Study buddhism dino 1 1

பரிணாமம் குறித்த டார்வினின் கோட்பாடானது இயற்கையின் தேர்வு செயல்முறை மற்றும் காலப்போக்கில் உயிரினங்களின் உயிரியல் உடல்கள் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை காட்டுகிறது. தன்னுடைய செயலில் அவர் சுட்டிக்காட்டி இருப்பதாவது, உயிரினங்களின் தோற்றம், இந்தச் சூழலானது அந்த காலகட்டத்தில் பேதமாக கருதப்பட்டது, ஏனெனில் இந்தக் கோட்பாடானது அனைத்து சக்தியும் படைத்த கடவுள் தனியொரு உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார், மேலும் அதில் மாறாத உயிரினங்களும் இருக்கின்றன என்ற எண்ணத்திற்கு முரண்பாடானது. இருப்பினும் இன்றைய காலத்திலும் கூட பரிணாமக் கோட்பாடானது சில மதங்களுடன் சவுகரியமாக இருப்பதில்லை, பௌத்த போதனைகளில் பொதுவான எண்ணத்திற்கு முரண்பாடானதாக எதுவும் இல்லை. உண்மையில், பௌத்தர்களுக்கு, இந்தக் கோட்பானாது பௌத்த போதனைகளான சார்ந்து எழுதல், படைப்பாற்றல் அல்லாத மற்றும் தர்மத்தின் நான்கு அடையாளங்களில் முதலாவதான நிலையாமையோடு முழுவதும் ஒத்துப் போகிறது. பல காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிகழ்வுகள் தொடர்ந்து எழுகின்றன மற்றும் உருவாகுகின்றன, மனிதர்களும் விலங்குகளும் இந்த ஒரே மாதிரியான நிலையான ஓட்டத்தில் ஒரு பங்காக இல்லையெனில் அது விசித்திரமானதாக இருக்கும்.

காலம் மற்றும் பரிணாமம் குறித்த பௌத்த எண்ணமானது சரியாக டார்வின் கோட்பாடைக் குறிக்கிறது என்று சொல்லவில்லை. டார்வின் கோட்பாடானது உயிரியல் மற்றும் உடல் சார்ந்த மாற்றங்கள் தொடர்பான அறிவியல் முன்னெடுப்பு, அதன் முலம் வாழ்வின் முறைகளைப்பற்றி அறிய இயலும். ஆனால், இது பெளத்தம் செல்லும் அளவுக்கு ஆழமாக இல்லை – சாதாரண வாழ்க்கை தொடங்கி, உள்ளார்ந்த எழுச்சி பெறுதல் வரை பெளத்தம் விரிவாக பேசுகிறது. சில இடங்களில் உயிர்வகையினங்கள் அடையும் விழிப்புணர்வு குறித்தும் டர்வின் பேசுகிறார், அதைத்தான் பெளத்தமும் பேசுகிறது, கூடுதலாக தனிப்பட்ட வகையில் ஒருவரின் விழிப்புணர்வின் பரிணாமம் குறித்தும் பேசுகிறது.

மேலும், உயிர்வாழ்தல், இனப்பெருக்கம் ஆகியவற்றில் படிப்படியாக மற்றும் தொடர் ”முன்னேற்றம்” அடைவது குறித்து டார்வினின் பரிணாமம் பேசுகிறது. உணர்வுப்பூர்வமான வகையில் பல்வேறு உயிர்வகைகளில் மறுபிறப்பு எடுத்தல் குறித்து பெளத்தம் கற்றுத்தருகிறது. தனிப்பட்ட நபர் மற்றும் ஒட்டுமொத்த உயிரினமும் கர்மா, பாதிப்பு, காரணிகளின் அடிப்படையில் மீண்டும் பிறப்பெடுக்கின்றன. எனவே, சில அடிப்படை அம்சங்களில் வேறுபாடு இருந்தாலும், அடிப்படையில் இரண்டும் பரிணாமத்தின் விதிகளைப்பற்றி பேசுகின்றன.

உலகின் பரிணாமம் மற்றும் அழிவு

14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வண்டத்தில் நிகழ்ந்த (BIG BANG) பெரும்வெடிப்பு- மிகப்பெரிய, தொடர் வெடிப்பு ஏற்பட்டது- இதுதான் தொடக்கம், அதிலிருந்து 4 பில்லியன் ஆண்டுகளில் உலகம் என்ற பூலோகம் தோன்றுவதற்கான அடிப்படை உண்டானது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் பல்வேறு நட்சத்திரங்களில், கோள்களில் ஹைட்ரஜன் வாயு உண்டானது, அதில் ஒன்றைத்தான் நாம் புவி என அழைக்கிறோம், அதில் ஒருசெல் உயிரினங்கள் தோன்றின. அவை பின்னர் பெருவளர்ச்சி பெற்று இப்போது நம்மைச் சுற்றி இருக்கின்றன. பல பில்லியன் ஆண்டுகளாக விரிவடைந்த இந்த அண்டம் விரிவடைந்து, வளர்ச்சி பெற்றது, இது ஒரு முடிவை எட்டும், அது எப்படி நடக்கும் என்பதை பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சூத்திரங்களின் அறிவின் தொடக்கம் (பாலி: அக்கன்னா சுட்டா) என்ற நூலில் அண்டத்தின் பரிமாணம், அழிவு குறித்து பெளத்தம் விவாதிக்கிறது. படிப்படியாக நமது புவியின் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் ஏற்படும் விதமாக வித்தியமான சமூகத்தை உண்டாக்குவதும், அவை அழிந்துபோவதும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. பெளத்தம் சொல்வதற்கும், நவீன அறிவியல் சொல்வதிலும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. அண்டத்தின் வளர்ச்சி, வாழ்தல், உறைதல் ஆகியவை பல சுழற்சிகளின் வெறும் ஒரு பகுதி மற்றும் அவை எப்போது நடக்கும், எப்போது முடிவும் என்பதில் கால அளவு கிடையாது. கீழ்கண்டவாறு சூத்திரம் சொல்கிறது:

விரைவிலோ அல்லது தாமதமாகவோ, நீண்ட காலத்திற்கு பின்போ இவ்வுலகம் சிதையும், ஆனால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கு பிறகோ இந்த உலகம் மீண்டும் உயிர்த்தெழும்… அந்த காலகட்டத்தில் மிகக்குறைந்த நீர்தான் இருக்கும், எல்லாப் பகுதிகளிலும் இருள் சூழ்ந்துவிடும். கும்மிருட்டாகிவிடும். எது நிலவு, எது சூரியன் என தெளிவாகத் தெரியாது, நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டகளும் தெளிவாக இருக்காது, இரவு எது, பகல் எது என்ற குழப்பம் நீடிக்கும், வாரங்கள், மாதங்களில் தெளிவு இருக்காது, பருவகாலங்கள், ஆண்டுகள் மாற்றி குழப்பும், ஆண், பெண் என்ற பேதங்களிலும் குழப்பம் நிலவும். வாழும் அனைத்து உயிரினங்களும் வெறும் உயிரினங்கள் மட்டுமே என்று வரையறுக்கப்படும்.. 

உலக கட்டமைப்பின் சுழற்சி முறை குறித்து இங்குதான் மிக தெளிவாக புத்தர் கூறியுள்ளார். எப்படி பாலினங்கள் தோற்றமளிக்கும் மற்றும் எப்படி பல்வேறு மட்டங்களாக, பல்வேறு வகைப்பட்ட மக்களைக்கொண்டதாக சமூகம் வளர்ச்சியடையும் என்று இந்த சூத்திரம் தொடர்ந்து கூறுகிறது. இறுதியில்ம் சுற்றுச்சூழல், வாழ்வினம் எப்படி அழிவை சந்திக்கும், காணாமல் போகும் என்பதையும் சொல்கிறது.

ஆரம்பத்தின் தேவை மற்றும் நிலையற்றதன்மை குறித்து பெளத்தம் சொல்வதிலும், பெரும் வெடிப்பு மற்றும் உலகம் அழிவது குறித்து நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்வதிலும் எந்த கருத்து மோதலும் இல்லை. 

உடல்களின் பரிணாமம்

தற்போது, உயிரியல் உடல்களின் பரிணாமம் குறித்து மிக கூர்ந்து பார்க்கலாம். பரிணாமக் கோட்பாடு என்பது இதில் தெளிவாக இருக்கிறது – நாம் அனைவருமே ஓர்-செல் உயிரினங்களில் இருந்து வந்தவர்கள். டார்வினின் கோட்பாடானது படிப்படியான பரிணாம வளர்ச்சி, அதில் உயிரினங்கள் நாகரிகத்தை மேல்நோக்கி பரிணாம வளர்ச்சி கண்டார்கள் – மற்றொரு வகையில் சொல்வதானால், அதில் ஒரு உள்ளார்ந்த போக்கு இருந்தது மேம்படுத்தப்பட்ட வழியில் மட்டுமே பரிணாமம் அடைந்தது. இங்கே நாம் வெறுமனே உடல் அடிப்படையில் மட்டுமே பேசுகிறோம், ஏனெனில் கிரகத்தில் வாழும் உயிரினங்களின் உடல் வடிவத்திற்கும் மறுபிறவி எடுக்கும் மனித மனங்களின் தொடர்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

அப்போது கிரகத்தில் டைனோசர்கள் சுற்றிக்கொண்டிருந்தன, ஆனால் இப்போது அவை அழிந்துவிட்டன. நம்மால் ஏன் இப்போது டைனோசராக மறுபிறப்பு எடுக்க முடியவில்லை? அறிவியல் கோட்பாடுகளின்படி, 66 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், டைனோசர்களை அழிப்பதற்காக ஒரு பேரழிவு நிகழ்வு நடத்தப்பட்டது, ஆனால் பாலூட்டிகளுக்கு அல்ல (மனிதர்களைப் போன்றவர்களுக்கு), அதனால் பின்னர் அந்த இனம் செழித்துள்ளது. "வாழ்வியல் சண்டையில் வலிமை/ திறமை மிக்கதே தப்பிப்பிழைக்கும், உயிர்வாழும்” என்ற டார்வினின் கோட்பாட்டின்படி டைனோசர்கள் அழிந்துவிட்டன, அகற்றப்பட்டன என்று சொல்லப்படுகிறது. 


பௌத்த பார்வையில் இருந்து பார்க்கும் போது, கர்ம சக்திகள் மற்றும் கனிய வைக்கும் திறனிற்கான மிகச்சரியான சூழ்நிலைகள் கிடைக்க வேண்டும். டைனோசராக மறுபிறவி எடுக்க வேண்டிய சூழ்நிலை இந்த கிரகத்தில் இந்த நேரத்தில் இல்லை. மாறாக, மறுபிறப்பிற்கு தேவையான இதர எல்லா வகையான உடல் அடிப்படைகளையும் கொண்டிருக்கிறோம். இவையும் கூட காலத்திற்கு ஏற்ப மாறக் கூடியவை. புவியிலோ, அண்டத்தின் மற்றொரு பகுதியில் இப்போதும் டைனோசர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறது, நாம் அங்கு டைனோசராக பிறக்கக் கூடும் என்பதை நிச்சயம் பௌத்தம் ஏற்றுக் கொள்கிறது.

ஒரு சமயம் புனிதர் தலாய் லாமா அறிவியலாளர்களுடன் நடத்திய உரையாடலின் போது கணினியும் உணர்வுள்ள மனிதர்களைப் போல ஆக முடியுமா எனக் கேள்வி எழுப்பபட்டது: அதாவது கணினியும் ஒரு நாள் மனதைக் கொண்டிருக்குமா? என்ற அர்த்தத்தில் கேட்கப்பட்டது. அதற்கு சுவாரஸ்யமான வழியில் அவர் பதிலளித்தார், ஒருவேளை கணினி அல்லது ரோபோ ஒரு மன தொடர்ச்சியின் அடிப்படையாக பணியாற்றும் அளவுக்கு அதிநவீனமான இடத்தை அடைந்தாலும், அவை மனிதர்களாக முடியாது. ஏனென்றால், ஒரு மன தொடர்ச்சியானது முற்றிலும் கனிம இயந்திரத்துடன் இணைக்க முடியாது.

அதற்காக கணினிக்கு மனம் இருக்கிறது என்று சொல்லவில்லை. நாம் கணினிக்கு செயற்கையாக மனதை உருவாக்கலாம் என்றும் சொல்லவில்லை. எனினும், ஒரு கணினி போதுமான சவுகரியத்தை அளித்தால், மனதின் தொடர்ச்சியானது அதனுடன் இணைந்து போவதோடு அதனை ஒரு உடல் அடிப்படையிலானதாக எடுத்துக்கொள்ளும். இது டார்வின் கோட்பாடோடு மேலும் அதிக தொலைவில் இருக்கிறது. 

புத்தர் ஏன் பரிணாமம் பற்றி அதிகம் விளக்கிக் கூறவில்லை?

பௌத்தர்கள் பார்வையில் புத்தர் அனைத்தும் அறிந்தவர் – ஞானம் அடைந்த பிறகு, அவர் எல்லாம் அறிந்திருந்தார் – பிறகு ஏன் அவர் அது குறித்து கலந்தாலோசிக்கவோ அல்லது அண்டத்தின் செயல்பாடு மற்றும் உயிரினங்களின் பரிணாமம் குறித்தோ அதிகம் வெளிக்கூறவில்லை என்று நாம் ஆச்சரியப்படலாம்?

பொதுவாகவே, புத்தர் போதித்த அனைத்துமே விடுதலை மற்றும் ஞானத்தின் பாதையில் நம்மை மேம்படுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கும். ஆகவே, பிரபஞ்சங்களும் அதிலுள்ள உயிரினங்களும் கடந்து செல்லும் பரந்த சுழற்சிகளை விவரிப்பதில் அவரது நோக்கம் என்னவென்றால், இப்போது அவர்கள் பெற்றுள்ள விலைமதிப்பற்ற மனித மறுபிறப்பின் அபூர்வத்தை மக்கள் உணர உதவுவதாகும். ஆன்மீகம் அதன் அபூர்வத்தையும், மீண்டும் ஒன்றைப் பெறுவதில் உள்ள சிரமத்தையும் பாராட்டுவதன் மூலம், இந்த இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு மக்கள் தங்களின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தூண்டப்படுவார்கள். புத்தர் நமக்கு அண்டவியல் அல்லது வானியற்பியல் கற்பிக்க இந்த உலகத்திற்கு வரவில்லை.

நோக்கத்திற்கு பொருத்தமற்ற சிக்கல்களைப் பற்றி சிந்திப்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக நம்முடைய மனம் குழப்பம் மற்றும் சிக்கலான உணர்வுகளால் இயக்கப்படும் போதும், அண்டம் பற்றி ஆழ்ந்து சிந்தித்து அதில் எத்தனை உணர்வுள்ள உயிரினங்கள் இருக்கின்றன என்பன போன்ற சிந்தனைகளும் – குறிப்பாக அவற்றைப் பற்றிய நமது நம்பிக்கையின் அடிப்படையிலான தவறான தகவல்கள் - நம்முடைய இலக்கான விடுதலை மற்றும் பிறருக்கு உதவும் திறன் உள்ளிட்டவற்றில் இருந்து திசை மாற்றும். இதனால் மேலும் குழப்பத்தில் கூட முடியக் கூடும்.  

புத்தரின் வாழ்க்கையில் இந்த விஷயத்தை விவரிக்கும் பல்வேறு கதைகள் இருக்கின்றன. உதாரணமாக, அண்டம் நித்தியமா இல்லையா, மற்றும் இறந்த பிறகும், சுயம் தொடர்ந்து இருக்கிறதா இல்லையா என்பது பற்றி புத்தரிடம் கேட்கப்பட்டது. இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும், பதில் அளிக்காமல் அமைதியாக இருப்பதையே புத்தர் தேர்ந்தெடுத்தார். முடிவில், புத்தர் கூறினார் மக்கள் குழப்பத்தில் இருக்கும் போதும் ஆக்கம் மற்றும் மாறாமல், படைக்கப்பட்ட ஆன்மா போன்ற விஷயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் போது,கூறும் எந்த பதிலும் அவர்களின் குழப்பத்தை வெறுமனே அதிகரிக்கும். அப்படியாக மாறாத, படைக்கப்பட்ட ஆன்மா என்ற ஒன்று இல்லாவிட்டால், அத்தகைய ஆத்மாக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதா அல்லது எல்லையற்றதா என்று கேள்வி எழுப்புவதில் என்ன அர்த்தம்?

இதுவும் கூட ஒரு சிறந்த போதனை தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரபஞ்சத்தின் அளவு அல்லது அதில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்வது - அவை எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிய சரியான தகவல்கள் நம்மிடம் இருந்தாலும் கூட - நம்முடைய துன்பங்களையும் சிக்கல்களையும் சமாளிக்க அவை நமக்கு உதவுமா? இது பிற உயிரினங்களுக்கு பயனளிக்க உதவுகிறதா? இதுபோன்ற ஏதேனும் கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்பே நாம் இறந்துவிடுவோம், நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற வாழ்க்கையை வீணடிக்கிறோம் என்று புத்தர் கூறி இருக்கிறார். இத்தகைய ஊகங்கள், வேடிக்கையாக இருக்கும்போது, உண்மையில் நமக்கு உதவாது. இதில் முக்கியமானது நம்முடைய தற்போதைய சூழ்நிலை குறித்த யதார்த்தத்தை உணர்தல் மற்றும் நாம் கொண்டிருக்கும் அரிய வாய்ப்புகளின் நன்மைகளை எடுத்துக் கொள்ளுதல். உண்மையில் நாம் சம்சாரியாக இருந்தாலும் விலைமதிப்பற்ற மனித உடல் மற்றும் மனதைக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவற்றை துன்பத்தை வென்று வருவதற்கும் பிறருக்கு உதவவும் பயன்படுத்தலாம். முழு ஞானமடைவதற்கு வழிவகுக்கும் முறைகளை நாம் பயிற்சிக்கலாம்.  ஒரு முறை நாம் அதை அடைந்து விட்டால் விடையளிக்க முடியாத இந்த எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில்களைக் கொண்டு இருக்கலாம்!

Top