிறோம், ஆனால் நமது மனதை ஒருநிலையில் வைப்பது மிகவும் முக்கியமானது. உணர்வுகளின் தூய்மையை மேம்படுத்த, நம் மனது முழுமையிலம் இந்த மூன்று விஷயங்கள் நிலைத்திருக்க வேண்டும் : கலங்கப்படும் நம் மனநிலைக்கான மாற்று மருந்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும், தேவைப்படும் நேரத்தில் அதனை பயன்படுத்த மறக்கக் கூடாது, அதே நிலையில் வைத்திருக்கவும் மறவாதிருக்க வேண்டும்.

இந்த மாற்று மருந்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள, நாம் செய்யவேண்டியவை :

  • அவை என்வென்று கற்றுக்கொள்.
  • சரியான புரிதல் ஏற்படும் வரை அதைப்பற்றியே சிந்தனை செய், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் மற்றும் அந்த முறை செயல்படும் என்று நம்ப வேண்டும்.
  • பரிச்சயம் பெற தியானம் மூலம் செயல்படுத்த பழக்கப்படுத்து.

நமக்கு நாமே மருத்துவர்கள் போல இருத்தல் வேண்டும்: நம்முடைய ஒழுங்கின்மையை நாமே அறிந்துகொள்ள கற்று, காரணங்களை புரிந்து கொண்டு, நிவாரணம் என்ன, அதனை எப்படி செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்தலுக்கு முன்னர் பயிற்சி செய்தல். 

நாள்பட்ட நோய் என்பது, நமது வாழ்க்கை முறை மாறுதல்களால் கிடைத்த பலன்கள் என நம்மை நாமே தேற்றிக்கொள்வோம். பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்வதில்லை, மாறாக முதலில் உணவுக்கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சியை முயற்சிப்பார்கள். ஆமாம் அவர்கள் தொடங்குவதற்கு முன்னர் பயிற்றுரை தேவை தான், ஆனால் ஒரு முறை பலன்களை அனுபவித்துவிட்டால், அதுவே அவர்கள் முன்னோக்கி செல்வதற்கான உந்துதலாக மாறலாம்.

இதே முறையிலான முயற்சிகளே உணர்வுகளைத் தூய்மையைப் பெறவும் தேவை. மனநிறைவு பயிற்சியின் மூலம் நல்வாழ்க்கைக்கான சுவையை நாம் ஒரு முறை சுவைத்துவிட்டால், செயலூக்கத்தை மேம்படுத்தவும், பௌத்த பயிற்சிகளை பற்றி கூடுதலாக கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதும் எளிதாகிவிடும், இவை நம் வாழ்க்கைத்தரம் உயரவும், பிறருக்கு உதவவும் வழிவகுக்கும்.  

புத்தரும் நம்மைப்போன்ற ஒரு சராசரி மனிதரே, வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்தவர். நம்மைப் போலவே அவரும் வாழ்க்கைத்தரத்தையும் தன்னை சுற்றி இருப்பவற்றையும் முன்னேற்ற நினைத்தார். அவர் தன்னுடைய தற்சோதனையால், தன்னைச்சுற்றி நடப்பவற்றை உணர்ந்தார். அமைதி, மனநிறைவோடும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனும் சக்தியும் நமக்கும் இருக்கிறது என்பதை உணர்வோம்.

இதைத் தான் தலாய் லாமா “உணர்வுகளின் தூய்மை” என்று அழைக்க விரும்புகிறார் – மதம், கலாச்சாரம் போன்ற எல்லைகளைத்தாண்டி, நம் இதயத்திற்கு மிக நெருக்கமாக நாம் விரும்புவது: பிரச்னைகளில்லாத, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கை என்பதே அது.

Top