அறிமுக குறிப்புரைகள்
அனைத்து பௌத்த பாரம்பரியங்களும் ஆன்மீகப் பாதையில் குருவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆன்மீக குருக்களின் முக்கிய கடமைகள் என்னென்ன?:
- தகவல் கொடுப்பது
- கேள்விகளுக்கு பதிலளிப்பது
- மாணவர்களின் புரிதலை சரிபார்ப்பது
- மாணவர்களின் அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் தியானத்தில் முன்னேற்றத்தை சரிபார்ப்பது
ஆன்மீக குருக்கள் என்பவர்கள்:
- உறுதிமொழி மற்றும் அதிகாரமளித்தலை வழங்குதல்
- முன்மாதிரிகளாகத் திகழ்தல்
- சுய உதாரணங்கள் மூலம் உந்துசக்தி அளித்தல்
- புத்தரிடம் மீண்டும் செல்வதற்கான பாரம்பரிய இணைப்பை வழங்குபவராகவும் இருத்தல் வேண்டும்.
குருக்கள் மற்றும் மாணவர்களிடையே பல்வேறு மாறுபட்ட நிலைகள் உள்ளன, எனவே பாதை முழுவதும் தொடர்புபடுத்த வேறுபட்ட வழிகளும் உள்ளன.
கலாச்சார சூழல்
ஆன்மீக குருவுடனான நவீன மேற்கத்திய சூழல் கற்றலானது பாரம்பரிய ஆசிய கலாத்தசாரத்தை ஒப்பிடும் போது முற்றிலும் வித்தியாசமானது.
பாரம்பரிய ஆசியாவில், பெரும்பாலான தர்மா பயின்ற மாணவர்கள்:
- துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளாக, ஆன்மீகப் பாதைக்கான முழு-நேர அர்ப்பணிப்புள்ளவர்கள்
- தர்மத்தை கற்றல் மற்றும் பயிற்சித்தல் தவிர வேறு எந்த முக்கியமான செயலும் இல்லை
- படிப்பறிவில்லாத ஒரு குழந்தையைப் போல பௌத்தத்தை படிக்கத் தொடங்குதல்.
- கணிதம், சமூக ஆய்வுகள் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் பெரியவர்கள் குறைந்தபட்ச கல்வி அறிவுடன் இருந்தனர்.
- பெண்கள் தாழ்ந்தவர்கள் மற்றும் ஞானகுரு என்பதே விதிமுறை - பெண்களின் பங்கு மற்றும் அதிகார அமைப்புகளின் பார்வை தொடர்பான பாரம்பரிய ஆசிய சமூகங்களின் மதிப்புகளை ஏற்றுக்கொள்தல்.
நவநாகரீக மேற்கத்தியத்தில், பெரும்பாலான மாணவர்கள்:
- பாமரர்கள், அவர்கள் தங்களின் பணி மற்றும் சொந்த வாழ்வில் பரபரப்பாக இருக்கிறார்கள்
- தர்மாவிற்கு ஒதுக்க சிறிது நேரம் மட்டுமே உள்ளது
- தொடக்கத்திலேயே பெரியவர்களைப் போல தர்மத்தை கற்க ஆரம்பிக்கிறார்கள்
- பாலின பாகுபாடு மற்றும் ஜனநாயக சமூக கட்டமைப்பை கோருகிறார்கள்.
நிதி ரீதியில் பார்க்கும் போது, ஆன்மிக குருக்களுக்கு பாரம்பரிய ஆசியாவால் சமூகத்தின் ஆதரவைத் தர முடிந்தது. குருக்களின் மாணவர்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்கள் படையல்களை அளித்தனர். நவநாகரீக மேற்கத்தியத்தில், ஆன்மிக குருக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். பலரும் தர்ம மையங்களை நிதி, அமைப்பு மற்றும் அதிகாரத்தின் பொருட்டு நடத்துகின்றனர்.
இவை அனைத்துமே குரு – மாணவர் இடையேயான உறவுமுறையை பாதிக்கின்ற காரணிகள். ஆன்மீகத்தை நாடும் பலர் பயன் அடைந்திருக்கிறார்கள், ஆனாலும் அதிக புரிதலின்மை, பல தவறுகள் மற்றும் ஆன்மிகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
அபாயங்கள்
திபெத்திய பாரம்பரியத்தைப் பொறுத்தவரை, "குரு-பக்தி" பற்றிய நூல்களால் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. அத்தகைய நூல்களுக்கான வாசகர்கள் உறுதிமொழிகளைக் கொண்ட துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளாக இருந்தனர், தாந்த்ரீக அதிகாரமளிப்பதற்கான தயாரிப்பில் மறுஆய்வுக்கான தேவை இருந்தது. பௌத்தத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில், ஒரு தர்ம மையத்தில் இருந்து கற்க தொடங்குபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் ஒருபோதும் நோக்கமாக இல்லை.
இரண்டு உச்சநிலைகளை நாம் தவிர்க்க வேண்டும்:
- ஆன்மீக ஆசிரியர்களை தெய்வமாக்கி, அப்பாவித்தனம் மற்றும் துஷ்பிரயோகத்திற்கான கதவைத் திறப்பது
- அவர்களைப் பேய்பிடித்தல், சித்தப்பிரமையை போக்குபவர் என்கிற கதவைத் திறந்து, உண்மையான உத்வேகம் மற்றும் ஆழமான பலனைப் பெறுவதற்கான கதவை மூடுதல்.
பாரம்பரியமில்லாத பகுப்பாய்வு முறை
இந்தப் பிரச்னையை நான் பகுப்பாய்ந்து ஆன்மீக குருவுடன் ஆரோக்கியமான உறவுமுறையை பேணும் வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறேன்: ஆரோக்கியமான உறவை உருவாக்குதல் (இத்தாக்கா: ஸ்னோ லயன், 2000) குடும்ப மற்றும் சூழலியல் சிகிச்சையின் நிறுவனர்களில் ஒருவரான ஹங்கேரிய மனநல மருத்துவர் டாக்டர். இவான் போசோர்மெனி-நாகியின் ஆராய்ந்து பரிந்துரைத்த, விரிவாக்கப்பட்ட சிக்கலை பகுப்பாய்வு செய்வதற்கான பாரம்பரியமில்லாத திட்டத்தை நான் இங்கே கூடுதலாக அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
உறவுமுறையின் ஆறு கோணங்கள்
குரு மற்றும் ஆசிரியர் இடையேயான உறவுமுறையை இரண்டு பக்கங்களில் இருந்தும் ஆறு காரணிகள் அல்லது கோணங்களில் இருந்து நம்மால் பகுப்பாய முடியும். உறவுமுறையில் பிரச்னை இருந்தால், அவர்கள் எங்கே பொய் சொன்னார்கள் என்பதை அடையாளம் காண இது உதவலாம் இதனால் ஒவ்வொருவரும் மற்றவரை பொறுத்துச் செல்லவும் ஆரோக்கியமான சமநிலை கொண்டு வரவும் முயற்சிக்க முடியும்.
ஆறு காரணிகளானவை:
- ஒவ்வொரு தரப்பினரையும் பற்றிய உண்மைகள் மற்றும் உறவை ஏற்படுத்துவதற்கான நோக்கம் பற்றிய உண்மைகள்
- உறவுமுறைக்கான ஒவ்வொரு தரப்பின் நோக்கம் மற்றும் அதை பாதிக்கும் மனக்காரணிகள்
- உறவுமுறையில் ஒவ்வொரு தரப்பினரும் தன்னையும் மற்றவரையும் வரையறுக்கும் விதத்தினால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி எப்படி உணர்கிறார்கள்
- உறவுமுறையில் ஒவ்வொரு தரப்பிற்கும் இருக்கும் பொறுப்பு மற்றும் அதனை பாதிக்கும் உளவியல் காரணிகள்
- ஒவ்வொரு தரப்பின் இதர உளவியல் காரணிகள்
- உறவுமுறையில் எப்படி செயலாற்றுகிறது மற்றும் ஒவ்வொரு தரப்பிடமும் அது ஏற்படுத்தும் தாக்கம்
ஒவ்வொரு தரப்பினரையும் பற்றிய உண்மைகள் மற்றும் உறவுமுறையின் அமைப்பைப் பற்றிய உண்மைகள்
உறவுமுறையை பாதிக்கும் ஒவ்வொரு தரப்பினரையும் பற்றிய உண்மைகள் பின்வருமாறு:
- பாலினம் மற்றும் வயது
- கலாச்சார தோன்றல் -ஆசியா அல்லது மேற்கு நாடு
- தனிப்பட்ட தொடர்பு அல்லது போதனைகளில் மொழிப்பரிமாற்றம் செய்ய முடியும் அல்லது மொழிபெயர்ப்பாளர் தேவை
- துறவி அல்லது பாமரர்
- தர்மம் மற்றும் உலக அறிவின் அளவு
- உணர்ச்சி மற்றும் நன்னெறி முதிர்ச்சி அடிப்படையில் ஆன்மீக ஆசிரியர் அல்லது மாணவராக இருப்பதற்கான தகுதிகள்
- ஒவ்வொருவரும் மற்றொருவருக்காக ஒதுக்குகின்ற நேரத்தின் அளவு
- இதர மாணவர்களின் எண்ணிக்கை
- ஆசிரியர் அங்கேயே வசிப்பவரா அல்லது எப்போதாவது மட்டுமே வருகை தருபவரா
அமைப்பு ரீதியில் கீழ்கண்டவாறு இருக்கலாம்:
- ஒரு மேற்கத்திய தர்ம மையம் - ஒரு நகர மையம் அல்லது குடியிருப்பு மையம்
- ஒரு தர்ம மையம் என்றால், சுதந்திரமான ஒன்று அல்லது பெரிய தர்ம அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்
- ஒரு மடாலயம் - ஆசியாவில் அல்லது மேற்கில்.
ஒவ்வொரு தரப்பினருக்கும் உறவுமுறையின் நோக்கம் மற்றும் அதை பாதிக்கும் உளவியல் காரணிகள்
எந்தவொரு உறவுமுறையிலும் இரு தரப்பினருக்கும், உறவின் நோக்கம் எப்போதும் கலவையாக இருக்கும். மாணவர்-ஆசிரியர் உறவுமுறையும் விதிவிலக்கல்ல.
மாணவர் ஆன்மீக குருவிடம் இவற்றை பெறுவதற்காக வரலாம்:
- தகவலைப் பெற்று உண்மைகளை கற்றுக் கொள்ள
- தியானிக்க கற்றுக்கொள்ள
- சுய ஆளுமையை சிறப்பாக செயல்படுத்த
- வாழ்க்கையை மேம்படுத்த
- எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த
- கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறப்பில் இருந்து விடுதலையைப் பெற (சம்சாரியம்)
- மற்ற அனைவரும் ஒரே மாதிரியான விடுதலை மற்றும் ஞானம் பெற உதவ ஞானம் அடைய
- ஓய்வெடுக்க கற்றுக்கொள்ள
- ஒத்த எண்ணம் கொண்ட மாணவர்களுடன் சமூக தொடர்புகளை ஏற்படுத்த
- அயல்சார்பு அணுகலைப் பெற
- சில உடல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகளுக்கு ஒரு அதிசய சிகிச்சையைக் கண்டறிய
- “தர்ம-ஜங்கி”(ஐபாட்) போன்ற கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு ஆசிரியரிடம் “தர்ம-நிச்சயத்தை” பெற
இதனுடன், மாணவர் ஆசிரியரிடம் இவற்றை எதிர்பார்க்கலாம்:
- பௌத்த பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் உந்துதல்
- சிகிச்சை
- சமயகுருவாக வழிகாட்டுதல்
- பெற்றோருக்கு மாற்று
- அங்கீகாரம்
- வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிற யாரோ ஒருவர்.
பதிலுக்கு ஆன்மீக குரு, இவற்றை விரும்பலாம்:
- நிதர்சனங்களைத் தருதல்
- வாய்மொழி பரிமாற்றத்தை கொடுத்து தர்மத்தை பாதுகாத்தல்
- மாணவர்களின் ஆளுமை மேம்பட செயலாற்றுதல்
- மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பலனடைவதற்கான விதையிடுதல்
- சிறந்த மறுபிறப்பு, விடுதலை மற்றும் ஞானத்தை மாணவர்கள் அடைய உதவுதல்
- ஒரு தர்ம மையம் அல்லது தர்ம மையங்களின் சாம்ராஜ்யத்தை உருவாக்குதல்
- ஆதாயத்தை அவரது பரம்பரைக்கு மாற்றுதல்
- இந்தியாவில் ஒரு மடத்தை ஆதரிக்க பணம் திரட்டுதல் அல்லது திபெத்தில் ஒரு மடத்தை மீண்டும் கட்டுதல்
- அகதியாக பாதுகாப்பான தளத்தைக் கண்டறியவும்
- வாழ்க்கையை உருவாக்க அல்லது பணக்காரராக மாற்ற
- மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தைப் பெற
- பாலியல் சலுகைகளைப் பெற.
இரு தரப்பையும் பாதிக்கும் எதிர்மறை உளவியல் காரணிகளானவை இவற்றையும் உள்ளடக்கியவை:
- தனிமை
- சளிப்பு
- துன்பம்
- பாதுகாப்பின்மை
- நவநாகரீகமாக இருக்க விருப்பம்
- குழு அழுத்தம்.
ஒவ்வொருவரின் பங்கும் உறவுமுறையின் அடிப்படையில் நிகழ்வதாக வரையறுக்கிறது, இதனால் ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி மற்றொருவர் எப்படி உணர்கிறார் என்கிற எதிர்பார்ப்பு இருவரிடத்திலும் இருக்கிறது.
ஆன்மீக குரு மாணவரை அல்லது மாணவர் ஆசிரியரை கீழ்கண்டவாறு கருதலாம்:
- ஒரு பௌத்தப் பேராசிரியர், பௌத்தத்தைப் பற்றிய தகவல்களைத் தருகிறார்
- ஒரு தர்ம பயிற்றுவிப்பாளர், தர்மத்தை வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைக் குறிப்பிடுகிறார்
- ஒரு தியானம் அல்லது சடங்கு பயிற்சியாளர்
- ஒரு ஆன்மீக வழிகாட்டி, சபதங்களை வழங்குகிறார்
- ஒரு தாந்த்ரீக வல்லுநர், தாந்த்ரீக அதிகாரம் அளிக்கிறார்.
மாணவர் தன்னையோ, அல்லது ஆன்மீன குரு ஆசிரியரையோ இப்படி நினைக்கலாம்:
- ஒரு பௌத்த மாணவர், தகவல் பெறுகிறார்
- ஒரு தர்மத்தை கற்பவர்,அதனை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்
- ஒரு தியானம் அல்லது சடங்கு பயிற்சி
- ஆசிரியரிடம் சபதங்களை எடுத்த சீடன்
- ஆசிரியரால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படும் சீடர்.
இந்த பரிமாணத்தின் மற்றொரு அம்சம், உறவுமுறையின் காரணமாக ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதுதான்.
மாணவர்கள் இப்படி உணரலாம்:
- பாதுகாக்கப்பாக இருக்கிறோம்
- ஒருவருக்கு சொந்தமாக இருக்கிறோம்
- முழுமையாக இருக்கிறோம்
- நிறைமனதுடன் இருக்கிறோம்
- ஒரு வேலைக்காரனாக இருக்கிறேன்.
- ஒரு வழிபாட்டின் உறுப்பினராக இருக்கிறேன்.
ஆன்மீக குரு இப்படி உணரலாம்:
- ஒரு குரு
- ஒரு பணிவான பயிற்சியாளர்
- ஒரு மீட்பர்
- ஒரு போதகர்
- ஒரு உளவியலாளர்
- தர்ம மையங்கள் அல்லது தர்ம சாம்ராஜ்யத்தின் நிர்வாகி
- மடாலயத்தின் நிதி உதவியாளர்.
ஒவ்வொரு தரப்பினரின் உறுதிப்பாட்டின் நிலை மற்றும் உறவுமுறையில் ஈடுபாடு மற்றும் இதைப் பாதிக்கும் உளவியல் காரணிகள்
மாணவர் கீழ்கண்டபடி இருக்கலாம்:
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்துதல், நன்கொடைகள் வழங்குதல் அல்லது ஆசிரியருக்கு எதையும் செலுத்தாமல் அல்லது வழங்காமல் படிப்பது
- பௌத்தம், ஆசிரியர் அல்லது ஒரு பரம்பரையில் சாதாரண ஈடுபாடு அல்லது ஆழ்ந்த ஈடுபாடு
- ஆசிரியரிடம் உறுதிமொழி எடுக்க விரும்புவது
- ஆசிரியருக்கு உதவுவதற்கு பொறுப்பேற்பது
- கடனாளியாக உணர்தல்
- கடமைப்பட்டதாக உணர்தல்
- அவர் அல்லது அவள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு - இதில் குழு அழுத்தத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது
- அவர் அல்லது அவள் ஏதாவது தவறு செய்தால் அவர்கள் நரகத்திற்குச் செல்வதாக உணர்தல்
ஆன்மீக ஆசிரியர் இப்படி இருக்கலாம்:
- மாணவர்களை நன்னெறி வழிநடத்தும் பொறுப்பை ஏற்றல்
- மாணவர்களின் வாழ்க்கையை இயக்கவும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லவும் விரும்புதல்
- தன் கடமையைச் செய்தல், ஏனெனில் அவர்களின் சொந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க அனுப்பியுள்ளனர்
- ஒரு வேலையை செய்பவர்களாக மட்டும் பார்த்தல்.
இந்த பரிமாணத்தை பாதிக்கும் எதிர்மறை உளவியல் காரணிகள் பின்வருமாறு:
- அர்ப்பணிப்பு பயம்
- அதிகார பயம், ஒருவேளை துஷ்பிரயோகத்தின் பின்னணி காரணமாக இருக்கலாம்
- பயனுள்ளதாக இருக்க வேண்டும் அல்லது நேசிக்கப்பட வேண்டும்
- கவனம் தேவை
- மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்
- தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம்.
ஒவ்வொரு தரப்பிற்குமான இதர உளவியல் காரணிகள்
இருதரப்பிடமும் உள்ள பண்புகளும் இதில் அடங்கும்:
- சகஜமாகப் பழகுபவரா அல்லது மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்பவரா
- அறிவார்ந்தவரா, உணர்ச்சிவசப்படுபவரா அல்லது பக்தியாளரா
- இளகிய மனம் படைத்தவரா இறுகிய மனம்கொண்டவரா
- அமைதியானவரா அல்லது கோபப்படுபவரா
- நேரம் மற்றும் கவனிக்கப்படுதலைத் தேடும் பேராசைக்காரரா
- மற்ற மாணவர்கள் அல்லது மற்ற ஆசிரியர்கள் மீது பொறாமைப்படுபவரா
- சுய-மரியாதை குறைந்தவரா அல்லது ஆணவத்தால் நிரப்பப்பட்டவரா
உறவுமுறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஒவ்வொரு தரப்பிடமும் அது ஏற்படுத்தும் தாக்கம்
மாணவரும் ஆசிரியரும் ஒன்று சேர்ந்து உருவாக்க இவற்றை முடியுமா:
- ஒரு நல்ல அல்லது மோசமான குழு
- ஒரு குழுவாக ஒருவருக்குள் இருக்கும் சிறந்த திறன்களை அல்லது ஒருவருக்கும் மறைந்திருக்கும் இதர திறன்களை இருவரும் சேர்ந்து வெளிக்கொண்டுவருதல்
- மாறுபட்ட எதிர்பார்ப்புகளால் ஒவ்வொருவரும் மற்றொருவரின் நேரத்தை வீணடிக்கும் ஒரு குழுவாக இருத்தல்
- ஒரு படிநிலை அமைப்பை கொண்டிருத்தல், அதில் மாணவர் சுரண்டப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்படுவதாகவும், தாழ்வாகவும் உணர்கிறார் (சுயமரியாதை குறைந்தவராக நடத்தப்படுவதாக), மேலும் ஆசிரியர் தன்னை அதிகாரமாகவும் உயர்ந்தவராகவும் உணர்கிறார் - ஒரு தரப்பு என்ன உணர்கிறது என்பது மற்றொருவர் என்ன உணர்கிறார் என்பதற்கு ஒத்துப்போகாமல் இருக்கலாம் என்பதைக் கவனியுங்கள்.
- குழுவில் உள்ள ஒருவரோ அல்லது இருவருமே கூட உந்துதல் பெற்றதாக அல்லது ஒன்றும் இல்லாததாக உணரலாம்.
சுருக்கம்
மாணவர்-ஆசிரியர் உறவை அனைத்து ஆறு பரிமாணங்கள் மற்றும் அவற்றின் ஒவ்வொரு கூறுபாடு காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும். காரணிகள் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்றால், இரு தரப்பினரும் அவற்றை ஒத்திசைத்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும். கலாச்சார வேறுபாடுகள் அல்லது உணர்ச்சிக் காரணிகள் காரணமாக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான இந்த அணுகுமுறையை ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மற்றொருவர் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள வேண்டும் அல்லது உறவுமுறையில் இருந்து விலகி இருக்க வேண்டும்.