அமைதி கொள்வதற்கான பாரம்பரிய பௌத்த முறையானது சுவாசித்தலில் கவனம் செலுத்துதலாகும். பௌத்த பயிற்சியில் பல தரப்பட்ட சுவாசித்தல் முறைகளும் பல விதமான மூச்சுப் பயிற்சிகளும் உள்ளன. பெரும்பாலும் எல்லாவற்றையும் விட எனக்குப் பரிட்சயமானது வாய் வழியே மூச்சுவிடாமல் மூக்கு வழியே சுவாசிப்பது மேலும் கஷ்டப்பட்டு மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடாமல் இயற்கையான மென்மையான முறையில் சுவாசித்தலாகும்.
அவற்றில் சில முறைகளில் நாம் மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும் சிலவற்றில் அப்படி செய்யத் தேவையில்லை. சில நேரங்களில் மூச்சை உள்ளே இழுக்கும் போது பிடித்து நிறுத்தி வைத்திருப்போம் மேலும் சில நேரங்களில் மூச்சை வெளியிடும்போது நிறுத்தி வைப்போம். இவை அனைத்துமே மூச்சுப்பயிற்சியின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்ற விதத்தை பொருத்ததாகும்.
அமைதி கொள்வதற்கான பாரம்பரிய முறையானது மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் சுழற்சியைச் செய்வதாகும். மேலும் மூச்சை வெளியே விடும் போது நாம் நிறுத்த வேண்டும் ஏனெனில் பின்னர் இயற்கையாக நம்மால் ஆழமாக மூச்சை உள்ளிழுக்க முடியும் கட்டாயப்படுத்தி இழக்கத் தேவையில்லை. இந்த எளிய முறையிலான அமைதிப்படுத்துதலில் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது பிடித்து வைத்திருக்க மாட்டோம், இல்லாவிட்டாலும் வேறு பல முறைகளையும் இது உள்ளடக்கி இருக்கிறது. இந்த சுழற்சியை பயன்படுத்துவதற்கான நோக்கமானது – அதாவது மூச்சை உள்ளே இழுத்து வெளியிடும் இந்த முறையிலான சுழற்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன - ஆனால் இங்கே அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், நாம் நம் எண்ணங்களை அமைதிப்படுத்த விரும்பினால், இந்த எண்ணும் முறை பொதுவாக இந்த சுவாச சுழற்சியை கற்பனை செய்வதிலிருந்து வேறுபட்டது என்பதால், அதற்கு அதிக கவனம் தேவை. ஏனெனில் அதற்கு அதிக கவனமும் ஒருநிலைப்படுத்துதலும் தேவை என்றால், மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்கு இடம் இருக்காது, எனவே அது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
இது பாரம்பரியமான முறை. ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டறிந்தது என்னவென்றால், மேற்கத்திய மக்கள் குறிப்பாக போதித்தல் என்று வரும் போது அன்றைய நாளின் மிக அழுத்தமான மனநிலையில் இருந்தே வருகின்றனர். அவர்கள் வழக்கமாக அதிக அழுத்தம் உள்ள வேலைகளில் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர், பின்னர் மாலை நேரங்களில் ஒரு போதனைக்கு வருவதற்கு போக்குவரத்து மற்றும் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது, பாரம்பரிய பௌத்தர்களைப் பற்றி நாம் பேசும் போது இந்தியாவிலோ அல்லது திபெத்திலோ நாம் காலையில் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்யும் போது அப்படி இருக்காது. எனவே முதல் விஷயமாக ஒரு மேற்கத்தியர் பௌத்த மையத்திற்கு வந்த உடன் அவரை சுவாசிக்கும் முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்வது வழக்கமாக அவர் செய்வதைவிட மாறுபட்டது, அவர்கள் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தால், அதன் விளைவு இப்படி செய்ய அறிவுறுத்துவது அவர்களின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும், ஏனெனில் இது குழப்பமானது.
பதற்றமான பின்புலத்தில் இருந்து வரும் மேற்கத்திய பயிற்சியாளர்களுக்கு நான் பரிந்துரைக்கும் சுவாசித்தலின் மிகப் பிரதான பயிற்சியின் நோக்கமே அமைதிப் படுத்துதல், பாரம்பரிய முறையில் மூச்சை உள்ளே இழுத்துப் பிடித்து நிறுத்தி பின்னர் செய்யும் இந்த சுழற்சி முறையானது சற்றே குழப்பமானது, மேலும் அது அவர்களுக்கு மேலும் மனச்சோர்வை கொடுக்கும் என்பதால் அமைதி அடைதலின் நோக்கமே தடைபட்டு போகும். எனவே இந்தக் குறிப்பிட்ட சூழலில் அந்த முறையை வலியுறுத்தவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்தச் சூழ்நிலையில், நான் பரிந்துரைக்கும் விஷயம் என்னவென்றால், சுழற்சியைப் பாரம்பரிய முறையால் பார்ப்பதற்கு அவர்கள் வலியுறுத்தப்பட்டால், அவர்கள் மேற்கத்திய முறையிலான எண்ணிக்கை சுழற்சியைப் பயன்படுத்தலாம், இது வெறுமனே மூச்சை உள்ளே இழுத்து, பின்னர் பிடித்து நிறுத்தி வைக்காமல் மூச்சை வெளியே விடுவதாகும் அதன் சுழற்சியை எண்ணிக் கொள்ள வேண்டும்.
அமைதி அடைந்த பின்னர், நம்முடைய மனம் மிகவும் சலனம் அடைந்திருந்தால் சுவாசித்தல் சுழற்சியில் நாம் கவனம் செலுத்தி அதனை எண்ணலாம். மாறாக நம்முடைய மனம் சஞ்சலம் இல்லாமலோ அல்லது அமைதியாகவோ அல்லது சாந்த நிலையில் இருந்தாலோ, எண்ணுவதற்கு எந்தத் தேவையும் இல்லை.
மற்றொரு விதமாகச் சொல்வதானால், பாரம்பரிய தர்ம அணுகலை பின்பற்றும் போது, நாம் பயன்படுத்தக்கூடிய மூன்று சாத்தியமான முறைகள் நம்மிடம் இருக்கும். ஒருவரின் சூழலைப் பொறுத்து, ஒருவர் தன்னை மதிப்பீடு செய்ய வேண்டும், பின்னர் ஒருவர் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தலாம். அதனால்,
- நாம் மிக மிக மன அழுத்தத்தில் இருந்தால், மூச்சுப் பயிற்சியை சாதாரண மேற்கத்திய பாணியில் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதை ஒரு எண்ணிக்கை என்கிற ரீதியில் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
- நாம் மிகவும் அழுத்தத்தில் இல்லை, ஆனால் நம்முடைய மனம் ஒருநிலையாக இல்லையென்றால், பாரம்பரிய முறையிலான எண்ணிக்கையான மூச்சை வெளியே விட்டு இடைநிறுத்தி பின்னர் உள்ளே இழுக்கும் முறையை நம்மால் செய்ய முடியும்.
- நம்முடைய மனம் அமைதியாக இருந்தால், எண்ணக்கூடத் தேவையில்லை, சுவாசித்தலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
இவ்வகையான முறைகளை செயல்படுத்தும்போது, நாம் இங்கே பார்க்க வேண்டியது என்னவென்றால் நமக்கு நாமே உணர்வுள்ளவராக இருந்து பொருத்தமான முறையை செயல்படுத்த வேண்டும். பௌத்த போதனைகள் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால் அவை அனைத்தும் பல்வேறு முறைகளைக் கொண்டுள்ளன, எனவே எந்த குறிப்பிட்ட இலக்கையும் அடைய பெரிய எண்ணிக்கையிலான முறைகள் பொதுவாகவே இருக்கின்றன. உளவியல் பயிற்சிகளுக்கும் கூட அவை மிக உதவிகரமானதாக இருக்கப் போகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம்முடைய உண்மையான உணர்ச்சி நிலையானது என்ன போன்ற விஷயங்களில் நமக்கு நாமே உளவியல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், எதையாவது அடைவதற்கான சில முறைகளை நாம் கற்கும் போது பொருத்தமான ஒன்றை செயல்படுத்துவது அப்போது தான் சாத்தியமாகும். எனவே அமைதிஅடைவதற்கான இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு மூச்சுப் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள்.
[தியானம்]
அமைதி கொள்வதற்கான இந்த தியானத்திலும் கூட முதல்நிலையில் நம்முடைய கண்களை திறந்தோ, தரையைப் பார்த்தோ அல்லது மூடியோ வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு முறைகளுமே புத்தரால் போதிக்கப்பட்டவையே. பௌத்த போதனைகளில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. தேரவாத பாரம்பரியத்தில் இருப்பவை ஹினாயனா பாரம்பரியத்தில் விடுபட்டவை, பொதுவாக நாம் கண்களை மூடியே தியானம் செய்வோம்; மஹாயனா பாரம்பரியத்தில் மற்றொரு பெரிய பிரிவு இருக்கிறது, அது பெரும்பாலும் கண்களைத் திறந்தோ, மூக்கின் நுனியையோ அல்லது தரையைப் பார்த்தோ செய்யக் கூடியது. ஆனால் நாம் தரையை நோக்கி, மூக்கின் நுனி இருக்கும் திசையை பார்த்து தியானிக்கும் போது, நம் கண்களின் கவனம் அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை.
எனவே, மீண்டும் நமக்கு நாமே உளவியல் உணர்வுடன் இருத்தல் அவசியம், ஆனால் நாம் மிகுந்த மன அழுத்தத்தில் மற்றும் வெறுப்புடன் இருந்தால், கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது மிகவும் எளிமையானதாக இருக்கும். மாறாக நாம் ஏற்கனவே அமைதியான மனநிலையில் இருந்தால் கண்களைத் திறந்துகொண்டே கீழ் நோக்கியவாறு தரையைப் பார்த்து தியானிக்கலாம், ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகில் இருந்து தனித்து இருக்கக் கூடிய அமைதியை நாம் விரும்பவில்லை, உலகுடனும் மற்றவர்களை கையாள்வதற்கும் தேவையான நிம்மதி மற்றும் அமைதியையே நாம் விரும்புகிறோம். ஆதலால் கண்களைத் திறந்த நிலையில் செய்வதே அந்த முறைக்குப் போதுமானதாகும்.
அடுத்த நிலையானது நம்முடைய நோக்கத்தை மறுஊர்ஜிதம் செய்வதாகும். உணர்வுகளின் காரணங்கள் அல்லது உளவியல் காரணங்களை எதற்காகப் பகுப்பாய்வு செய்கிறோம் நாம் எதற்காக பயிற்சிக்கு வருகிறோம் அல்லது தியானம் செய்கிறோம் என்று நாம் அடிக்கடி நினைப்போம். நான் ஏன் இதைச் செய்கிறேன்? குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடா? குழுவினரின் வற்புறுத்தல் காரணமாக செய்கிறேனா? சமூக கொண்டாட்டமாகச் செய்கிறேனா, குழுவினருடனான பிணைப்பா அல்லது நான் சொன்னதைப் போல ஒரு தலைவரிடம் இருந்து சக்தியைப் பெற்று நீங்கள் பொருத்திக் கொள்ள விரும்பும் “தர்ம – நெறியாளரா”? அல்லது உங்கள் ஆசிரியர் மீதான அன்பின் காரணமாக அவருடனான பிணைப்பின் வெளிப்பாடாக கற்றுக்கொள்கிறீர்களா. பௌத்த அணுகுமுறையில் இப்படி இல்லை. இது பெரும்பான்மையாக மேற்கத்திய அணுகுமுறை நிச்சயமாக இதுவும் கூட பயனுள்ளதே.
ஆனால் பாரம்பரிய பௌத்த அணுகுமுறையில் உந்துதலை நம்மால் மறுஉறுதி செய்ய முடியும் என்றும் நாம் சொல்லாம், அதாவது நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் மறுஉறுதி செய்ய முடியும். பௌத்த உந்துதலே நோக்கத்தின் வகையாகும். வேறுவிதமாகச் சொல்வதானால், இங்கே வந்து நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், நம்முடைய நோக்கம் என்ன, நம்முடைய இலக்கு என்ன? நாம் என்ன அமைவதற்காக இங்கே வந்தோம் அதற்குப் பொருத்தமானது என்ன என்பதை மூன்று சாத்தியமான இலக்குகள் என்கிற விதத்தில் நம்மால் இதனை சிந்திக்க முடியும். மீண்டும், நமக்கு நாமே உளவியல் உணர்வுள்ளவராகவும் நேர்மையானவராகவும், உண்மையில் நம்முடைய இலக்கு மற்றும் நம்முடைய நோக்க என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் தன்னை புத்தராக கருதிக் கொண்டு, “அனைத்து உணர்வுள்ள உயிர்களும் பலனடையும் விதமாக ஞானத்தை அடைவதற்காக நான் இப்படி செய்கிறேன்” என்று கூறுவது எளிதானது. இவை வெறும் வார்த்தைகளே.
ஏனெனில் உண்மையில் புத்தராவதற்கான அர்த்தம் என்ன என்கிற புரிதலின்றி, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பூச்சியினமும் கூட கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் மறுபிறப்பெடுப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்கிற உண்மையான விருப்பமின்றி, “அனைத்து உயிரினங்களுக்கும் உதவும் விதத்தில் ஞானத்தை அடைவதே என்னுடைய நோக்கம்” என்று சொல்வது அர்த்தமற்றது. ஆகவே யதார்த்தமாக நேர்மையாகவும் நம்முடைய இலக்கு என்னவோ அதை நோக்கி உண்மையாக இருக்க வேண்டும். எனவே மூன்று பொருத்தமான நோக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உண்மையில் இந்த ஜென்மத்தில் நம்முடைய உறவுமுறைகளுடன் நல்லுறவை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில் கவனமாக இருக்கிறோம், அதனால் நாம் பௌத்த முறைகள் பரிந்துரைப்பவற்றை ஒரு வகையான தெரபி என்கிற விதத்தில் இங்கே வந்து பயிற்சியாகக் கொண்டு செய்கிறோம்.
அல்லது நாம் இதனை தர்மா-லைம் என்கிற விதத்தில் பார்த்து அதனை நம்மால் அணுக முடியும், அவை மீண்டும், ”இந்த ஜென்மத்தில என்னுடைய உறவுமுறைகளில் முன்னேற்றம் காண்பதற்காக நான் இதனைச் செய்கிறேன், ஆனால் நான் இதனை விடுதலை மற்றும் ஞானமடைதலை நோக்கிச் செல்லும் பாதைக்கான அடிச்சுவடு என்றே நான் காண்கிறேன்” என்பதாகும். அல்லது நம்மால் இதனை உண்மையான தர்ம விஷயம் என்கிற ரீதியில் கா முடியும், அது என்னவென்றால், "நான் இந்தப் பயிற்சியை உண்மையில் ஞானம் மற்றும் விடுதலை அடைவதற்கான பயிற்சியாகச் செய்கிறேன”. எனவே நம்முடைய இலக்கு அல்லது நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை நாம் மறுஉறுதி செய்கிறோம். நம்முடைய இலக்கில் நாம் நேர்மையாக இருந்தால், அதில் நாம் மனம் செலுத்துவது மிக எளிதாக இருக்கும். இல்லாவிட்டால், நாம் நம்முடைய இலக்கில் நேர்மையாக இல்லாதிருந்தால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது விளையாட்டானதாகிவிடும்.
பின்னர் ஒருநிலைப்படுத்துதலுடன் கவனிப்பதற்கான நிலையான முடிவை நாம் எடுப்போம். நம்முடைய கவனம் அலைபாய்ந்தால், நாம் அதனை திரும்பப் பெற முயற்சிப்போம், நமக்கு உறக்கம் வந்தாலும் கூட நம்மை நாமே எழுப்புவதற்கு முயற்சிப்போம். நாம் அதிக ஒருநிலைப்படுத்துதலுடன் இருப்பதற்கு அது உதவுமானால், நாம் விரைப்பாக உட்காராமல், நேராக நிமிர்ந்து அமர்வோம் நாம் நம்முடைய அமரும் முறையில் திருத்தம் செய்வோம். நம்முடைய சக்தி குறைந்தது போல இருந்தால், அதனை அதிகரிக்க புருவங்களுக்கு இடையே கவனம் செலுத்தி, நம்முடைய கண்கள் மேலே பார்த்தவாறு தலையை ஒரு மட்டத்தில் வைத்து சரிசெய்யலாம். நாம் சற்றே பதற்றமாகவோ அல்லது படபடப்பாகவோ உணர்ந்தால் சக்திகளை சாந்தமாக்குவதற்கு, தொப்புள் கொடியில் கவனம் செலுத்தும் விதமாக கண்களை கீழ்நோக்கிய நிலையில் தலையை வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக நம்மால் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுத்து வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்து நமக்குத் தேவைப்படும் போது மூச்சை வெளியே விடலாம்.
ஒருநிலைப்படுத்துதலுக்கான நோக்கம் அல்லது சுயநினைவு முடிவை எடுப்பது எப்படி ஒருநிலைப்படுத்துதலைப் பெறலாம் என்னும் மைத்ரேயாவின் வழிகாட்டுதல்களில் இருந்து நேரடியாக வருகிறது. புருவங்கள் மற்றும் தொப்புளில் கவனம் செலுத்துவதால் சக்திகள் இடையே சமன்படுத்துதல் ஏற்படுகிறது என்பது காலச்சக்கரா போதனைகளில் இருந்து வருகிறது. ஆகவே பாரம்பரி பௌத்த முதல்நிலைகளின் ஒருங்கிணைப்பு என்கிற ஒன்று இல்லாவிட்டாலும் கூட இங்கே சொல்லி இருப்பதைப் போன்ற விஷயங்களின் ஒருங்கிணைப்பு, பௌத்த போதனைகளில் இருந்து வந்ததில்லை. ஆனால் நான் அவற்றை முதன்மையானவை என்கிற வடிவத்தை இங்கே ஒருங்கிணைத்திருக்கிறேன் ஏனெனில் நான் பார்த்தவரையில் பெரும்பாலான மேற்பத்தியர்கள் மிகுந்த மனஅழுத்தத்தினாலேயே போதனைகளுக்கு வருகின்றனர், இவ்வகையான முதல்நிலைகள் அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வாகும். நம்முடைய மிக அதிக அழுத்தம் நிறைந்த அன்றாட வாழ்விற்கு பொருந்தும் வகையிலான முதல்நிலைகளின் தொகுப்பு நமக்குத் தேவை.