மறுபிறப்பு என்றால் என்ன?

மற்ற இந்திய மதங்களைப் போலவே, பௌத்த மதமும் மறுபிறப்பு அல்லது மறுஅவதாரத்தை வலியுறுத்துகிறது. கடந்த காலத்தில் தனி ஒருவருடைய மனதின் தொடர்ச்சி, உள்ளுணர்வு, திறமைகள் உள்ளிட்டவை எதிர்காலத்திற்குச் செல்கிறது. ஒருவரின் செயல்கள் மற்றும் அவர்களால் கட்டமைக்கப்பட்ட வேறுபாடுகளின் அடிப்படையில், தனி ஒருவர் எண்ணற்ற வகையிலான உயிர் வடிவங்களில் சிறந்த அல்லது மோசமானவற்றில் எதுவாக வேண்டுமானாலும், மறுபிறப்பு எடுக்கலாம்: மனிதன், விலங்கு, பூச்சி, பேயாக மற்றும் இதர பார்க்க முடியாத வடிவங்கள் கூட எடுக்கலாம். சிக்கலான அணுகுமுறைகளான இணைப்பு, கோபம், அப்பாவித்தனம் மற்றும் அவர்களால் தூண்டப்படும் வலுக்கட்டாயமான நடத்தையின் உந்துதல் காரணமாக அனைத்து உயிரினங்களும் கட்டுப்பாடில்லாத மறுபிறப்பை அனுபவிக்கின்றன. கடந்த கால நடத்தையின் தாக்கம் ஒருவர் மனதில் எழுவதன் காரணமாக அவர் எதிர்மறை தூண்டுணர்வை பின்பற்றி அழிவுகரமாக செயல்பட்டால், இதன் விளைவாக அவர் துன்பம் மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறார். மாறாக ஒருவர் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டால், அவர் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். வெற்றிகரமான மறுபிறப்பில் ஒவ்வொரு தனி நபரின் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை என்பது வெகுமதியோ அல்லது தண்டனையோ அல்ல, மாறாக அந்த நபரின் கடந்த கால செயல்கள் நடத்தை விதிகளின் காரணம் மற்றும் விளைவால் உருவாக்கப்பட்டது.

மறுபிறப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

ஒரு விசயம் உண்மை தானா என்பதை நாம் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறோம்? பௌத்த போதனைகளைப் பொறுத்தவரையில், விஷயங்களின் உண்மைத் தன்மையை இரண்டு வழிகளில் அறியலாம்: அவை நேரடியான புலனுணர்வு மற்றும் அனுமானம். பரிசோதனைக் கூடத்தில் ஒரு சோதனையைச் செய்வதன் மூலம் நேரடி புலனுணர்வால் ஒன்றின் இருப்பை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.  

உதாரணமாக, ஒரு துளி ஏரி நீரில் பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன, நுண்ணோக்கி மூலம் பார்ப்பதனால், நம்முடைய புலன்களின் மூலம் எளிதில் அது உண்மை என்பதை அறியலாம்.

இருப்பினும், சில விஷயங்களை நேரடி புலனுணர்வு மூலம் அறிய முடியாது. நாம் தர்க்கம், காரணம் மற்றும் அனுமானத்தை சார்ந்திருக்க வேண்டும், உதாரணமாக காந்தசக்தியின் இருப்பை காந்தம் மற்றும் இரும்பு ஊசியின் நடத்தையில் இருந்து அனுமானத்தின் மூலம் அறியலாம். நேரடி புலனுணர்வு மூலம் மறுபிறப்பை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். இருப்பினும், சிலர் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருத்தல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உடைமைகளை அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களை முன்னரே அடையாளம் காணக்கூடிய பல உதாரணங்கள் உள்ளன. மறுபிறப்பு இருப்பதை நாம் ஊகிக்க முடியும், ஆனால் சிலர் இந்த முடிவை மற்றும் இந்த தந்திரத்தை சந்தேகிக்கலாம்.

கடந்த கால நினைவுகளின் சுவடுகளை தள்ளிவைத்துவிட்டு, தர்க்க ரீதியில் மறுபிறப்பை புரிந்து கொள்வதை நோக்கி திரும்புவோம். சில விஷயங்கள் யதார்த்தத்திற்கு ஒத்துப்போகவில்லையெனில், அவற்றை பௌத்தத்தில் இருந்து வெளியேற்ற ஆவலுடன் இருப்பதாக புனிதர் தலாய் லாமா கூறி இருக்கிறார். மறுபிறப்பிற்கும் இது பொருந்தும். உண்மையில், அவர் இந்த அறிவிப்பையே அந்த அர்த்தத்தில் தான் தெரிவித்தார். மறுபிறப்பு என்ற இருத்தலே இல்லை என்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடிந்தால், பின்னர் அது உண்மை என்று நம்புவதை நாம் நிச்சயம் கைவிட வேண்டும். இருப்பினும், விஞ்ஞானிகளால் அது தவறு என்று நிரூக்கப்பட முடியாவிட்டால், ஏனெனில் அவர்கள் தர்க்கம் மற்றும் விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுகின்றனர், பின்னர் புதிய விஷயங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் வெளிப்படையாக இருப்பதால், அவை இருக்கிறதா என்பதை தொடர்ந்து ஆராய வேண்டும்.  

மறுபிறப்பு இல்லை என்பதை நிரூபிக்க, அவர்கள் அதன் இல்லாமையை அறிய வேண்டும். என் கண்களால் பார்க்காததால் மறுபிறப்பு இல்லை என்று வெறுமனே சொல்வது மறுபிறப்பின் இருப்பை காண்பது அல்ல. காந்தசக்தி மற்றும் புவியீர்ப்பு விலை போன்ற நம் கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள் இருக்கின்றன.

Top