What is happiness catalin pop noyd

மகிழ்ச்சி என்பது நீண்ட நாள் நல்வாழ்க்கைக்கான உணர்வு, அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த திருப்தி – அதைத் தான் நாம் எல்லோரும், எல்லா நேரமும் தேடிக்கொண்டிருக்கிறோம். அதன் சுவையை சிறிது சுவைத்துவிட்டாலும், அதனை எப்போதும் தொடரவே விரும்புகிறோம்.

மகிழ்ச்சியில் திளைத்திருத்தல் குறித்து மக்கள் அவ்வப்போது குழப்பிக் கொள்கிறார்கள். நல்ல உணவை உண்டு, விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து, எப்போதும் வேடிக்கையாக இருந்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது நிறைவைத் தராது. நம்முடைய சுயதேவைகள் மற்றும் விருப்பங்கள் அனைத்தையும் திருப்தி செய்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூட நினைக்கலாம். ஆனால் உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுதல் என்பது தனிமையையும், மனஅழுத்தத்தையுமே முன்னெடுக்கும். 

நம்முடைய சிந்தனைகள் மற்றும் உணர்வுகளால் சில நேரங்களில் தனிமையில் இருப்பது அசவுகரியமாக இருக்கும், எனவே நாம் இசை, கணினி விளையாட்டு, உணவு, பாலுறவு மற்றும் வேலைவாய்ப்பு என குறுக்கீடுகளைத் தேடுவோம். ஆனால் இவை உண்மையில் மற்றவர்களுடன் இணைக்காது, அதே போல உண்மையான மகிழ்ச்சியையும் தராது.

மகிழ்ச்சியாகவும், பிறரோடு தொடர்பில் இருக்கவும் விரும்பினால், நாம் உடனே சமூக ஊடகத்தை நாடுவோம். நமது செல்ஃபிகளுக்கு கிடைக்கும் விருப்பங்கள் அல்லது நண்பர்களின் தகவல்கள் மூலம் சிறிது நேர இன்பம் கிடைக்கலாம், ஆனால் இது நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே தூண்டும். நாம் அடிக்கடி நம்முடைய போனை எடுத்துப்பார்ப்போம், அடுத்தது என்ன? என எதிர்பார்ப்புடன் காத்திருப்போம், ஆனால் எத்தனை விருப்பங்கள் மற்றும் தகவல்களை நாம் பெறுகிறோம் என்பது பெரிதல்ல, முடிவில் நாம் மற்றவர்களுடன் குறைவான தொடர்பிலேயே இருக்கிறோம் என்பது தெரியவரும்.  

உண்மையான மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரமே பிறரை நேசிப்பது தான் என்று புத்தர் கூறி இருக்கிறார். நாம் பிறரின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் உண்மையான அக்கறை காட்டினால், நமது மனம் இலகி, மற்றவர்களுடன் திறந்த மனதுடன் தொடர்பில் இருக்கவும், நாமும் உண்மையான மனிதன் என்ற உணர்வையும் ஏற்படுத்தும். நாம் உடலளவிலும் சிறப்பாக உணர்வோம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்தும் போது, நம்மால் முடிந்த வரை அவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும், பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தும் காரணங்களை தவிர்க்கலாம். இது நம்பகத்தன்மையான நட்பை உருவாக்கும், நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உணர்வுப்பூர்வமான ஆதரவு, வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை எதிர்த்து நிற்பதற்கான உறுதியை தேடித்தரும்.  

பிறரின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்தும் முன்னர் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். நமக்குள்ளான மகிழ்ச்சிக்கான விருப்பத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், பிறர் மகிர்ச்சியாக இருக்க நாம் எப்படி விரும்ப முடியும்? பௌத்தத்தில் மகிழ்ச்சிக்கான விருப்பம் அண்டத்தை உள்ளடக்கியது.

மகிழ்ச்சி என்பது உள்ளார்ந்த அமைதியை சார்ந்தது, அவை அன்பான மனதை சார்ந்திருக்கிறது.  -14வது தலாய் லாமா

இன்றைய உலகில் நம்மால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை, நமக்கு எந்த சக்தியும் இல்லை என்று நினைப்போம். “என்ன நடந்தாலென்ன. கவலை ஏன் சகோ?” எனவே நாம் கருதுவோம். ஆனால் யதார்த்தத்தில் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களின் நலன் பற்றி சிந்தித்தும் அவர்களுக்கு உதவ முயற்சித்தும் கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒரு சிறு புன்னகை அல்லது புறப்பாடு வரிசையில் நிற்கும் போது, நமக்கு முன்பு கடந்து செல்ல யாரையேனும் அனுமதிப்பது உள்ளிட்டவை நாம் வேற்றுமையை ஏற்படுத்துகிறோம் என்ற உணர்வைத் தரும்.

இது சுய மதிப்புக்கான உணர்வை அளிக்கும் – நமக்கு கொடுப்பதற்கு ஏதேனும் இருப்பதால், அது சிறப்பாக உணர்வைத் தரும். வாழ்க்கையோடு நாமும் மகிழ்ச்சியானவராக மாறிவிடுகிறோம்.

நம்முடைய மதிப்பை காட்டி நாமே மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட, பிறருக்கு எவ்வாறு மகிழ்ச்சியைத் தரலாம் என்று சிந்திப்பதும், அவர்களுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையுமே மற்றவர்களோடு நம்மை இணைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் சுயநலத்திற்கும், பிறரின் நலனில் உண்மையான அக்கறைப்படுவதற்கும் இருக்கும் வேறுபாடு.

மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள்: பிறருடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே நம்மால் செழித்து வளர முடியும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முக்கிய அம்சங்களான கருணை, பிறருக்காக அக்கறைப்படுதல் ஆகிவயற்றை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

Top