பயம்: குழப்பமான உணர்வுகளை கையாளுதல்

08:57
வாழ்க்கையில் நேர்மறையான எதையும் அடைவதற்கான வலுவான தடைகளில் ஒன்று பயம். ஒரு குழப்பமான மனநிலையாக, இது விழிப்புணர்வின்மை அடிப்படையிலானது, குறிப்பாக பாதுகாப்பாக உணர்வது என்றால் என்ன என்பதைப் பற்றியது. எவ்வாறாயினும், பலவித அவசர மற்றும் தற்காலிக முறைகள் மூலம், நம்மை முடக்கிப்போடும் பயத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும்.

பயத்தை கையாள்வதற்கான அவசர முறைகள்

திபெத்திய பௌத்தத்தில், பெண் புத்த உருவம் தாரா நம்மை பயத்தில் இருந்து பாதுகாக்கும் புத்தரின் அம்சத்தை குறிக்கிறது.  உண்மையில் தாரா என்பது உடல் மற்றும் சுவாசத்தின் காற்றாற்றலை குறிக்கிறது. தூய்மைப்படுத்தினால், அவள் செயல்படுவதற்கான திறனையும் நம்முடைய இலக்குகளை அடைவதையுமே பிரதிபலிக்கிறாள். பயத்தைக் கையாள்வதற்கான சுவாசம் மற்றும் நுட்பமான ஆற்றல்களுடன் பணிபுரியும் பல அவசர முறைகளை இந்தக் குறியீடு பரிந்துரைக்கிறது

தியானித்தல், போதனைகளைக் கேட்டல் அல்லது கற்றலுக்கு முன்னர் நாம் செய்யக்கூடிய முன் ஏற்பாடு பயிற்சிகளில் (முதல் நிலைகள்) இருந்தே அவசர முறைகள் பெறப்பட்டன.  நாம் மிகவும் பயப்படும்போது அல்லது பீதி அடையத் தொடங்கும் போது, இந்த நடைமுறைகள் தங்களுக்குள்ளேயே அவசர காலங்களில் நம்மை அமைதிப்படுத்த உதவுகின்றன. ஆழமான முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் எடுக்க வேண்டிய முதல் படிகளாகவும் அவை செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் நாம் பயன்படுத்தலாம் அல்லது பின்வரும் வரிசையில் ஐந்தையும் பயிற்சி செய்யலாம்:

  1. கண்களை மூடிக்கொண்டு சுவாசித்தலின் சுழற்சியை எண்ணுதல், அந்த சுழற்சிகளை உள் மற்றும் வெளி சுவாசித்தலாக எடுத்தல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்து வெளியிடும்போது, வயிற்றின் அடிப்பகுதி உள்ளே இழுக்கப்பட்டு பின்னர் சுவாசத்தை வெளியிடும் போது வயிற்றுப் பகுதி மேலே எழும்பும் அந்த உணர்வில் கவனம் செலுத்துதல். 
  2. கண்களை பாதி திறந்த நிலையில் சுவாசித்தலின் சுழற்சியை எண்ணுதல், தரையைப் பார்த்தபடி சற்றே தளர்வாக கவனம் செலுத்துதல், மூச்சை வெளியிட்டு, சற்றே இழுத்துப் பிடித்து, பின்னர் மூச்சை உள்ளே இழுக்கும் சுழற்சியாக எடுத்துக்கொள்ளுங்கள், மேலே சொன்ன அதே கவனத்துடன், அதன் பின்னர் நம்முடைய அடிப்பகுதி நாற்காலியை அல்லது தலையைத் தொடுகிறதா என்ற உணர்வின் அறிதலையும் சேர்த்தல். 
  3. நாம் எதை, ஏன் (அதிக அமைதி பெற) அடைய விரும்புகிறோம் என்பதன் உந்துதல் அல்லது இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்.
  4. கேமராவின் லென்ஸ் போல மனமும் ஆற்றலும் கவனத்திற்கு வருகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
  5. சுவாசித்தலை எண்ணாமல், மூச்சுவிடும் போது அடிவயிறு எழும்பி மீண்டும் இறங்குவதில் கவனம் செலுத்தி உடலின் அனைத்து ஆற்றல்களும் இணக்கமாக பரவிச்செல்வதாக உணர்தல்.
Top