10 அடிப்படை பௌத்த நம்பிக்கைகள்

10%20basic%20buddhist%20beliefs
  1. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், ஆனால் சிலருக்கு மட்டுமே அதன் அர்த்தம் என்ன அல்லது அதனை எப்படி அடைய வேண்டும் என்று தெரிகிறது.
  2. நமது உணர்வுகளும், அணுகுமுறையும் எப்படி பாதிக்கிறது என்பதை உணர்கிறோம். பயிற்சியின் மூலம் நாம் நம்மிடமுள்ள எதிர்மறைகளை களைந்து ஆரோக்கியமான நேர்மறையானவற்றை வளர்த்தெடுக்கலாம். இதனைச் செய்வதன் மூலம் நம் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும் மிகவும் முழுமையானதாகவும் உருவாகும்.
  3. கலக்கப்படுத்தும் உணர்வுகளான கோபம், பயம், பேராசை மற்றும் பிணைப்பு உள்ளிட்டவை மன அமைதி மற்றும் சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும். பயிற்சியின் மூலம், இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
  4. கோபம் அல்லது பேராசையுடன் வலுக்கட்டாயமாக செயல்படுவது நமக்கு பிரச்னைகளை உருவாக்கி, மகிழ்ச்சியின்மைக்கு வித்திடும். பயிற்சியின் மூலம், நாம் அமைதிப்படுத்தலை கற்றுக்கொண்டு தெளிவாக சிந்தித்து, புத்திசாலித்தனமாக செயல்படலாம்.
  5. நேர்மறை உணர்வுகளான அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் புரிதல் நம்மை அமைதியாக வைத்திருக்கும், தெளிவான மற்றும் வெளிப்படையாக இருத்தல் அதீத மகிழ்ச்சியைத் தரும். பயிற்சியின் மூலம், நாம் அதனை வளர்த்துக் கொள்வதைக் கற்க முடியும்.
  6. தன்நலம் கருதுதல், சுயநல நடத்தை மற்றும் சிந்தனை பிறரிடம் இருந்து நம்மை விலக்கி வைக்கும், இதனால் மகிழ்ச்சியின்மையே ஏற்படும். பயிற்சியின் மூலம் நாம் இதனை வெல்ல முடியும்.
  7. நாமெல்லாம் ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருப்பதாக நினைத்தல், நம்முடைய வாழ்க்கையானது ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறது, திறந்த மனதுடன் இருந்தால் பிறருக்காக அக்கறைப்படும் மனப்பாங்கு வளரும், அதுவே நமக்கு அதீத மகிழ்ச்சியைத் தரும்
  8. பெரும்பாலும் நாமும் மற்றவர்களும் உணர்வது என்ன, குழப்பத்தின் அடிப்படையிலான கற்பனை. நம்முடைய கற்பனை யதார்த்தத்தோடு ஒத்து போவதாக நம்பி நமக்கே நாமும், மற்றவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்குகிறோம்.
  9. சரியான புரிதலோடு, நமக்குள் இருக்கும் குழப்பத்தை தவிர்த்தால் யதார்த்தத்தைப் பார்க்க முடியும். வாழ்வில் என்ன நடந்தாலும் அமைதியோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுக அது நம்மை செயல்படுத்தும்.
  10. நமக்குள்ளேயே செயலாற்றி, சிறந்த மனிதனாவது என்பது வாழ்க்கை முழுதும் நீடித்திருக்கும் சவால், ஆனால் இதுவே நம் வாழ்வில்  செய்யக்கூடிய அர்த்தமான செயல்.
Top