"அனுபவமுள்ள முதியவரின் அறிவுரை" என்பதன் சுருக்கம்

துன்பத்தைப் பற்றிய இந்தப் போதனைகள் அனுபவமிக்க முதியவரான மதிப்புமிக்க மாஸ்டர் கங்டங் ரின்போச் (1762–1823) என்பவரின் அறிவுரையிலிருந்து வந்தவை. பல உவமைகளைக் கொண்ட அவை வசன வடிவில், வேதத்தின் அடிப்படையில் கதையாகப் போகின்றன. துறவு மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உறுதியை வளர்த்துக் கொள்ள உதவுவதும், பொதுவாக அனைவரின் நன்மைக்காக ஞானம் பெற போதிசிட்டாவுக்கு அடித்தளம் அமைப்பதும் போதனையின் முக்கிய அம்சமாகும்.

கர்ம சக்தியாலும், குழப்பமான உணர்ச்சிகளாலும் கட்டுக்கடங்காமல்  நிகழம் மறுபிறப்பு எனும் விதைகளை கைவிட்டு, அதன் விளைவாக, முதுமை, நோய், மரணம் போன்ற துன்பங்களை அனுபவிக்காத புத்தருக்கு வணக்கம்சம்சாரியத்தின் பரந்த, தனிமையான, காட்டுச் சமவெளியின் நடுவில் ஒரு முதியவர் வாழ்கிறார், அவரைப் பார்க்கச் சென்ற ஒரு இளைஞன், அவனது இளமை மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறான். அவர்கள் இது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.“முதியவரே, உங்களது பார்வை, பேச்சு மற்றும் நடத்தை ஏன் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு பதிலளித்த அந்த முதியவர், “நான் பேசுவது, நடப்பது மற்றும் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது என்று நீ சொன்னால், நீ வானத்தில் பறப்பதாக நினைத்துக் கொள்ளாதே. விழுந்தால் நான் வாழும் இதே பூமியில் தான் நீ வந்து விழுந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டும்” என்றார். 

முதுமை என்பது வயதானவர்களுக்கானது அது எப்போதும் தங்களுக்கு வராது என்று சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். முதியவர்களுடன் எதையாவது செய்யும் போது அவர்கள் மிகவும் பிடிவாதமாகவும் நிதானமின்றியும் இருக்கிறார்கள். 

தொடர்ந்து பேசிய அந்த முதியவர், “சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் மிகவும் உறுதியாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உன்னைவிட மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தேன். பிறக்கும் போதே நான் இப்போது இருக்கும் முதுமையுடன் பிறக்கவில்லை. நான் ஓடினால் என்னால் மின்னல் வேகத்தில் பறக்கும் குதிரைகளைக் கூட பிடித்துவிட முடியும்” என்றார். 

பெரும்பாலான முதியவர்கள் இப்படித் தான் பேசுவார்கள். கடந்து சென்ற நாட்களைப் போல நிகழ் காலம் எப்போதும் இனிமையாக இருக்காது. 

"நாடோடி நிலங்களில் சுற்றித் திரியும் காட்டெருதுகளைக் கூட கூட என்னால் வெறும் கைகளால் பிடிக்க முடியும். என் உடல் மிகவும் நெகிழ்வாக இருந்தது, என்னால் வானத்தில் ஒரு பறவை போல் நகர முடியும். என் உடல் மிகவும் சரியாக இருந்தது, நான் ஒரு இளமை ததும்பிய கடவுளாக இருந்தேன். நான் பிரகாசமான வண்ண ஆடைகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் நிறைய அணிந்து, சுவையான உணவு மற்றும் இனிப்புகளை டன் கணக்கில் சாப்பிட்டேன், மற்றும் வலிமைமிக்க குதிரைகளில் ஏறி சவாரி செய்தேன். நான் விளையாடாமல், சிரிக்காமல், ரசிக்காமல் தனியாக அமர்ந்திருந்ததில்லை. நான் அனுபவிக்காத மகிழ்ச்சியே இல்லை. “அந்த நேரத்தில், என்னுடைய வாழ்வின் நிலையற்ற தன்மை அல்லது என்னுடைய மரணத்தை பற்றி நான் எப்போதும் சிந்தித்ததில்லை. நான் இப்போது இருக்கும் துன்பமான முதுமை தோற்றத்திற்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.” 

நான் வாழ்ந்த பகுதியில் ஒரு இளைஞர் இருந்தார், அவர் ஆடம்பரமான வாழ்வை வாழ்ந்து வந்தார் மேலும் எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்தார். மெல்ல அவரது இளமை மாறி முதுமை அடைந்தார், அவருடைய உடல் வளைந்தது, வருமானம் குறைந்தது. “எனக்கு இவ்வளவு சீக்கிரம் முதுமை வரும் என்று நான் நினைக்கவே இல்லை” என்று அவர் தன்னுடைய நண்பர்களிடம் கூறினார். 

"நண்பர்கள்,விருந்து நிகழ்ச்சி, மகிழ்ச்சியான நேரத்தை கொண்டிருத்தல் என்று கவனத்தை சிதறடித்து வாழ்வதால், உங்கள் சிரிப்பின் சத்தத்திற்கு நடுவே முதுமை பதுங்கி இருந்து உங்களை வெல்கிறது."

“முதுமை மெல்ல வருகிறது என்பதற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். சட்டென்று முதுமை வந்துவிட்டால், நம்மால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. முப்பது வயதில் தூங்கச் சென்று காலையில் எழுந்து பார்க்கும் போது 80 வயது தோற்றம் இருந்தால், நம்மைப் பார்த்தே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதுமையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாம் எப்படி வயதானவரானோம் என்பது நமக்கு முற்றிலும் புரியாத விஷயம். சட்டென்று நாம் நம்முடைய முதுமையை உணர்ந்தால், அதனை ஏற்றுக் கொள்வதற்கு சில காலம் எடுக்கும். அப்படியானால் அது மிக தாமதம்.  இறப்பதற்கு முன் சில மணி நேரங்கள் தர்மத்தை கடைப்பிடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், தந்திரத்தில் ஈடுபட சரியான உடல் தகுதி தேவை. எனவே, இளம் வயதிலேயே தாந்த்ரீகப் பயிற்சியைத் தொடங்குவது முக்கியம்."

நமக்கு மிகவும் வயதானால், கண்ணாடியில் நம்மை நாமே பார்க்கும் போது நமக்கே பிடிக்காது. அந்த நேரத்தில் நம்முடைய உடல்கள் மற்றும் மனங்கள் பலவீனமாகும். நம் உடல்கள் தலை முதல் கால் வரை பலமிழக்கத் தொடங்கும். எப்பொழுதும் தலை குனிந்திருக்கும்.
எனது தலையில் ஒரு முடி கூட கருப்பாக இல்லாமல், வெள்ளையாகி இருப்பது, தூய்மையின் அடையாளம் அல்ல. மரண தேவன் தன் வாயில் இருந்து உமிழ்ந்திருக்கும் அம்பு, என் தலையில் மீது விழுந்திருக்கிறது. என்னுடைய நெற்றியில் இருக்கும் கோடுகள் தாயிடம் பால் குடிக்கும் குழந்தையின் உடலில் இருக்கும் மடிப்புகள் அல்ல. ஏற்கனவே எத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன் என்று மரணக்கடவுள் எனக்கு அனுப்பும் எண்ணிக்கைத் தகவல். எனக்கு பார்வை மங்கி விட்டால், அது என்னுடைய கண்களை புகை சூழ்ந்ததால் அல்ல. என்னுடைய விழித்திறன் குறைந்து வருகிறது என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதன் அறிகுறி ஆகும். காதில் கையை வைத்து எதையோ கேட்க முயற்சிக்கிறேன் என்றால் நான் ரகசியத்தை கேட்கிறேன் என்று அர்த்தமல்ல என்னுடைய கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று பொருள்.   
என்னுடைய மூக்கில் சளி துளித்துளியா வந்து கொண்டிருந்தால், அது என்னுடைய முகத்தை அலங்கரிக்கும் முத்து அல்ல. என்னுடைய வீரியமான இளமைக்காலம் முதுமை எனும் ஒளியில் பனிக்கட்டியைப் போல கரைகிறது என்பதற்கான அறிகுறி. பற்களை இழப்பது என்பது சிறு குழந்தைகளுக்கு மீண்டும் புதிதாக பல் முளைக்கும் பருவம் போன்றதல்ல. இது மரண இறைவன் தூக்கி எறிபவற்றை ஆயுதங்களின்றி உண்பதற்கான அடையாளம். பேசும் பொழுது அதிக எச்சில் வருகிறது நான் அதை துப்புகிறேன் என்றால், அது பூமியை சுத்தம் செய்ய நான் தெளிக்கும் நீரல்ல. நான் இதுவரை கூறிய அனைத்து வார்த்தைகளுக்குமான முடிவு என்று அர்த்தம். நான் பொருத்தமில்லாமல் பேசுகிறேன் வார்த்தைகள் தடுமாறுகின்றன என்றால், நான் புரியாத மொழியை பேசுகிறேன் என்று அர்த்தமல்ல. வாழ்நாளில் ஒன்றுமில்லாததைப் பேசி பேசி என்னுடைய நாக்கு சோர்த்து போய்விட்டது என்பதற்கான அறிகுறி அது. 
“என்னுடைய தோற்றம் அழகிழந்துவிட்டால், நான் ஒரு முகக்கவசத்திற்குன் என்னை மறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதல்ல. நான் கடன் வாங்கி வந்த என்னுடைய முழு உடல் தோற்றமும் சீரழிகிறது என்பதன் அடையாளம். என்னுடைய தலை ஆடிக்கொண்டே இருக்கிறது என்றால் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. மரண தேவனின் சக்திவாய்ந்த குச்சி என்னுடைய தலையை கடுமையாக தாக்கிவிட்டது என்பதற்கான அடையாளம். நான் குனிந்து கூன் போட்டு நடக்கிறேன் என்றால், நான் கீழே போட்ட ஊசியை தேடிக்கொண்டே நடக்கிறேன் என்று பொருளல்ல. என்னுடைய உடல் இந்த பூமியில் இருந்து அழிகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். 
“நான் எழுந்திருக்கும போது என்னுடைய கைகள் மற்றும் கால்களை தூக்கிக் கொண்டு எழுந்தால், நான்கு-கால் விலங்கு போல நான் செய்கிறேன் என்று பொருளல்ல. ஏனெனில் என்னுடைய காலுக்கான போதுமான சவுகரியம் இல்லை. நான் உட்கார்ந்தால், ஏதோ ஒரு கையை கீழே வைப்பது போன்று இருக்கிறது. அதற்காக நான் என்னுடைய நண்பர்கள் மீது கோபமாக இருக்கிறேன் என்று பொருளல்ல. என்னுடைய உடலின் கட்டுப்பாடு இழந்துவிட்டது என்பதன் அடையாளம் அது. 
“நான் மெதுவாக நடந்தால், ஒரு மாமனிதர் போல நடக்க முயற்சிக்கிறேன் என்று அர்த்தமல்ல. ஏனெனில் நான் என்னுடைய உடலின் முழு கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டேன். என்னுடைய கைகள் நடுங்குகின்றன என்றால், பேராசையுடன் ஏதோ ஒன்றை பெறுவதற்காக கைகளை அசைக்கிறேன் என்று பொருளல்ல. மரணக்கடவுளால் என்னிடம் இருக்கும் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதற்கான அறிகுறி. என்னால் சிறிதளவே உண்ணவும் அருந்தவும் முடிகிறது என்றால், நான் கஞ்சத்தனமாக இருக்கிறேன் என்பதற்காக அல்ல. என்னுடைய வயிற்றின் சீரண எரிசக்தி குறைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நான் மெல்லிய உடைகளை அணிகிறேன் என்றால் விளையாட்டு வீரங்களை போல இருக்க முயற்சிக்கிறேன் என்று பொருளல்ல. என்னுடை உடல் பலவீனத்தால் எந்த உடை அணிந்தாலும் அது எனக்கு சுமையாக இருக்கிறது என்பதனால். 
சுவாசிப்பது சிரமமாக இருந்தால், முனகல் சத்தம் இருந்தால் யாரோ ஒருவரை மந்திரம் சொல்லி அவரை குணப்படுத்துகிறேன் என்று அர்த்தமல்ல. என்னுடைய உடலில் உள்ள சக்திகள் வெளியேறுகின்றன எனும் பலவீனத்தை வெளிப்படுத்தும் அறிகுறி அது. என்னால் குறைவான வேலையே செய்ய முடிகிறது என்றால், நானே என்னுடைய செயல்பாடுகளை நோக்கத்துடன் குறைத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் ஒரு வயதானவர் என்ன செய்யமுடியும் என்கிற வரையறைக்குள் அது இருக்கிறது. நியாபக மறதியாக இருக்கிறது என்றால், மற்றவர்களின் முக்கியமில்லாத விஷயங்களை நான் பார்க்கிறேன் என்று அர்த்தமல்ல. என்னுடைய நினைவுத்திறன் குறைந்து வருகிறது என்பதன் அடையாளம் அது. 
இளைஞரே, என்னை கேளி செய்து நகைக்காதே. நான் இப்போது அனுபவிப்பது எனக்கானது மட்டுமல்ல. எல்லோரும் இதனை அனுபவிக்கிறார்கள். நீயும் பொருத்திருந்து பார்; மூன்று ஆண்டுகளில், முதுமையின் சில முதல் தகவல்கள் உன்னை வந்தடையும். நீ நம்ப மாட்டாய் அல்லது நான் சொன்னதைப் போல விரும்ப மாட்டாய், ஆனால் அனுபவத்தில் இருந்து நீ அவற்றை கற்றுக்கொள்வாய். ஐந்து சீரழிவுகள் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்னைப் போன்று முதுமையில் நீ வாழ்வது உன்னுடைய அதிர்தஷ்டம். நான் இருக்கும் வரை நீ வாழ்ந்தாலும் கூட, என்னால் முடிந்த அளவு உன்னால் பேச முடியாது.என்னால் முடிந்த அளவு உன்னால் பேச முடியாது.”
அதற்கு பதிலளித்த இளைஞர், “நீங்கள் இருக்கும் காலம் வரை அழகிழந்து, உங்களைப் போன்று புறக்கணிக்கப்பட்டு, நாயைப் போன்ற நிலைமையில் இருப்பதை விட, இறப்பதை சிறந்தது” என்றான். 
இதைக் கேட்டு நகைத்தார் முதியவர். “இளைஞரே நீ மிகவும் புறக்கணிக்கிறாய் மேலும் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ விரும்பும் முட்டாள், ஆனால் முதுமை கொள்ளக் கூடாது என்கிறாய். இறப்பு சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிமையானதல்ல. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இறப்பதற்கு, கிடைத்தவற்றை தவறாக எடுத்துக் கொள்ளாத அல்லது பத்து நேர்மறைச் செயல்களின் தார்மீகத்தை உடைக்காத, தர்மம் மற்றும் தியத்தில் அதிகம் கவனம் செலுத்தி அதனை அடைந்தவராக இருக்க வேண்டும். அப்படியானால் மரணம் எளிதாக இருக்கும். 
“நான் அப்படி நினைக்கவில்லை, இருப்பினும் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்திருக்கிறேனா என்கிற நம்பிக்கை இல்லை. நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் நான் உயிர் வாகும் ஒவ்வொரு நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளேள். என்னுடைய உறுதியான விருப்பம் ஒவ்வொரு நாளும் உயிருடன் இருத்தலாகும்.” இளைஞர் தன்னுடைய  மனதை மாற்றிக் கொண்டு சொன்னார், “ முதியவரே நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. முதுமையின் துயரம் என்ன என்று மற்றவர்கள் என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் பார்த்து ஒப்புகொள்கிறேன். முதுமைக் காலம் பற்றி நீங்கள் எனக்கு விவரித்தவை என்னுடைய மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதுமைக் கால துயரத்தைப் பார்த்து நான் வியக்கிறேன். ஐயா, முதுமைக்காலத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், தயவு செய்து அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல், அதனை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்னிடம் உண்மையைக் கூறுங்கள்.”
மகிழ்ச்சியுடன் கூறிய முதியவர், “நிச்சயமாக ஒரு வழி இருக்கிறது. நீ அதை தெரிந்து கொண்டால், பின்பற்றுவது மிகவும் எளிது. சிறிய முயற்சியுடன், இந்தத் துன்பத்தில் இருந்து நம்மால் விரைவாக விடுதலை பெற முடியும். எப்படி இருந்தாலும் பிறக்கும் ஒவ்வொருவரும் இறக்கப் போகிறார்கள், மிகச் சிலர் மட்டுமே வயதான பின்பு இறக்கிறார்கள். பலர் முதுமைக் காலத்தை அடையாமல் இளமையிலேயே உயிரிழக்கும் வாய்ப்பை கொண்டிருக்கின்றனர். இந்த முறைகள் புத்தரின் போதனைகளில் உள்ளன. விடுதலை மற்றும் ஞானமடைதலுக்கான பல வழிமுறைகளை அது கொண்டுள்ளது. வேறு விதமாகச் சொல்வதானால் மறுபிறப்பின்றி, முதுமையடையாமை, நோய்வாய்ப்படாமை அல்லது இறப்பு இல்லாமை; ஆனால் நாம் அவற்றை பயிற்சிக்கவில்லை.”

ஒரு முறை மடாலயத்தில் சுயம்பாக உருவான லாமா ஒருவர் இருந்தார். அந்த மடாலயத்தின் இளைய உறுப்பினர் அவர், அதனால் பெரும்பாலான துறவிகள் அவருக்கு கவனம் செலுத்தவில்லை. மடாலயத்தின் எதிர்கலாம் குறித்து முடிவெடுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

சடலங்களை கட்டுவதற்கு கயிறு மற்றும் தாள்களை தயாராக வைத்திருக்கும்படி அவர் சொன்னார். இது ஒரு கெட்ட சகுனம் என்று அனைவரும் அவர் மீது கோபமடைந்தனர். மடாலயத்திற்கு ஒவ்வொருவரும் எப்படி உதவி செய்யலாம் என்று பின்னர் கலந்து ஆலோசித்தனர். அதற்கு அவர் நிலையின்மை குறித்து தியானிக்கலாம் என்றார். அப்படி சொல்லிவிட்டு, அவர் ஒரு மிகச்சிறந்த போதனையை வழங்கினார். பல பிந்தைய தலாய் லாமாக்கள் அவரை பாராட்டினர். எதிர்காலத்திற்கு தயாராகும் போது, ஒருவர் மரணத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். 

“ஒவ்வொருவரும் அழியாத்தன்மை மற்றும் அதனை அடைவதற்கான வழிகளை விரும்புகின்றனர். ஆனால் பிறந்து விட்டு இறக்கக் கூடாது என்பது சாத்தியமில்லை. ஷக்யமுனி புத்தர் உள்பட முழுவதும் ஞானமடைந்த ஆயிரக்கணக்கானவர்கள், கூட காலமாகி இருக்கிறார்கள். போதிசத்வாக்கள் மற்றும் கடந்த கால சிறந்த குருக்களைப் பொருத்த வரையில் அவர்களின் பெயர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. வரலாற்று உலகிலும் இதே தான் நிரூபனமாகிறது. அனைத்து சிறந்த வரலாற்று தோற்றங்களும் இறந்திருக்கின்றன அவர்களின் ஆளுமை மட்டுமே நிலைத்திருக்கிறது. ஆகவே இறப்பு என்னும் யதார்த்தத்தை நாம் கட்டாயம் மறந்து விடக்கூடாது. சிறந்த குருக்களின் நிகழ் காலம் கூட மறைந்து போய்விடும். இன்று பிறந்த குழந்தை கூட நூறு ஆண்டுகளில் இறக்கப்போகிறது. ஆகவே நீங்கள் எப்படி இளைஞரே, நீங்கள் மட்டும் எப்போதும் உயிர்வாழப்போகிறீர்களா? எனவே ஆன்மிக மரணத்திற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்வது உங்களுக்கான சிறந்த அறிவுரையாகும். 
“நீண்ட வாழ்நாள் என்பது பணம் கொடுத்தோ அல்லது உடல் சவுகரியத்தாலோ வாங்க முடியாதது. நீங்கள் ஆன்மிக நம்பிக்கையை கொண்டிருந்தால் வாழ்வில் உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்தால், பின்னர் உங்கள் உடல் முதுமையை அடைந்தாலும், அதிக மகிழ்ச்சி மற்றும் சிந்தனையில் இளமையையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள். நீங்கள் சிறந்த உடல் சவுகரியத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு வெற்று வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், பின்னர் முதுமையில், உங்களுக்கு மகிழ்ச்சியின்மை மட்டுமே மிஞ்சும். உங்கள் மனம் மரணத்தை நினைத்து கவலைப்படுவதில் இருந்து திசை திருப்புவதற்கு ஒரு பயணி போல நீங்கள் பிரயாணிக்க வேண்டும். மற்றொரு புறம், உங்களுக்கு சிறிதேனும் ஆன்மிக நம்பிக்கை இருந்தால், நீங்கள் மரணத்தை நெருங்கும் போது, மகன் வீட்டிற்கு திரும்பும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை போல உணர்வீர்கள். மரணத்தால் நீங்கள் திருப்பி அனுப்படவில்லை என்றாலும், ஆனால் தொடர்ச்சியான வாழ்வின் சந்தோஷங்களை எதிர்நோக்கி இருக்கிறீர்கள்.”

ஒரு முறை சிறந்த ஆன்மி குரு ஒருவர் சொன்னார், “எதிர்கால பிறப்புகள் குறித்து நான் முழுமையான நம்பிக்கையை கொண்டிருப்பதால்; எனக்கு கவலை இல்லை. மரணம் எந்த நேரத்திலும் வரலாம், மேலும் அதை நான் வரவேற்கிறேன்.”

“மரணத்தின் துயரம் தவிர்க்க முடியாதது என்பதால், அதற்காக நாம் கட்டாயம் ஏதேனும் செய்ய வேண்டும். நாம் வெறுமனே உட்கார்ந்து கொண்டு மனஅழுத்தத்தில் இருக்கக் கூடாது. மனிதர்களாகிய நமக்கு பல வழிகளை முயற்சிப்பதற்கான அறிவு இருக்கிறது. புத்தரால் கூட உங்களுக்கு இன்னும் தெளிவான போதனைகளைத் தர முடியாது, இளைஞரே. நான் என்னுடைய இதயத்தில் தோன்றியவற்றை பேசினேன். இது என்னுடைய இதயம் நிறைந்த உண்மையான அறிவுரை என்றாலும், என்னுடைய வார்த்தைகளின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் வாழத் தேவையில்லை. இவற்றை நீங்களே பகுப்பாய்வு செய்துபாருங்கள். நிலையின்மையை மையப்படுத்துபவற்றை நீங்களே சுயமாக பயிற்சியுங்கள். ‘மற்றவர்களின் கருத்துகளைக் கேளுங்கள், ஆனால் முடிவு நீங்கள் எடுப்பதாக இருக்க வேண்டும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. உங்களுக்காக மற்றவர்களை முடிவு எடுக்க விட்டால், பலரும் பலவிதமான அறிவுரையை வழங்குவார்கள்.”
அந்த இளைஞர் சொன்னார், “நீங்கள் சொல்வது அனைத்தும் மிகச் சரியானது மற்றும் பயனுள்ளது. ஆனால், அடுத்த சில ஆண்டுகள் என்னால் இவற்றை செய்ய முடியாது. எனக்கு வேறு சில வேலை இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய எஸ்டேட், சொத்து உள்ளிட்டவை இருக்கின்றன. நான் அதிக தொழில் செய்யப்போகிறேன் என்னுடை சொத்தை பலமடங்காக்கப் போகிறேன். சில ஆண்டுகள் கழித்து நான் கட்டாயம் உங்களை மீண்டும் பார்க்கிறேன், அதன் பின்னர் நான் பயிற்சிகளைச் செய்கிறேன்.”
அந்த முதியவர் மிகவும் மகிழ்ச்சியில்லாதவராகிச் சொன்னார், “நீங்கள் சொன்னவை அனைத்து வெற்று வார்த்தைகள் மற்றும் அர்த்தமில்லாதவையாக மாறிவிட்டன. எனக்கும் இதே போன்ற ஒரு சிந்தனை இருந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ அர்த்தமுள்ளதை செய்ய வேண்டும் எனும் விருப்பம்; ஆனால் நான் எதையும் செய்யவில்லை நான் இப்போது முதுமையடைந்துவிட்டேன். நீ சொன்னது எவ்வளவு வீண் என்பதை நான் அறிவேன். சில ஆண்டுகாலங்களில் செய்யலாம் என்னும் விஷயங்கள் எப்போதுமே முடிவுக்கு வராது. எப்போதுமே நீ அதனை தள்ளிப் போடுவாய். சில ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்னும் விஷயங்கள் முதியவரின் தாடியைப் போன்றது; நீ இன்று சவரம் செய்தால், நாளை மேலும் அதிகமாக வளரும். நாளை நாளை என்று ஒத்தைப் போட்டுக் கொண்டே போனால், உன்னுடைய வாழ்வு விரைவில் முடிவுக்கு வரப்போவதை நீ காணலாம். 
தர்ம பயிற்சியை தள்ளிப்போடுவது ஒவ்வொருவரையும் முட்டாளாக்குகிறது. நீ தர்மத்தை பயிற்சிப்பாய் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே நாம் இதைப் பற்றி பேசுவது முற்றிலும் வீணானது. நீ உன்னுடைய வீட்டிற்குப் போய் நீ விரும்புவதைச் செய், நான் சில மந்திரங்களைச் சொல்கிறேன்.”
அந்த இளைஞர் மிகவும் வியப்பாகி சற்றே காயப்பட்டதாக உணர்ந்தார். “உங்களால் எப்படி என்னைப் பார்த்து இப்படி ஒரு விஷயத்தை சொல்ல முடிகிறது? இந்த வாழ்வில் பொருள்வாதம் எப்படி விரைவாக அடையக்கூடியது என்று எனக்கு நீங்கள் சொல்லுங்கள்?” முதியவர் சிரித்தபடியே சொன்னார், நீ என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறாய், ஆகவே எதையாவது அடைவதற்கு எவ்வள காலம் ஆகும் என்று என்னால் அனுமானமாக பதிலளிக்க முடியும். தெற்கு திசையில் மரணக்கடவுள் வாழ்கிறார் நீ உன்னுடைய வேலைகளை முடித்துவிட்டாயா இல்லையா என்றெல்லாம் அவருக்கு கவலை இல்லை. அவருக்கு என்ன விருப்பமோ அதைச் செய்வார். ஒரு வேளை நீ அவருடைய நண்பனாக இருந்து , வாழ்வில் எதையேனும் அடையும் வரை காத்திருக்குமாறு அனுமதி கேட்டிருந்தால், பின்னர் நீ நிம்மதியாக இருக்கலாம். இல்லாவிட்டால் நீ எப்போதும் நிம்மதியாக இருக்க முடியாது. மேஜையில் உணவு இருக்கும் போது, ஒரு தேநீரை முழுமையாக குடித்து முடிக்காமல் பாதியிலேயே இறக்கின்றனர், நடந்து கொண்டிருக்கும் போது மூக்கில் வழியும் வியர்வையை துடைப்பதற்கு முன்னர் இறக்கிறார்கள். 
பெரிய குருமார்கள் உள்பட எல்லோருக்கும் இது நடக்கிறது. அவர்களின் பல போதனைகள் முடிவுபெறவில்லை, ஏனெனில் அவற்றை எழுதிமுடிப்பதற்கு முன்னர் அவர்கள் இறந்து போயிருக்கின்றனர். எனவே, மரண தேவன் வரும் போது, அவரிடம்,’எனக்கு பெரிய எஸ்டேட் இருக்கிறது நான் நிறைய வேலை செய்ய வேண்டும் என்று சொல்லமுடியாது.’ அவரிடம் நீ தற்பெருமையாக எதையும் சொல்ல முடியாது; எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். இந்த விதத்தில் நாம் முற்றிலும் சக்தி இல்லாதவர்கள். வாழ்நாளை நம்மால் விவரிக்க முடியாது. எனவே, உங்களால் எதையாவது செய்ய முடியும் என்றால், அதனை இன்றே செய்யத் தொடங்குங்கள். அதுவே அர்த்தமுள்ளதாக இருக்கும்; உங்களுடைய எஸ்டேட்கள் மட்டுமே அர்த்தமில்லாததாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் சிலர் மட்டுமே உங்களுக்கு பயன் தரக்கூடியது என்று சொல்கிறார்கள். அதிலும் அரிதானது என்னவென்றால் நீங்கள் கொடுக்கும் அறிவுரையை தீவிரமாகக் கேட்பவர்கள்.”  
இளைஞன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி, அந்த முதியவர் மீது மிகுந்த மரியாதையை வளர்த்துக்கொண்டு, சில அடிகள் பின்வாங்கி,அவரை விழுந்து வணங்குகிறான். "தங்கப் பதாகைகளால் கவரப்பட்ட வேறு எந்த லாமாக்களும், கெஷேக்கள் அல்லது யோகிகளும் நீங்கள் கூறியதைப் போல ஆழமான போதனைகளைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு சாதாரண முதியவரின் தோற்றத்தைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உண்மையில் ஒரு சிறந்த ஆன்மீக நண்பர். நீங்கள் கூறிய அனைத்தையும், என் திறமைக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துவேன் என்று நான் உறுதியளிக்கிறேன், எதிர்காலத்தில் எனக்கு மேலும் போதனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அந்த முதியவர் அதனை ஏற்று ஒப்புக்கொண்டார். “எனக்கு அவ்வளவு அதிகமாகத் தெரியாது, ஆனால் நான் சிறந்த தீர்வுக்கான அனுபவத்தை கொண்டிருக்கிறேன். அதில் இருந்து என்னால் உனக்கு போதனை வழங்க முடியும். மிக் கடினமான விஷயம் என்னவென்றால்  ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தர்மத்தில் உன்னை நிறுவுவதாகும். எனவே, இளமைக் காலத்திலேயே அதனை தொடங்குவது மிகவும் முக்கியமாகும்.” 
“இளைஞராக இருக்கும் போது, உங்களுடைய நினைவுத் திறன் புத்துணர்வாக இருக்கும்; இளமையில் உங்களுடைய நுண்ணறிவு அசாத்தியமாக இருக்கும் சாஷ்டாங்கமாக நேர்மறை சக்தியை கட்டமைக்கும் உடல் வலிமையைக் கொண்டிருப்பீர்கள். தந்திரத்தை பொறுத்தவரையில், உங்களுடைய ஆற்றலின் உறுதி மற்றும் வீரியம் மிக நன்றாக இருக்கும்.
இளமைக் காலத்தில், பொருட்களைக் கொண்டிருப்பதற்கான பேராசை மற்றும் பற்றுதல் எனும் தடைகளை உங்களால் உடைத்து ஆன்மிகச் செயல்களில் ஈடுபட முடியும், அது மிகவும் மதிப்புமிக்கவை. ஒரு முறை நீங்கள் தர்மத்தை ஏற்றுக்கொண்டால், தேவையானவற்றை புரிந்து கொண்டால், அதன் ஆன்மாவைப் பெறுவீர்கள், அதன் பின்னர் நீங்கள் சொல்வது, செய்வது மற்றும் சிந்திப்பது அனைத்தும் தர்மமாக இருக்கும்.

மிலரெபா மற்றும் ரா லோட்சவா இதையே தான் சொன்னார்கள், “நான் சாப்பிட்டாலோ, நடந்தாலோ, உட்கார்ந்தாலோ அல்லது உறங்கினாலோ -அது தர்மப்பயிற்சி” என்றார்கள். 

“தர்மத்தில் கடுமையான விதிகள் இல்லை. எனவே, அதிக எண்ணங்கள் அல்லது நிலையற்ற மனதைக் கொண்டிருக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இப்போதே தொடங்குங்கள், தர்மத்தில் உங்கள் ஆர்வத்தைத் தொடருங்கள். ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மனதை மாற்றாதீர்கள். இந்த தருணத்திலிருந்து, உங்கள் வாழ்க்கையை - உடல், பேச்சு மற்றும் மனம் – அனைத்தையும் தர்ம அனுஷ்டானத்திற்காக அர்ப்பணிக்கவும். இப்போது அந்த முதியவர் இளைஞரிடம் தர்மம் என்றால் என்ன என்று கூறுகிறார், “முதலில், ஒரு தகுதியான ஆன்மீக வழிகாட்டியைக் கண்டுபிடித்து, உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களால் அவரிடம் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும். சரியான ஆன்மீக வழிகாட்டியைக் கண்டறிவது மற்றும் அவருடன் நீங்கள் முழு மனதுடன் உறுதியான உறவைப் பேணுவதைப் பொறுத்து நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்யலாம் என்பதை அறியலாம்.

இந்த விஷயத்தை அதிஷா வலியுறுத்தினார். அவர் தனது 155 குருக்களுக்கும் சமமான முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அடிக்கடி கூறினார்.

"பத்து ஆக்கபூர்வமான செயல்களைப் பயிற்சி செய்வதற்கான உங்கள் வார்த்தைகளின் நேர்மை மற்றும் சபதங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் கண்களைப் போலவே அவற்றைப் பாதுகாக்கவும். காட்டு யானை சங்கிலியை உடைப்பது போல, இந்த வாழ்க்கையின் மீதான உங்கள் பற்றுதலை அறுத்து விடுங்கள். பிறகு கேட்டல், சிந்தித்தல், தியானம் ஆகியவற்றைக் குவித்து, மூன்றையும் ஒன்றாகச் செய்யுங்கள். ஏழு உறுப்பு பயிற்சி மூலம் இதையெல்லாம் ஆதரிக்கவும். இது நேர்மறை சக்தியை உருவாக்குவதற்கும், தகுதியைக் குவிப்பதற்குமான வழியாகும். இதைச் செய்தபின், புத்தம் உங்கள் விரல் நுனியில் இருக்கும்.”

ஒரு தகுதிவாய்ந்த வழிகாட்டி ஒரு தகுதியான சீடரை  வழிகாட்டினால், புத்தத்தை ஒருவரின் கைகளிலேயே வடிவமைக்க முடியும் என்று ஐந்தாவது தலாய் லாமா கூறிஇருக்கிறார். உங்களிடம் ஒரு தகுதிவாய்ந்த வழிகாட்டி மற்றும் அவரது தகுதியான போதனைகளைப் பயிற்சி செய்யும் தகுதியான சீடர் இருந்தால், புத்தர் உங்களுக்கு வெளியே இல்லை; அது உள்ளே உள்ளது என்று மிலேரபாவும் கூறி இருக்கிறார். எவ்வாறாயினும், குரு சரியான தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் எப்போதும் வலியுறுத்த வேண்டும்.

”இதுவே மகிழ்ச்சி;இதுவே இன்பம். மகனே, இந்த விதத்தில் நீ பயிற்சி செய்தால் உன்னுடைய விருப்பங்கள் நிறைவேறும்.”

இந்த போதனைகள் மனதை அடக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை கடினமான மனதை மென்மையாக்குகின்றன. ஒரு பழமொழி கூறுகிறது, “வெண்ணெய் உள்ள தோல் பையைப் போல இருக்காதே. நீரோடையில் இருக்கும் கூழாங்கல் போல் ஆகாதே”எவ்வளவு வெண்ணெய் உள்ளே இருந்தாலும் தோல் பை மென்மையாக மாறாது. ஒரு கல் ஓடையில் எவ்வளவு நேரம் கிடந்தாலும் அது மென்மையாக மாறாது.

அன்று முதல், அந்த இளைஞன் குழந்தைத்தனமான உணர்வுகள் கலக்காத தூய தர்மத்தை கடைப்பிடித்தான்.

நாமும் அதையே செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் எவ்வளவு அதிகமான போதனைகளைக் கேட்டிருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் பயிற்சி செய்து, அதன் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும், ஒருபோதும் மென்மையாக மாறாத ஓடையில் உள்ள கூழாங்கற்களைப் போல இருக்கக்கூடாது.

“இந்த போதனைகளை எனது ஆன்மீக வழிகாட்டிகளிடம் இருந்து நான் கேட்டேன், அவை எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் உள்ளன. எல்லையற்ற உணர்வுள்ள உயிரினங்களின் மகிழ்ச்சிக்காக இது பயனளிக்கட்டும்” என்று முதியவர் கூறினார். 

ஆசிரியரின் முடிவுரை:

நான் சிறிதளவு பயிற்சி செய்திருந்தாலும், தர்ம அனுபவம் இல்லாதிருந்தாலும், இன்னும் பலவிதமான உணர்வுள்ள உயிரினங்களின் இயல்புகள் இருப்பதால், இந்த போதனைகள் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். வரையறுக்கப்பட்ட உயிரினங்களின் மனங்களுக்கு நன்மை பயக்கும் நம்பிக்கையுடன், நான் இதை நேர்மையுடனும் தூய உந்துதலுடனும் எழுதியுள்ளேன். நிலையற்ற தன்மை பற்றிய இந்த போதனைகள் நான் சொல்ல நினைத்த ஒரு சுவாரஸ்யமான கதை மட்டுமல்ல, ஆர்யதேவாவின் நானூறு சரணங்களை அடிப்படையாகக் கொண்டவை.
Top