ஆன்மீக ஆசிரியருடன் கற்றல்

ஆன்மீக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பல நிலைகளில் உள்ளனர். திறனுள்ள மாணவர்கள் தாங்கள் அல்லது அவர்களின் ஆசிரியர்கள் உண்மையில் இருப்பதை விட உயர்நிலை தகுதி பெற்றவர்கள் என்று கற்பனை செய்வதாலோ, அல்லது ஆசிரியரை ஒரு சிகிச்சையாளராக பாவிக்கும் போதோ அதிக குழப்பம் மேலோங்குகிறது. நேர்மையான சுயபரிசோதனை மற்றும் யதார்த்தமான பரிசோதனை மூலம், நாம் ஒவ்வொருவரும் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தும் போது, ​​ஆரோக்கியமான மாணவர்-ஆசிரியர் உறவை உருவாக்க முடியும்.

ஆன்மீக மாணவர்-ஆசிரியர் உறவுமுறைப் பற்றிய அனுபவ உண்மைகள்

ஆன்மீக மாணவர்- ஆசிரியர் உறவுமுறையில் குழப்பத்தை தவிர்க்க, சில அனுபவ உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்:

  1. ஆன்மீகத்தை தேடுபவர்களில் பலர், ஆன்மீகப் பாதையில் ஒவ்வொரு நிலைகளாக முன்னேறிச் செல்கின்றனர். 
  2. பயிற்சியாளர்களில் பலர், தங்களின் வாழ்நாளில் சில ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, ஒவ்வொருவருடனும் வேறுபட்ட உறவுமுறைகளை கட்டமைக்கின்றனர். 
  3. ஆன்மீக ஆசிரியர்களை அனைவரும் ஒரே நிலையிலான சாதனையை அடையவில்லை. 
  4. ஒரு குறிப்பிட்ட தேடுபவருக்கும் ஆசிரியருக்கும் இடையே பொருத்தமான உறவுமுறையின் வகை என்பது ஒவ்வொருவரின் ஆன்மீக மட்டத்தைப் பொறுத்தது.
  5. மக்கள் ஆன்மிகப் பாதையில் முன்னேறிச் செல்லும் போது பொதுவாக தங்கள் ஆசிரியர்களுடன் படிப்படியாக ஆழமான நடத்தையில் தொடர்பு கொள்கிறார்கள்.
  6. ஏனெனில் ஒவ்வொரு தேடுபவரின் ஆன்மீக வாழ்விலும், அவர் வெவ்வேறு பாத்திரங்களாக இருக்கலாம், ஒவ்வொரு தேடல் கொண்டவரும்  அந்த ஆசிரியருடன் சரியான பொருத்தமான உறவுமுறையை கொண்டிருப்பது மாறுபடலாம்.
Top