தொந்தரவான உணர்வு என்றால் என்ன?

10:45
நம்முடைய மனமானது கோபம், இணைப்பு, சுயநலம் அல்லது பேராசையால் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டால், நம்முடைய ஆற்றலும் குழப்பமடையும். நாம் அசவுகரியமாக இருப்போம்; நம்முடைய மனம், சிந்தனை ஆகியவை அமைதியாக இருக்காது; நமது சிந்தனைகள் காட்டுத்தனமாக ஓடும். நாம் பின்னர் வருத்தப்படக் கூடிய செயல்களைச் செய்வோம், பேசுவோம். நம்முடைய மனம் மற்றும் ஆற்றல்களில் ஏற்படும் உடனடி தொந்தரவை நாம் கண்டறிந்தால், அது சில சிக்கலான உணர்வின் வேலை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். தோன்றிய உடனே அந்த உணர்வை கைப்பற்றுவதற்கான ஒரு தந்திரமானது அதற்கு எதிரான சில மனநிலைகளான அன்பு மற்றும் இரக்கம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதாகும், சிக்கலை உருவாக்கும் அந்த தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து அதைச் செய்தால் நாம் உருவாக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

“தொந்தரவான உணர்வு” என்றால் என்ன?

மன அமைதியை இழக்கச் செய்து, சுய கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாக அமைவதே தொந்தரவான உணர்ச்சி மனநிலை என வரையறுக்கப்படுகிறது.

ஏனெனில் நாம் நம்முடைய மனஅமைதியை இழக்கிறோம், மனது குழப்பமடைகிறது; மன அமைதி கெடுக்கிறது. ஏனெனில் நாம் நம்முடைய மன அமைதியை இழக்கும் போது நாம் குழப்படைகிறோம், நாம் நம்முடைய சிந்தனைகள் அல்லது நம்முடைய உணர்வுகளில் நாம் உண்மையில் தெளிவாக இருப்பதில்லை. தெளிவின்மையால், நாம் வேறுபடுத்தும் உணர்வை இழக்கிறோம் சுய-கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்கு அது மிகவும் முக்கியமானதாகும். எது உதவிகரமானது எது உதவிகரமில்லாதது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எது பொருத்தமானது, எது பொருத்தமில்லாதது என்பதற்கு இடையிலான வேறுபாட்டை நாம் பாகுபடுத்த முடியும்.

தொந்தரவான உணர்ச்சிகளால் கூட ஆக்கப்பூர்வமான மனநிலைகளை ஒருங்கிணைக்க முடியும்

தொந்தரவான உணர்ச்சிகளுக்கான உதாரணங்கள், இணைப்பு அல்லது ஏங்கும் ஆசை, கோபம், பொறாமை, பெருமை, ஆணவம் உள்ளிட்டவையாகும். இது போன்ற சில குழப்பமான உணர்ச்சிகள் நம்மை அழிவுகரமாக செயல்பட முன்நிறுத்தலாம், ஆனால் எப்போதும் அது தேவைப்படாது. உதாரணமாக இணைப்பு மற்றும் ஏங்கிக் கிடக்கும் ஆசை நம்மை அழிவுகரமாக செயல்பட வழிநடத்தலாம் – உதாரணத்திற்கு வெளியே செல்லச் செய்தல் மற்றும் எதையாவது திருடச் செய்தல். ஆனாலும் நாம் விரும்புவதற்கான ஏங்கும் ஆசையை கொண்டிருக்கலாம் மேலும் நாம் அதனுடன் இணைந்திருக்கலாம், அதனால் நாம் அவர்களால் விரும்பப்படுவதற்கு மற்றவர்களுக்கு உதவி இருக்கலாம்.  பிறருக்கு உதவுவது அழிவல்ல; இது ஆக்கப்பூர்வமான ஒன்று, ஆனால் அதற்குப் பின்னால் ஒரு குழப்பமான உணர்ச்சி இருக்கிறது: "நான் நேசிக்கப்பட விரும்புகிறேன், அதனால் பதிலுக்கு என்னை நேசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்."

அல்லது கோபம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். கோபம் நம்மை அழிவுகரமாக செயல்பட வழிநடத்துகிறது, வெளியே சென்று யாரையாவது துன்பப்படுத்துவது அல்லது அவர்களைக் கொலை செய்வதும் கூட, ஏனெனில் நாம் மிகக் கோபமாக இருக்கிறோம். எனவே அது அழிவுகரமான நடத்தை. ஆனால், குறிப்பிட்ட முறை அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையின் அநீதியால் நாம் கோபமடைகிறோம் – நாம் அதன் மீது மிகவும் கோபமாக இருக்கிறோம் அதனை மாற்றுவதற்கு எதாவது செய்ய உண்மையில் நாம் முயற்சிக்கிறோம். ஆனால் விஷயம் என்னவென்றால் நாம் ஆக்கப்பூர்வமாக அல்லது நேர்மறையாக எதாவது செய்தாலும் இங்கே குழப்பமான உணர்ச்சியால் உந்தப்படுகிறோம். நமக்கு மன அமைதி இல்லை, ஏனெனில் நாம் அந்த நேர்மறை செயலைச் செய்யும் போது, நம்முடைய மனங்கள் மற்றும் உணர்வுகள் மிகத் தெளிவாக இல்லை மற்றும் நம்முடைய உணர்ச்சியின் நிலையும் மிக நிலையானதாக இல்லை.  

இந்த விஷயங்களில், ஏங்கும் ஆசை அல்லது கோபத்துடன், நாம் மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லது முடிவில் அநீதியை நாம் விரும்புகிறோம். அவை நிலையான அல்லது நிலையான உணர்ச்சிகளின் நிலையல்ல. ஏனெனில் அவை தெளிவான அல்லது தெளிவான உணர்வு நிலைகளல்ல, என்ன செய்ய வேண்டும் அல்லது நம்முடைய நோக்கத்தை உண்மையில் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெளிவாக சிந்திப்பதில்லை. இதன் முடிவில் நமக்கு சுய-கட்டுப்பாடு இருக்காது. உதாரணத்திற்கு, யாராவது எதையாவது செய்வதற்கு நம்மால் உதவ முடியும், ஆனால் அவர்களுக்கு உதவக்கூடிய சிறந்த வழியானது அவர்களையே செய்ய விடுவதாகும். இப்படி வைத்துக் கொள்வோம் உங்களுக்கு ஒரு வளர்ந்த மகள் இருக்கிறாள், அவள் சமைப்பதில், வீட்டை பராமரிப்பதில் அல்லது குழந்தையை பார்த்துக் கொள்வதில் நமக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறோம், பல விதங்களில் அது குறுக்கிடுவதாகும்.  எப்படி சமைக்க வேண்டும் அல்லது தன் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய மகள் உண்மையில் பாராட்டாமல் இருக்கலாம். ஆனால் நாம் நேசிக்கப்பட விரும்புகிறோம், பயனுள்ளதாக இருக்க விரும்புகிறோம், எனவே நாம் அவளிடம் நம்முடைய சிந்தனைகளை திணிக்கிறோம். நாம் ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்கிறோம், ஆனால் அதைச் செய்வதன் மூலம், "என்னுடைய கருத்தைச் சொல்லாமல், என் உதவியை வழங்காமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது" என்று நினைக்கும் சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம்.

மற்றவர்களுக்கு உதவக்கூடிய பொருத்தமான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு உதவினாலும் கூட, நாம் அது பற்றி நிம்மதியாக இருக்கமாட்டோம், ஏனெனில் நாம் பதிலுக்கு எதையாவது எதிர்பார்க்கிறோம். நம்மை விரும்ப வேண்டும், நம்முடைய தேவை இருக்க வேண்டும், நாம் பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.  இவ்வகையான ஏங்கும் ஆசை நம்முடைய மனங்களில் ஒரு நிபந்தனையாக இருக்கிறது, பின்னர் நம்முடைய மகள் நாம் விரும்பும் விதத்தில் பதிலளிக்கவில்லையென்றால், நாம் மிகவும் வருத்தம் அடைகிறோம். 

நாம் அநீதியை எதிர்த்துப் போராடும்போது, மன அமைதியை இழக்கச் செய்து, சுயக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் இந்த உணர்ச்சிகளைத் தொந்தரவு செய்யும் வழிமுறை என்பது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இது பற்றி மிகவும் எரிச்சலடைந்தால், நாம் மிகவும் வருத்தப்படுகிறோம். வருத்தம் என்ற அடிப்படையில் நாம் செயல்படப் போகிறோம் என்றால், பொதுவாக என்ன செய்வது என்று நாம் தெளிவாகச் சிந்திப்பதில்லை. பெரும்பாலும் நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சிறந்த நடவடிக்கையை நாம் பின்பற்றுவதில்லை.

சுருக்கமாகச் சொன்னால், நாம் அழிவுகரமான விதத்தில் செயல்படுகிறோமோ அல்லது ஆக்கப்பூர்வமான எதையாவது செய்கிறோமோ, நாம் செய்வது ஒரு குழப்பமான உணர்ச்சியால் தூண்டப்பட்டு, அதனுடன் சேர்ந்து இருந்தால், நமது நடத்தை சிக்கல்களை ஏற்படுத்தும். இருப்பினும் அது முதன்மையாக நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தப் போகிறதா அல்லது மற்றவர்களுக்கு சிக்கலைத் தரக்காரணமாக இருக்கப் போகிறதா என்பதை நம்மால் துல்லியமாக கணிக்க முடியாது. இந்தப் பிரச்சனைகள் உடனடியாக நடக்கும் விஷயங்கள் அல்ல; தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளின் செல்வாக்கின் கீழ் செயல்படுவது, தொந்தரவு செய்யப்பட்ட வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படும் பழக்கத்தை உருவாக்குகிறது என்ற பொருளில் அவை நீண்டகால பிரச்சனைகள். இந்த வழியில், தொந்தரவு செய்யும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட நமது நிர்பந்தமான நடத்தை, நடத்தைக்கான நீண்ட தூர சிக்கலான வழிகளை உருவாக்குகிறது. நமக்கு எப்போதுமே மன அமைதி இல்லை.

ஒரு தெளிவான உதாரணமானது உதவிகரமாக இருப்பதற்கான உந்துதலுடன் இருத்தல் மற்றும் மற்றவர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்தல், ஏனெனில் நாம் அன்பாக இருக்கவும் பாராட்டப்படவும் விரும்புகிறோம். அதற்கு அப்பாற்பட்டு நாம் அடிப்படையில் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறோம். நாம் அதிகமாக இவ்வகையான உந்துதலுடன் தொடர்ந்து செயல்படுகிறோம், அது எப்போதும் திருப்திபடுத்தாது, “சரி, நான் நேசிக்கப்படுகிறேன். அதுவே போதும், வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை” என்று நாம் எப்போதுமே உணர்வதில்லை. எனவே நமது நடத்தை, "நான் நேசிக்கப்படுவதை உணர வேண்டும், நான் முக்கியமானதாக உணர வேண்டும், நான் பாராட்டப்பட்டதாக உணர வேண்டும்" என்று கட்டாயமாக உணரும் பழக்கத்தை வலுப்படுத்துகிறது மற்றும் மேலும் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் நேசிக்கப்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் மேலும் மேலும் கொடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் விரக்தியடைகிறீர்கள். ஏனெனில் யாராவது உங்களுக்கு நன்றி கூறினாலும் கூட, “அவர்கள் மனதாரக் கூறவில்லை,” என்று நீங்கள் நினைப்பீர்கள், இவ்வகையான சிந்தனையால் நீங்கள் விரக்தியடைவீர்கள்.  இதனால் நமக்கு எப்போதும் மன அமைதி இருப்பதில்லை. அது மேலும் மேலும் மோசமடைகிறது, ஏனெனில் இந்தக் குறை திரும்த் திரும்ப எழுகிறது. அதுவே “சம்சாரியம்”, அதாவது – கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் சிக்கலான சூழ்நிலை என்று பொருள். 

குழப்பமான உணர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது அழிவுகரமாகவோ செயல்படக் காரணமாக இருந்தால் இவ்வகையான குறைப்பாட்டை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமல்ல. உதாரணமாக, நாம் எப்போதும் சத்தம் போடலாம், நாம் எரிச்சலடைவதால் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் அடைகிறோம், பின்னர் மற்றவர்களுடனான நம்முடைய உறவு முறையில் நாம் எப்போதுமே கடினமாகப் பேசுகிறோம் அல்லது கொடூரமானவற்றைச் சொல்கிறோம். யாரும் நம்மை விரும்புவதில்லை மற்றும் நம்முடன் இருப்பதற்கு உண்மையில் யாரும் அதிகம் விரும்புவதில்லை போன்றவை நிச்சயமாக நம்முடைய உறவுமுறைகளில் ஏராளமான பிரச்னைகளுக்குக் காரணமாகின்றன. அங்கே என்ன நடக்கிறது என்பதை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது. ஆனால், மனதைக் கவரும் உணர்ச்சிகள் நேர்மறையாகச் செயல்படும்போது அதை அடையாளம் கண்டுகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இரண்டு சூழ்நிலைகளிலும் நாம் அதை அங்கீகரிக்க வேண்டும்.

தொந்தரவான உணர்வு, அணுகுமுறை அல்லது மனநிலையின் செயல்பாட்டின் கீழ் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அங்கீகரிப்பது

பின்னர், எழும் கேள்வியானது நாம் குழப்பமான உணர்ச்சி அல்லது அணுகுமுறையின் செயல்பாட்டின் கீழ் நாம் செயல்படுகிறோம் என்பதை எப்படி அங்கீகரிப்பது? என்பதாகும். அது வெறும் உணர்ச்சியாக மட்டும் இருக்க வேண்டியதில்லை; அது வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையாகவோ அல்லது நம்மைப் பற்றிய அணுகுமுறையாகவோ இருக்கலாம். இதற்கு, நாம் உள்நோக்கத்துடன் இருக்க சற்று உணர்திறன் இருக்க வேண்டும் மற்றும் உள்ளே நாம் எப்படி உணர்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். இதைச் செய்ய, குழப்பமான உணர்ச்சி அல்லது குழப்பமான அணுகுமுறையின் வரையறை மிகவும் உதவியாக இருக்கும்: இது நம் மன அமைதியை இழக்கச் செய்கிறது மற்றும் சுய கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாகிறது.

நாம் எதைப் பற்றியாவது பேசப்போகிறோம் அல்லது ஏதேனும் செய்யப் போகிறோம் என்றால், உள்ளுக்குள் நாம் சற்றே பதற்றத்துடன் இருப்போம், நாம் முற்றிலும் பதற்றமின்றி இருக்க மாட்டோம், அங்கே ஏதோ குழப்பமான உணர்ச்சி இருக்கிறது என்பதற்கான அடையாளம் அதுவேயாகும்.

அது சுயநினைவின்றி இருக்கலாம் மற்றும் பெரும்பாலும் அது சுயநினைவில்லாததாக இருக்கலாம், ஆனால் அதன் பின்னால் சில குழப்பமான உணர்ச்சிகள் உள்ளன.

ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் நாம் யாரிடமாவது எதையாவது விவரிக்க முயற்சிக்கிறோம். உதாரணத்திற்கு அந்த நபருடன் பேசும் போது நம்முடைய வயிற்றில் சற்றேனும் அசவுகரியமாக இருப்பதை நாம் கவனித்தால், அதற்குப் பின்னர் ஒரு பெருமை இருக்கிறது என்பதற்கான ஒரு நல்ல குறியீடு அது. "நான் எவ்வளவு புத்திசாலி, நான் அதை புரிந்துகொள்கிறேன். அதைப் புரிந்துகொள்ள நான் உங்களுக்கு உதவப் போகிறேன்" என்று நாம் உணரலாம். மற்றவருக்கு ஏதாவது விளக்கி அவர்களுக்கு உதவ நாம் மனப்பூர்வமாக விரும்பலாம், ஆனால் நம் வயிற்றில் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தால், அதில் ஏதோ பெருமை இருக்கிறது. குறிப்பாக நமது சொந்த சாதனைகள் அல்லது நமது சொந்த நல்ல குணங்களைப் பற்றி பேசும்போது அது நிகழ்கிறது. சில சமயங்களில், நாம் அதை சிறிது அசவுகரியத்துடன் அனுபவிக்கிறோம். 

அல்லது குழப்பமான அணுகுமுறை என்கிற விதத்தில் கருதிப் பாருங்கள், இப்படி வைத்துக்கொள்வோம் “அனைவரும் என் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்ற அணுகுமுறையை நாம் பெரும்பாலும் கொண்டிருப்போம். புறக்கணிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை – புறக்கணித்தலை யாரும் விரும்புவதில்லை – எனவே நாம் “மற்றவர்கள் என் மீது கவனம் செலுத்த வேண்டும், நான் என்ன சொல்கிறேனோ  அதைக் கேட்க வேண்டும்” என்று நினைக்கிறோம்.  சரி, அது கூட உள்ளுக்குள் இருக்கும் சில நரம்பியல் தொடர்புடையதாக இருக்கலாம், குறிப்பாக மற்றவர்கள் நம் மீது கவனம் செலுத்தாவிட்டால். அவர்கள் ஏன் நம்மை கவனிக்க வேண்டும்? இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால், அதில் நல்ல காரணம் எதுவும் இல்லை என்பது விளங்கும். 

சமஸ்கிருத்தில் “க்ளேஷா” – திபெத்தியத்தில் “ந்யான்-மாங்” என்கிற வார்த்தை மிகவும் கடினமானது அதனை நான் இங்கே “குழப்பமான உணர்ச்சி” அல்லது “குழப்பமான அணுகுமுறை” என்று மொழிபெயர்க்கிறேன். இது கடினமானது, ஏனென்றால் அவற்றில் சில உண்மையில் ஒரு உணர்ச்சி அல்லது அணுகுமுறையின் வகைக்குள் சரியாகப் பொருந்தாதவை, எடுத்துக்காட்டாக அப்பாவித்தனம் என்பதைச் சொல்லலாம். நம் நடத்தை மற்றவர்களுக்கு அல்லது நம்மீது ஏற்படுத்தும் விளைவைப் பற்றி நாம் மிகவும் அப்பாவியாக இருக்கலாம். அல்லது யதார்த்தத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற ஒரு சூழ்நிலையைப் பற்றி அறியாத அப்பாவியாக நாம் இருக்கலாம். உதாரணமாக, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை அல்லது யாரோ ஒருவர் வருத்தப்பட்டால் நாமும் அப்பாவியாக வருந்துகிறோம். அத்தகைய சூழ்நிலைகளில், அவர்களிடம் எதையும் சொன்னால் என்ன விளைவு என்பதில் நாம் நிச்சயமாக அப்பாவியாக இருக்க முடியும்; நம்முடைய நல்ல நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் நம் மீது மிகவும் கோபப்படலாம்.  

நாம் இவ்வகையான குழப்பமான மனநிலையைக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் உள்ளார அசவுகரியமாக உணர்கிறோம் என்று அதனைச் சொல்லாம். ஆனால் நாம் பார்த்ததைப் போல, நாம் நம்முடைய மன அமைதியை இழந்தால், நம்முடைய மனங்கள் தெளிவின்றி இருக்கிறது. எனவே நாம் அப்பாவியாக இருந்தால், நம்முடைய மனங்கள் உண்மையில் தெளிவாக இருக்காது; நாம் நம்முடைய சொந்த சிறிய உலகில் இருக்கிறோம். நாம் சுய-கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்றால் நாம் நம்முடைய சொந்த சிறிய உலகில் இருக்கிறோம், எது பயனுள்ளது மற்றும் பொறுத்தமான சூழ்நிலை என்ன, இவை இரண்டும் இல்லாதது எது என்பதை நாம் பாகுபடுத்த மாட்டோம். அந்த பாகுபடுத்தல் இல்லாதததால், நாம் சரியாகவும் உணர்ச்சிவசப்பட்டும் செயல்படமாட்டோம். மற்றொரு விதமாகச் சொன்னால், ஒழுங்காகச் செயல்படவும், பொருத்தமற்ற ஒன்றைச் செய்வதைத் தடுக்கவும் நமக்கு சுய கட்டுப்பாடு இல்லை. அந்த வகையில், அப்பாவித்தனத்தை ஒரு உணர்ச்சியாகவோ அல்லது மனப்பான்மையாகவோ நினைப்பது கடினமாக இருந்தாலும், குழப்பமான மனநிலையின் இந்த வரையறைக்கு அப்பாவித்தனம் பொருந்துகிறது. நான் சொன்னது போல், "க்ளேஷா" என்பது ஒரு நல்ல மொழிபெயர்ப்பைக் கண்டறிவதற்கு மிகவும் கடினமான சொல்.

தொந்தரவில்லாத உணர்ச்சிகள்

சமஸ்கிருதத்திலும் திபெத்தியத்திலும் “உணர்ச்சிகள்” என்பதற்கு வார்த்தை இல்லை. இந்த மொழிகள் மனக்காரணிகளைப் பேசுகின்றன, அவையே ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய மனநிலையை உருவாக்கும் பலதரப்பட்ட காரணிகளாகும். இவை மனக்காரணிகளை குழப்பமான, குழப்பமில்லாத ஒன்று மற்றும் ஆக்கப்பூர்வமான, அழிவுகரமான ஒன்று எனப் பிரிக்கின்றன. அந்த இரண்டு ஜோடிகளும் ஒன்றையொன்று முழுமையாக இணைப்பதில்லை. கூடுதலாக, இந்த வகைகள் எதிலும் வராத மன காரணிகள் உள்ளன. எனவே, மேற்கத்திய நாடுகளில் நாங்கள் "உணர்ச்சிகள்" என்று அழைப்பதன் அடிப்படையில், சில தொந்தரவுகள் மற்றும் சில தொந்தரவுகள் இல்லை. பௌத்தத்தில் நாம் அனைத்து உணர்ச்சிகளிலிருந்தும் விடுபடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, எப்போதும் இல்லை. தொல்லை தருபவற்றை அகற்றவே விரும்புகிறோம். இது இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது: முதலாவது அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடாது, இரண்டாவது அவற்றில் இருந்து வெளியேறுவது இதனால் அவை மீண்டும் எழாது. 

குழப்பமில்லாத உணர்ச்சி என்றால் என்ன? “அன்பு” அல்லது  “இரக்கம்”அல்லது “பொறுமை” குழப்பமில்லாத உணர்ச்சி என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம்முடைய ஐரோப்பிய மொழிகளில் பகுப்பாய்ந்தால், ஒவ்வொரு உணர்ச்சிகளும் குழப்பமான மற்றும் குழப்பமில்லாத வகையை கொண்டிருப்பதை நாம் கண்டறியலாம். எனவே, நாம் சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்பு என்பது அந்த வகை உணர்வாக இருந்தால், “நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன், நீ எனக்குத் தேவை, என்னை விட்டு எப்போது போய்விடாதே!” இவ்வகையான நேசம் உண்மையில் சற்றே குழப்பமான மனநிலையாகும். இது குழப்பமானது ஏனெனில் அந்த நபர் பதிலுக்கு நம்மை விரும்பாவிடில் அல்லது நாம் அவருக்கு தேவையில்லையெனில், நாம் மிகவும் வருத்தமடைவோம். நாம் மிகவும் கோபமடைந்து சட்டென்று, “இனி நான் உன்னை நேசிக்க மாட்டேன்” என்று நமது உணர்ச்சி மாறுகிறது.  

எனவே, நாம் ஒரு மனநிலையை பகுப்பாய்வு செய்யும்போது, அதை நாம் உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாகக் கருதினாலும், அதை "அன்பு" என்று அழைக்கலாம், உண்மையில் இந்த மன நிலை பல மனக் காரணிகளின் கலவையாகும். ஒரு உணர்ச்சியை நாம் அப்படியே அனுபவிப்பதில்லை. நமது உணர்ச்சி நிலைகள் எப்போதும் கலவையாகவே இருக்கும்; அங்கே பல்வேறு கூறுகள் உள்ளன. "நான் உன்னை நேசிக்கிறேன், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று நாம் உணரும் அந்த வகையான அன்பு வெளிப்படையாக ஒரு வகையான சார்பு மற்றும் அது மிகவும் கவலை அளிக்கிறது. ஆனால் தொந்தரவு செய்யாத ஒரு வகை அன்பு உள்ளது, இது மற்றவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் என்ன செய்தாலும் மகிழ்ச்சிக்கான காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையாகும். அவர்களிடம் இருந்து நாம் பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கவில்லை.

உதாரணமாக, நம்முடைய குழந்தைகளிடம் நாம் அந்த வகையான தொந்தரவு செய்யாத அன்பை கொண்டிருக்கலாம். உண்மையில் அவர்களிடம் இருந்து நாம் பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக சில பெற்றோர் செய்கின்றனர். ஆனால் பொதுவாக, குழந்தை என்ன செய்தாலும், நாம் அவர்களை நேசிக்கிறோம். அந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க நாம் விரும்புகிறோம். ஆனாலும் பெரும்பாலும், மீண்டும், இது மற்றொரு குழப்பமான நிலையுடன் கலக்கப்படுகிறது, அதாவது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய நாமே விரும்புகிறோம்.  நம் குழந்தையை மகிழ்விக்கும் நோக்கத்துடன் நாம் ஏதாவது செய்கிறோம், குழந்தையை ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறோம், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை, மாறாக அவர்கள் கணினி விளையாட்டை விளையாடினால், நாம் மிகவும் மோசமாக உணர்கிறோம். நாம் மோசமாக உணர்கிறோம், ஏனென்றால் நமது குழந்தையின் மகிழ்ச்சிக்குக் காரணமாக நாம் இருக்க விரும்புகிறோம், கணினி விளையாட்டு அல்ல. ஆனால் நாம் இன்னும் நம் குழந்தை மீதான அந்த உணர்வை "அன்பு" என்று அழைக்கிறோம். "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உங்களை மகிழ்ச்சியாக்க முயற்சிக்கிறேன், ஆனாலும் உங்களுடைய வாழ்வில் அதனைச் செய்கின்ற மிக முக்கிய நபராக நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.”

எனவே, இந்த விரிவான விவாதத்தின் பொருள் என்னவென்றால், நாம் உண்மையில் நமது உணர்ச்சி நிலைகளை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும் மற்றும் வெவ்வேறு உணர்ச்சிகளை முத்திரை குத்துவதற்கு நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. நமது மன நிலைகளின் எந்தெந்த அம்சங்கள் நம்மைத் தொந்தரவு செய்து, நம் மன அமைதியை இழக்கச் செய்கின்றன, நமது தெளிவை இழக்கச் செய்கின்றன, சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்கின்றன என்பதைக் கண்டறிய நாம் உண்மையில் ஆராய வேண்டும். நாம் செயலாற்ற வேண்டிய விஷயங்கள் இவை.

குழப்பமான உணர்ச்சிகளின் அடிப்படைக் காரணமாக இருக்கும் அறியாமை

இந்த குழப்பமான மன நிலைகள் அல்லது உணர்ச்சிகள் அல்லது மனப்பான்மைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள விரும்பினால், அவற்றின் காரணத்தை நாம் அறிய வேண்டும். அவற்றுக்கான காரணத்தை நாம் அகற்றினால், அவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளலாம். இது நமது பிரச்சனைகளை உண்டாக்கும் குழப்பமான உணர்ச்சிகளை நம்மை நாமே அகற்றுவது மட்டுமல்ல; நாம் உண்மையில் குழப்பமான உணர்ச்சியின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

அப்படியானால், இந்த குழப்பமான மன நிலைகளுக்கு ஆழமான காரணம் என்ன? "அறியாமை" அல்லது "விழிப்புணர்வின்மை" என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டதை நாம் காண்கிறோம். நாம் எதையாவது அறியாமல் இருக்கிறோம், நமக்குத் தெரியாது. அறியாமை நாம் முட்டாள் என்ற அர்த்தத்தை கொடுத்தாலும். நாம் முட்டாள்கள் என்று அர்த்தமல்ல. எளிதாகச் சொன்னால் இது நமக்குத் தெரியாது, அல்லது நாம் குழப்பமடைந்திருக்கலாம்: நாம் எதையாவது தவறாகப் புரிந்துகொள்கிறோம்.

நாம் எதனால் குழப்பமடைகிறோம், அல்லது நாம் அறியாமல் இருப்பது என்ன? அடிப்படையில் இது நம்முடைய நடத்தை மற்றும் அதன் சூழ்நிலைகளின் தாக்கமாகும். நாம் மிகவும் கோபமாக அல்லது இணைப்பாக அல்லது ஏதோ விதத்தில் வருத்தமாக இருக்கிறோம், ஏற்கனவே இருக்கும் பழக்கங்கள் மற்றும் போக்குகளின் அடிப்படையில் அதுவே நம்மை வலுக்கட்டாயமாக நடந்து கொள்ளச் செய்கிறது. அதுதான் அடிப்படையில் கர்மா என்பது, ஒரு குழப்பமான உணர்ச்சி அல்லது குழப்பமான மனப்பான்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம், அதனால் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் இருத்தல். 

வலுக்கட்டாய நடத்தையின் கீழ் இருப்பது அறியாமை: நாம் செய்யும் அல்லது சொல்வதன் தாக்கம் என்ன என்று நாம் அறிவதில்லை. அல்லது நாம் குழப்பமாக இருக்கிறோம்: எதையாவது திருடுவது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது மகிழ்ச்சி அளிக்காது. அல்லது உங்களுக்கு நான் உதவுவது என்னை உங்களுக்குத் தேவையானவராகவும் நேசிக்கவைப்பராகவும் ஆக்கும் என்று நாம் நினைக்கிறோம்; அது அப்படி இல்லை. எனவே அதன் தாக்கம் என்ன என்று நாம் அறிவதில்லை. “நான் இதைச் சொன்னால் அது உங்களை காயப்படுத்தும் என்று எனக்குத் தெரியாது.” அல்லது அதைப் பற்றி நாம் குழப்பத்துடன் இருக்கிறோம். “அது உதவியாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் உதவவில்லை.” இது என்னை மகிழ்ச்சியாக்கும் என்று நினைத்தேன், அப்படி அமையவில்லை.” அல்லது அது உங்களை மகிழ்விக்கும் என்று எண்ணினேன், அதுவும் நடக்கவில்லை. அல்லது சூழ்நிலைகள் குறித்து, “நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.” அல்லது “நீங்கள் திருமணமானவர் என்று எனக்குத் தெரியாது.” அல்லது நீங்கள் குழம்பி விட்டோம் என்பதாக இருக்கலாம், ோம் என்பதாக இருக்கலாம், “உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று நான் நினைத்தேன்.” ஆனால் நீங்கள் அப்படி இல்லை. “நீங்கள் திருமணமாகாதவர், யாருடனும் இணைந்திருக்கவில்லை என்று நினைத்தேன், அதனால் நான் உங்களுடன் நெருக்கமான உறவை வளர்க்க முயன்றேன், என்பது முறையற்றது. எனவே மீண்டும், சூழ்நிலைகள் பற்றி நாம் அறியவில்லை: நமக்கு அவர்களைப் பற்றித் தெரியவில்லை அல்லது அவர்களைப் பற்றி நாம் குழப்பத்துடன் இருக்கிறோம்: நாம் அவர்களைத் தவறான விதத்தில் அறிந்து வைத்திருக்கிறோம். 

இப்போது, விழிப்புணர்வின்மையே நாம் கட்டாயமாகச் செயல்படுவதற்குக் காரணம் என்பது உண்மைதான். ஆனால் இது குழப்பமான உணர்ச்சிகளின் வேர் என்பதும், குழப்பமான உணர்ச்சிகள் கட்டாய நடத்தையுடன் மிகவும் தொடர்புடையது என்பதும் அவ்வளவு தெளிவாக இல்லை. எனவே, இந்த விஷயங்களை நாம் சற்று கவனமாக பார்க்க வேண்டும்.

Top