உலகளாவிய நன்னெறிகளுடன் அமைதியை ஊக்குவித்தல்

Uv promoting peace

மன ஆரோக்கியப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையானது இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகின் மிகப்பெரிய நெருக்கடி இதுதான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன என்கிற கேள்வியும் இப்போது எழுகிறது.

மதத்தின் பெயரில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு போர்கள், சண்டைகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களை நாம் பார்க்கிறோம். தலாய் லாமா பயணம் செய்யும் இடங்களில் இருக்கும் மக்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வியானது: இந்த உலகிற்கு என்ன பிரச்னை? என்பதே. தீவிரவாதம், ஊழல், பாலின பாகுபாடு, ஏழை-பணக்காரர் இடையேயான இடைவெளி, இளைஞர்களின் மன நலப் பிரச்னைகள் போன்ற நெருக்கடிக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது. மன ஆரோக்கியப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையானது மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் அது மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. ஆகவே, நம்மால் எப்படி இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்?

நவீன கல்வி முறை இருக்கும் நிலையிலும், மனநலன் சார்ந்த பிரச்னைகள் ஏன் அதிகரிக்கின்றன என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டும். உண்மையில் என்ன பிரச்னை? அது எப்படி எழுந்தது? இதுவே புனிதர் தலாய் லாமாவிடம் கேட்கப்படும் பொதுவான கேள்வி. நவீன கல்வி முறையில் குறைபாடு இருக்கிறது என்று தயக்கமின்றி, புனிதர் சொல்கிறார். அந்தக் குறைபாடானது நம்முடைய கல்விமுறை அமைப்பானது அறிவாற்றலை கட்டமைக்கும் முதன்மையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு வகுப்பில் நாம் இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று சொன்னால், நாம் தேர்ச்சி பெற்றுவிடுகிறோம். அழகான மனதுடன், பிறர் நலனில் அக்கறையுடன், இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்குக்கு நெருக்கமான எண் வரும் என்று கூறினால், நாம் தேர்ச்சிபெறுவதில்லை. மனதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை! மூளைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இது தான் பொறுப்பு என்பது. மூளை வளர்ச்சி மட்டுமே உலகின் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது, அல்லது மனிதாபிமானத்துக்கு மத்தியில் அங்கே நம்பிக்கை, அன்பு மற்றும் இரக்கம் உள்ளது. நடைமுறை ரீதியில் பார்த்தால், மனிதகுலத்தை அதிக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு கொண்டு செல்வதற்கான உந்து சக்தியாக எது இருக்க முடியும்? அது இதயம், நமது மனித இதயம் மட்டுமே ஆகும்.

இந்த இதயத்தை சமரசம் செய்யாமல் உலகம் செழிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஞானமும் தேவை. ஞானமும் இதயமும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இதை மனதில் கொண்டு, நன்னெறிகள் மற்றும் அறநெறிகளின் நங்கூரமாக, உலகளாவியது என்னவென்றால் அது இரக்கமுள்ள இதயம். இதை யாராலும் மறுக்க முடியாது. ஒருவர் மத நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி, மதம் சார்ந்தவராக இருந்தாலும் சரி, படித்தவராக இருந்தாலும் சரி, படிப்பறிவில்லாதவராக இருந்தாலும் சரி, அது முக்கியமில்லை. யாரோ ஒருவர் தங்களிடம் பாசத்தையும் அக்கறையையும் காட்டுவதால் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் அதை விரும்புகிறார்கள். நன்னெறிகளின் வேரில் இருப்பது, மற்றவர்களிடம் நாம் காட்டும் இரக்கம் - அன்பு மற்றும் பரிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்

அடுத்த கேள்வியானது நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் எப்படி இதை ஊக்குவிக்க முடியும்? முதலாவதாக, உலகம் முழுவதிலும் உள்ள மையங்களால் உதவ முடியும். உதாரணத்திற்கு, டெல்லி ராமானுஜன் கல்லூரியில் உள்ள நன்னெறிகள் மற்றும் மதிப்புகள் மையத்தில், உலகளாவிய நன்னெறிகளை ஊக்குவிப்பதற்காக புனிதர் தலாய் லாமா ஆசிர்வாதத்துடன் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

மற்றவர்களை இரக்கமுள்ளவர்களாக மாற்றுவதற்கு நாம் செயல்பட வேண்டிய வழிகள் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? அது ஒரு வழிபாட்டு வடிவத்தில் இருக்கக்கூடாது, ஆனால் வெளிப்படைத்தன்மை, கருத்தில் கொள்ளுதல் மற்றும் அரவணைப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். உலகில் ஒரு வியத்தகு மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்யலாம். மற்றவர்களிடத்தில் நாம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தலாம்? உலகில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நபர்களை நம்மால் சந்திக்க முடியாவிட்டால், இரக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறைந்தபட்சம் எப்படிப் பரப்ப முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும். குறிப்பாக மற்றவர்கள் யார், இளைஞர்கள் மத்தியில் எப்படி பரப்ப முடியும் என்பதைக் காண வேண்டும். ஏனெனில், எதிர்கால உலகின் நம்பிக்கை இன்றைய இளைஞர்களை நம்பித் தான் உள்ளது.

Top