பௌத்தர்களின் பார்வையில் மற்ற மதங்கள்

இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருப்பது போலவே, கோடிக்கணக்கான வெவ்வேறு மனநிலைகள் மற்றும் விருப்பங்களும் உள்ளன. பலதரப்பட்ட மக்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப மதங்களில் பரந்த தேர்வும் தேவை என்பது பௌத்தத்தின் கண்ணோட்டம். எல்லா மதங்களும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக உழைப்பதற்கான ஒரே நோக்கத்தை பகிர்ந்து கொள்கின்றன என்பதை பௌத்தம் அங்கீகரிக்கிறது. இந்த பொதுவான அடிப்படையில், பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மரியாதை மனப்பான்மையில் ஒருவருக்கொருவர் கற்றலைப் பகிர்ந்துகொள்ளும் பரிமாற்ற திட்டங்களை நிறுவியுள்ளனர்.

ஏனெனில் எல்லோருக்கும் ஒரே விதமான மனநிலைகளும், விருப்பங்களும் இருக்காது என்பதால், புத்தர் பலவிதமான மக்களுக்கம் பொருந்தும் விதமான பரந்த பலவிதமான முறைகளைக் கற்பித்தார். இதனை மனதில் வைத்து, புனிதர் தலாய் லாமா உலகில் பலவிதமான வேறுபட்ட மதங்கள் இருப்பது மிகவும் அற்புதமானது என்று கூறி இருக்கிறார். ஒரே உணவு எல்லோரையும் ஈர்க்காது என்பது போல, ஒரு மதம் அல்லது நம்பிக்கைகளின் தொகுப்பு அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பது உண்மைதான். பல்வேறு வகையான மதங்கள் இருக்கின்றன என்பது மிகவும் நன்மை பயக்கும், மேலும் வரவேற்கப்பட வேண்டிய மற்றும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று.

Top