அன்றாட வாழ்வில் நன்னெறிகள் பயன்பாட்டின் கோட்பாடுகள்

நன்னெறிகள் மற்றும் மதிப்பீடுகளை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதே “பயன்பாட்டு நன்னெறிகள்” எனப்படுகிறது. இதன் நவயுகம் என்பது “வாழ்வியல் கல்வி”, அது இரட்டை சவாலான தனிப்பட்ட வெறுப்பு மற்றும் சமூக பதற்றம் இரண்டிற்குமான தீர்வு. தனிப்பட்ட மட்டத்தில், ஒருவரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது, அதே நேரத்தில் சமூக மட்டத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான மற்றவர்களுடன் நேர்மறையான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறியவும் உதவுகிறது. இதில் உலகளாவிய நன்னெறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வகையான நன்னெறிகளை நாம் எங்கே பெறுவது? அரிஸ்டாட்டில் அல்லது ஜான் எஃப். கென்னடி போன்ற தலைவர்கள், "உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்தது என்று கேட்காமல், உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்" என்று சொன்னதைப் போன்ற மதச்சார்பற்ற பேச்சுகளில் இருந்து அவற்றைப் பெறலாம். அவற்றை மதங்களிலிருந்தும் கூட நாம் பெறலாம். மதங்கள் மக்களை பிரிக்க மட்டுமே செய்கின்றன என்று சிலர் வாதிட்டாலும், மதம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்: மதத்திற்கு மதம் வேறுபடும் இறையியல் மற்றும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான நன்னெறி அமைப்புகள். அவர்கள் அனைவரிடமிருந்தும் நமது வாழ்க்கைக் கொள்கைகளைப் பெறுவதால், உலகளாவிய பயன்பாட்டு நன்னெறிகளை உருவாக்குவதில் மதங்களும் பங்கு வகிக்கின்றன என்பதை நான் சேர்க்கிறேன்.

மௌலானா வஹிதுதீன் கானால் நிறுவப்பட்ட அமைதி மற்றும் ஆன்மீக மையத்தில், கடந்த பதினேழு வருடங்களாக வார இறுதி நாட்களில் மௌலானா நடத்தி வரும் பயன்பாட்டு நன்னெறி வகுப்புகளுக்கான நடைமுறை முன்னுதாரணத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆயிரக்கணக்கான வாழ்க்கைக் கல்வியாளர்களை நாங்கள் தயார் செய்துள்ளோம், அவர்கள் முதலில் கோட்பாடுகளைத் தங்களுக்குள் பயன்படுத்தினார்கள், அதைத்தான் ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று பின்னர் அவர்களைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். கோட்பாடுகளை முதலில் அவர்கள் தங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், அப்படியே செய்து கொண்டிருக்க வேண்டும், அதுவே நீடித்த செயல்முறை. நாம் அவற்றை செய்யத் தொடங்கி அதனுடனே செல்லும் போது, அதே கோட்பாடுகளை மாணவர்களும் செயல்படுத்த உதவ முடியும். 

நாம் உருவாக்கி இருப்பது என்னவெனில் தீர்வு. சமகால உலகில் அமைதியை எவ்வாறு நிலைநாட்டுவது என்பது குறித்து நான் ஆராய்ச்சி செய்துள்ளேன், அதன் பின்னரே தனிநபர்கள் அமைதி கலாச்சாரத்தை நோக்கி மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்தேன். இது நிகழும்போது, அவர்கள் அறிவார்ந்த வளர்ச்சியடைந்து, தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி, சமூகத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களாக மாறுகிறார்கள். இது சர்வதேச அளவில் நாடுகளை வளர்க்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாங்கள் தனிநபர் மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கியுள்ளோம், அதில் இருந்து நான் மூன்று முக்கிய கொள்கைகளை பகிர விரும்புகிறேன். இந்தக் கொள்கைகள் மதச்சார்பின்மை மற்றும் மத நன்னெறிகள் இரண்டில் இருந்தும் பெறப்பட்டது:

1. ஒரு நேர்மறை அணுகுமுறை

முதலாவது நேர்மறை அணுகுமுறை அல்லது நேர்மறை மனநிலை. சிறைக்கைதிகள் இரண்டு பேர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கும் கதை ஒன்று உள்ளது. இருவரும் இருப்பது சிறைக்குள் என்றாலும் ஒருவர் சேற்றை மட்டும் பார்க்கிறார், மற்றொருவர் நட்சத்திரங்களைப் பார்க்கிறார். இதன் பொருளானது ஒரே சூழ்நிலையில் மாறுபட்ட கருத்துள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது, நாம் நேர்மறையாக இருந்து சேற்றை மட்டும் பார்க்கிறோமா, அல்லது சூழ்நிலை வழங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதா என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். நாம் மேம்படுத்தும் சிந்தனைகள் அதிக வாய்ப்புகளைக் காண நமக்கு உதவுகிறது.

2. நேர்மறை நடத்தை

இரண்டாவது நேர்மறை நடத்தை. அனைத்து மதங்களிலும் நன்னெறிக்கென ஒரு பொன் விதி இருக்கிறது. "மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய விரும்புவதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று "கிறிஸ்துவத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதாவது மற்றவர்களிடம் இருந்து நாம் எந்த விதமான நடத்தையை எதிர்பார்க்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் பல நன்னெறி விதிகளை கற்பிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புவதைப் போலவே நாமும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். நாம் மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறோம், கொடுப்பதில் இருந்து நாமும் பெறுகிறோம் என்பதை அறிவோம். நாம் நமது உரிமைகள், மனிதநேயம் - அனைத்தையும் பெறுகிறோம்.

3. அமைதி மற்றும் அகிம்சை 

என்னுடைய ஆராய்ச்சியை பொறுத்தவரையில், அனைத்து நன்னெறி சாராம்சங்களையும் அமைதி என்பதற்குள் உள்ளடக்கிவிடலாம். இது நல்வாழ்வு, மரியாதை, மன்னிப்பு போன்ற அனைத்து நேர்மறையான வாழ்க்கைக் கொள்கைகளைக் கொண்ட குடையைப் போன்றது. இவ்விதத்தில் நாம் அனைவரும் அமைதி, அகிம்சை என்கிற குடையின் கீழ் வரலாம். இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்தி, அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தும்போது, நாம் முன்னேறி நம்மை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு பங்களிப்பவர்களாகவும் மாற உதவுகிறோம்.

மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் இது போன்ற திட்டங்களை மேற்கொள்வது பயனுள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த வடிவமைப்புகளை மாணவர்களும் ஆசிரியர்களும் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்கனவே ராமானுஜன் கல்லூரி எங்களுக்கு கொடுத்துள்ளது, அது மிகவும் வெற்றியும் கூட அடைந்துள்ளது. இதனை மேலும் கொண்டு செல்ல, அமைதி மற்றும் ஆன்மீகத்திற்கான மையம் பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளது. ”நாம், வாழ்கிறவர்கள்” என்பது போன்ற பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி இணைப்புகள் மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தேவைப்படும் புத்தகங்களையும் தயார்படுத்தி உள்ளன. கல்லூரிகள் மற்றும் வளாகங்களுக்காக, நாங்கள் “அமைதி கலாச்சாரம்” என்கிற பாடத்தை உருவாக்கியுள்ளோம், அது ராமானுஜன் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று  நம்புகிறோம். வளாகத்திற்கு வெளியே உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக, நாங்கள் "நல் வாழ்க்கைத் திட்டத்தை" உருவாக்குகிறோம். இந்தத் திட்டங்கள் மூலம் இவற்றை உலகுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். இந்தியா முழுவதும் மையங்களை நிறுவியுள்ளோம். சர்வதேச அளவில் நாங்கள் அவற்றை ஆன்லைனில் கொண்டு செல்கிறோம், எனவே எங்கள் மையங்களும் அங்குள்ள வாழ்க்கைக் கல்வியாளர்களும் இவற்றை மேலும் கொண்டு செல்ல முடியும். வாழ்க்கை கல்வியாளர்கள் அல்லது நன்னெறியாளர்களை வளர்ப்பதற்கான ஒரு சிறிய படி இது என்று நான் நம்புகிறேன். இதன் மூலம், நாம் அறிவார்ந்த வளர்ச்சியை அடைந்து, முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பவர்களாக மாறலாம்.

Top