பௌத்த போதனைகளை ஆராய்வதற்கான நான்கு கோட்பாடுகள்

பௌத்த போதனை அர்த்தம் தருகிறதா என்பதை சோதனை செய்ய, நாம் கவனமாக ஆராய வேண்டியது அவசியம். நல்ல தரத்தை மேம்படுத்த விரும்பினால், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்; ஒரு முறை நாம் அதனை மேம்படுத்திவிட்டால், அது எவ்வாறு உதவி செய்யப் போகிறது; இந்தப் பலன்கள் தர்க்க ரீதியில் அர்த்தம் கொடுக்கின்றனவா; அடிப்படையில் இயல்பான விஷயங்களுடன் பொருந்திப் போகின்றனவா. போதனையானது இந்த எல்லா வரன்முறைகளிலும் தேர்ச்சி பெற்றால், அதனை செயல்படுத்துவது குறித்து நாம் உறுதியாக இருக்கலாம்.

தர்ம பயிற்சியின் வெற்றியானது யதார்த்தமான நடத்தையைக் கொண்டிருப்பதன் அடிப்படையிலானது. இதன் பொருள் தர்ம போதனைகள் உண்மையில் எவ்வாறு இருக்கிறது என்ற யதார்த்தத்துடன் பொருந்தி ஆராய்தல். இது போன்ற பகுப்பாய்விற்கு, புத்தர் நான்கு கோட்பாடுகளை போதித்திருக்கிறார், பௌத்த போதனைகளின் அடிப்படை அனுமானங்கள் இவை. “ என் மீது இருக்கும் மரியாதையினாலோ அல்லது நம்பிக்கையாலோ நான் என்ன போதித்தேனோ அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், மாறாக நீங்கள் தங்கம் வாங்கும் போது எப்படி ஆராய்வீர்களோ அவ்வாறு உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்யுங்கள்” என்று புத்தர் கூறியிருப்பதை நினைவில் வைக்கவும்.

நான் கோட்பாடுகளானது:

  • சார்புநிலை
  • செயல்பாடு
  • காரணம் மூலம் நிறுவுதல்
  • பொருட்களின் இயல்பு

நான்கு கோட்பாடுகளை தரப்படுத்தப்பட்ட பாதையின் நிலைகள் என்று மிகப்பெரிய பரிசளிப்பாக சோங்கப்பா எவ்வாறு விளக்குகிறார் என்பதைப் பார்க்கலாம்.

சார்புநிலையின் கோட்பாடு

முதல் கோட்பாடானது சில பொருட்கள் அடிப்படையில் மற்ற பொருட்களை சார்ந்திருக்கிறது. இதுவே சார்புநிலையின் கோட்பாடு. முடிவு வெளிவருவதற்கு, அது காரணங்கள் மற்றும் நிபந்தனைகளைச் சார்ந்திருப்பது கட்டாயம். இது நாம் அனைவரும் ஒப்புகொள்ளும் ஒரு கோட்பாடு. இதன் பொருள் நாம் நல்ல குணத்தை மேம்படுத்த விரும்புகிறோம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய புரிதலுக்கு, அதில் என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆராய்தல் அவசியம். அதன் அடிப்படையில் செயல்படுவதற்கு முன்னரே நாம் மேம்படுத்த வேண்டியது என்ன?

ஒவ்வொரு நிலை ஆன்மிக அடைதரும் இதர அடைதல்கள் மற்றம் காரணிகளின் அடிப்படையிலான நம்பிக்கையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, நாம் பாகுபடுத்தும் விழிப்புணர்வை நாம் மேம்படுத்த விரும்பினாலோ அல்லது வெற்றிடம் அல்லது யதார்த்தத்தை புரிந்து கொண்டாலோ; நாம் ஆராய்ந்து இந்த புரிதலின் நம்பிக்கை என்ன என்பதை அறிய வேண்டும். அது ஒருமுகப்படுத்தலை நம்பி இருக்கிறது. ஒருமுகப்படுத்துதலின்றி, நம்மால் புரிதலை மேம்படுத்த முடியாது. ஒருமுகப்படுத்துதல் சார்ந்திக்கும் அடிப்படை என்ன?அது சுய – ஒழுக்கத்தை சார்ந்து இருக்கிறது. நம்முடைய ஒழுக்கம் வழிதவறிச் செல்லும் போது அதற்கு கவனம் செலுத்தி திருத்திக்கொள்ளாவிட்டால், நம்மால் ஒருமுகப்படுத்துதலை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை. எனவே, வெற்றிடத்தின் விழிப்புணர்வு பாகுபாட்டை மேம்படுத்த விரும்பினால், குறைந்தபட்சமான முதலில் சில பணிவரன சுய – ஒழுக்கம் மற்றும் ஒருமுகப்படுத்துதலை கட்டமைக்க வேண்டும்.

தர்மத்தை படிக்கும் போது இந்த முதல் கோட்பாடை செயல்படுத்துவது மிகவும் முக்கியம். தர்மத்தை பற்றி புத்தகங்களில் படிக்கும் போது நம்மில் பெரும்பாலானவர்கள் பல அற்புதமான விஷயங்களை அடைய வேண்டும் என்று விரும்புவோம், ஆனால் நம்முடைய விருப்பங்கள் குறித்து யதார்த்தமாக இருக்க ஆசைப்பட்டால், அவர்களின் சாதனை எதை நம்பியுள்ளது என்பதை நாம் ஆராய வேண்டும். நம்முடைய இலக்குகளை அடைய நாம் கட்டமைக்க வேண்டியது என்ன என்பதை நாம் அறிந்தால், அவற்றை எவ்வாறு அடையலாம் என்பதையும் நாம் அறியலாம். அதன் பின்னர் அடித்தளத்தை உயரம் நோக்கி கட்டமைக்கலாம். இது நமது தேடல்களை நிதர்சனமாக்குகிறது.

செயல்பாடுக்கான கோட்பாடு

இரண்டாவது கோட்பாடு செயல்பாடு. ஒவ்வொரு பொருளும் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளின் தாக்கத்தால் குறிப்பிட்ட செயல்பாட்டு வினை புரிகின்றன. பற்றி எறியும் செயலை நெருப்பு செய்யும், தண்ணீரால் முடியாது. மீண்டும் சொல்வதானால், இது பௌத்தத்தின் அடிப்படை அனுமானம், ஒரு கோட்பாடு, மேலும் நாம் ஏற்றுக்கொண்ட ஏதோ ஒன்றும் கூட.  தர்மத்தைப் படிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும்,அதன் பயன்பாடு என்னவென்றால்,செயல்பாட்டில் இது அல்லது அது செயல்படும் என்பதை நாம் ஆராய வேண்டும். அன்பு மற்றும் ஒருமுகப்படுத்துதல் போன்ற சில மன நிலைகள் அல்லது உணர்வுகளை நாம் மேம்படுத்த வேண்டியது, மேலும் கோபம் அல்லது குழப்பம் உள்ளிட்ட நமக்கு நாமே வெளியேற வேண்டிய இதரவை குறித்த வழிமுறைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாம் பின்பற்ற வேண்டிய சில முறைகளும் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறைகளைப் புரிந்து கொள்ள அவை என்ன செய்யும், அதன் செயல்பாடுகள் என்ன? என்பதை நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்கள் இணக்கமானவை, மற்றவை அவ்வாறு இல்லை என்பதால், சில மன நிலைகள் மற்ற மன நிலைகளை மேம்படுத்த அல்லது அதிகரிக்க செயல்படும்.

எடுத்துக்காட்டாக, அன்பை மேம்படுத்துவதற்காக நாம் செய்யும் குறிப்பிட்ட தியான முறையின் அனுபவம் மற்றும் பகுப்பாய்வு அதில் இருக்கம் நம்முடைய நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. “இது சரியா அல்லது தவறா?” என நாம் ஆராயலாம் அதன் பின்னர் அதன் அனுபவத்தை பெற முயற்சிக்கலாம். நாம் இதைச் செய்வதென்பது அந்த வழிமுறை குறித்து நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. நடைமுறையில் ஒரு முறை சரியானது மற்றும் அது செயல்படுகிறது என்ற நம்பிக்கையின் செயல்பாடு என்ன? அதனை ஆழமாக பயிற்சிக்க நம்முடைய திறனைத் தூண்டுகிறது. நம் என்ன செய்கிறோம் என்பதில் நம்பிக்கை இழந்தால், நாம் அதை பயிற்சிக்க மாட்டோம். ஒவ்வொரு நிலையும் கொண்டிருக்கும் செயலையும் நாம் புரிந்து கொண்டால், ஒவ்வொன்றிலும் நாம் இதயப்பூர்வமாக ஈடுபடுவோம். நாம் எதையும் புரிந்து கொள்ளவில்லையென்றால், நாம் அவை எதையுமே செய்ய மாட்டோம்.

இதனுடன், எதையாவது சேதப்படுத்தவோ அல்லது மற்றொன்றை எதிர்க்கவோ நாம் செயல்பட புரிந்து வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு வழிமுறை மீதான நம்பிக்கை அதைப் பற்றிய சந்தேகத்திற்கு இடமின்றி அழிக்கிறது.நம்பிக்கையின்மை என்னும் வழிமுறையோ அல்லது நம்முடைய திறன்களால் அதைப் பின்பற்றி கிடைக்கும் வெற்றியையோ அல்லது அதனுடன் எதையும் பெறுவதையோ தடுக்கிறது.

நாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் நாம் எடுத்துக்கொண்ட பயிற்சியின் ஒவ்வொரு அடியும் என்ன உறுதிப்படுத்தப் போகிறது மேலும் அது என்ன அழிக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதன் பின்னர் நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்த யதார்த்த நடத்தையைக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் ஏன் குறிப்பிட்ட அன்பு போன்ற நேர்மறை மனநிலை அல்லது அணுகுமுறையை மேம்படுத்த விரும்புகிறோம்? இதற்கு சரியான காரணம் அதன் செயல்பாடுகள் அமைதியான மனநிலையைக் கொண்டு வருவதோடு பிறருக்கும் உதவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கோபம் போன்ற ஒரு குறிப்பிட்ட எதிர்மறை மன நிலையில் இருந்து நமக்கு நாமே ஏன் வெளியேற விரும்புகிறோம்? ஏனெனில் அது நமக்கு என்ன செய்திருக்கிறது: அது நமக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டங்களையே ஏற்படுத்தும். புகைபிடித்தல் போன்ற அழிவுகரமான வகையிலான நடத்தைகளோடு இணைந்திருக்கும் நாம் அதில் நிறுத்த விரும்புனால் அவற்றை அறிதல் மிகவும் முக்கியம். ஒரு செயலின் வினை என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால், அதாவது புகைப்பதால் நுரையீரலுக்கு என்ன நேர்கிறது என்பதை உணர்ந்து அதைச் செய்வதை நாம் நிறுத்த வேண்டும். இவ்வாறாக நாம் செயல்பாடு கோட்பாடை செயல்படுத்த வேண்டும். 

காரணத்துடன் நிறுவுதல் கோட்பாடு

மூன்றாவது கோட்பாடானது காரணத்துடன் நிறுவுதல். இதன் பொருள் முரண்பாடில்லாமல் சரியான வழிமுறையில் அறிந்து ஒரு புள்ளி நிறுவப்பட்டது அல்லது நிரூபிக்கப்பட்டது. முதலில் தர்மத்தில் நாம் கற்ற ஏதேனும் ஒன்றை ஆன்மிக அதிகாரம் முரண்படுகிறதா என்பதை தீர்மானிக்க நாம் ஆராய வேண்டும். ஒரு போதனை தர்ம போதனை தான் என்பதை நாம் எப்படி அறிவது? இது புத்தர் கற்பித்தவற்றுடன் ஒத்துபோகிறது. புத்தர் பல்வேறு விஷயங்கள் பலவிதமான சீடர்களுக்கு கற்பித்திருக்கிறார், அதன் தளம் முரண்பாடாக காணப்பட்டாலும், புத்தரின் ஆர்ந்த நோக்க்ம என்ன என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? புத்தரின் போதனையில் ஒரு போதனை தொடர்ச்சியான கருப்பொருளாகத் தோன்றினால், புத்தர் உண்மையில் அதைக் குறிக்கிறார் என்பது நமக்குத் தெரியும் என்று இந்திய குரு தர்மகிர்தி, விளக்கி இருக்கிறார். குறிப்பாக நன்னெறி  பிரச்னைகளைப் பொருத்தமட்டில் இது முக்கியமானது.

எதையேனும் தர்க்கம் மற்றும் ஊகத்தை சரியாக அறிதல் இரண்டாவது வழி. இது தர்க்க ரீதியில் பொருந்துகிறதா அல்லது தர்க்கம் முரண்படுகிறதா? அது அர்த்தமுற்றதா அல்லது முற்றிலும் முட்டாள்தனமானதா? அடுத்ததாக மூன்றாவது வழியிலான சரியான அறிதல் என்பது நேருக்குநேர் அறிதல். உண்மையில் நாம் தியானிக்கும் போது, நம்முடைய அனுபவம் முரண்படுகிறதா அல்லது அதேனை உறுதிபடுத்துகிறதா?

இந்தக் கோட்பாடை எப்படி செயல்படுத்தலாம் என்று ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, “கோபத்தை அன்பு வென்றுவிடும்” போல நாம் ஒரு போதனையைப் பெறலாம் அதனை செயல்படுத்துவதனால் குறிப்பிட்ட எதிர்மறையானது குறிப்பிட்ட குறைபாடு அல்லது பிரச்னையை வெளியேற்றுகிறது. முதலாவதாக, இது புத்தர் கற்பித்தவற்றுடன் ஒத்துப்போகிறதா? ஆம், புத்தர் கற்பித்த எதற்கும் இது முரணாக இல்லை.

தர்க்க ரீதியில் இது சரியா? ஆம், அன்பு என்பது பிறர் சந்தோஷமாக இருப்பதற்கான விருப்பம். இவர் ஏன் எனக்கு தீங்கு ஏற்படுத்துகிறார் யார் மீது இருக்கும் கோபத்துடன் இவ்வாறு செயல்படுகிறேன்?அவரோ அல்லது அவளோ துக்கத்தில் இருப்பதால் பயங்கரமான விஷயங்களைச் செய்கிறார்கள்; அவர் மனம் மற்றும் உணர்வு ரீதியில் வருத்தமாக உள்ளார். இவருக்காக என்னிடம் அன்பு இருந்தால், அவர் அல்லது அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பி இருப்பேன்; அவர் வருத்தப்படக் கூடாது, மிகவும் பரிதாப நிலையில் இருக்கக் கூடாது என்று விரும்புவேன். இது போன்ற அணுகுமுறை அந்த நபர் மீது கோபப்படுவதை தவிர்க்கிறது, இல்லையா? இது சிறந்த தர்க்கம். இந்த நபர் ஏராளமான தீங்கு ஏற்படுத்தினால், அவர் அல்லது அவள் அவ்வாறு செய்வதை நான் நிறுத்த விரும்பினால், நான் என்னுடைய அன்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்ப வேண்டும், ஏனெனில் அவர் அல்லது அவள் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த நபர் தீங்கை செய்யாமல் இருக்கக் கூடும். அந்த நபருடன் கோபம் கொள்வது அவரோ அல்லது அவளோ நமக்கு தீங்கு ஏற்படுத்துவதை நிறுத்த முடியாது. இந்த போதனை தர்க்க ரீதியிலான அர்த்தத்தைத் தருகிறது. 

கடைசியாக, நேரடியான அறிவாற்றலுடன் அல்லது தியானத்தின் அனுபவத்துடன் நாம் ஆராய்கிறோம். மற்றொரு வகையில், அது செயல்படுகிறதா என்பதையும் பார்க்க முயல்கிறோம். அன்பிற்காக நான் தியானம் செய்தால் அது என்னுடைய கோபத்தை குறைக்கிறதா? ஆம், அது செய்கிறது. ஒரு போதனை அர்த்தமுள்ளதா என்பதை அறிவதற்கான மூன்றாவது சோதனை அதுவே. இவ்வாறாக நாம் காரணத்துடனான நிறுவல் கோட்பாட்டை செயல்படுத்தலாம்.

இயல்பான பொருட்களின் கோட்பாடு

இயல்பான பொருட்களின் கோட்பாடே இறுதியானது. தீ சுடும், தண்ணீரில் ஈரம் இருக்கும் என்பது போல இந்தக் கோட்பாடானது இயல்பாகவே சில உண்மையானவை இருப்பதை உணர்த்துகிறது. தீ ஏன் சுடுகிறது, தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது? அதன் இயல்பு என்னவோ அப்படியே அவை இருக்கின்றன. எல்லா உயிர்களும் இன்பத்தையும் விரும்புகின்றன, யாருமே துன்பத்தை விரும்புவதில்லை என்பது போல தர்மத்தின் உள்ளே, அதன் இயல்பால் எந்தெந்த விஷயங்கள் உண்மையில் எளிமையானவை என்பதை ஆராய வேண்டும். ஏன் என்றால்? அதன் இயல்பு என்னவோ அப்படியே இருக்கிறது. மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அழிவுகரமான நடத்தையின் முடிவு துன்பம் மேலும் ஆக்கப்பூர்வமான நடத்தையில் இருந்து மகிழ்ச்சி பிறக்கிறது. ஏன்? உலகம் அவ்வாறே செயல்படுகிறது. புத்தர் அந்த வழியில் ஏற்படுத்தினார் என்பதற்காக அல்ல; அது எப்படி இருக்கிறதோ அதன் இயல்பில் அவ்வாறே நிகழ்கிறது. சில பொருட்கள் அதன் தன்மை எதுவோ அப்படியே இருக்கிறது என்று நாம் ஆராய்ந்து கண்டறிந்தால், அவை வாழ்வின் உண்மைகள் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அவை குறித்து வெளித்தனமாக நம்மை இயக்குவதென்பது நேர விரயமாகவே அமையும்.

இயல்பான பொருட்களைக் குறிப்பிடும் ஒரு புள்ளி தர்ம பயிற்சியுடன் அதிகமாக பொருந்திப் போகும் உண்மையானது சம்சாரியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதாகும். இது வெறுமனே அதிர்ஷ்டவசமான மற்றும் துரதிர்ஷ்டவசமான மறுபிறப்புகளை எடுத்துக்கொள்வதைக் குறிக்காது, மாறாக நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திற்கும் பொருந்தும். நம்முடைய மன நிலைகள் மற்றும் நாம் என்ன உணர்கிறோம் என்பதிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால், அதனால் நமக்கு வருத்தம் ஏற்படாது. சம்சாரியத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? நிச்சயமாக, சில நாட்களில் தியானம் மிக்க மகிழ்ச்சியைத் தரும் சில நாட்கள் அவ்வாறு அமையாது. சில நாட்கள் நான் பயிற்சி செய்ய செல்ல வேண்டும் என்று நினைப்பேன் மற்ற நாட்கள் அப்படியான உணர்வு இருக்காது. இது பெரிய சவாலல்ல! சில விஷயங்கள் எவ்வழியோ அவ்வழியே இருத்தல். அதை அப்படியே விட்டுவிடுங்கள் இதற்காக வருத்தமடையக் கூடாது. அது மிகவும் முக்கியமானது.   

தர்மத்தை யதார்த்தமாக அணுக விரும்பினால், புத்தர் போதித்த இந்த நான்கு புள்ளிகளும் மிகவும் உதவிகரமானவை. அவை குறித்த நம்முடைய புரிதலை உறுதிப்படுத்தவும், நாம் கற்றுக்கொண்டதை எப்படி ஒரு போதனையாக செயல்படுத்துவது என்று  நம் உடலின் பற்றின்மையோடு, சில உதாரணத்தை பார்க்கலாம்.

  1. இந்தப் பற்றின்மையின் வளர்ச்சி எதைச் சார்ந்து இருக்கிறது? இது இயல்பற்ற தன்மையின் புரிதல், மறுபிறப்பு, சுயம் எவ்வாறு இருக்கிறது, உடல், மனம் மற்றும் சுயத்திற்கான உறவுமுறை மற்றும் பலவற்றைச் சார்ந்தது.
  2. நம் உடலில் இருந்து பற்றின்மையை வளர்ப்பதன் செயல்பாடு என்ன? நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, வயதாகும்போது, அல்லது வயதானவர்களாக இருக்கும்போது வருத்தப்படாமல், கோபப்படாமல் இருக்க இது உதவுகிறது.
  3. இது காரணத்துடன் நிறுவப்பட்டதா? ஆம், நம்முடைய உடலில் இருக்கும் பற்றின்மை துன்பப்படுவதற்கான ஒரு காரணத்தை வெளியேற்றுவதாக புத்தர் போதித்திருக்கிறார்: கொஞ்சகால மட்டுமே இருக்கும் ஏதோ ஒன்றை அடையாளம் காண்பதன் அடிப்படையிலான இணைப்பு. அது தர்க்க ரீதியிலானதா? ஆம், ஏனெனில் நம்முடைய உடல் மாறுகிறது ஒவ்வொரு கணமும் வயதில் வளர்ச்சியடைகிறது. நாம் அதன் செயல்பாடுகளை உணர்கிறோமா? ஆம், நாம் பற்றின்மையை மேம்படுத்துவதனால், நாம் குறைவான துன்பம் மற்றும் சிக்கல்களை அனுபவிப்பதை காண முடியும்.
  4. இயல்பான விஷயங்களின் தன்மை என்ன? என்னடைய உடலில் இருந்த பற்றின்மைக்காக நான் தியானித்தால்,  என்னுடைய மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் வலுவான வளர்ச்சியடையுமா? இல்லை, அவ்வாறு நடக்காது.  இது சம்சாரியம்; அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கடைசியில், நீண்டகால நோக்கத்தில் பார்த்தால், நான் மகிழ்ச்சியானவனாக மாறி இருக்க முடியும் மேலும் என்னுடைய வாழ்க்கை சிறப்பானதை பெற்றிருக்க முடியும், ஆனால் இவையெல்லாம் கற்பனையில் கூட நடந்துவிடாது. இது இயல்பான விஷயமும் அல்ல. 
 

சுருக்கம்

நம்முடைய உடலில் இருந்து பற்றின்மையை மேம்படுத்துவது போன்ற ஒரு போதனையை நான்கு கோட்பாடுகளை செயல்படுத்தி ஆராய்ந்தால், அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து ஒரு யதார்த்தத்தை மேம்படுத்தி இருக்கிறோம் என்பதைக் காண முடியும். எனவே தான் புத்தர், “நான் என்ன போதித்திருக்கிறேன் என்பதை என் மீதான நம்பிக்கை அல்லது மரியாதையுடன் வெறுமனே நம்ப வேண்டாம், ஆனால் தங்கம் வாங்கும் போது எப்படி ஆராய்வீர்களோ அவ்வாறு உங்களுக்கு நீங்களே ஆய்வு செய்யுங்கள்,“ என்று கூறி இருக்கிறார், அதாவது நான்கு கோட்பாடுகளை செயல்படுத்தி ஆராயுங்கள் என்று அவர் அர்த்தம் கூறுகிறார்.

Top