லிங் ரின்போச்சின் செய்தி

எந்தத் தகவலாக இருந்தாலும் எளிதகாவும், பரவலாகவும் கிடைக்குமிடம் இணையதளம். உலகம் முழுவதிலும் இருக்கும் பலவிதமான மக்களும், பௌத்தம் மற்றும் திபெத்திய கலாச்சாரத்தின் இதர தோற்றங்கள் பற்றியும்கற்க விருப்பம் இருப்பவர்களின் முதல் தகவல் திரட்டும் மூலாதாரமாக இந்த இணையதளம் விளங்குகிறது. பௌத்தம் பற்றி ஆழ்ந்து படிக்க நினைப்பவர்கள் தரமான போதனையாளர்களைத் தேடுவார்கள், அப்படியான வாய்ப்பு கிடைத்தால் அவர்களோடு சேர்ந்து கற்கத் தொடங்குவார்கள். அத்தகையவர்களுக்கு இந்த இணையதளம் கல்விக்கு இணை ஊக்கம் தரும் முக்கிய ஆதாரமாகத் சேவை செய்கிறது. சிலர் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க மாட்டார்கள், பல்வேறு காரணங்களால் அவர்களால் தரமான போதனையாளரை கண்டறிய இயலாது. அப்படியே கண்டறிந்தாலும் பொருளாதார ரீதிபாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ அவர்களிடம் போதுமான அணுகுதல் வாய்ப்பு இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இணையதளம், போதனை கற்றலுக்கான அத்தியாவசியமானதாக மாறி இருக்கிறது.

இணையத்தில் பௌத்தம் மற்றம் திபெத்திய கலாச்சாரம் பற்றி பல்வேறு வலைப்பக்கங்களில் நிரம்பியுள்ளன. சில துள்ளியமான தகவல்களைத் தருகின்றன, துரதிஷ்டவசமாக சில நம்பத்தகுந்ததாக இல்லை. இந்த நிலையில், அலெக்ஸ் பெரிசின், பெர்சின் ஆர்கைவ்ஸ் இணையதள பக்கத்தை உருவாக்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதிகாரப்பூர்வமான தகவல்கள் இந்த இணையபக்கத்தில் கிடைக்கும், இவையனைத்தையும் கட்டணமின்றி பல்வேறு மொழிகளில் படிக்கலாம். இதே போன்று பெர்சின் இந்த கட்டுரைகளை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் விதமாக மாற்ற முயற்சித்து வருகிறார் – புறக்கணிப்பால் சோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பௌத்த கருத்துகளை வாசிப்பதை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது.  

அலெக்ஸ் ஒரு மாணவர், என்னுடைய மூதாதையர் யாங்ட்சின் லிங் ரின்போச்சேவிற்கு அவ்வபோது மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். வாழ்நாள் முழுவதிலும் எங்களுடைய பிணைப்பு தொடர்கிறது. அறிவாற்றல் மற்றும் இரக்கம் கலந்த பாரம்பரியத்தில், நவீன முறைகளால் தகவல்களை வழங்கி, ஆன்மீக பயிற்சியின் மூலம், அமைதியும், மகிழ்ச்சியும் இந்த உலகை செழிப்பாக்கட்டும்.

மே 19, 2009
லிங் ரின்போச்

Top