What is karma raimond klavins unsplash

கர்மா என்பது மனதின் தூண்டுதலைக் குறிக்கிறது – நம்முடைய முந்தைய நடத்தை முறைகளின் அடிப்படையில் பேச, செயல்பட, சிந்திக்கத் தூண்டுகிறது. நம்முடைய பழக்கங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதை அமைக்கிறது, சரியான சூழலில் அவை தூண்டப்படும் போது, அதனையே நாம் மீண்டும் செய்யக் காரணமாகிவிடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நாம் ஏதோ செய்ய வேண்டும் என நினைக்கிறோம், பிறகு அதையே கட்டாயமாகச் செய்கிறோம்.

கர்மா என்றால் விதி அல்லது முன்ஜென்மம் என்று பலநேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. யாரேனும் காயப்பட்டாலோ அல்லது பணத்தை இழந்துவிட்டாலோ, “துரதிஷ்டம், அது அவரது கர்மா” என்று மக்கள் சொல்லக்கூடும். இது கடவுளின் விருப்பத்தில் உதித்த எண்ணத்தைப் போன்றது – நம்மால் சிலவற்றை புரிந்து கொள்ளவோ அல்லது அதனை கட்டுப்படுத்தவோ முடியாது. பௌத்தத்தில் கர்மாவின் வரைமுறை எப்போதுமே இப்படி இருந்ததில்லை. கர்மா என்றால் மனதின் தூண்டுதல், அது நம்மை யாரேனும் தொந்தரவு செய்தால் அவர்களிடம் சண்டைபோடத் தூண்டும் அல்லது நாம் அமைதியாகும் வரை போதுமான அளவு பொறுமை காத்து பிரச்னையை அணுகுவது. நாம் படிக்கட்டுகளில் இறங்கும் போது வழக்கமாக கணுக்காலை முறுக்கி இறங்குவோம் அல்லது கவனமாக பார்த்து நடப்போம், இந்த இரண்டையும் கூட தூண்டுதல் என குறிப்பிடலாம்.

கர்மா எப்படி செயல்படுகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் புகைப்பிடித்தல், ஏனெனில் நாம் சிகரெட் புகைக்கும் போது, மற்றொருவரையும் சிகரெட் புகைக்க வைக்கும் திறனுடன் அது செயல்படுகிறது. அளவிற்கு அதிகமாக நாம் புகைத்தால், புகைப்பழக்கத்தை வலுவாக்கும் போக்கு வரும் வரை, எதைப்பற்றியும் யோசிக்காமல், கர்மாவின் தூண்டுதல் வலுக்கட்டாயமாக நம்மை சிகரெட்டை பற்ற வைக்கச்செய்கிறது. புகைக்கும் உணர்வு மற்றும் தூண்டுதல் எங்கிருந்து வந்தது என்று கர்மா விளக்குகிறது – முந்தைய கட்டமைக்கப்பட்ட பழக்கங்களும் இதற்கு காரணம். புகைத்தல் அதனை மீண்டும் செய்ய மட்டும் தூண்டுவதில்லை, உடலுக்குள் இருக்கும் ஆற்றல்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, உதாரணமாகச் சொன்னால், புகைப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இங்கு, இரண்டு விதமான தூண்டலால் புற்றுநோயைப் பெறுவதென்பது, நமது முந்தைய வலுக்கட்டாய செயல்களின் பிரதிபலன். இதுவே “கர்மாவின் முதிர்ச்சி” ஆகும்.

பழக்கங்களை மாற்றுதல்

கர்மா அர்த்தமுள்ளது, ஏனெனில் உணர்வுகள் மற்றும் தூண்டுதல்கள் எங்கிருந்து வந்தது என்பதை விளக்குகிறது, நாம் ஏன் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் சோகமாகவும் இருக்கிறோம். இவையனைத்துமே சுயநடத்தைகளுக்கு கிடைத்த பரிசுகள். எனவே நாம் என்ன செய்ய வேண்டும், நமக்கு என்ன நடந்தது என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. இதில் விதியோ அல்லது தலையெழுத்தோ இல்லை.

“கர்மா” என்பது ஒரு செயல் திறன், எதிர்காலச் செயல்பாடுகள் நம் கைகளில் இருப்பதை குறிப்பவை. – 14வது தலாய் லாமா

நாம் நமது பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதாக அடிக்கடி தோன்றலாம் – இவையெல்லாவற்றையும் கடந்து, நம்முடைய பழக்க வழக்கம் என்பது நன்கு அறிந்த நரம்பு மண்டலப் பாதையியன் அடிப்படையில் செயல்படுவதாகும் – பௌத்தம் இதனைக் கடந்து வர முடியும் என்கிறது. இதனை மாற்றுவதற்கான திறனும், புதிய நரம்பு மண்டலப் பாதைகளை நம் வாழ்க்கை முழுமைக்கும் ஏற்படுத்த முடியும் என்றும் பௌத்தம் சொல்கிறது.

எதையேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வு நமது மனதில் வந்தால், கர்மாவின் தூண்டுதல்கள் நம்மை செயல்பட வைப்பதற்கு முன்னர் ஒரு சிறிய இடைவெளி இருக்கும். எந்த உணர்வு மேலெழுந்தாலும் நாம் உடனடியாக செயல்பட்டுவிடுவதில்லை – அன்றாட கழிப்பறை பயிற்சியை நாம் கற்றுக் கொண்டோம். இதே போன்று ஏதேனும் வெறுப்பானவற்றை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், “இதை நாம் சொல்லலாமா வேண்டாமா?” என்று தேர்ந்தெடுப்போம்.  பிறர் நச்சரிக்கும் போது அவர்களிடம் நாமும் கத்தினால் அந்த நிமிடத்தில் மீட்சி பெற்ற உணர்வு ஏற்படலாம், ஆனால் பிறரிடம் சத்தமிடுதல் என்பது மனதின் துன்ப நிலை.  பேச்சுவார்த்தயின் மூலம் வாக்குவாதத்திற்கு தீர்வு காண்தென்பது மிகவும் மகிழ்ச்சியான, மிகுந்த அமைதியான மனநிலை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆக்கம் மற்றும் அழிவு தரும் செயல்களின் வேறுபாட்டை பகுப்பாயும் திறனே மனிதர்களையும், விலங்குகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது – இதுவே நமக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய நன்மையும் கூட.

ஏற்கனவே சொன்னது போல, அழிவு தரும் செயல்களில் இருந்து விலகி இருத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதை எளிமையாக்கலாம், நம்முடைய மூளையில் மனநிறைவுக்கான உணர்வுகளுக்கு போதுமான இடமிருந்தால் அவை சாத்தியமே, எனவே தான் பௌத்த பயிற்சிகள் மன நிறைவை மேம்படுத்தவதை எப்போதும் ஊக்குவிக்கிறது. நாம் மந்தமடைந்தால், நாம் என்ன சிந்திக்கிறோம், நாம் என்ன சொல்லப்போகிறோம் அல்லது செய்யப்போகிறோம் என்பதில் நாம் கூடுதல் கவனமாக இருப்போம். நாம் கவனிக்கத் தொடங்குவோம், “நான் ஏதேனும் சொன்னால் அது பிறருக்கு கஷ்டத்தைத் தரும் என்று உணர்வேன், அதனால் கஷ்டம் ஏற்படும் என்றால் நான் அதனைச் சொல்ல மாட்டேன்.” இப்படியாக நமது யோசனைகள் இருக்கும். நாம் மனநிறைவோடு இல்லாவிட்டால், வழக்கமாக சிந்தனைகள் மற்றும் உணர்வுகளின் நெருக்கத்தால் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் மூறையில் உதிப்பதையெல்லாம் செய்வதன் விளைவாக முடிவில் சிக்கலில் சிக்கிக்கொள்வது.   

எதிர்காலத்தை கணியுங்கள்

நம்முடைய முந்தைய மற்றும் நடப்பு கர்மா நடத்தைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நாம் என்ன அனுபவிக்கப்போகிறோம் என்பதை நம்மால் கணிக்க முடியும். நீண்ட கால முறையில் பார்த்தால், ஆக்கப்பூர்வமான செயல்கள் மகிழ்ச்சியான முடிவுகளையும், அழிவுகரமானவை விரும்பத்தகாத விளைவுகளையும் கொண்டு வரும்.

பல காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் எவ்வாறு குறிப்பிட்ட கர்மாவின் செயல் அறுவடை செய்யப்படுகிறது. நாம் ஒரு பந்தை மேலே தூக்கி எறிந்தால், அது தரையில் வந்து விழும் என்பதை கணிக்கலாம். அதே சமயம் நாம் அந்த பந்தை பிடித்துவிட்டால் தரையில் விழாது. அதே போலத்தான், நம்முடைய முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கணிக்கலாம், ஆனால் அவை முழுமையானதோ, விதியோ அல்லது கல்லில் செதுக்கி வைத்ததோ அல்ல. இதர மனப்போக்கு, செயல்கள் மற்றும் சூழ்நிலைகளும் கர்மாவின் அறுவடையில் தாக்கத்தை செலுத்துகின்றன. உடல்பருமனாக இருந்த போதும் தொடர்ந்து உடலுக்கு ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொண்டால் எதிர்காலத்தில் சர்க்கரை வியாதி வரும் என்பதை கணிக்கலாம். ஆனால் தீவிர உணவுக்கட்டுப்பாடு செய்து, உடல் எடையைக் குறைத்தால், நம் உடல்நிலை எப்போதுமே ஆரோக்கியத்தை இழக்காது.

நம் திடீரென பாதத்தை இடித்துக்கொண்டால், அதற்கும் கர்மாதான் காரணம் என நம்பவேண்டியதில்லை, வலியை இயல்பாக உணரமுடியும் – அது தற்செயலாக நடந்தது. நாம் நம்முடைய பழக்கங்களை மாற்றி, பலன் தரக்கூடியவையாக கட்டமைத்தால், நம்முடைய நம்பிக்கைகளையும் கடந்து நேர்மறையான முடிவுகளை கிட்டும்.

Top