ஷக்யமுனி புத்தரின் வாழ்க்கை

16:19
பாரம்பரியத்தின் அடிப்படையில், புத்தரை ஒரு சாதாரண மனிதராக தன்னுடைய சொந்த அசாதாரண முயற்சியால் விடுதலையை அடைந்தவராகவோ அல்லது ஏற்கனவே ஞானம் பெற்ற அவரை 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே ஞானமடைதலுக்கான வழியை தனது செயல்கள் மூலம் ஏற்படுத்தியவராகவோ பார்க்கலாம். நாம் இங்கு புத்தரின் வாழ்க்கையையும், நம்முடைய சொந்த ஆன்மீகப் பாதைக்கு அவர் வாழ்க்கையில் இருந்து எந்த மாதிரியான உத்வேகத்தைப் பெற முடியும் என்றும் பார்க்கலாம்.

பாரம்பரிய நாட்காட்டிகள், கௌதம புத்தர் என்றும் அறியப்படும் ஷக்யமுனி புத்தர் மு.பொ.ஊ 566 முதல் 485 காலகட்டத்தில் மத்திய வடக்கு இந்தியாவில் வாழ்ந்தார் என்று குறிப்பிடுகிறது. பல்வேறு பௌத்த ஆதாரங்கள் அவருடைய வாழ்க்கையின் எண்ணற்ற, மாறுபட்ட செயல்பாடுகளையும், காலப்போக்கில் மேலும் அதிக விவரங்கள் படிப்படியாகத் தோன்றுபவையாகவுமே உள்ளடக்கியுள்ளன. புத்தர் இயற்கை எய்திய மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் முதல் பௌத்த இலக்கியங்கள் எழுதப்பட்டிருப்பதால், இந்த விவரங்களில் பலவற்றின் துள்ளியத்தை அறிந்து கொள்வது கடினம்.

ஆயினும்கூட, எழுதப்பட்ட வடிவத்தில் சில விவரங்கள் வெளிவந்தாலும், அவை போதுமான காரணங்களாக இல்லை என்பதால் அதன் ஏற்புடைமையை நிராகரிப்பது சரியல்ல, ஏனெனில் பலர் தொடர்ந்து வாய்வழி வடிவமாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, புத்தர் உள்பட பெரிய பௌத்த மதகுருக்களின் பாரம்பரிய சுயசரிதைகள் வெறும் வரலாற்று பதிவுகளுக்காக அன்றி நீதிபோதனைக்காக தொகுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, சுயசரிதைகள் அனைத்தும் பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் தங்களது ஆன்மிக பாதைக்கான விடுதலை மற்றும் ஞானத்தை அடைவதற்கான போதனைகள் மற்றும் ஊக்கம் பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டன. புத்தரின் வாழ்க்கைக் கதையின் மூலம் பலன் பெற, நாம் அதனை கருத்து ரீதியில் புரிந்து கொண்டு, அதில் இருந்து நாம் பெறக்கூடிய பாடங்களை பகுப்பாய்வு செய்து கற்றறியலாம்.  

 புத்தர் வாழ்க்கையின் ஆதாரங்கள்

தேரவாத வேதநூல்கள், நடுத்தர –நீள சொற்பொழிவுகளின் தொகுப்பில் இருந்த சில பாலி சுட்டாக்கள் (பாலி: மஜ்ஜிமா நிகாயா) மற்றும் பல்வேறு ஹினாயனா பள்ளிகள், துறவற ஒழுக்க விதிகள் தொடர்பான பல வினய நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது புத்தரின் வாழ்க்கைக்கான ஆரம்பகால ஆதாரங்கள். இருப்பினும், இந்த நூல்கள் ஒவ்வொன்றும் புத்தரின் வாழ்க்கைக் கதையின் சில பகுதிகளை மட்டுமே தருகின்றன.

மு.பொ.ஊ 2ம் நூற்றாண்டின் இறுதியில் ஹினாயனாவின் மகாசங்கிகா பள்ளியின் பெரிய குருக்களான (சமஸ்.மகாவஸ்து) போன்றோரின் பௌத்த கவிதைகளில் முதல் விரிவாக்கப்பட்ட விவரமானது தோன்றியது. இந்த வாசகமானது மூன்று கூடைகள் – போன்ற தொகுப்பின் வெளியே இருக்கிறது (சமஸ். திரிபிடகம், மூன்று கூடைகள்), உதாரணத்திற்கு புத்தர் அரச குடும்பத்தில் இளவரசராகப் பிறந்தார் என்பது இதில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் தகவல். இதுபோன்ற மற்றொரு கவிதைப் படைப்பு ஹினாயானாவின் சர்வஸ்திவாடா பள்ளியான தி எக்ஸ்டென்சிவ் ப்ளே சூத்ரா (சமஸ். லலிதாவிஸ்தரா சூத்திரம்) இலக்கியத்தில் வெளிவந்தது. இந்த உரையின் பிற்கால மஹாயான பதிப்புகள் இந்த முந்தைய பதிப்பில் இருந்து பெறப்பட்டு விரிவாகக் கூறப்பட்டன, உதாரணமாக, ஷக்யமுனி யுகங்களுக்கு முன்பே ஞானமடைந்துவிட்டார் என்றும், இளவரசர் சித்தார்த்தராக அவதாரமெடுத்தது மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவும் ஞானம் பெறுவதற்கான வழியை விவரிக்கவுமே என்றும் சொல்கிறது.

இறுதியில் இது போன்ற சுயசரிதைகள் மூன்று கூடைகள் போன்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டது. இதில் மிகப்பிரமபலமானது பொ.ஊ 1ம் நூற்றாண்டில் கவிஞர் அஷ்வகோஸா எழுதிய புத்தரின் செயல்கள் (சமஸ். புத்தசரித்திரம்). மற்ற பதிப்புகள் சக்ரசம்வரா இலக்கியம் போன்ற சில தந்திரங்களிலும் பின்னர் காணப்பட்டன. ஷக்யமுனியாகத் தோன்றி தொலைதூர விழிப்புணர்வு பாகுபாடுகளின் சூத்திரங்களை போதித்த போது (சமஸ். பிரஜ்நபரமிதசூத்ரா, ஞான சூத்திரங்களின் பரிபூரணம்) புத்தர் வஜ்ரதாராவாகவும் செயல்பட்டு தந்திரங்களை கற்பித்தார் என்பதை நம்மால் சில குறிப்புகளில் பார்க்க முடியும்.

ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும், நாம் ஏதாவது கற்றுக் கொண்டு உத்வேகம் பெறலாம். எவ்வாறாயினும், இவற்றில் முதன்மையானதாக வரலாற்று புத்தரை சித்தரிக்கும் பதிப்புகளைப் பார்ப்போம்.

 புத்தரின் பிறப்பு, இளமைக்காலம் மற்றும் துறவறம்

தொடக்க கால தொகுப்புகளின்படி, ஷக்யமுனி இன்றைய இந்திய – நேபாள எல்லைக்கு நடுவே உள்ள கபிலவஸ்துவின் தலைநகரான ஷக்யா மாநிலத்தில் உயர்குல செல்வச் செழிப்பான போர் வீரர் குடும்பத்தில் பிறந்தவர் என்று சொல்கிறது. ஷக்யமுனி அரச குடும்பத்தில் இளவரசராகப் பிறந்தார் என்பதற்கு எந்தக் குறிப்பும் இல்லை, அவர் இளவரசராகப் பிறந்தார், சித்தார்த்தர் என்று அழைக்கப்பட்டார் என்பவை பின்னர் தோன்றியவையே.

அவருடைய தந்தை சுத்தோதனா, அவருடைய தாயாரின் பெயர் மாயாதேவி என்பது பின்னர் வந்த பதிப்புகளிலேயே காணப்படுகிறது, மாயாதேவியின் கனவில் தனது பக்கமாக வெள்ளை நிற ஆறு-தந்த யானை நுழைவதாகவும், அவர் மிகப்பெரிய ராஜா அல்லது மிகப்பெரிய முனிவர் ஆகிவிடுவார் என்ற முனிவர் அசிட்டாதாவின் கணிப்பும் புத்தரின் அதிசயமான கருத்தாக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது.

கபிலவாஸ்துவில் இருந்து சிறிது தூரத்தில் லும்பினி தோப்பில் புத்தர் தனது தாயிடம் இருந்து புனித பிறப்பு எடுத்தார் என்று விளக்கம் கூறப்படுகிறது, அங்கிருந்து அவர் ஏழு அடிகள் எடுத்து வைத்து, “நான் வந்துவிட்டேன்”, என்று சொன்ன அதே நேரத்தில் புத்தரை பிரசவித்த அவரது தாய் மரணித்தார்.

ஒரு இளைஞராக, புத்தர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் யசோதரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ரகுலா என்ற மகனும் இருந்தார். 29 வயதில் புத்தர் தன்னுடைய இல்லற வாழ்வை துறந்தார், சுதேச பாரம்பரியத்தை கைவிட்டு ஆன்மிகத்தை நாடும் யாசகராக மாறி அலைந்து திரிந்தார்.  

புத்தரின் துறவறத்தை அவருடைய சமூகம் மற்றும் காலக் கண்ணோட்டத்தோடு ஒட்டி பார்க்க வேண்டியது மிக முக்கியம். புத்தர் ஆன்மிகத்தை நாடுபவராக மாறிய போது அவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை கடினமான வாழ்விலோ ஏழ்மை நிலையிலோ விட்டு செல்லவில்லை. அவர்களை புத்தரின் செல்வசெழிப்பான, பெரிய குடும்பம் பராமரித்துக் கொண்டது. புத்தரும் போர்வீரர் சாதியைச் சேர்ந்தவரே, இதன் அர்த்தம் அவர் என்றேனும் ஒரு நாள் சந்தேகத்திற்கு இடமின்றி தனது குடும்பத்தை விடுத்து போருக்குச் செல்ல வேண்டும், இது ஒரு ஆண்மகன் ஏற்றுக்கொண்ட கடமையாகும்.

வெளியே இருக்கும் எதிரிகளை எதிர்த்து நடக்கும் போர்களுக்கு முடிவில்லை, ஆனால் உண்மையான போர் என்பது நமக்குள் இருக்கும் எதிரியை எதிர்த்து போரிடுவது, இந்தப் போரில் சண்டையிடத் தான் புத்தர் புறப்பட்டார்.

புத்தர் தன்னுடைய குடும்ப உறவை விட்டு வெளியேறியதன் நோக்கம் ஆன்மிகத்தை நாடுபவர்கள் தன் வாழ்க்கை முழுவதையும் பக்திக்காக அர்ப்பணிப்பது அவரின் கடமை என்பதை உணர்த்துவதாகும்.  நவீன காலத்தில், நாம் நம்முடைய குடும்பத்தை விடுத்து துறவியாக மாற விரும்பினால் குடும்பத்தாரின் நலனை பராமரிக்கத் தேவையானவை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது வெறுமனே அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் மட்டுமல்ல, அவர்களின் வயதான பெற்றோரின் நலனைப் பேணுவதற்கான ஏற்பாடும் தேவை. பௌத்தர்களாக நாம் நம்முடைய குடும்பத்தை விட்டு செல்கிறோமோ இல்லையோ, மகிழ்ச்சிக்கு அடிமையாவதை கடந்து துன்பங்களை குறைக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

பிறப்பின் இயல்பு, வயது, நோய்வாய்ப்படுதல், இறப்பு, மறுபிறப்பு, சோகம் மற்றும் குழப்பத்தை புரிந்து கொள்வதன் மூலம் துன்பத்தை கடக்க புத்தர் விரும்பினார். அதன் பின்னர் வந்த கதைகளில், புத்தர் அரண்மனையில் இருந்து தன்னுடைய ரதத்தில் தேரோட்டி சன்னாவுடன் சுற்றுப்பயணம் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.  நகரத்தில், புத்தர் உடல்நலனில்லாதவர்கள், வயதானவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள், அதே போல துறவிகளையும் பார்த்திருந்தார், இவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் சன்னா விளக்கம் அளித்துக்கொண்டே வந்தார். இந்த வகையில் புத்தர் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் துன்பத்தை அடையாளம் கண்டார் அதில் இருந்து விடுபடுவதற்கான வழி என்ன என்றும் சிந்தித்தார்.   

புத்தர் தன்னுடைய ஆன்மிகப்பாதையை அடைய அவருடைய தேரோட்டி உதவியதென்பது பகவத் கீதையில் இருப்பது போல அர்ஜுனரின் தேரோட்டியான கிருஷ்ணர் போர் வீரரின் கடமை சொந்தங்களை எதிர்த்து சண்டையிடுவது என்று சொன்னதற்கு சமமானது. பௌத்தம் மற்றும் இந்து இரண்டிலுமே, நம்முடைய சவுகரியமான வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் சுவரைக் கடந்து சென்று உண்மையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் என்ற ஆழ்ந்த பொருளை காண முடிகிறது. ரதம் என்பது விடுதலைக்கு வழிவகுக்கும் மனதின் ஒரு வாகனத்தைக் குறிப்பதைக் காணலாம், தேரோட்டியின் சொற்களின் உந்துசக்தி - யதார்த்தத்தைத் தேடுவதாகும்.  

 புத்தரின் படிப்புகள் மற்றும் ஞானமடைதல்

ஒரு பிரம்மச்சாரியாக, ஆன்மிகத்தை நாடி அலைபவராக, புத்தர் மன உறுதியடைதல் மற்றும் உருவமற்ற உள்ளீர்ப்புக்கான வழிமுறைகள் குறித்து இரண்டு ஆசிரியர்களுடன் கற்றார்.

பரிபூரண ஒருமுகப்படுத்துதலால் இந்த ஆழமான நிலைகளின் மிக உயர்ந்த நிலையை அவரால் அடைய முடிந்தது, இதனால் அவர் இனி வாழ்நாள் முழுமைக்குமான துன்பங்கள், சாதாரண உலக மகிழ்ச்சியையும் அனுபவிக்கப்போவதில்லை, என்றாலும் அவர் திருப்தி அடையவில்லை. இந்த நிலைகள் தற்காலிகத்தை மட்டுமே தருபவை, கறைபட்ட இது போன்ற உணர்வுகளுக்கான நிரந்தர தீர்வல்ல என்பதை அவர் கண்டார்; அவர் கடக்க முயன்ற உலகளாவிய துன்பங்களை அவை ஆழமாக அகற்றவில்லை.  ஐந்து இணைகளுடன், அவர் பின்னர் தீவிர சன்யாசத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினார், ஆனால் இதுவும் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நிகழும் மறுபிறப்போடு (சம்சாரம்) தொடர்புடைய ஆழமான சிக்கல்களை அகற்றவில்லை. நைரஞ்சனா ஆற்றின் கரையில் புத்தர் தனது ஆறு ஆண்டு நோன்பை முறித்த சம்பவம் பிற்கால கணிப்புகளில் மட்டுமே காணப்படுகிறது, பணிப்பெண் சுஜாதா அவருக்கு ஒரு கிண்ணம் பால் அரிசியை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நமக்கு புத்தரின் உதாரணம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் நாம் முழுவதும் அமைதியாக இருப்பதாலோ அல்லது தியானத்தில் “உயர்நிலை” பெறுவதாலோ, மருந்துகள் போன்ற செயற்கை வழிமுறைகளிலோ திருப்தி அடைந்துவிடக்கூடாது.  ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து பின்வாங்குதல் அல்லது துன்புறுத்துதல் அல்லது உச்சபச்ச பயிற்சிகளைச் செய்து நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொள்வது எதுவுமே தீர்வல்ல. நாம் எல்லா வழிகளிலும் விடுதலை மற்றும் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டியது கட்டாயம், இந்த இலக்குகளுக்கு நம்மை கொண்டு செல்வதற்கு குறைவுள்ள ஆன்மீக முறைகளில் நாம் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது.

புத்தர் சந்நியாசத்தை நிராகரித்த பிறகு, பயத்தை வெல்ல, காட்டில் தனியாக தியானம் செய்யச் சென்றார். எல்லா அச்சங்களுக்கும் அடிப்படையானது, சாத்தியமில்லாமல் இருக்கும் "என்னை" புரிந்துகொள்வது மற்றும் இன்பம் மற்றும் பொழுதுபோக்குக்கான கட்டாய தேடலைக் குறிக்கும் விஷயத்தை விட வலுவான சுயமதிப்பற்ற அணுகுமுறை.  பொது.ஊ 10ஆம் நூற்றாண்டில் இந்திய குரு தர்மரக்ஷிதா தி வீல் ஆஃப் ஷார்ப் வெப்பன்ஸில் விஷச் செடிகளின் காடுகளில் அலைந்து திரிந்த மயில்களின் உருவத்தை பயன்படுத்தி இருக்கிறார், போதிசத்துவாக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசை, கோபம் மற்றும் நச்சு உணர்ச்சிகளைப் பயன்படுத்துவதையும் மாற்றுவதையும் அவர்களின் சுயமரியாதை மனப்பான்மையைக் கடக்கவும், சாத்தியமற்ற “என்னை” புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

அதீத தியானத்திற்குப் பிறகு, புத்தர் தனது 35வது வயதில் முழு ஞானமடைந்தார். அதன் பின்னரான குறியீடுகள் புத்தரின் தியானத்தை தொந்தரவு செய்யவும் பயமுறுத்தவும் கவர்ச்சியைக் காட்டி ஞானமடைவதை தடுக்க முயன்ற பொறாமையின் கடவுள் மாறனின் தாக்குதல்களை எதிர்த்து புத்தர் வெற்றி கண்டார் என்று சொல்கின்றன. தற்போதைய புத்தகயாவில் புத்தர் போதி மரத்திற்கு அடியில் ஞானமடைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்க கால குறிப்புகள், புத்தர் முழு ஞானத்தை மூன்று வகைகளான அறிவின் மூலம் அடைந்தார் என்று சொல்கின்றன: கர்மா, தனது கடந்த காலத்தைப் பற்றிய முழு அறிவு, மற்ற அனைவரது மறுபிறப்புகள் மற்றும் நான்கு மேன்மையான உண்மைகள். அதன் பின்னரான குறிப்புகள் அவர் ஞானத்துடன் சர்வ விஞ்ஞானத்தையும் அடைந்தார் என்று விளக்கம் அளிக்கிறது.

பௌத்த துறவ சமூகத்தை நிறுவுதல் மற்றும் கற்பித்தல்

ஞானமடைந்த பின்னர், அதே வழியில் மற்றவர்களும் அதனை அடைய கற்பிப்பதற்கு புத்தர் தயக்கம் காட்டினார், ஏனெனில் மற்றவர்கள் யாரும் இதனை புரிந்து கொள்ள முடியாது என்று அவர் கருதினார். எனினும் இந்தியக் கடவுள்களான பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மா, கடவுள்களின் தேவர் இந்திரனும் தங்களுக்கு கற்பிக்க வேண்டுகோள் விடுத்தனர். தனது வேண்டுகோளை விடுத்த பிரம்மா புத்தரிடம், அவர் கற்பிக்கத் தவறினால் உலகம் முடிவில்லாமல் பாதிக்கப்படும் என்றும், அவருடைய வார்த்தைகளை ஒரு சிலரேனும் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

இந்த விவரங்கள் ஒரு நையாண்டித் தனமாக இருக்கலாம், இது புத்தரின் போதனைகளின் மேன்மையைக் குறிக்கிறது, இது அவருடைய காலத்தின் பாரம்பரிய இந்திய ஆன்மீக மரபுகளால் வழங்கப்பட்ட முறைகளை விஞ்சியது.

உலகத்திற்கு புத்தரின் போதனைகள் தேவை என்று மிக உயர்ந்த கடவுளர்கள் கூட ஒப்புக் கொண்டனர், அனைவரின் துன்பத்தையும் நிரந்தர முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் அவர்களிடம் இல்லை என்பதால், சாதாரண மக்களுக்கு போதனைகள் எவ்வளவு தேவை என்பதைப் பற்றி சொல்லவா வேண்டும். மேலும், புத்த மனப்படிமத்தில், பிரம்மா கர்வத்துடன் இருக்கும் பெருமையைக் கொண்டவர் என்று குறிக்கிறது; அவர் தான் சர்வ வல்லமையுள்ள படைப்பாளி என்ற அவரது தவறான நம்பிக்கை, இந்த சாத்தியமில்லாமல் இருக்கும் “நான்” இருப்பதாகவும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் நினைப்பதில் குழப்பத்தின் சுருக்கத்தை பிரதிபலிக்கிறது. இது போன்ற நம்பிக்கை வெறுப்பு மற்றும் துன்பத்தையே தருகிறது. நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற புத்தரின் போதனைகள் மட்டுமே இந்த உண்மையான துன்பத்தையும் உண்மையான தாக்கத்தையும் தடுப்பதற்கான வழியைத் தர முடியும்.

பிரம்மா மற்றும் இந்திரரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, புத்தர் சர்நத்திற்கு சென்று மான் பூங்காவில் நான்கு மேன்மையான உண்மைகளை தனது ஐந்து இணைகளுக்குக் கற்றக்கொடுத்தார். பௌத்த மனப்படிமத்தில், மான் என்பது மென்மையினைக் குறிக்கிறது. இதனால் புத்தர் இன்பநாட்டவியம் மற்றும் சந்நியாசத்தின் உச்சநிலையைத் தவிர்த்து ஒரு மென்மையான முறையை கற்பித்தார்.

விரைவிலேயே, வாரணாசிக்கு அருகில் இருந்த ஏராளமான இளைஞர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தை பின்பற்றி புத்தருடன் இணைந்தனர். அவர்களின் பெற்றோர் சாதாரண சீடர்களாக மாறி, குழுவிற்கு தர்மம் கொடுக்க ஆரம்பித்தனர். எந்தவொரு உறுப்பினரும் போதுமான பயிற்சியும் தகுதியும் பெற்றவுடன், மற்றவர்களுக்கு கற்பிக்க அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இந்த வகையில், புத்தரின் மிகச்சிறந்த பின்தொடர்பவர்களின் குழு தீவிரமாக வளர்ந்தது, விரைவிலேயே அவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறி தனிப்பட்ட “துறவற” சமூகங்களை உருவாக்கினர்.

புத்தர் இந்த துறவற சமூகத்தை நடைமுறை விதிகளுக்கு ஏற்றபடி உருவாக்கினார். துறவிகள், இந்த வார்த்தையை நாம் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்தலாம், உறுப்பினர்களை சமூகங்களில் சேரக் கூட அனுமதிக்கலாம், ஆனால் மதச்சார்பற்ற அதிகாரிகளுடனான மோதல்களைத் தவிர்க்க அவர்கள் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது.  குற்றவாளிகள் துறவறம் ஏற்பதை புத்தர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, இராணுவம் போன்ற அரச சேவையில் இருப்பவர்கள், அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்படாத அடிமைகள், மற்றும் தொழுநோய் போன்ற தொற்று நோய்கள் உள்ளவர்கள் துறவற சமூகங்களில் சேரலாம்.

மேலும், 20 வயதிற்குட்பட்ட எவரும் துறவறத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. புத்தர் சிக்கலைத் தவிர்க்கவும், சமூகங்கள் மற்றும் தர்ம போதனைகளுக்கு பொதுமக்களின் மரியாதையைப் பெறவும் விரும்பினார். புத்தரைப் பின்பற்றுபவர்களாகிய நாம் உள்ளூர் பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும், மரியாதையுடன் செயல்பட வேண்டும், மக்கள் பௌத்தம் பற்றி நல்ல அபிப்ராயம் அடைந்து அதற்கு ஈடாக மதிக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

விரைவிலேயே, புத்தர் போத் கயாவின் ராஜ்யமான மகதாவுக்குத் திரும்பினார். தலைநகரான ராஜகிரஹா - நவீனகால ராஜ்கீரின் - மன்னர் பிம்பிசாரா புத்தருக்கு அழைப்பு விடுத்தார், பிற்காலத்தில் அவரே புத்தரின் புரவலரும் சீடருமானார். அங்கு, ஷரிபுத்ரா மற்றும் மவுத்கல்யாயானும் புத்தருடன் வளர்ந்து வரும் வரிசையில் சேர்ந்து, அவருடைய நெருங்கிய சீடர்களில் சிலரானார்கள்.

ஞானமடைந்த ஓராண்டிற்குள் புத்தர் தன்னுடைய சொந்த ஊரான கபிலவஸ்து திரும்பினார், அங்கு அவருடைய மகனும் புத்தருடன் இணைந்தார். புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரர், அழகான நந்தர், ஏற்கனவே இல்லறம் துறந்து புத்தருடன் இணைந்தவர். புத்தரின் தந்தையான மன்னர் சுத்தோதனா, தன்னுடைய வம்சம் துண்டிக்கப்பட்டு வருவதால் மிகவும் கவலையடைந்தார், எனவே எதிர்காலத்தில் துறவறம் செல்லும் மகன் தன்னுடைய பெற்றோரின் சம்மதத்தை பெற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். புத்தர் இதனை முழுமையாக ஏற்றுக்கொண்டார். 

இங்கு குறிப்பிட்டு சொல்வது இதனை புத்தர் தன்னுடைய தந்தைக்கு எதிரானவர் என்ற கொடூரமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது, ஆனால் பௌத்த மதத்திற்கு எதிராக, குறிப்பாக நம் சொந்த குடும்பங்களுக்குள்ளேயே தவறான விருப்பத்தை உருவாக்காததன் முக்கியத்துவத்தைக் காண வேண்டும்.

புத்தர் தனது குடும்பத்தினருடன் சந்தித்ததைப் பற்றிய ஒரு விரிவான விவரம் உள்ளது, அவர் முப்பத்து மூன்று கடவுள்களின் சொர்க்கத்திற்கு பயணிக்க கூடுதல் இயற்பியல் சக்திகளைப் பயன்படுத்தினார் அல்லது சில ஆதாரங்களின்படி, துஷிதா சொர்க்கத்திற்கு சென்று, அங்கு மறுபிறவி எடுத்த தனது தாய்க்கு கற்பித்தார் என்று சொல்கிறது. தாய்மையின் தயவைப் பாராட்டுவதற்கும் திருப்பிச் செலுத்துவதற்கும் உள்ள முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.

 பௌத்த துறவற ஒழுக்கத்தின் வளர்ச்சி

தொடக்க கால பௌத்த துறவிகள் சமூகம் சிறியது, 20 ஆண்களுக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஒவ்வொன்றும் தன்னாட்சியானது, துறவிகள் தர்மம் தேடுவதற்கான எல்லைகளை பின்பற்றினர். எந்தவொரு முரண்பாட்டையும் தவிர்க்க, எந்தவொரு நபரும் தனி அதிகாரமாக அமைக்கப்படாமல் ஒவ்வொரு சமூகத்தின் செயல்களும், முடிவுகளும் அதன் உறுப்பினர்களிடையே ஒருமித்த வாக்களிப்பால் தீர்மானிக்கப்பட்டது. தர்ம போதனைகளை மட்டுமே தங்களுக்கான அதிகாரமாக எடுத்துக் கொள்ளுமாறு புத்தர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் துறவற ஒழுக்கத்தை கூட மாற்ற முடியும், ஆனால் எந்தவொரு மாற்றமும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

மாதம் மூன்று கூட்டங்களை நடத்திய சமணர்கள் போன்ற பிற ஆன்மீக குழுக்களிடமிருந்து சில பழக்கவழக்கங்களை புத்தர் பின்பற்றலாம் என்று பிம்பிசாரா மன்னர் பரிந்துரைத்தார். இந்த வழக்கப்படி, ஆன்மீக சமூகத்தின் உறுப்பினர்கள் சந்திரனின் ஒவ்வொரு கால் கட்டத்தின் தொடக்கத்திலும் ஒன்றுகூடி போதனைகளைப் பற்றி விவாதிப்பார்கள். புத்தரும் இந்த முறைக்கு ஒப்புக் கொண்டார், அந்தக் காலத்தின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான பரிந்துரைகளுக்கு அவர் வெளிப்படையாக இருப்பதாகக் காட்டினார், மேலும் சமணர்களுக்குப் பிறகு அவர் தனது ஆன்மீக சமூகத்திற்கு பல அம்சங்களையும், அவரது போதனைகளின் கட்டமைப்பையும் மாதிரியாக முடிவு தந்தார். சமண மதத்தை நிறுவிய மகாவீரர் புத்தருக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே வாழ்ந்தார்.

துறவற ஒழுக்க நெறிமுறைக்கான விதிகளை வகுக்கும்படி ஷரிபுத்ராவும் புத்தரிடம் கேட்டார். இதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க ஒரு சபதம் செய்யும்போது, குறிப்பிட்ட பிரச்சினைகள் எழும் வரை காத்திருப்பது சிறந்தது என்று புத்தர் தீர்மானித்தார். இந்த கொள்கை இயற்கையாகவே அழிவுகரமான செயல்களைப் பின்பற்றியது, அதனைச் செய்யும் யாருக்கு வேண்டுமானாலும் தீங்கு விளைவிக்கும், மற்றும் சில சூழ்நிலைகளில், சில காரணங்களுக்காக சில நபர்களுக்கு நன்னெறி நடுநிலை நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டன. ஆகவே, ஒழுக்க விதிகள் (வினயா) நடைமுறை மற்றும் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்டன, புத்தரின் முக்கிய கருத்துருவாக்கம், சிக்கல்களைத் தவிர்ப்பது மற்றும் குற்றத்தை செய்யாமல் இருப்பது.

ஒழுக்க விதிகளின் அடிப்படையில், புத்தர் துறவற சபையில் சபதங்களை ஓதினார், துறவிகள் எந்தவொரு மீறல்களையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். மிகவும் கடுமையான மீறல்களுக்கு சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுவது பின்பற்றப்பட்டது, இல்லையெனில் வெறுமனே நன்னடத்தை சோதனை நிலையில் மானநஷ்டமாக இருந்தது. பிற்காலத்தில், இந்த கூட்டங்கள் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டன.

பின்னர், மழைக்காலங்களில், துறவிகள் ஒரே இடத்தில் தங்குவதோடு பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற முடிவை புத்தர் அறிவித்தார். சாலைகள் வெள்ளத்தில் மூழ்கும்போது வயல்வெளிகளில் நடந்து செல்லும் துறவிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம். இது நிலையான மடங்களை நிறுவ வழிவகுத்தது, நடைமுறைக்கு உகந்ததாகவும் இருந்தது. மீண்டும், சாதாரண சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காகவும், அவர்களின் மரியாதையைப் பெறுவதற்காகவும் இந்த முடிவு உதவியது.

இரண்டாவது மழைக்காலத்திற்கு பிறகு, புத்தர் கோசலா இராச்சியத்தின் தலைநகரான ஸ்ராவஸ்திக்கு வெளியே ஜேதவன தோப்பில் 25 கோடைகாலங்களை கழித்தார். இங்கே, வணிகர் அனதபிந்ததா புத்தருக்கும் அவரது துறவிகளுக்கும் ஒரு மடத்தை கட்டினார், மேலும் பிரசேனாஜித் மன்னர் துறவ சமூகத்திற்கு நிதியுதவி செய்தார். ஜேதவானாவில் உள்ள இந்த மடாலயம் புத்தரின் வாழ்க்கையில் பல பெரிய நிகழ்வுகளின் காட்சியாக இருந்தது, அதிசயமான சக்திகளின் போட்டியில் அக்காலத்தின் ஆறு பெரிய பௌத்தரல்லாத பள்ளிகளின் தலைவர்களை அவர் தோற்கடித்தது மிகவும் பிரபலமானது.

தற்காலத்தில் நம்மில் யாராலும் அதிசயங்களை செய்ய முடியாவிட்டாலும், புத்தர் பயன்படுத்தியது போல தர்க்க ரீதியாக இல்லாமல் எதிரிகளை வீழ்த்துவதை குறிக்கும் விதமாக மற்றவர்களின் மனம் ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிக்கிடந்தால், நம்முடைய செயல்கள் மற்றும் நடத்தையின் மூலம் நிதர்சனத்தை உணர்ந்து கொள்ளும் நம்முடைய அளவை விவரித்து நம்முடைய புரிதலுக்கான ஏற்புடைமை அவர்களை சமாதானம் செய்ய சிறந்த வழியாகும். ஆங்கிலத்தில் இதற்கு ஒரு சொலவடை உண்டு, “வார்த்தைகளை விட செயலே உரக்கப் பேசும்.”

 பௌத்த கன்னியாஸ்திரிகளின் துறவற ஒழுங்கை நிறுவுதல்

பிற்காலத்தில் புத்தருடைய போதிக்கும் தொழிலில், தன்னுடைய அத்தை மஹாபிரஜபதியின் வேண்டுகோளுக்காக அவர் வைஷாலியில் கன்னியாஸ்திரிகளுக்கென தனி சமூகத்தை நிறுவினார். இத்தகைய பணியைத் தொடங்க அவர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார், ஆனால் பின்னர் துறவிகளை விட கன்னியாஸ்திரிகளுக்கு அதிக சபதங்களை அவர் பரிந்துரைத்தால் அது சாத்தியமாகும் என்று முடிவு செய்தார். அவ்வாறு செய்வதனால், ஆண்களை விட பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை, அதிக சபதங்களை நிலைநிறுத்துவதன் மூலம் அதிக பழக்கப்படுத்தல் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெண்களுக்கான ஒழுங்குமுறைகளை நிறுவுவது கெட்ட பெயர் மற்றும் அவரது போதனைகளுக்கு முன்கூட்டியே முடிவைத் தரும் என்று அவர் அஞ்சினார். எல்லாவற்றிற்கும் மேலாக, புத்தர் சமூகத்தின் அவமதிப்பைத் தவிர்ப்பதற்கு விரும்பினார், எனவே கன்னியாஸ்திரி சமூகம் எந்தவொரு ஒழுக்கக்கேடான நடத்தைக்கும் சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக, புத்தர் விதிகளை வகுக்க தயக்கம் காட்டினார், மேலும் அவை தேவையற்றவை எனக் கண்டறியப்பட்டால் தரம் குறைவானவற்றை அகற்றவும் தயாராக இருந்தார், இரண்டு உண்மைகளின் ஆற்றலைக் காட்டும் ஒரு கொள்கை - ஆழ்ந்த உண்மை, மற்றும் உள்ளூர் நடைமுறைக்கு ஏற்ப வழக்கமான சத்தியத்தை மதித்தல். ஆழ்ந்த உண்மையாக இருந்தாலும், கன்னியாஸ்திரிகளின் ஒழுங்கைக் கொண்டிருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அந்த சமயத்தில் சாதாரண மக்கள் பௌத்த போதனைகளை குறைத்துப் பார்ப்பதைத் தடுக்க, கன்னியாஸ்திரிகளுக்கு ஒழுக்க விதிகள் அதிகம் இருக்க வேண்டும்.

ஆழ்ந்த உண்மையில், சமூகம் என்ன சொல்கிறது அல்லது என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல, ஆனால் வழக்கமான சத்தியத்தில் பௌத்த சமூகம் பொதுமக்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் பெறுவது முக்கியம். ஆகவே, பொதுவாக கன்னியாஸ்திரிகள் அல்லது பெண்களுக்கு ஏதேனும் பாரபட்சம் காட்டப்பட்டிருந்தால், அல்லது பௌத்த பழக்கவழக்கங்களால் ஏதேனும் சிறுபான்மைக் குழுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அது புத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நவீன காலங்களிலும் சமூகங்களிலும், புத்தரின் வாழ்வு அவற்றை விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டிய காலம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சகிப்புத்தன்மையும் இரக்கமும் புத்தரின் போதனைகளின் முக்கிய குறிப்புகள். உதாரணமாக, புத்தர் வேறொரு மத சமூகத்தை ஆதரித்த புதிய சீடர்களை அந்த சமூகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஊக்குவித்தார். பௌத்த ஒழுங்கிற்குள், உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார், உதாரணமாக அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் அனைவரும் பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து சாதாரண பௌத்தர்களுக்கும் இது ஒரு முக்கியமான கட்டளை.

புத்தரின் நீதிபோதனை முறை

புத்தர் வாய்மொழி அறிவுறுத்தல்கள் மூலமாகவும், அவரது வாழ்க்கை உதாரணம் மூலமாகவும் மற்றவர்களுக்கு கற்பித்தார். வாய்மொழி அறிவுறுத்தல்களை, அவர் ஒரு குழுவிற்கோ அல்லது ஒரு தனிநபருக்கோ கற்பிக்கிறாரா என்பதைப் பொறுத்து இரண்டு முறைகளைப் பின்பற்றினார். குழுக்களுக்கு முன்னர், புத்தர் தனது போதனைகளை ஒரு சொற்பொழிவின் வடிவத்தில் விளக்குவார், ஒவ்வொரு விஷயத்தையும் வெவ்வேறு சொற்களால் மீண்டும் மீண்டும் கூறுவார், இதனால் பார்வையாளர்கள் அதை நன்கு புரிந்துகொள்ளவும் நினைவில் கொள்ளவும் முடியும். தனிப்பட்ட அறிவுறுத்தலைக் கொடுக்கும் போது, வழக்கமாக அழைப்பு விடுத்தவரின் வீட்டில் தன்னுடைய துறவிகளுடன் மதிய உணவிற்குப் பின்னர் ஆலோசனை நடக்கும்,புத்தர் வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தினார்.

அவர் ஒருபோதும் கேட்பவரின் கோணத்தை எதிர்க்கவோ, சவால் விடவோ மாட்டார், ஆனால் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு கேட்பவரின் சொந்த எண்ணங்களை தெளிவுபடுத்த உதவும் கேள்விகளைக் கேட்பார். இந்த வழியில், தனது நிலையை மேம்படுத்தவும், படிப்படியாக யதார்த்தத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும் புத்தர் வழிவகுத்தார். ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், புத்தர் பிராமண சாதியின் பெருமைமிக்க உறுப்பினர் ஒருவரை வழிநடத்தியபோது, மேன்மை என்பது ஒருவர் பிறந்த சாதியிலிருந்து வருவது அல்ல, ஆனால் ஒரு நபரின் நல்ல குணங்களின் வளர்ச்சியில் இருக்கிறது என்று உரைத்தார்.

மற்றொரு உதாரணம், இறந்த குழந்தையை தன்னிடம் கொண்டுவந்த ஒரு தாய்க்கு புத்தரின் அறிவுறுத்தல், தன்னுடைய இறந்த குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க தாய் புத்தரிடம் கெஞ்சினார். மரணமே எப்போதும் எட்டிப்பார்க்காத ஒரு வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வரும்படி அந்தத் தாயிடம் புத்தர் கூறிவிட்டு, அவரால் என்ன செய்ய முடியும் என்று பார்த்தார். அந்தப் பெண் வீடு வீடாகச் சென்றார், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரின் இறப்பை அனுபவித்திருந்தனர். பின்னர் அந்தத் தாய் மெதுவாக உணர்ந்தாள், ஒரு நாள், எல்லோரும் இறக்க வேண்டும், என்பதை உணர்ந்து அந்த வகையில் தன் குழந்தையை அதிக மன அமைதியுடன் தகனம் செய்ய முடிந்தது.

புத்தரின் கற்பித்தல் முறை, தனிப்பட்ட முறையில் மக்களுக்கு உதவ, மோதலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்பதைக் காட்டுகிறது. தங்களுக்காகவே சிந்திக்க உதவுவதே மிகவும் பயனுள்ள வழி. இருப்பினும், மக்கள் குழுக்களுக்கு கற்பிப்பதில், விஷயங்களை நேராகவும் தெளிவாகவும் விளக்குவது நல்லது.

புத்தர் மற்றும் சமயப்பிளவுகளுக்கு எதிரான சதிகள்

புத்தர் இறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது பொறாமைப்பட்ட உறவினர் தேவதத்தன், புத்தர் வகித்த தலைமைப்பதவியை பிடிக்க சதி செய்தார். இதேபோன்று, இளவரசர் அஜாதஷாத்ரு தனது தந்தை மன்னர் பிம்பிசாராவை மாகதாவின் ஆட்சியாளராக மாற்ற சதி செய்தார், எனவே இருவரும் சேர்ந்து சதி திட்டம் தீட்டினர். பிம்பிசாராவின் வாழ்க்கையை முடிக்க அஜாதசத்ரு படுகொலை முயற்சியை மேற்கொண்டார், இதன் விளைவாக, மன்னர் தனது மகனுக்கு ஆதரவாக அரியணையை கைவிட்டார். அஜாதசத்ருவின் வெற்றியைக் கண்ட தேவதத்தன் புத்தரை படுகொலை செய்யச் சொன்னார், ஆனால் அவரைக் கொலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

விரக்தியடைந்த தேவதத்தன் கடுமையான ஒழுக்க விதிகளை முன்வைத்து தான் புத்தரை விட “புனிதமானவர்” என்று சொல்லிக்கொண்டு அவருடன் இருந்த துறவிகளை கவர்ந்திழுக்க முயன்றார். பொ.ஊ 4ம் நூற்றாண்டின் தேரவாத குரு புத்தகோஸாவின் தூய்மைக்கான பாதையின்படி, தேவதத்தாவின் புதிய பரிந்துரைகள் உள்ளடக்கி இருந்தவை:

  • கந்தல் துணிகளை ஒன்றுசேர்த்து அங்கி அணிதல்
  • மூன்று அங்கிகளை மட்டுமே அணிதல்
  • விருந்துக்கான அழைப்பை ஏற்காமல் யாசகத்திற்காக மட்டுமே செல்லுதல்
  • தர்மத்திற்கு செல்லும் போது எந்த வீடும் விடுபட்டுவிடக்கூடாது
  • என்ன தர்மம் சேகரிக்கப்பட்டாலும் ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணுதல்
  • ஒருவருடைய தர்ம பாத்திரத்தில் மட்டுமே உண்ணுதல்
  • மற்ற எல்லா உணவுகளையும் தவிர்த்தல்
  • வனங்களில் மட்டுமே வசித்தல்
  • மரங்களுக்கு கீழே வாழ்தல்
  • வீடுகளில் இல்லாமல் வெளிக்காற்றில் வாழ்தல்
  • பெரும்பாலும் இடுகாடுகளில் வசித்தல்
  • வசிப்பதற்காக ஒருவர் கண்டறியும் எந்த இடமாக இருந்தாலும் திருப்தியாக இருப்பது, தொடர்ந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அலைதல்
  • படுத்து உறங்காமல் அமர்ந்த நிலையிலேயே உறங்குதல்.

துறவிகள் இந்த கூடுதல் ஒழுக்க விதிகளை பின்பற்ற விரும்பினால், அது முற்றிலும் நல்லது, ஆனால் அனைவரையும் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்துவது சாத்தியமில்லை என்று புத்தர் கூறினார். பல துறவிகள் தேவதத்தனைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தனர், எனவே புத்தரின் சமூகத்தை விட்டு வெளியேறி தங்களுக்கான சொந்த கூட்டத்தை உருவாக்கினர்.

தேரவாத பள்ளியில், தேவதத்தன் வகுத்த கூடுதல் ஒழுக்க விதிகள் “கவனிக்கப்பட்ட நடைமுறையின் 13 கிளைகள்” என்று அழைக்கப்படுகின்றன. நவீன தாய்லாந்தில் இன்றும் காணப்படும் வன துறவி பாரம்பரியம் இந்த நடைமுறையிலிருந்து உருவானதாக கருதப்படுகிறது. புத்தரின் சீடர் மகாகஷ்யபா இந்த கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றி மிகவும் பிரபலமான பயிற்சியாளராக இருந்தார், இவற்றில் பெரும்பாலானவை இந்து பாரம்பரியத்தில் அலைந்து திரியும் புனித மனிதர்களான சாதுக்களால் இன்று அனுசரிக்கப்படுகின்றன. அவர்களின் நடைமுறை புத்தரின் காலத்தில் ஆன்மீகத்தை தேடுயவர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத் தெரிகிறது.

கவனிக்கப்பட்ட நடைமுறையின் 12 குணாதிசயங்களின் பட்டியலை மகாயான பள்ளிகள் கொண்டிருக்கின்றன. இந்த பட்டியல் "தர்மத்திற்காக செல்லும்போது எந்த வீட்டையும் தவிர்க்கக்கூடாது" என்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக "குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆடைகளை அணிந்துகொள்தல்" என்பதை சேர்க்கிறது, மேலும் "தர்மத்திற்காகச் செல்வது" மற்றும் "ஒருவரின் தர்ம பாத்திரத்திலிருந்து மட்டுமே சாப்பிடுவது" ஆகியவை ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த ஒழுக்கத்தின் பெரும்பகுதி பிற்காலத்தில் மகாயான பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகிய இரண்டிலும் காணப்பட்ட மகாசித்தர்களின் மகத்தான சாதனை பெற்ற இந்திய பாரம்பரியத்தால் பின்பற்றப்பட்டது.

நிறுவப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வேறொரு ஒழுங்கை உருவாக்குவது அல்லது நவீன கால அடிப்படையில், ஒரு தனி தர்ம மையத்தை உருவாக்குவது பிரச்சினை அல்ல. அவ்வாறு செய்வது ஐந்து துறவற குற்றங்களில் ஒன்றான “துறவற சமூகத்தில் பிளவுகளை” உருவாக்குவதாக கருதப்படவில்லை. தேவதத்தன் அத்தகைய பிளவுகளை உருவாக்கினார், ஏனென்றால் புத்தர் குழுவை உடைத்து தேவதத்தனைப் பின்தொடர்ந்த குழு புத்தரின் துறவற சமூகத்தின் மீது மிகுந்த மோசமான விருப்பத்தை அடைந்தது, மேலும் அவர்களை கடுமையாக விமர்சித்தது. சில விவரங்களின்படி, இந்த பிளவுகளின் மோசமான விருப்பம் பல நூற்றாண்டுகளாக நீடித்தது.

இந்த பிளவு பற்றிய தொகுப்பு, புத்தர் மிகவும் சகிப்புத்தன்மையுடையவர், அடிமைவாதியல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. அவரைப் பின்பற்றுபவர்கள் அவர்களுக்காக நிர்ணயித்ததை விட கடுமையான ஒழுக்க நெறிமுறையை பின்பற்ற விரும்பினால், சரி; அவர்களுக்கு அத்தகைய விருப்பம் இல்லையென்றாலும் சரி. புத்தர் கற்பித்ததை கடைபிடிக்க யாரும் கடமைப்படவில்லை. ஒரு துறவி அல்லது கன்னியாஸ்திரி துறவற ஒழுங்கை விட்டு வெளியேற விரும்பினால், அதுவும் நன்மையே. எவ்வாறாயினும், மிகவும் அழிவுகரமான விஷயம் என்னவென்றால், பௌத்த சமூகத்தை, குறிப்பாக துறவற சமூகத்தை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரித்து, தவறான விருப்பத்தை ஏற்படுத்தி, ஒருவருக்கொருவர் இழிவுபடுத்தவும் சேதப்படுத்தவும் முயற்சிப்பதாகும்.

ஒரு பிரிவில் இணைவதும் அதன் பின்னர் அதற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் பங்கேற்பதும் கூட மிகவும் தீங்கு விளைவிக்கும். எவ்வாறாயினும், குழுக்களில் ஒன்று அழிவுகரமான அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அல்லது தீங்கு விளைவிக்கும் ஒழுக்கத்தைப் பின்பற்றினால், அந்தக் குழுவில் சேருவதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக இரக்க குணமானது அவர்களை எச்சரிக்க வேண்டும், ஆனால் நோக்கம் ஒருபோதும் பழிவாங்குவதற்காக கோபம், வெறுப்பு அல்லது விருப்பத்துடன் கலக்கப்படக்கூடாது.

காலமான புத்தர்

விடுதலையை அடைந்தாலும், 81 வயதிலும் புத்தர் சாதாரண மரணத்தை அனுபவிப்பதைக் கடந்து கட்டுப்பாடின்றி வாழ்ந்தார், புத்தர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அசாத்தியத்தை கற்பிப்பதும், அவரது உடலை விட்டு வெளியேறுவதும் நன்மை பயக்கும் என்று முடிவு செய்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்பு, அவர் தனது உதவியாளரான ஆனந்தாவிடம் நீண்ட காலம் வாழவும் கற்பிக்கவும் தன்னிடம் கேட்குமாறு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார், ஆனால் ஆனந்தா புத்தர் கொடுத்த குறிப்பு புரியவில்லை. கோரிக்கை விடுத்தால் மட்டுமே ஒருவருக்கு புத்தர் கற்பிக்கிறார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது, யாரும் கேட்கவில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை என்றால், அவர் அதிக நன்மை அடைய முடியும், அவர் வேறு இடங்களுக்குச் செல்ல விட்டுவிடுகிறார். ஒரு ஆசிரியரின் இருப்பு மற்றும் போதனைகள் மாணவர்களைப் பொறுத்தது.

குஷினகரில், சுந்தா என்ற புரவலரின் வீட்டில், புத்தருக்கும் அவரது துறவிகளுக்கும் வழங்கிய உணவை சாப்பிட்டுவிட்டு மரணமடைந்தார். மரணப்படுக்கையில் இருந்த புத்தர் தனது துறவிகளிடம் ஏதேனும் சந்தேகம் அல்லது பதிலளிக்கப்படாத கேள்விகள் இருந்தால், அவர்கள் தர்ம போதனைகள் மற்றும் அவர்களின் நெறிமுறை ஒழுக்கத்தை நம்பியிருக்க வேண்டும், அதுவே இப்போது அவர்களின் ஆசிரியராக இருக்கும் என்று கூறினார். எல்லா பதில்களையும் வழங்குவதற்கான முழுமையான அதிகாரம் இல்லாததால், ஒவ்வொரு நபரும் போதனைகளிலிருந்து அவனுக்காகவோ அல்லது அவளுக்காகவோ விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று புத்தர் சுட்டிக்காட்டினார். இதைக் கூறிய பின்னர், புத்தர் காலமானார்.

புத்தரின் உடல் எரிக்கப்பட்டு, அவருடைய சாம்பல்கள் ஸ்தூபிகளில் கலக்கப்பட்டது – நினைவுச்சின்னத்திற்காக – குறிப்பாக நான்கு முக்கிய பௌத்த யாத்திரை இடங்களாக மாறியவற்றில்:

  • லும்பினி – புத்தர் பிறந்த இடம்
  • புத்தகயா – புத்தர் ஞானமடைந்த இடம்
  • ஷர்நாத் - தர்மம் குறித்து தன்னுடைய முதல் போதனையை வழங்கிய இடம்
  • குஷிநகரம் – அவர் இயற்கை எய்திய இடம்.


சுருக்கம்

பல்வேறு பௌத்த பாரம்பரியங்கள் புத்தரின் வாழ்க்கையை வெவ்வேறு தொகுப்புகளாக கற்பிக்கின்றன. அவர்களின் வேறுபாடுகள் ஒவ்வொரு பாரம்பரியமும் எவ்வாறு புத்தரை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது மேலும் நாம் அவருடைய உதாரணங்களில் இருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும்.

  • ஹினாயனா பதிப்புகள் – இது வரலாற்று புத்தர் பற்றி மட்டும் பேசுகிறது. ஞானமடைய புத்தர் எவ்வாறு தனக்குத் தானே தீவிரமாக உழைத்தார் என்பதைக் காண்பிப்பதன் மூலம், சாதாரண மனிதர்களாகிய நாமும் அவ்வாறே செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்கிறோம், மேலும் நாமே முயற்சி செய்யவும் கற்றுக்கொள்கிறோம்.
  • பொதுவான மகாயான பதிப்புகள் - புத்தர் ஏற்கனவே பல யுகங்களுக்கு முன்பே ஞானம் பெற்றார். 12 அறிவொளி செயல்களுடன் ஒரு வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம், அறிவொளி என்பது எப்போதும் எல்லோருக்குமாய் செயல்படுவது என்பதை அவர் நமக்குக் கற்பிக்கிறார்.
  • அனுத்தராயோகா தந்திர பதிப்புகள் – ஒரே நேரத்தில் ஷக்யமுனியின் கற்றல் சூத்திரங்கள் (பரஜனபரமித்தா சூத்திரங்கள்), வஜ்ரத்ரா கற்றல் சூத்திரங்கள் வழி புத்தர் ஆற்றலை வெளிப்படுத்தினார். மத்யமகா கற்றல் (பற்றற்று இருத்தல்) அடிப்படையில் தந்திரா பயிற்சி அமைந்திருப்பதை இது காட்டுகிறது.

புத்தரின் வாழ்வு குறித்த பல்வேறு பதிப்புகளின் மூலம் பல உதவிகரமான கற்றலை நாம் அடைவதன் மூலம் பல மட்டங்களில் உந்துதலை நாம் பெறலாம்.

Top