இரண்டாம் சென்சாப் செர்காங் ரின்போச்சின் தகவல்

அலெக்ஸ் பெர்சின் என்னுடைய நெருங்கிய சீடர் மற்றும் எனது முன்னோடியாளரின் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார், முந்தைய சென்ஸாப் செர்காங் ரின்போச்சும் நானும் நெருக்கமான தர்ம உறவுமுறையை எங்களது வாழ்நாள் முழுவதிலும் எந்த இடையூறும் இன்றி  நல்ல முறையில் தொடர்கிறோம். பெர்சின் ஆர்கைவ்ஸ் அலெக்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட என்னுடைய முன்னோடியாளரின் பல்வேறு போதனைகளை உள்ளடக்கியுள்ளது, அதே போன்று அலெக்ஸ் அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டார் என்பதை அடிப்படையாக வைத்து அலெக்ஸ் சுயமாக பல்வேறு தெளிவான போதனைகளை தொகுத்தளித்திருக்கிறார். என்னுடைய முன்னோடிகளின் பாரம்பரியத்தை பரந்து பட்ட பிரிவுகளில்லாத கருத்துகளாக பல்வேறு மொழிகளிலும் கிடைக்கச்செய்து தன்னுடைய வலைதள பக்கம் மூலம் பலதரப்பட்ட மக்களை சென்றடைந்திருக்கும் அலெக்ஸின் செயல் என்னை வியக்க வைக்கிறது.

அலெக்ஸின் பணிகள் தொடர வேண்டும், வளர்ச்சி காண வேண்டும் என்று நான் பிராத்திக்கிறேன், மேலும் இந்த வலை தளப்பக்கமானது தரமான தகவல்களுக்கான ஆதாரமாகவும், வருகின்ற தலைமுறைகளுக்கான முன்உதாரணமாகவும் திகழும். மக்கள் பயன்பெறும் நுண்ணறிவானது, விரைவில் கனிந்து ஞானமடைதலுக்கு உதவியாகட்டும்.

நவம்பர் 22, 2008
சென்சாப் செர்காங் துல்கு


Top