பெளத்தத்தில் வழிபாடு என்பது என்ன?

Study buddhism prayer 02

சுமெரியன் கோவிலின் பிரார்த்தனை பாடல் தொடங்கி, பழங்கால எகிப்தியன் மந்திரங்கள் வரை மனித குலத்தின் மிகவும் பழமையான இலக்கியங்கள் கடவுளை குறிப்பிட்டு, வழிபாடு குறித்து பேசுகின்றன. அதேபோல் தற்காலத்தில் மிகப்பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ள மதங்களும் வழிபாட்டு முறைக்கு முக்கியத்துவம் அளித்துவருகின்றன. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் கடவுளை வழிபடுகிறார்கள், அதேசமயம் வழிபாடு செய்ய பலவகைப்பட்ட கடவுள்களில் தேர்ந்தெடுத்து இந்துக்கள் தங்களது பிரார்த்தனையை முன்வைக்கின்றனர். வெளிப்புற அளவில், பெளத்தம் இவைகளிலிருந்து வேறுபட்டது இல்லை.

பெளத்த நாடுகளில் உள்ள கோவில் அல்லது மடங்களுக்கு நீங்கள் சென்றால், கூட்டமாக பக்தர்கள் நிற்பதையும், கும்பலாக சேர்ந்து பாடுவதையும், சில வார்த்தைகளைச் சொல்லி புத்தர் சிலை முன்பு பிரார்த்திப்பதையும் காணலாம். திபத்திய பெளத்தம் குறித்து அறிந்தவர்கள், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த துதிபாடல்கள், நகர்வுகள் மற்றும் கொடிகள் எங்களிடம் இருப்பதை அறிவர்.

வழிபடுதலில் உள்ள மூன்று அம்சங்கள்: வழிபாடு செய்யும் நபர், எதை நோக்கி வழிபாடு செய்யப்படுகிறது, வழிபாட்டின் நோக்கம் என்ன? இதில் வழிபாட்டிற்கான கேள்வி என்பது பெளத்தத்தில் மிகவும் சிக்கலானது. உருவாக்கிய கடவுள் என்ற ஒருவரில்லாத, நாத்திகம் இல்லாத மதத்தை பின்பற்றும் பெளத்தர்கள், யாரை நோக்கி வழிபடுவார்கள், என்ன நோக்கத்திற்காக வழிபடுவார்கள் என்பதே எழும் கேள்விகள். உங்களை உச்சி முகர்ந்து ஆசிர்வதிக்க யாரும் இல்லாத போது வழிபடுதலின் அர்த்தம் என்னவாக இருக்கும்? பெளத்தர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்வி – நமது துன்பங்களையும், பிரச்னைகளையும் யாரேனும் ஒருவரால் தீர்க்க முடியுமா?

வெறும் பிரார்த்தனை மட்டும் மாற்றத்திற்கு போதுமானதில்லை. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – புனிதர் 14வது தலாய்லாமா

தன்னால் மட்டுமல்ல, நிரம்பிய அறிவையும், திறமை கொண்ட எவராலும் நமது அனைத்து பிரச்னைகளையும் ஒரு சொடக்கில் தீர்த்துவிட முடியாது என்கிறார் புத்தர். அது சாத்தியமற்றதும் கூட. நாம் நம்முடைய பொறுப்பை உணர வேண்டும். பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் வலியை உணரவும் நாம் விரும்பவில்லை என்றால் அதன் ஆணிவேரான காரணிகளை தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான காரணிகளை உண்டாக்க வேண்டும். புத்தரின் பார்வையில், தூய்மையான ஒழுக்கம் மற்றும் நம்பிக்கையால் அதை அடைய முடியும். நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஏதுவான பழக்கவழக்கம் மற்றும் மனமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது முழுக்க முழுக்க நம்முடைய கையில்தான் உள்ளது.

பெளத்தர்கள் யாரை நோக்கி வணங்குகிறார்கள்?

சாஸ்டாங்கமான விழுந்து சிலையை வணங்குவது, கோயிலில் தூபம் போடுவது மற்றும் அரங்குகளில் வசனங்களை சிலர் ஓதுவதை நாம் பார்க்கும் போது அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்? மற்றும் யாரிடம் வேண்டுகிறார்கள் என்று கேட்கத்தோன்றும். சிலர் நினைக்கலாம், அவர்கள் வணங்குவது ஷ்க்யமுனி புத்தரை என, அப்படியென்றால் மெர்சிடிஸ் பென்ஸ் காரை அவர் தருவார? அல்லது அவர்கள் வணங்குவது மருத்துவ புத்தரையா? அப்படியென்றால் எனது நோயை அவர் குணமாக்குவாரா? பெரும்பாலான பெளத்த குருமார்கள் சொல்வது பிரார்த்தனை மிக குறைந்தளவிலேயே பலன் தரும்.

மற்றவர் நலனுக்காக உத்வேகம் பெறுதல் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணிகளை உண்டாக்க, பெளத்தத்தில் புத்தர் மற்றும் போதிசிட்டாவை நாங்கள் வணங்குகிறோம். எந்தவித மாயாஜாலத்தையும் திடீரென ஏற்படுத்திவிடாது, ஆனால் சிறப்பான ஒன்றை உணர வைக்கிறது. உதாரணத்திற்கு- அவை நமக்கான நல்வழிகாட்டியாக இருக்கிறது – என்னால் இதை செய்ய முடியும் என நமக்குள் நம்பிக்கையை நிரப்புகிறது

பெளத்த வழிபாட்டு முறைகளாக, சூத்திரங்களை உச்சரித்தல், மந்திரங்களை சொல்லி பிரார்த்திப்பது, இஷ்ட தேவதைகளை காட்சிப்படுத்தி உணர்தல் ஆகியவை பிறருக்கு உதவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான இரக்கம், உற்சாகம், அமைதி ஆகியவற்றை அளித்து நமக்குள்ளான திறனை மேம்படுத்த உதவுகின்றன.

ஏழு- மூட்டு பிரார்த்தனை

பெளத்தத்தின் பாதையை உணர்த்தும் அம்சங்களைக் கொண்டதுதான் ஏழு-மூட்டு பிரார்த்தனை என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. இதில் உள்ள ஏழு பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை:

(1) மூன்று முறை அருளிய புத்தர்கள் அனைவரையும், தர்மத்திற்கும், உயர்ந்த சபையையும் நான் வணங்குகின்றேன். உலகின் அனைத்தும் அணுக்களையும் கொண்ட இந்த உடலால் விழுந்து வணங்குகின்றேன்.
(2) வெற்றிக்கான ஆசியை உங்களுக்கு வழங்கிய மகாயான பெளத்தத்தின் மஞ்சுஷ்ரி மற்றும் மற்றவர்களை வணங்கியது போல், என்னைக் காக்கும் உண்மையான குருமார்களையும் வணங்குகிறேன்.
(3) எனது ஆரம்பமற்ற தொடர் மறுபிறப்பின் முழுவதும், தற்போதைய மற்றும் பிற வாழ்விலும், அறியாமல் செய்த தவறுகளை, அல்லது மற்றவர்களுக்குச் செய்த தவறுகளால் மனவேதனை அடைந்தேன், சிலவற்றால் மகிழ்ச்சியும் அடைந்தேன். நான் என்ன செய்திருந்தாலும், எனது அடி மனதிலிருந்து அவற்றை தவறு என உணர்ந்து அதை உங்களிடமும், எனது குருமார்களிடம் அறிவிக்கிறேன்.
(4) நீங்கள் மேம்படுத்திய போதிசிட்டா மூலம் கடலளவு நேர்மறை சக்தியை உருவாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி, இதன் மூலம் மகிழ்ச்சியடைதல், பணிகளை சிறப்பாக செய்ய முடிகிறது.
(5) அனைத்து ஆசிர்வாதங்களுடன் புத்தரை உங்களுக்குள் மலரவிடுங்கள்: தயவு செய்து தர்மத்தின் விளக்கை உங்களுக்குள் ஒளிரவிடுங்கள், அது இருளின் துன்பத்தை நீக்கும்.
(6) அனைத்து ஆசிர்வாதங்கள் ஒன்று சேர, சோகங்களைத்தாண்டி உங்களுக்கு வெற்றி கிட்ட துதிக்கிறேன். எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்களாக இருங்கள், அப்போதுதான் அலைந்து திரியும் மனிதர்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது.
(7) நேர்மறை எண்ணங்களைக்கொண்டு, என்னால் அனைத்து துன்பங்களையும் அகற்ற முடியும்.
  • சிரம்பணிவதே பிரார்த்தனையின் முதல் பகுதி. புத்தர் சிலையின் முன்பு நாம் சிரம்பணிவது அவருக்கும் அவரது பிரதிபலிப்புகளான இரக்கம், அன்பு, பேரறிவு ஆகியவற்றிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். சிரம் பணிதலென்பதில் நமது தலையான உடல் உறுப்பான தலையை புவி மீது தொட்டு வணங்குவது பெருமை, இயற்கையை தொழும் செய்கையாகும்.
  • காணிக்கை செலுத்துவோம். பெரும்பாலான பெளத்தர்கள் நீர் கிண்ணங்களை காணிக்கையாக அளிக்கிறார்கள், அதுவே முக்கியமானதுதான். தானமளித்தலின் முக்கியத்துவம் என்ன – நமது பொன்னான நேரம், முயற்சி, ஆற்றல், எனக்கு சொந்தம் என்ற எண்ணம் –இவை தன்னலத்திலிருந்து விடுதலையாக உதவும்.
  • மூன்றாவதாக, நமது குறைபாடுகள் மற்றும் தவறுகளை ஒப்புக்கொள்ளுதல். அதேசமயம் சில நேரங்களில் நாம் சோம்பேறியாகவோ அல்லது சுயநலவாதியாகவோ இருக்கிறோம், சில சமயங்களில் அழிவுப்பாதையிலும் செல்கிறோம். இவற்றை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக்கேட்டு, மன உறுதியுடன் நகர்தல் மற்றும் இனிமேல் அதே தவறுகளை செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இவை எதிர்மறை கரும விதிகளை வென்றேடுக்க உதவும்.
  • மேலும், பெருமகிழ்ச்சி அடைகிறோம். நல்லவை நடக்கும் என நமக்கு நாமே நம்ப வேண்டும், மேம்பாட்டிற்கான அத்யாவசிய பணிகளை மற்றவர்களும் செய்து உதவுவார்கள். அதேபோல், புத்தரின் மிக புனிதமான பணிகளை நோக்கி அதிலிருந்து கற்கலாம். இவையனைத்தும் பொறாமையிலிருந்து வெளியேற உதவும்.
  • அடுத்தது, நமக்குள்ளாக நிலையான மனநிலையை உண்டாக்கத் தேவையான கற்றலின் தேவையை கேட்போம். நாம் சொல்வது, “நாங்கள் கற்க விரும்புகிறோம். நமக்குள்ளும், பிறருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளத் தேவையானவற்றை கற்ற விரும்புகிறோம்!”
  • பயிற்சியை விட்டுச்செல்லவேண்டாம் என குருவை கெஞ்சிக்கேளுங்கள். இதற்கு முந்தைய பாகத்தில், கற்றல் குறித்து பேசினோம், இப்போது உள்ளார்ந்த எழுச்சி நிலையை அடையும் வரை நம்மை விட்டுச் செல்லக்கூடாது என குருவிடம் வேண்டுகிறோம்.
  • இறுதியாக, மிக முக்கியமான ஒன்றான அற்பணிப்பு குறித்து பேசுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு நேர்மறை எண்ணத்தினால் சுயமாகவும், மற்றவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்போம். 

பிரார்த்தனை தொடங்கி இதுவரை நாம் பார்த்ததில் பெளத்தம் என்பது வெளிப்புற பொருள் அல்ல; நமது துன்பங்களை தீர்க்கும் அருமருந்து. அதாவது, “நீருக்குள் குதிரையை இயக்குவதுபோல், ஆனால் அதை நீர் குடிப்பதற்கு அனுமதிப்பதில்லை”. வேறு வகையில் சொல்ல வேண்டும் என்றால், புத்தர் காட்டிய வழியில் உறுதியாக பயணிக்க சிரத்தை காட்டவேண்டும், சுயநலம் மற்றும் விழிப்புணர்வு இல்லா நிலையிலிருந்து தம்மைத்தாமே விடுவித்துக்கொள்ள முழுமையாக முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் எல்லையற்ற நலனை பெறலாம்.

முடிவுரை

வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் போது பெளத்தத்தில் பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக தெரியலாம், ஆனால் உள்ளார்ந்த அணுகுமுறையால் தினசரி வாழ்வுக்கு உதவும். நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணரவும், உள்ளார்ந்த எழுச்சியடையவும் பெளத்தம் மற்றும் போதிசிட்டா ஆகியவை சரியான வழிகாட்டி. பெளத்தம், போதிசிட்டா ஆகியவற்றை வழிபடுவதன் மூலம் உள்ளார்ந்த உந்துதல் பெற்று எல்லையற்ற இரக்கம், அன்பு மற்றும் ஞானம் ஆகிவற்றை பெறமுடியும்.

Top