வாழ்வை கையாள்வதற்கான பௌத்த வழிமுறைகள்

பௌத்த வழிமுறைகளை நம்முடைய அன்றாட வாழ்வில் எப்படி நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பற்றி நான் இந்த மாலைப் பொழுதில் பேசப் போகிறேன். பௌத்த முறைகள் அல்லது பௌத்த போதனைகளைப் பற்றி நாம் பேசும்போது, சமஸ்கிருதத்தில் அதற்கான வார்த்தை “தர்மம்.” “தர்மம்” என்கிற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்று நாம் பார்த்தால், அதன் பொருளானது “நம்மை நிறுத்தி வைக்கும் ஏதோ ஒன்று.” தர்மம் என்பது நம்மை தடுத்து நிறுத்தும் அல்லது துன்பம் மற்றும் பிரச்னைகளைக் கொண்டிருப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒன்று. 

நான்கு மேன்மையான உண்மைகள்

புத்தர் போதித்த முதல் விஷயமானது “நான்கு மேன்மையான உண்மைகள்.” இதன் பொருள் என்னவென்றால், நான்கு உண்மைகளை நன்கு உணர்ந்து, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் உண்மை என்று புரிந்துகொள்வார்கள். இவை நான்கும்:

  • நாம் அனைவரும் சந்திக்கும் உண்மையான பிரச்னைகள்.
  • அதன் உண்மையான காரணங்கள்.
  • அவற்றிற்கான உண்மையான நிறுத்தம் இருந்து அதனால் நமக்கு இது போன்ற பிரச்னைகள் இருக்காது என்றால் எப்படி இருக்கும்.
  • புரிந்து கொள்ளும் விதம், செயல்பாடுகள் போன்றவை நமது அனைத்து பிரச்னைகளையும் தடுக்கும்.

நமது உண்மையான பிரச்னைகள்

பிரச்னைகள் மற்றும் அவற்றை எப்படி தீர்ப்பது என்பது பற்றி பௌத்தம் ஏராளமானவற்றை கூறுகிறது. உண்மையில், புத்தரின் அனைத்து போதனைகளும் வாழ்வின் கஷ்டங்களை கடந்து வர நமக்கு உதவும் நோக்கத்தை கொண்டவை. அந்த அணுகுமுறையானது மிகவும் பகுத்தறிவதாகவும் உலகியல் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும். எனவே நாம் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்று நமக்கு நாமே மிக ஆழமாக நேர்மையாகப் பார்க்க வேண்டும். நம்மில் பலருக்கு இது மிக எளிமையான நடைமுறையல்ல. நம்முடைய வாழ்வின் கடினமான பக்கங்கள் என்ன என்று பார்ப்பது உண்மையில் சற்றே வேதனையானது. பலரும் இதனை மறுக்கிறார்கள். தங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புகொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. உதாரணமாக ஒரு ஆரோக்கியமற்ற உறவுமுறையில் அவர்கள் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதனை “நான் மகிழ்ச்சியாக இல்லை” என்கிற அளவில் விட்டுவிட முடியாது. உண்மையில் பிரச்னை என்ன என்று நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டும். 

நம்முடைய பிரச்னைகளுக்கான சரியான காரணங்கள்

நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்கள் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். பிரச்னைகள் எங்கிருந்தும் வராமல் தானாகவே உருவாகாது. நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும், ஒரு அதிருப்தியற்ற சூழலை அடைவதற்கு பல மட்டங்களிலான காரணிகள் உள்ளன. உதாரணமாக, உறவுமுறைகளுக்குள் ஆளுமைக்கான சண்டைகள் இருந்தால், பொருளாதாரம், போதுமான பணம் இல்லை, குழந்தைகள் அல்லது உறவினர்களுடன் பிரச்னைகள் போன்ற கூடுதலான கடினமான காரணிகள் இருக்கக்கூடும். பிரச்னைக்கு வழிவகுக்கும் அனைத்து சூழல்களும் அப்போது இருக்கக் கூடும். ஆனால் நாம் மிக மிக ஆழமாகச் சென்று நம்முடைய பிரச்னைக்கான ஆழமான காரணம் என்ன என்பதை காண வேண்டும் என்று  புத்தர் கூறி இருக்கிறார்; மேலும் நம்முடைய பிரச்னைகளுக்கு ஆழமான காரணம் யதார்த்தம் பற்றிய நம்முடைய குழப்பமே. 

நமக்கு மகிழ்ச்சியின்மை, வலி இருக்கிறது, நிச்சயமாக அவை சில காரணத்தில் இருந்து வருகிறது. உதாரணமாக, நாம் மிகவும் சிக்கலான வழியில் அதிக கோபத்துடன் செயல்படுகிறோம். கோபத்தில் யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள், மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? எனவே கோபமே நம்முடைய மகிழ்ச்சியின்மைக்கான காரணம் என்பதை நாம் உணர்ந்து எப்படியாவது அந்த கோபத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். 

நம்முடைய பிரச்னை நம்மை மகிழ்ச்சியற்றவர்களாக்குகிறது அதுவே எல்லா நேரங்களிலும் நாம் சோகமாக இருப்பதற்கான காரணமாகிறது. வருத்தப்படுவது மிக அமைதியில்லாத ஒரு மனநிலையாகும். வருத்தப்படும் போது யாருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை, அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?  சிறந்த இந்திய பௌத்த குரு சாந்திதேவா, நீங்கள் கஷ்டமான சூழலில் இருந்தால், எதையாவது செய்து அந்தச் சூழலை உங்களால் மாற்ற முடியும் என்றால், கவலை எதற்குசெய்து அந்தச் சூழலை உங்களால் மாற்ற முடியும் என்றால், கவலை எதற்கு? தயங்காமல் அந்த மாற்றத்தை செய்யுங்கள். வருத்தப்படுவது எந்த மாயாஜாலத்தையும் ஏற்படுத்தாது. உங்களால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாவிட்டால், பிறகு எதற்கு வருத்தப்பட வேண்டும்? அதுவும் கூட உங்களுக்கு எந்த வகையிலும் பலன் தரப்போவதில்லை. அதனால் கவலைப்படுவதில் பயனில்லை என்ற குழப்பம் நமக்கு உள்ளது, அதனால் தொடர்ந்து கவலைப்படுகிறோம். கவலைப்படுவதால் எந்தப் பயனுமே இல்லை என்பதுதான் கருத்து.

அதன் பின்னரும் கூட நமக்கு மற்றொரு அளவிலான பிரச்னை இருக்கிறது, அதாவது எப்போதுமே திருப்தியடையாத மனநிலை என்னும் பிரச்னை. மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை நாம் அனுபவிக்கிறோம், துரதிஷ்டவசமாக அவை நிச்சயமாக நீடித்திருக்காது, நமக்கு அதிகம் வேண்டும் என்றே எப்போதும் விரும்புவோம். அது எப்போதுமே திருப்தியடையாது. நமக்கு பிடித்தமான உணவை ஒரே ஒரு முறை மட்டுமே சாப்பிட்டு விட்டு திருப்தியடைய மாட்டோம், ஒரே முறையில் திருப்தியடைந்துவிடுவோமா? நாம் அதனை மீண்டும் மீண்டும் உண்போம். பிடித்தமான உணவு என்பதால் ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டால் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு பின்னர் போகப் போக வயிற்றுவலியில் வந்து நிற்கும். அதனால் இந்த வகையான மகிழ்ச்சி குறித்து நாம் சற்று குழம்பி இருக்கிறோம். அதை எதற்காக அனுபவித்து மகிழ்வதை விட, அது நீடிக்கப் போவதில்லை, அது ஒருபோதும் திருப்தியை தரப்போவதில்லை என்பதை உணர்ந்தும், நாம் அதைப் பற்றிக் கொண்டு இருக்கிறோம்; அந்த மகிழ்ச்சியை இழக்கும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக உணர்கிறோம்.

நம்முடைய நெருங்கிய நண்பர் அல்லது விருப்பமான ஒருவருடன் இருந்துவிட்டு, அதன் பின்னர் அவர்கள் நம்மை விட்டு விலகுவதைப் போன்ற உணர்வு அது. நிச்சயமாக ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மை விட்டு பிரியப் போகிறார்கள், எனவே அவர்கள் நம்முடன் இருக்கும் அந்த நேரத்தை மகிழ்ச்சியோடு செலவிட வேண்டும். சில சமயங்களில் நாம் பயன்படுத்தும் மிக அழகான பிம்பம் இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்தமான அற்புதமான ஒருவர் நம்முடைய வாழ்கைக்குள் வந்தால், அது கானகக் பறவை நம்முடைய ஜன்னலோரம் வருவதைப் போன்றதாகும். கானகப் பறவை நம்முடைய ஜன்னல் அருகில் வந்தால், நம்முடன் அது இருக்கும் நேரத்தை அந்த அழகான தருணத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கலாம், ஆனால் எப்படியும் நிச்சயமாக அந்தப் பறவை பறக்கப் போகிறது, ஏனெனில் அது சுதந்திரமாக இருக்கிறது. நாம் அந்தப் பறவையிடம் மென்மையாக நடந்துகொண்டால் ஒரு வேலை அந்தப் பறவை திரும்ப வரலாம். மாறாக நாம் அந்தப் பறவையை பிடித்து கூண்டிற்குள் போட்டு வைத்தால், அந்தப் பறவை மகிழ்ச்சியாக இருக்காது, ஒருவேளை இறந்தே கூட போகலாம். அது போலவே கானகப் பறவையைப் போன்று நம்முடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கும் இவர்கள் நம்முடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதே சிறந்த விஷயமாகும். எந்த காரணத்திற்காகவோ, எத்தனை மணி நேரமோ எதுவாக இருந்தாலும் அவர்கள் சென்று விட்டால், நடந்தது நல்லதிற்காகவே. நாம் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தால் “என்னை விட்டு எப்போதும் போகாதே. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று கோரிக்கை வைக்க மாட்டோம். இது போன்ற கோரிக்கைகளால் அவர்கள் ஒருவேளை திரும்பி வரலாம். அப்படி இல்லாவிட்டால் நம்முடைய பற்றுதல் மற்றும் கோரிக்கைகள் அவர்களை விரட்டிக்கொண்டே இருக்கும்.  

நம்முடைய இயற்கையான சராசரி மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் இன்பங்கள் குறித்து நாம் குழப்பத்தில் இருக்கிறோம், நிச்சயமாக நாம் பிரச்னைகளை கொண்டிருக்கிறோம். நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களைக் கூட நம்மால் முழுமனதோடு சந்தோஷமாக செலவிட முடியவில்லை, ஏனெனில் இந்த மகிழ்ச்சியை இழக்கப் போகிறோம் என்று நாம் பயப்படுகிறோம் வருந்துகிறோம். தட்டு நிறைய சாப்பட்டை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாயைப் போலத் தான் நாமும் இருக்கிறோம்- சாப்பாட்டை சாப்பிடும் போதே நாய் சுற்றும் முற்றும் பார்த்து யாராவது சாப்பாட்டை எடுக்க வருகிறார்களா என்று உறுமுகிக் கொண்டே சாப்பிடுகிறது. சில சமயங்களில் நாமும் கூட அப்படித்தான், இல்லையா, நமக்கு கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியடைந்து அது முடிவுக்கு வரும்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், முடிந்தது முடிந்தது தான். நிச்சயமாக சொல்வதைப் போல அது அவ்வளவு எளிதல்ல – கேட்பதற்கு எளிதாக இல்லாமல் இருந்தாலும் கூட – விஷயங்களை வேறு விதத்தில் நோக்குவதற்கு பயிற்சி தேவை.  

நம்முடைய பிரச்னைகளின் சரியான நிறுத்தம்

பிரச்னைகள் நமக்கு மீண்டும் வராத வகையில் அதனை நிறுத்துவது சாத்தியம் என்று புத்தர் கூறினார், அவ்வாறு செய்வதற்கான வழியானது காரணங்களில் இருந்து விடுபடுதல். அது மிகவும் பகுத்தறியும், மிகவும் தர்க்கரீதியிலான அணுகுமுறை. எரிவதை நீக்கிவிட்டால் நெருப்புக்கு இடம் இருக்காது. அது சாத்தியமே, இது போன்ற பிரச்னைகளில் இருந்து வெளியேற அவை எப்போதும் திரும்ப ஏற்படாமல் இருக்கச் செய்யும் வழி இருப்பதாக புத்தர் கூறி இருக்கிறார். 

இந்தப் பிரச்னைகளில் இருந்து தற்காலிக விடுதலை பெறுவது நமக்கு திருப்தியை தராது, இல்லையா? அது உறங்கச் செல்வதைப் போன்றதாகும் – நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கஷ்டமான உறவுமுறைக்கான பிரச்னை எதையும் நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள். எனவே அது தீர்வல்ல, ஏனெனில் நீங்கள் கண் விழித்ததும் அந்தப் பிரச்னை அப்படியே இருக்கும். விடுமுறையைக் கொண்டாட நீங்கள் எங்கோ செல்கிறீர்கள், ஆனால் நீங்கள் எப்படியும் வீட்டிற்கு வந்தாக வேண்டும், அப்படி வீட்டிற்கு வரும் போது நீங்கள் விட்டுச் சென்ற பிரச்னைகள் தொடரப் போகின்றன. எனவே ஒரு விடுமுறை என்பது நல்ல தீர்வல்ல, ஒரு ஆழமான – நீடிக்கும் தீர்வு. 

அதே போன்று பிரச்னைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனோடு வாழப் பழகு என்று புத்தர் கூறவில்லை, ஏனெனில் அதுவும் கூட் நல்ல தீர்வல்ல, அப்படித்தானே? ஏனெனில் பின்னர் பயனற்றதாக நாம் உணரலாம் – நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை, அதனால் கைவிட்டு அதன் பின்னர் முயற்சி கூட செய்வதில்லை.  

நம்முடைய பிரச்னைகளை நிறுத்துவதற்கான வழிகள்

இந்தப் பிரச்னைகளின் சரியான நிறுத்தத்தை அடைய நாம் உண்மையிலேயே விரும்பினால், சரியான முடிவை அவற்றிற்கு தர வேண்டுமானால், புத்தர் போதித்த நான்காவது தர்ம நிதர்சனம் இருக்கிறது, அது என்னவென்றால் நான் சில வகை வழியைப் பின்பற்ற வேண்டும் மற்றும் நம்முடைய குழப்பம் போன்ற ஆழமான காரணத்தில் இருந்து விடுபட சரியான சில வித புரிதலைப் பெற வேண்டும். சரியானப் புரிதலைப் பெறுவது மட்டும் போதுமானதல்ல நம்மால் அதை எல்லா நேரத்திலும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையெனில், நாம் ஒருநிலைப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்வதற்கான ஒருநிலை மற்றும் அந்தப் புரிதலுடன் கவனத்தில் நிலைத்திருப்பதற்கு நமக்கு சுய ஒழுக்கம் தேவை. எனவே நமது பிரச்சனைகளைத் தடுக்க நாம் பயன்படுத்தும் பொதுவான பௌத்த முறைகள், ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் சரியான புரிதல் (சில நேரங்களில் அது "அறிவொளி" என்று அழைக்கப்படுகிறது) ஆகியவற்றைப் பின்பற்றுவதாகும். 

இதனுடன் நம்முடைய பிரச்னைகளுக்கான மிகப்பெரிய காரணம் நம்முடைய சுயநலமாகும். நம்முடைய பெரும்பாலான சுயநலம் என்பது யதார்த்தம் பற்றிய குழப்பத்தின் அடிப்படையிலானது, ஏனெனில் சில நேரங்களில் இந்த உலகத்தில் நாம் மட்டுமே இருப்பதாக நாம் நினைக்கிறோம். மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், நாம் தான் இந்த பிரபஞ்சத்தில் மிக முக்கியமானவர்கள், நாம் தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்று கருதுகிறோம். அந்த தவறான கருத்தால், “எனக்கென எப்போதும் தனித்த வழி இருக்க வேண்டும், நான் என்ன விரும்புகிறேனோ அதை எப்போதும் பெற வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம், நமக்கென ஒரு தனித்துவம் இல்லாவிட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சியின்மையாக உணர்கிறோம். 

ஆனால் அது யதார்த்தத்தைப் பற்றிய மிகவும் குழப்பமான பார்வை, ஏனென்றால் அந்த அர்த்தத்தில் பார்க்க என்னைப் பற்றி சிறப்பு எதுவும் இல்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், யாரும் மகிழ்ச்சியின்றி இருக்க விரும்பவில்லை என்ற பொருளில் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்; எல்லோரும் தாங்கள் விரும்புவதைப் பெற விரும்புகிறார்கள், அவர்கள் விரும்புவதை பெறாமல் இருப்பதை யாரும் பெற விரும்பவில்லை. எப்படியாவது நாம் ஒன்றாக வாழ வேண்டும், ஏனென்றால் நாம் ஒன்றாக வாழ்கிறோம். எனவே பிரச்சனைகளை சமாளிப்பதற்கான அல்லது பிரச்சனைகளைத் தடுப்பதற்கான வழிகளில் அன்பும் இரக்கமும், பிறர் மீது அக்கறையையும், பொதுநலனையும் சேர்க்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு எப்படி உதவ வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதுபோல நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்களும் விரும்புகிறார்கள்.

தொந்தரவான உணர்வுகளுடன் கையாளுதல்

நிச்சயமாக எல்லோரும் ஞானியோ அல்லது போதிசத்வரோ இல்லை, அது மிகச் சரியானது. எல்லோருமே ஏதோ ஒரு அளவுக்கு குழப்பமடைந்திருக்கிறார்கள். குழப்பத்திலேயே இருப்பதனால், தொந்தரவான உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறோம். உதாரணமாக, நான் தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் நான் தான் எல்லோரையும் விட மிக முக்கியமானவன் என்று நினைத்தால், அதன் பின்னர் நம்மை ஆட்கொள்ளும் உணர்வுதான் பாதுகாப்பின்மை, சரியா? நீங்கள் குழப்பமாகவும், பாதுகாப்பற்றவராகவும் இருந்தால், பின்னர், “நான் தான் மிக முக்கியமானவன், ஆனால் மக்கள் என்னை அப்படி நடத்துவதில்லை” என்று நினைக்கிறீர்கள். எனவே அங்கு பாதுகாப்பின்மை இருக்கிறது. 

நாம் பாதுகாப்பற்றவராக இருக்கும போது நம்மை நாமே பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க என்னென்ன உத்திகளை பயன்படுத்தலாம்? அதில் ஒன்று: “என்னைச் சுற்றி போதுமான பொருட்களை வைத்துக் கொண்டு இருந்தால், ஏதோ ஒரு விதத்தில் அது எனக்கு பாதுகாப்பான உணர்வைத் தரப்போகிறது. நான் போதுமான பணம் அல்லது போதுமான கவனம் அல்லது போதுமான அன்பை பெற்றால், எப்படியும் அது என்னை மகிழ்ச்சியாக்கப் போகிறது.” ஆனால் அதன் பின்னர், நாம் பார்த்தது போல, இவ்வகைனாய மகிழ்ச்சி எப்போதுமே போதும் என்கிற உணர்வையோ, திருப்தியடைந்த உணர்வையோ தராது. எப்போதும் நாம் இன்னும் அதிகம் பெற விரும்புவோம்.  

இப்படி சிந்தித்துப் பாருங்கள். இது அர்த்தம் கொடுக்கும். நமக்கு மிகவும் பிடித்தவர்கள் ஒரே ஒரு முறை “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொன்னால் போதுமா? அது மட்டுமே நமக்கு போதாது. நாம் அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவோம் இல்லையா? எனக்குத் தெரியும். “உங்களுடைய அன்பை வார்த்தைகளால் கூறி வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்லும் நிலையை நாம் எப்போதுமே அடைய மாட்டோம்”. எனவே நாம் பேராசை பற்றி பேசினால், அது பொன் மற்றும் பொருள் மீதான ஆசை மட்டுமல்ல. நாம் அனைவரையும் அன்பிற்காகவும் பொறாமைப்படுகிறோம் அதிலும் குறிப்பாக நம்மில் பெரும்பாலானவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆசைப்படுகிறோம். இந்த உணர்வை நாம் குழந்தைகளிடம் காணலாம். எனவே அது ஒரு இயக்கமுறை: நம்மைச் சுற்றியும் போதுமான பொருட்களைப் பெற்றால், அது நம்மை பாதுகாப்பாக உணர வைக்கும். ஆனால் அது எப்போதும் செயல்படாது. 

அடுத்த இயக்கமுறையானது கோபம் மற்றும் பிணக்கம்: “என்னை அச்சுறுத்தும் சில குறிப்பிட்ட விஷயங்களை வெளியேற்றினால், அது என்னை பாதுகாப்பாக உணர வைக்கும். ஆனால் நாம் எப்போதுமே பாதுகாப்பாக உணரப் போவதில்லை; நாம் எப்போதுமே அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறோம்; நமக்குப் பிடிக்காத ஒன்றை யாராவது செய்தால், நாம் எப்போதும் கவனமாக இருப்போம் - பின்னர் நாம் கோபமடைந்து அவர்களை விரட்டியடிப்போம். சில சமயங்களில் அது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளலாம். ஒரு உறவுமுறையின் உதாரணத்தைப் பற்றி நான் யோசிக்கிறேன், அதில் மற்ற நபர், நமக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை, நமக்கு போதுமான நேரம் கொடுக்கவில்லை, என்பதால் நாம் அவர்களிடம் கத்துகிறோம். என் மீது நீ அதிக கவனம் செலுத்த வேண்டும்! என்னுடன் நீ அதிக நேரம் செலவிட வேண்டும்!” என்று கோபத்தில் அவர்களிடம் கத்துகிறோம். இதன் முடிவு என்ன? சாதாரணமாக அவர்கள் நம்மை விட்டு இன்னும் வெகு தூரம் சென்றுவிடுவார்கள். அல்லது அவர்கள் நமக்கு பெரிய செய்வதற்காக சிறிது காலம் நம்முடன் இருக்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்கு சவுகரியமாக இல்லை என்பதை உங்களுடன் இருக்கும் போது நீங்களே உணரலாம். ஒருவர் மீது கோபப்படுவது அவர்களுக்கு நம்மைப் பிடிக்க வைக்கும் என்று நாம் எப்படி நினைக்க முடியும்? உண்மையில் இது மிகவும் அபத்தம், இல்லையா? நம்மை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்ற நம்பிக்கையில் நாம் பயன்படுத்தும் இந்த வழிமுறைகளில் பல உண்மையில் விஷயங்களை மோசமாக்குகின்றன.

நாம் பயன்படுத்தும் மற்றொரு வழிமுறை சுவர்களை அமைப்பது. இது அப்பாவித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது, பிரச்சனையை எப்படியாவது சமாளிக்காமல், அந்தப் பிரச்னையே இல்லை அல்லது அது தானாகவே போய்விடும் என்று நினைப்பது. "நான் அதைக் கேட்க விரும்பவில்லை" - என்று இந்த வகையான அணுகுமுறையோடு, நீங்கள் ஒரு சுவரைப் போடுகிறீர்கள். ஆனால் அந்த அப்பாவித்தனமான நிலை நிச்சயமாக வேலை செய்யாது. நாம் அதைப் புறக்கணிப்பதாலும், ஒப்புக்கொள்ளாமலும் இருப்பதனால் மட்டும் பிரச்சனை போய்விடப் போவதில்லை.

எனவே, இது போன்ற குழப்பமான உணர்வுகளின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்றால் அழிவுகரமாக செயல்படும் அனைத்து விதங்களிலும் நாம் நடந்து கொள்கிறோம். நாம் கத்துகிறோம். சொல்லப்போனால் யாரையாவது அடிக்கக் கூடச் செய்கிறோம். “நான் பாவம் என்னிடம் எதுவும் இல்லை” என்று நீங்கள் வருத்தப்பட்டால், உங்களுக்கு களவாடும் எண்ணம் வரலாம், அதனையொட்டி எப்படியாவது உங்களது சிந்தனை உங்களுக்கு உதவக் கூடும். அல்லது இந்தியாவில் நான் பல ஆண்டுகள் இருந்ததையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு நான் சிந்திக்கிறேன். இந்தியா பூச்சியினங்கள் அதிகம் உள்ள நிலப்பரப்பு – நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத லட்சக்கணக்கான வகைகளில் பூச்சிகள் உள்ளன. அனைத்தையும் உங்களால் கொல்ல முடியாது; அப்படி செய்தாலும் உங்களால் வெற்றிபெற முடியாது ஏனெனில் அவை எண்ணிலடங்கா உயிர்கள். இதற்கு ஒரே ஒரு தீர்வு அவற்றுடன் வாழப் பழகிக் கொள்வதாகும். உங்களுடைய அறையில் பலவிதமான பூச்சிகள் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், நீங்கள் கொசுவலைக்குள் தூங்கலாம் -அப்போது உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலை இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள். கொசுக்களை கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து உங்களுடைய அறையில் அவற்றை வேட்டையாடத் தொடங்கினால் இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு அப்படியே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், கொசுக்கள் இனம் அழியாது, அதற்குப் பதிலாக கொசு வலைக்குள் உறங்குவது ஒரு நிம்மதியான தீர்வு. கதவின் கீழ் ஒரு இடுக்கு இருக்கும் அல்லது ஜன்னல் சரியாக சாத்தப்பட்டிருக்காது அதனால் நீங்கள் எவ்வளவு கொசு வேட்டையாடினாலும் அவை அதிகம் வந்து கொண்டு தான் இருக்கப் போகின்றன. ஆனால் அழிவுகரமான நடத்தைக்கான தூண்டுதல் கட்டாயமாக எழுகிறது: "நான் அவற்றை அகற்ற வேண்டும்!" என்கிற எண்ணம் உங்களிடம் மேலோங்குகிறது. 

பல வகையான அழிவுகரமான நடத்தை இருக்கின்றன. பொய் உரைத்தல், கடினமான வசவு வார்த்தைகளைப் பிரயோகித்தல், பலாத்காரம் உள்ளிட்ட பல அழிவுகரமான நடத்தைகள் இருக்கின்றன. மேலும் நாம் அழிவுகரமாக செயல்படுவதனால், அது நமக்கு மகிழ்ச்சியின்மையையே உருவாக்கப் போகிறது – மற்றவர்களுக்கு மட்டும் துன்பம் அல்ல, குறிப்பாக நமக்கும் கூட அது மகிழ்ச்சியின்மையையே கொடுக்கிறது. நீங்கள் அதைப் பற்றி சிந்தித்தால், கொல்லாமை பற்றி பௌத்தம் மிக உறுதியாக எடுத்துரைக்கிறது, இல்லையா? அங்கே விஷயம் என்னவென்றால் உதாரணத்திற்கு கொசுவைப் போல ஏதோ ஒரு உயிரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அவற்றைக் கொல்லும் பழக்கத்தை நீங்கள் பழக்கப்படுத்தினால் – தன்னையறியாமலே உங்களிடம் இருந்து வெளிப்படும் முதல் பதில் இதுவாகத் தான் இருக்கும், இல்லையா? இது வெறும் கொலை என்பதுமட்டுமா? நமக்கு ஏதோ ஒன்று பிடிக்கவில்லையெனில், அதனை மிக வன்முறையோடு வெளியேற்றுவோம் – அமைதியான மனநிலையோடு அவற்றை கையாளுவதை விட்டுவிட்டு கடினமான வார்த்தைகளால் திட்டுவதோ, அடிப்பதோ, அல்லது உணர்ச்சிவசப்படுவதோ என்று மோசமான விதத்தில் செயல்படுவோம்.

நிச்சயமாக சில நேரங்களில் நீங்கள் கொல்ல நேரிடும். உதாரணமாக, பயிர்களைத் தின்று பூச்சிகள் அழிக்கலாம்; பூச்சி தாக்குதலால் செடிகளுக்கு நோய் வரலாம், உள்ளிட்ட பிரச்னைகளினால் பூச்சிகளைக் கொல்லக் கூடும். தீவிர பற்றாளராக இருப்பதல்ல பௌத்தம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி அப்பாவியாக இருக்கக் கூடாது. “எனக்கு இந்த மலேரியா கொசுக்களை பிடிக்காது!” -என்று கோபம் மற்றும் வெறுப்பின்றி அதனைச் செய்ய முயற்சி செய்யுங்கள். அதனைப் பின்தொடரும் எதிர்மறை பின்விளைவுகள் பற்றி நீங்கள் அப்பாவியாக இருக்கக் கூடாது. ஒரு எளிய உதாரணம்: நம்முடைய பழங்கள் மற்றும் காய்கறிகள் முழுவதும் பூச்சிக்கொள்ளிகளை நாம் பயன்படுத்தினால் – நாமும் கூடத் தான் அந்த ரசாயனம் தெளிக்கப்பட்டவற்றை உண்ணப் போகிறோம், அது நமக்கு நோய்க்கு காரணமாகும். எனவே அதனால் எதிர்மறை பின்விளைவுகளும் இருக்கின்றன. இங்கே விஷயம் என்னவென்றால், மீண்டும் மையப் புள்ளிக்கே வருவோம், நம்முடைய வழிமுறைகள் ஒழுக்கம், ஒருநிலைப்படுத்துதல் மற்றும் சரியான புரிதல் ஆகியவை அன்பு மற்றும் இரக்கத்தால் நிரப்பப்படுகின்றன.

நன்னெறி சுய-ஒழக்கம்

வாழ்வில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எப்படி செயல்படுத்த முடியும்? முதலி நிலையில், நாம் செய்யக் கூடிய முதல் விஷயமானது, நன்னெறி சுய-ஒழுக்க்ததை செயல்படுத்துவதாகும், அதாவது ஆக்கப்பூர்வமற்ற விதத்தில் செயல்படுவதை தவிர்த்தல். ஆக்கப்பூர்மற்ற விதத்தில செயல்படுதல் என்பது கோபம், பேராசை, இணைப்பு, பொறாமை, அறியாமை, மூர்த்தக்கத்தனம் உள்ளிட்ட இந்த சிக்கலான உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுதலாகும். 

நீங்கள் செய்த ஏதோ ஒரு தவறுக்காக நான் உங்களை திட்ட வேண்டும் என்று நினைக்கிறேன், உங்களிடம் கோபப்பட்டு கத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எனக்குத் தெரியும். நான் உங்களுடைய தவறை திருத்தலாம் அல்லது செய்த தவறை எப்படி சரிசெய்வது என்று சிந்திக்கலாம், ஆனால் அதற்காக கோபப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்கும், இல்லையா? குறிப்பாக உங்களை மோசமான வார்த்தைகளால் அழைப்பது மற்றும் உங்களை சபிப்பது போன்றவை நிச்சயமாக அந்தச் சூழலுக்கு உதவப் போவதில்லை. எனவே நன்னெறி சுய-ஒழுக்கம் என்பது அழிவுகரமாக செயல்படுவதற்கு முன்னர் நாம் வலுக்கட்டாயத்தின் காரணமாக அழிவுகரமான பாதையில் செயல்படப்போகிறேன் என்பதை விரைவாக அடையாளம் காணுதலாகும். அப்படி செயல்படுவதற்கு ஒரு உந்துதல் இருக்கிறது அதனை நாம் பாகுபடுத்த வேண்டும். “இவ்வாறு செயல்படுவது எப்போதும் உதவப் போவதில்லை,” என்று நம்மை நாமே தடுத்துக் கொண்டு உந்துதலால் செயல்படுவதில் இருந்து பின்வாங்கலாம். 

நீங்கள் கோபத்தை உள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அது உங்களை விழுங்கிவிடும், பொறுமை இழந்து நீங்கள் எரிமலையாக வெடிக்கும் வரை அதை அடக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் இங்கு சொல்லவில்லை. அது முறையல்ல. நம்மால் அதைச் சமாளிக்க முடியவில்லை என்றால், அது உள்ளுக்குள்ளேயே பெரிதாக உருவமெடுக்கிறது - சரி, அதை நாம் மற்றவர் மீது வெளிக்காட்ட வேண்டாம். கோபத்தில் சுவற்றை குத்துவதனால் உங்களுடைய கைக்குத் தான் சேதாரம், எனவே அது முட்டாள்தனமானது. எனவே உங்களுடைய கோபத்தை நீங்கள் வேறு விதத்தில் வெளியேற்றலாம், இல்லையா? தலையணைக்கு ஒரு குத்து விடலாம் அல்லது உங்களுடைய வீட்டின் தரைகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்யலாம் – அது ஒரு வகையான “தாயின் ஞானம்” கோபம் மற்றும் வெறுப்பை கையாளும் ஒரு வகை மேலும் உண்மையில் கடுமையான வீட்டு வேலைகளை செய்வது அல்லது நீண்ட தூரம் ஓடுவது அல்லது ஜிம்மில் வலுவான உடற்பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை சிதறடிக்க உதவுகிறது. அந்த விரக்தியான கோப ஆக்கமான ஆற்றலாகிறது.

நினைவாற்றல் மற்றும் ஒருநிலைப்படுத்துதல்

இந்த விதமான நடத்தைக்கு நாம் மேலும் மேலும் பழகி, நாமும் அப்படிச் செயல்பட நினைக்கும் போது அழிவுகரமான செயல்களில் இருந்து நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டால், நாம் இங்கு பயன்படுத்துவதையே "பாகுபடுத்தும் விழிப்புணர்வு (shes-rab)" என்று அழைக்கிறோம். உதவிகரமானது எது மற்றும் தீங்கானது எது என்பதற்கு இடையேயான வித்தியாசத்தை நாம் பாதுபடுத்துகிறோம், அதன் அடிப்படையில் நாம் அமைதியாக இருக்க முடியும் கோபத்தை உள்ளேயே வைத்திருக்க மாட்டோம். எனவே நாம் இங்கு விளைவிக்கும் முக்கிய விஷயம், பொதுவாக "நினைவாற்றல் (dran-pa)" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் பொருள் "நினைவில்" வைத்துக்கொள்ளுதல். நான் என்ன செய்ய வேண்டும், வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், என் வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இறக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கும் மனப் பசை போன்றது. அதுதான் நினைவாற்றல். "நினைவில் இருந்து அகலாத" போன்ற அதே வார்த்தையாகும்.

எனவே நாம் செய்ய முயற்சிப்பது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். "புத்தர்" என்ற சொல்லுக்கு உண்மையில் "முழு விழிப்புள்ள ஒருவர்" என்று பொருள். நாம் உணரும் உணர்ச்சிகள் என்ன, இப்படிச் செயல்பட வேண்டும் அல்லது அப்படிச் செயல்பட வேண்டும் என்று நம் மனதில் நிர்ப்பந்தமாக வரும் தூண்டுதல்கள் என்ன என்பதில் விழிப்புடன் இருக்க முயற்சிப்போம், இந்த விஷயங்களுக்கு அடிமையாகாமல் இருக்க முயற்சிப்போம். ஆனால் புரிந்துகொள்வதன் மூலம், நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை உணருங்கள். நான் மோசமான மனநிலையில் இருந்தால், அது மாறலாம்; அதை மாற்ற என்னால் ஏதாவது செய்ய முடியும்.

சில நேரங்களில் மோசமான மனநிலையில் இருப்பதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. எளிமையான முறைகளில் ஒன்று "அமைதியின்றி இருக்கும் குழந்தையை படுக்க வைப்பது. "ம்ம்ம்ம்ம்ம்" - என எல்லா நேரத்திலும் அழுகின்ற, நீண்ட நேரம் விழித்திருக்கும் குழந்தை போல் சில நேரங்களில் உணர்கிறோம். பெரும்பாலும் நாம் மோசமான மனநிலையில் இருக்கும்போது, நாம் அப்படித்தான் இருக்கிறோம். எனவே படுத்து, ஒது குட்டித் தூக்கம் போடுங்கள். நாம் எழுந்திருக்கும் போது இளைப்பாறியதால் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் யாரிடமாவது கருத்து வேறுபாடு கொண்டிருந்தால், அது மிகவும் தீவிரமான நிலையை அடைந்தால் - இந்தச் சூழ்நிலையில் மற்றவர் உண்மையில் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை, நீங்கள் அவர்ளின் பேச்சைக் கேட்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியான நேரங்களில் உரையாடலை முடித்துக் கொள்வது நல்லது - "இருவரும் அமைதியான பிறகு இதைப் பற்றிய பேச்சுக்கு திரும்புவோம்" - அமைதியாவதற்கு ஒரு நடை பயிற்சி போன்ற எதையாவது செய்யுங்கள்.

இவை அனைத்தும் மிக எளிமையான முறைகள். பௌத்தம் உண்மையில் இவற்றையெல்லாம் விட மிக ஆழமான செயல்படும் முறைகளை போதிக்கிறது, ஆனால் இது வெறும் தொடக்கமே. நாம் செயல்படுத்தும் முறைகளை முதலில் தொடங்க வேண்டும் ஏனெனில் உண்மையில் அவற்றை தான் நம்மால் செயல்படுத்த முடியும். ஆனால் கொள்கை என்பது முக்கியமான விஷயம், அந்த கொள்கை என்னவென்று பார்த்தால் பிரச்னைக்கான காரணம் என்ன அதை வென்று வருவதற்கு எதையாவது செய்ய வேண்டும். பிரச்னைக்கான சாட்சியாக மட்டுமே இருக்காதீர்கள். அப்படியானால் உங்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்களுக்கான கட்டுப்பாட்டை கையில் எடுங்கள் என்று பொருள். 

இப்போது, நம் நடத்தையில் எது பயனுள்ளதாக இருக்கும், எது தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை நாம் வளர்த்துக் கொள்ள முடிந்தால், என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த முடிந்தால், நாம் எவ்வாறு செயல்பட விரும்புகிறோம் என்பதை நினைவில் வைத்து, அப்படி நடந்து கொள்ளாத பட்சத்தில் நம்மால் அதனை சரி செய்ய முடியும்- நம் உடலுடன் எப்படிச் செயல்படுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதைக் கொண்டு அதைச் செய்ய முடிந்தால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை நம் மனதினால் செய்யக்கூடிய வலிமையை வளர்த்துக் கொள்கிறோம்.

தொடர்வண்டி போல இந்த கவலையின் சிந்தனையை அல்லது சிந்தனையின் தொடர்பைப் பெறத் தொடங்கும் போது: “பாவம் நான். யாரும் என்னை நேசிப்பதில்லை” இது போன்ற விஷயங்களின் போது, "சுய பரிதாபம், கவலை மற்றும் பலவற்றுடன் இந்த பயணத்தில் நான் செல்ல விரும்பவில்லை. இது என்னை மகிழ்ச்சியடையச் செய்யப் போவதில்லை,” என்று நாம் சொல்லலாம். மேலும் நமது கவனத்தை இன்னும் நேர்மறையான விஷயத்திற்கு மீண்டும் கொண்டு வரலாம். சும்மா உட்கார்ந்து கவலைப்படுவதை விட, நம் உடலால், மனதினால் நாம் செய்யக்கூடிய பல நேர்மறையான விஷயங்கள் உள்ளன. நாம் கவலைப்படுவதைப் போல, எல்லாம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பதை விட, இன்னும் பல நேர்மறையான விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்கலாம். ஏனென்றால், நீங்கள் பார்க்கிறீர்கள், நாம் இங்கு உருவாக்க முயற்சிப்பது ஒருநிலைப்படுத்துதல், அதனால் அது அலைந்து திரிந்தால் நம்மால் மீண்டும் அந்த கவனத்தை கொண்டு வர முடியும்.

உதாரணத்திற்கு நாம் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறோம் நம்முடைய மனம் அலைபாய்ந்தால்-கவலைப்பட வேண்டாம், அது “அவர்கள் எப்போது பேச்சை நிறுத்தப்போகிறார்கள்?” அல்லது “இரவு உணவுக்கு நான் என்ன சாப்பிடப் போகிறேன்” என்பதைப் பற்றிய சிந்தனையாக இருக்கலாம் - எதிரில் இருப்பவர் சொல்லும் விஷயத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்துகிறோம், அல்லது அவர் சொன்னவற்றிற்கு நம்முடைய மனதிற்குள்ளேயே பதில் சொல்லிக் கொள்கிறோம்: “அவர் என்ன சொன்னாரோ அது சுத்த முட்டாள்தனமானது,” என்று நினைத்துவிட்டு மீண்டும் நம்முடைய கவனத்தை கொண்டு வந்து அவர்கள் சொல்வதை கேட்கத் தொடங்குகிறோம். 

ஒருநிலைப்படுத்துதலுக்கான மிக இயல்பான செயல்முறை இதுவாகும், ஆனால் இதற்கு ஒழுக்கம் தேவை; அந்த ஒழுக்கத்தை முதலில் நம்முடைய உடல்ரீதியாக மற்றும் சொல் வழக்காடல் மூலம் நாம் மேம்படுத்தலாம். இந்தத் திறனை நீங்கள் வளர்த்துக் கொண்டால், அதாவது உங்களுடைய கவனத்தை திரும்ப கொண்டுவருதல் மற்றும் ஏதேனும் சிதைவு நடந்தால் அதனை திருத்தும் திறனை மேம்படுத்தினால், பின்னர் அனைத்து வகையான சூழல்களுக்கும் நுங்கள் அதனை செயல்படுத்தலாம். உண்மையில் இது மிக மிக உதவிகரமாக இருக்கும். உதாரணத்திற்கு, உங்களுடைய உடலை நுங்கள் எப்படி பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்கிற நினைவாற்றலுடன் நீங்கள் இருக்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய தோள்கள் இறுக்கமாகவும் மேலே எழுந்த நிலையில் இருந்தாலோ, உங்களுடைய கழுத்து இறுக்கமாக இருந்தாலோ – நீங்கள் நினைவாற்றலுடன் இருந்து அதனை கவனித்தால், பின்னர் நீங்களாகவே உங்களுடைய தோள்களை இறக்கி அவற்றை நிதானப்படுத்துவீர்கள். கவனம் செலுத்தி, நினைவில் வைத்து அதற்காக எதையாவது செய்வது என்பதே இங்கு முக்கியமான விஷயம். அல்லது நீங்கள் மிக ஆர்வத்துடன் இருப்பவராக மாறுகிறீர்கள் என்றால்  அந்தச் சூழ்நிலைக்கு அது முற்றிலும் முரணானது, மேலும் நீங்கள் யாரோ ஒவருவரை நோக்கி மூர்க்கத்தனமான இன்னும் இன்னும் அதிகமாக கத்தத் தொடங்குகிறீர்கள், என்பதை அறிந்து நீங்கள் உங்களுடைய செயலை மாற்ற முடியும். தோள்களை இறக்கி நிதானப்படுத்தியதைப் போல, இப்போதும் அமைதியாக இருங்கள், ஆனால் அதனை சக்தி மற்றும் உணர்ச்சி மட்டத்தில் நீங்கள் செய்யலாம். 

இந்த தர்ம முறைகளை வாழ்வில் நீங்கள் எப்படி செயல்படுத்துகிறீர்கள் என்கிற மொத்த ரகசியம் இது. அவற்றை நினைவில் கொள்ளுங்கள், செயல்படுத்துவதற்கு போதுமான ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டு, அதனை நடைமுறைபடுத்துங்கள். நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைச் செய்யவில்லை அல்லது உங்களுடைய ஆசிரியரை இறைஞ்ச வேண்டும் என்பதற்காகவோ அல்ல. உங்களுடைய பிரச்னைகளை, கஷ்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்யுங்கள்- ஏனெனில் உங்களுக்குத் தெரியும் நீங்கள் அதற்காக எதுவும் செய்யவில்லை என்றால் உங்களை நீங்களே பரிதாபகரமானவர்களாக்குகிறீர்கள், அது நகைச்சுவையானது இல்லை, அப்படித்தானே? எனவே, ஒருநிலைப்படுத்துதல் அடிப்படையில் - நம் உணர்வுகளைக் கையாள்வதில் கூட, மன நிலைக்கு நமது சுய - ஒழுக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். உணர்வுகளைக் கையாள்வது நிச்சயமாக மிகவும் மென்மையானது, மிகவும் கடினம். ஆனால் நான் சொன்னது போல், உங்களால் மிகவும் உற்சாகமாக இருக்க முடிந்தால், உங்களால் அமைதியாகவும் இருக்க முடியும்.

சரியான புரிதல்

குறைந்தபட்சம் ஒரு மட்டத்திலாவது, ஒருநிலைப்படுத்துதலுக்கான கருவியை நீங்கள் உருவாக்கிவிட்டால், நீங்கள் உண்மையிலேயே கவனம் செலுத்த விரும்புவது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சரியான புரிதல். யதார்த்தத்தைப் பற்றி நமக்கு எல்லாவிதமான குழப்பங்களும் உள்ளன - நாம் எப்படி இருக்கிறோம், மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள், உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் குழம்புகிறோம் - மேலும் அந்தக் குழப்பத்தின் காரணமாக, உண்மையில் எது யதார்த்தமற்றது என்பதற்கான எல்லாவிதமான கணிப்புகளும் நம்மிடம் உள்ளன, இல்லையா? "நான் நன்றாக இல்லை. நான் ஒரு தோல்வியாளர்" என்று நாம் முன் நிறுத்தலாம். அல்லது “இந்த உலகிலேயே மிக அற்புதமான விஷயம் நான்” என்றும் கூட நம்மை முன்நிறுத்தமுடியும். “பாவம் நான். யாரும் என்னை நேசிக்கவில்லை” என்றும் என்னை முன்நிறுத்த முடியும். ஆனால் நம் வாழ்வில் உள்ள அனைவரையும் நாம் உண்மையில் பகுப்பாய்வு செய்தால், என் அம்மா என்னை ஒருபோதும் நேசித்ததில்லை, என் நாய் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை - யாருமே என்னை எப்போதும் நேசித்ததில்லை என்று ஆராய்நதால், இது அரிதாகத்தான் இருக்கப் போகிறது.

எனவே இந்த கற்பனைகளை நாங்கள் முன்வைக்கிறோம், மேலும் அவை உண்மை என்று நாம் நம்புகிறோம்; அது பயங்கரமான விஷயம். தாமதமாக வரலாம் அல்லது சந்திப்பிற்கு வரக்கூடாது என்று நாம் நம்புகிறோம், அது ஒரு பொருட்டல்ல: "உங்களுக்கு உணர்வுகள் இல்லை," அப்படித் தானே? பின்னர் நாம் மற்றவர்களைப் பற்றி மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால் எனக்கு உணர்வுகள் இருப்பது போல் எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. யாரும் புறக்கணிக்கப்படுவதை விரும்பவில்லை. அவர்களை சந்திப்பதற்கான நேரம் இருக்கும் போது, மற்றவர் அழைக்கவில்லை அல்லது தாமதமாக வருகிறார் என்றால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள். யாருக்கும் அது பிடிக்காது.

எனவே, நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த கற்பனைகளைத் துண்டித்து, இந்த முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதை நிறுத்துவதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், உதாரணமாக, நமது கவனக்குறைவான நடத்தை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காது, ஏனெனில் இது உண்மையில் நமது பிரச்சினைகளுக்கு ஆழமான காரணம்: “நான் தான் பிரபஞ்சத்தின் மையம். எப்போதும் எனக்கென ஒரு வழி இருக்க வேண்டும். நான் மிக முக்கியமானவன்." இது வெளிப்படையாகவே கற்பனையின் ஒரு முன்நிறுத்தல். யாரும் மிக முக்கியமானவர்கள் அல்ல. 

ஆனால் நம் கற்பனையை உண்மை என்று நம்புவதன் அடிப்படையில், நாம் சுயநலவாதிகள். எனவே நாம் சுயநலத்தை வெல்ல விரும்பினால், அந்த கற்பனையை சிதைத்து அதை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். பிரபஞ்சத்தின் மையம் நான் என்றும் நான் மட்டுமே இருப்பது போலவும் உணர்ந்தாலும் (ஏனென்றால் நான் கண்ணை மூடும் போது இந்த குரல் நம்முடைய மூளைக்குள் ஒலிக்கிறது, நான் வேறு யாரையும் பார்க்கவில்லை, எனவே அது போல் தெரிகிறது. நான் மட்டும்தான் இருந்தாலும்), இது ஒரு மாயை என்பதை நாம் நினைவில் வைத்து, அதை நம்பாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்: “அது அப்படி இல்லை. தோற்றத்தில் மட்டுமே அப்படி இருக்கிறது.

நமது பிரச்சனைகளுக்கு உண்மையான முற்றுப்புள்ளியை அடைவதற்கு, அந்த சரியான புரிதல் எப்பொழுதும் இருந்தால், நமக்கு எந்த குழப்பமும் இருக்காது. மேலும் நமக்கு எந்த குழப்பமும் இல்லை என்றால், நமக்கு கோபம் இருக்காது; நம்மிடம் பற்றுதல், பேராசை போன்றவை இருக்காது. மேலும் இந்த குழப்பமான உணர்ச்சிகள் எதுவும் நம்மிடம் இல்லை என்றால், நாம் அழிவுகரமாக செயல்பட மாட்டோம். நாம் அழிவுகரமான செயல்களைச் செய்யாவிட்டால், மற்றவர்களுக்கும் நமக்கும் எல்லா வகையான பிரச்சினைகளையும் கொண்டு வர மாட்டோம். வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதற்கான அடிப்படை பௌத்த முறை அது.

நாம் மகிழ்ச்சியான உறவுகளைப் பெற விரும்பினால், நாம் அடையாளம் காண வேண்டும்:

  • நான் ஒரு மனிதன். நீங்கள் ஒரு மனிதர். நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை உள்ளன.
  • அனைவருக்கும் வலுவான அம்சங்கள் உள்ளன. அனைவருக்கும் பலவீனமானவையும் உள்ளன. என்னிடம் அவை உள்ளன, உங்களுக்கும் இருக்கிறது.
  • யாருமே வெள்ளை குதிரையில் வரும் இளவரசரோ அல்லது வசீகரிக்கும் இளவரசியோ இல்லை.

நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படியான கதாபாத்திரங்கள் இருக்கிறதா? நாம் எப்போதும் வெள்ளைக்குதிரையில் வரும் ஒரு சிறந்த இணையருக்காக காத்திருக்கிறோம், ஆனால் அது வெறும் விசித்திர கற்பனைக் கதை. அப்படி ஒன்று இல்லை, ஆனாலும் நாம் அவற்றை முன்நிறுத்துகிறோம். அந்தக் கற்பனைக்கதையை நம்புவதால், ஒரு இளவரசரோ அல்லது இளவரசியோ வரப்போகிறார் என்று நாம் நினைக்கிறோம், அப்படியான மனிதர் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மீது கோபப்படுகிறோம், சில நேரங்களில் அவர்களை நிராகரிக்கக் கூடச் செய்கிறோம். 

பின்னர் நாம் சந்திக்கும் அடுத்த இணையரை இளவரசன் அல்லது இளவரசி என்று முன்னிலைப்படுத்துகிறோம். ஆனால் நாம் எப்போதுமே இளவரசர் அல்லது இளவரசியைக் காணவில்லை, ஏனென்றால் அப்படி யாரும் இல்லை. 

எனவே, நாம் ஆரோக்கியமான உறவுமுறைகளை விரும்பினால், யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யதார்த்தம் என்னவெனில், நான் சொன்னது போல, அனைவருக்கும் நல்ல குணங்களும் இருக்கிறது, அனைவருக்கும் பலவீனமான அம்சங்களும் இருக்கிறது, சேர்ந்து வாழும் போறு நாம் அவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும், மேலும் யாருமே பிரபஞ்சத்தின் மையமல்ல.  

பின்னர் நீங்கள் எந்த மதத்திலோ அல்லது எந்தவொரு மனிதநேயத் தத்துவத்திலோ காணும் பொதுவான போதனைகளான கருணையுடன் இருங்கள், பரிவுடன் இருங்கள், அன்பாக இருங்கள், பொறுமையாக இருங்கள், தாராளமாக இருங்கள், மன்னிப்பவர்களாக இருங்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எல்லா மதமும், எல்லா மனிதநேயத் தத்துவமும் அதையே போதிக்கிறது, பௌத்த மதமும் அதையே போதிக்கிறது.

அதே கொள்கைகள் பணியிடத்திலும் நம்முடைய உறவுகளிடத்தில் செயல்படுத்தலாம். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரியும் நபர்களிடம் நீங்கள் அன்பாக இருந்தால் (அல்லது நீங்கள் மற்றவர்களை வேலைக்கு அமர்த்தினால், உங்கள் ஊழியர்களிடம் கருணை காட்டுகிறீர்கள்), முழு வணிகமும் மிகவும் சீராக இயங்கும். நீங்கள் ஒரு கடையில் பணிபுரிகிறீர்கள் என்றால், வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும் இனிமையாகவும் இருந்தால், முழுச் சூழலும் மிகவும் இனிமையானதாக இருக்கும், இல்லையா? மேலும் ஒருவர் தனது பரிவர்த்தனைகளில் நேர்மையாக மற்றவர்களை ஏமாற்றாமல் இருந்தால், விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடக்கும். அதற்காக நாம் லாபம் சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என்று அர்த்தமல்ல, ஆனால் அதைப் பற்றி பேராசை கொள்ளக்கூடாது.

மேலும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் போது – ஏனெனில் அனைவரும் இந்த விதத்தில் நடந்து கொள்ளப்போவதில்லை, அப்போது நீங்கள் என்ன எதிர்பார்க்கமுடியும்? ஆனால் பௌத்த பார்வையில், இவர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று நாம் சொல்ல முடியாது; அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்கள் குழம்பி இருக்கிறார்கள். இந்த விதத்தில் நடந்து கொள்வது அவர்களை மேலும் மேலும் பிரச்னைகளுக்கு உட்படுத்தும் என்பது அவர்களுக்கு புரியவில்லை: அவர்களை யாரும் விரும்பப் போவதில்லை. எனவே வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்குப் பதிலாக இரக்கப்பட வேண்டியவர்கள் என்கிற நிலைக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அவர்களை இரக்கத்திற்காக ஏங்குபவர்களாக பார்த்து அவர்களிடம் நாம் பொறுமையை கையாண்டால், அவர்கள் நம்மை ஏமாற்றும் போது நாம் உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்பட மாட்டோம் அதன் பின்னர் மற்றவர்களிடம் நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்வதனால் நாம் மீண்டும் ஏமாற்றப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? பெரும்பாலானவர்கள் அப்படித்தான். எனவே அது தான் யதார்த்தம். அனைவருமே நேர்மையானவர்கள் என்கிற பிம்பம் இருக்கிறது. எல்லோருமே நேர்மையானவர்கள் இல்லை! எல்லோருமே நல்லவர்களாக இருந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. எனவே நாமாவது நேர்மையானவராக இருக்க முயற்சிப்போம். 

பெள்ளதர் அல்லாதவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற முடியுமா?

இந்த வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு துவிர பௌத்த ஆன்மிகப் பாதையான தியானம், சடங்குகளை நாம் பின்பற்ற வேண்டுமா? உண்மையில் அப்படி இல்லை. இவற்றையெல்லாம் செயல்படுத்தவதற்கு கடுமையான, நிலையான ஆன்மிகப்பாதையை பின்பற்ற வேண்டியதில்லை. புனிதர் தலாய் லாமா எப்போதுமே மதச்சார்பற்ற நெறிமுறைகள் மற்றும் மனிதப் பண்புகள் பற்றி பேசுவார் – கணிவாக இருங்கள், நினைவாற்றலுடன் இருங்கள், அப்பாவியாகவோ கற்பனையை முன்நிறுத்துபவராகவோ இருக்காதீர்கள் என்று அவர் கூறுவார். யார் வேண்டுமானாலும் பின்பற்றக்கூடிய பொதுவான வழிமுறைகள் இவை. 

பின்னர் நாம் தியானம் பற்றி பேசுவோம், நமக்கு நாமே பரிட்சயப்படுத்தும் ஒரு முறையைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் இதே சிந்தனையுடன் அப்படியே உட்கார்ந்து அதையே சிந்திக்க முயற்சிக்கிறோம், மேலும் நம் கவனம் சிதறும்போது அதை மீண்டும் கொண்டு வருகிறோம். தியானத்தில் அமர்ந்திருக்கும் போதோ புத்தரை நோக்கியோ அல்லது உங்களுடைய சுவாசத்தை நோக்கியோ கவனத்தை குவிக்கும் போதோ, அல்லது நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போதோ, சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, அல்லது எதுவும் செய்யாமல் இருக்கும்போதோ இதைச் செய்யலாம்.  

சமைக்கும் போது சமையலில் கவனம் செலுத்துங்கள், உங்களுடைய மனம் சில பைத்தியக்காரத்தனமான சிந்தனைக்கு சென்றால், கவனத்தை முண்டும் சமையல் பக்கம் திருப்புங்கள். அது ஒரு சாதாரண பௌத்த தியான பயிற்சியாக இருக்கக்கூடாது. எந்த விதமான பௌத்த சடங்குகள் அல்லது முறையான பௌத்த அமைப்பை உள்ளடக்கியிருக்காமல், இந்த மிகவும் பயனுள்ள சிந்தனை வழிகள், செயல்படும் முறைகள் மற்றும் பலவற்றைப் பற்றி நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள பல, பல வழிகள் உள்ளன. 

அப்படியானால், பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் தர்மத்தை - தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறோம். உங்களிடம் என்ன கேள்விகள் உள்ளன?

கேள்விகள்

உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விழிப்புடன் இருத்தல்

பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டுமானால், எல்லா நேரமும் ஒருநிலைப்பட்ட கவனத்துடன் இருக்க வேண்டுமா?

ஒரு அர்த்தத்தில், அதற்கு பதில் ஆம். ஆனால் அது முழு வடிவமல்ல. உதாரணத்திற்கு, கத்தும் போதோ மற்றவர்களை அடிக்கும் போதோ நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், ஆகவே அது முழு வடிவமல்ல. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தம் அதாவது நமது சிந்தனைகள், உணர்வுகள் உள்ளிட்ட உள்ளே நடக்கும் விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரம் நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களிடத்தில் என்ன நடக்கிறது என்பதைலும் நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். யாராவது நம்முடைய வீட்டிற்கு வந்தால் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவரோ அல்லது நமக்கு பிடித்தவோ யாராவது நம்முடைய வீட்டிற்கு வந்தால் – அவர்கள் மிக மிக சோர்வாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவரின் நிலையை பார்த்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு பெரிய விஷயத்தை பேசத் தொடங்கக் கூடாது – அவர்கள் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் எப்போதும் எச்சரிக்கையுடனும், ஒருநிலையுடனும், கவனத்துடன் இருக்க வேண்டும். என்னுடைய சூழலைப் போலவே மற்றவர்களின் சூழல் இல்லை. 

எனவே நாம் நம்மைப் பற்றி மட்டுமே விழிப்புடன் இருக்கும், மற்றவர்களைப் பற்றி அறியாமல் இருக்கும் நிலைக்கோ அல்லது நம்மைப் பற்றி கவனம் செலுத்தாமல் மற்றவர்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மற்ற உச்சகட்டத்திற்குச் செல்லக் கூடாது; அதுவும் கூட நாம் தவிர்க்க வேண்டிய ஒரு உச்ச நிலை. “இல்லை” என்று சொல்லும் பழக்கம் இல்லாத சிலர் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் எப்போதுமே மற்றவர்களுக்காக, அவர்களின் குடும்பத்திற்காக அல்லது யாருக்காவோ அதைச் செய்கிறார்கள் இதனால் அவர்கள் முற்றிலும் சோர்ந்து சக்தி இழந்து உடைந்து போகிறார்கள் அல்லது அவர்கள் வெறுப்படைந்து போகிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் நம்முடைய உணர்வு என்ன என்பதற்கும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நாம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தால், நாம் ஓய்வெடுக்கலாம். இல்லை, என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதைச் செய்ய முடியாது என்று நீங்கள் சொல்ல விரும்பினால், இது ரொம்ப அதிகம், என்னால் செய்ய முடியாது” என்று சொல்லலாம். “முடியாது” என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லாமல், நம்மால் முடிந்தால் அவர்களுக்கு நாம் சில மாற்று யோசனையைத் தரலாம். நீங்கள் சில ஆலோசனைகளை வழங்கலாம்: "எனக்கு பதிலாக இந்த நபர் உங்களுக்கு உதவக்கூடும்" என்று சொல்லி உதவலாம். 

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் அனைத்திலும் விழிப்புடன் இருங்கள், பிறகு சரியான புரிதலையும் அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துங்கள்.

கோபத்தை கையாளுதல்

கோபத்தை அல்லது இதர அழிவுகரமான உணர்ச்சிகளை கையாள்வதற்கு தரையை சுத்தம் செய்வதைப் பற்றி நீங்கள் பேசினீர்கள், ஆனால் பௌத்தம் இன்னும் ஆழமான பல வழிமுறைகளைக் கொண்டுள்ளதாகவும் கூறினீர்கள். இவற்றை எங்கே காண முடியும் என்று ஒரு சிறு குறிப்பாவது தர முடியுமா?

சரி, சற்று ஆழமாகச் சென்று பார்க்கலாம், நாம் கோபமாக இருக்கும் போது கோபத்தை கையாள்வதற்கான ஒரு முறையில் முதலாவது பொறுமையை வளர்த்துக் கொள்வது. நாம் எப்படி பொறுமையை வளர்க்க முடியும்? இதற்கு பல, பல வழிமுறைகள் உள்ளன, ஆனால் ஒரு முறையானது, உதாரணத்திற்கு “பொறுமையை போன்ற இலக்கு” என்று அழைக்கப்படுகிறது: “ எனக்கான ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், யாராலும் அதை அழிக்க முடியாது.” உதாரணத்திற்கு, எனக்காக எதையாவது செய்யுமாறு உங்களைப் பணிக்கிறேன், ஆனால் நீங்கள் அதனை தவறாகச் செய்கிறீர்கள். அல்லது நீங்கள் செய்யவே இல்லை. இதற்காக நான் உங்களிடம் கோபப்பட வேண்டும். இதில் தவறு யாருடையது?உண்மையில் அது என்னுடைய தவறு ஏனெனில் அதை நானே செய்வதற்கு சோம்பேறித்தனம் அடைந்து உங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறேன். ஆக நான் என்ன எதிர்பார்க்க முடியும்? யாரையாவது எதையாவது செய்து தருமாறு நீங்கள் கேட்டால், நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? இப்படி வைத்துக் கொள்வோம் ஒரு இரண்டு வயது குழந்தையை ஒரு கோப்பை சூடான தேநீரை கொண்டுவரச் சொல்கிறீர்கள், சூடு பொறுக்காமல் குழந்தை கோப்பையை தவற விடுகிறது. நிச்சயமாக அது தவறவிடத்தான் செய்யும். அதே தான் இங்கும் பொருந்தும் – யாரையாவது நமக்காக எதையாவது செய்யச் சொன்னால் பதிலுக்கு நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஆக உண்மையில் பிரச்னை உருவாவதற்கான காரணம் என்னுடைய சோம்பேறித்தனம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நுங்கள் மற்றவர்களிடம் கோபப்படக் கூடாது. நிச்சயமாக ஒரு விஷயத்தை எனக்காக உங்களிடம் செய்யச் சொல்லி கேட்கிறேன் என்றால், அதை நானே செய்வதற்கு சோம்பேறித்தனம் -மிகவும் சோம்பேறித்தனம் அல்லது எனக்கு நேரம் இல்லை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் விஷயம் என்னவென்றால் யாரையாவது செய்யச் சொல்லி நான் கேட்டால், அவர்கள் சிறப்பாக செய்வார்கள்  அல்லது நான் செய்வதைப் போலவே செய்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது – முடிவில் அது கூட சரியானதாக இருக்காது. நானும் கூட தவறுகள் செய்வேன். “நான் சிறந்தவன் இல்லை – யாருமே சிறந்தவர்கள் இல்லை – அதனால் நிச்சயமான நானும் தவறுகளைச் செய்வேன்”.  ஆகவே யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். “நான் மனிதன், மனிதர்கள் தவறு செய்கிறவர்கள்:நானும் தவறு செய்திருக்கிறேன்.” நான் அதனை திருத்த முடியும் என்றால், நான் திருத்திக் கொள்கிறேன். அதற்காக என் மீதே நான் கோபப்படுவதில்லை. என் மீதே நான் கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. என்னால் முடியும் என்றால், அதை சரி செய்கிறேன் – அதை அப்படியே விட்டுவிட்டு எதிர்காலத்தில் அதே தவறு நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். 

கோபத்தை கையாள்வதற்கான மிக ஆழமான நிலை என்பது நம்மைப் பற்றிய யதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல். நான் இப்போது மிக எளிமையான நிலையைப் பற்றி பேசுகிறேன், ஆனால் அந்த எளிமையான நிலை கூட உதவிகரமானது. “நான் பிரபஞ்சத்தின் மையமல்ல. ஏன் நான் எப்போதும் எனக்கென ஒரு வழியை கொண்டிருக்க வேண்டும்? ஏன்? எனக்காக ஒரு வழி இருக்கும் அளவிற்கு என்னிடம் சிறப்பாக என்ன இருக்கிறது யாருமே அவர்களுக்கென ஒரு தனி பாதையை கொண்டிருக்கவில்லையே? இது போன்ற சிந்தனைகளுடன் பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமானவன் “நான்” என்கிற திடமான பார்வையை மறுகட்டமைக்கலாம் நீங்கள். நீங்கள் திடமாக நம்பும் “நான்” என்கிற அகந்தை. நிச்சயமாக பின்னர் நீங்கள் மேலும் மேலும் மறுகட்டமைத்துக் கொண்டே போகலாம். "நான்" என்பது இங்கே திடமான விஷயம் மற்றும் நான் எப்போதும் என் வழியில் இருக்க வேண்டும் என்ற இந்த பார்வை உங்களுக்கு இருக்கும்போது, உங்கள் வழியைப் பெறாதபோது நிச்சயமாக நீங்கள் கோபப்படுவீர்கள், இல்லையா?

நாம் எப்படி இருக்கிறோம் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கூறுவதற்கு பௌத்தம் ஒரு பெரிய கையாளும் திறனைக் கொண்டுள்ளது. நாமும் இருக்கிறோம், ஆனால் நாம் இருப்பதை கற்பனை செய்யும் இந்த சாத்தியமற்ற வழிகளில் நாங்கள் இல்லை, உதாரணமாக ஒரு சிறிய "நான்" என் தலைக்குள் உட்கார்ந்து பேசுவது போல், என் தலைக்குள் கேட்கும் அந்தக் குரலின் ஆசிரியர் அதுவே. "நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? ஓ அப்படியே செய்கிறேன், என்று கேட்டு ”பின்னர் நீங்கள் உங்கள் உடலை ஒரு இயந்திரம் போல நகர்த்துகிறீர்கள். ஆனால் அது ஒரு மாயை. நமக்குள் எந்த ஒரு சிறிய "நான்" என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது, இல்லையா? ஆனாலும் நான் இருக்கிறேன் - நான் பேசுகிறேன்; நான் வேலைகளைச் செய்கிறேன். எனவே, இந்த கணிப்புகளில் உள்ள நம்பிக்கையை நாம் அகற்ற வேண்டும், ஏனென்றால் அவை யதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றன. அப்படித்தான் தெரிகிறது. இந்தக் குரல் ஒலிக்கிறது, அதனால் உள்ளே யாராவது பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே "உளவியல்" என்று நாம் அழைக்கும் இந்த முழுப் பகுதியிலும் பௌத்தம் வழங்குவதற்கு நிறைய உள்ளது.

நம்முடைய உடலுடன் செயல்படுதல்

எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன. முதலாவது : நம்முடைய உடலுடன் செயலாற்றுவது குறித்து நீங்கள் இன்னும் அதிகமாகக் கூட சொல்லலாம். நம்முடைய உடலுக்கு ஓய்வு தேவை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள், ஆனால் நாம் வேறு சில அதிகமானவற்றை செய்யலாம். இரண்டாவது கேள்வி: அனைத்து விதமான முன்நிறுத்தல்களுக்குமான ஆதாரம் என்ன? உதாரணமாக, நம்முடைய மண்டைக்குள் பேசும் நபர் – அது ஏன் தோன்றுகிறது?

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் செயல்படுத்தக்கூடிய பல்வேறு ஒழுக்க முறைகள் நிச்சயமாக இருக்கின்றன. அதற்கு பௌத்த மருந்து இருக்கிறது, உதாரணமாக, திபெத்திய பாரம்பரியத்தில் நீங்கள் அதனைக் காணலாம், உடலில் சக்தியை சமன்படுத்துவதற்கு அவை ஏராளமானவற்றைச் செய்கின்றன. பொதுவாக நம்முடைய உணவு கட்டுப்பாடு மற்றும் நம்முடைய நடத்தை நமது சக்தி மற்றும் ஆரோக்கியத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன – நடத்தை என்றால் குளிரில் வெளியே செல்லும் போது கதகதப்பான ஆடையை உடுத்தாமல் சென்றால் நீங்கள் நோய்வாய்ப்படலாம். இந்த வகையான நடத்தை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அல்லது அதிகசெயலாற்றுதல் – இந்த வகையான நடத்தையும் கூட உங்களுக்கு உடல்நலக் கேட்டை உண்டாக்கும். 

நம்முடைய உடலின் நிலையை பராமரிக்க முயற்சிப்பதிலும் கூட விழிப்புடன் இருக்க வேண்டும். உள்ளுக்குள் நீங்கள் அமைதியானவராக இருக்கும் போது, உங்களுடைய மனதின் நிலை மட்டுமல்ல உங்களுடைய உடலின் சக்தி நிலையும் கூட அதிக எச்சரிக்கையானதாக மாறும். உங்களுடைய சக்தி மிகவும் பதற்றத்துடன் இருப்பதை நீங்கள் அறிந்தால், உதாரணமாக டைய சக்தி மிகவும் பதற்றத்துடன் இருப்பதை நீங்கள் அறிந்தால், உதாரணமாக – உங்களுடைய இதயத்துடிப்பு மிக அதிகமாக இருப்பதை நீங்கள்  உணர்வது போன்றவை – உங்களால் செய்ய முடிகின்ற மிக அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன, உங்களுடைய உணவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அதனை சரிசெய்யலாம். 

உதாரணத்திற்கு, நாம் காபி மற்றும் டீ அருந்துவதை நிறுத்தலாம் சக்தியை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ளுங்கள்; காற்றிலோ அல்லது காற்றோட்டமான இடத்திலோ இருக்க வேண்டாம். மேலும், "விர்ர்ர்ர்ர்ர்ர்" என்று செல்லும் உயர்-சக்தி இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம். அது ஆற்றலை மேலும் தொந்தரவு செய்யும். அமைதியான சூழ்நிலையில் இருங்கள். எனவே அந்த அளவிலான பயிற்சி உள்ளது.

சீன அல்லது ஜப்பானிய பௌத்த மரபுகளில் இருப்பதைப் போல தற்காப்புக் கலைகளுடனான உடல் பயிற்சிகள் அல்லது உடலுடன் அந்த வகையான வேலைகளை திபெத்திய பாரம்பரியம் வலியுறுத்துவதில்லை. ஆனால் நிச்சயமாக வெவ்வேறு வகையான தற்காப்புக் கலைகள் - தைஜி, கிகோங், போன்ற விஷயங்கள் - மிகவும் உதவியாக இருக்கும். அவை உங்கள் இயக்கத்தின் நினைவாற்றலின் மூலம் ஒருநிலைப்படுத்துதலை வளர்ப்பதற்கான வழிமுறைகள். திபெத்தியர்கள் செய்யும் உடல் பயிற்சிகள் மிகவும் நுட்பமானவை, தற்காப்புக் கலையில் அல்ல, வேறு வழியில் ஆற்றல் அமைப்புகளுடன் வேலை செய்ய வேண்டும். இது சற்று வித்தியாசமான வழி, அதிகமாக யோகப் பயிற்சியில் செய்தல். எனவே நீங்கள் உங்களுடைய உடலுடன் எவ்வாறு செயல்படுகிறீர்கள்.

நம்முடைய தலைக்குள் கேட்கும் சத்தத்திற்கான ஆதாரம்

நம்முடைய தலைக்குள் கேட்கும் சத்தத்திற்கான ஆதாரத்தை பொருத்தவலையில், இது நம்முடைய மனநிலையின் இயல்பையும் உள்ளடக்கியது அது சற்றே கடினமானது கூட. பௌத்தத்தில், மனதைப் பற்றி நாம் பேசும்போது, நாம் சில விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. நாம் மனதின் செயல்பாட்டைப் பற்றி பேசுகிறோம், அந்த மனச்செயல்பாடு சிந்தனை, பார்த்தல், உணர்ச்சிகளை உணர்தல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. அது மிக மிக பரந்து விரிந்தது. அந்தச் செயல்பாட்டில் என்ன நடக்கிறது என்றால் அங்கே ஒரு விதமான முப்பரிமாணப் படிவ மனம் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, நாம் எதையாவது பார்க்கும் போது, ஒளி நம்முடைய விழித்திரையில் பட்டு, மின் உந்துவிசையைத் தூண்டி, நரம்புகளில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக எழுவது ஏதோ ஒன்று தோன்றுவதைப் போன்ற முப்பரிமாணப் படிவ மனநிலை. ஆனால் உண்மையில் முப்பரிமாண மனநிலை என்று ஒன்று இருக்கிறது. அது இந்த அனைத்து வேதியியல் மற்றும் மின் உந்துவிசையில் இருந்து வருகிறது. 

மன முப்பரிமாணங்கள் என்பது வார்த்தைகளைப் போன்ற சத்தமாகக் கூட இருக்கலாம். ஒரே நேரத்தில் ஒரு முழு வாக்கியத்தை நம்மால் கேட்க முடியாது – அதன் சிலவற்றை நீங்கள் கேட்கலாம், ஒரு நேரத்தில் ஒரு கணம் – இருப்பினும் அங்கு இந்த முப்பரிமாண மனநிலை இருப்பதால் முழு வாக்கியத்தையும் அது என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதே போல உணர்ச்சிகள், சிந்தனைகள் மற்றும் சொல்லாடல் (இந்தக் குரலைப் போல) வடிவத்தில் முப்பரிமாண மனநிலைகள் இருக்கலாம். இந்த விஷயங்கள் வெறுமனே எழுகின்றன. 

இதில் சில அறிவாற்றல் உள்ளது. அதனால் பார்ப்பது, அல்லது சிந்தனை, அல்லது உணர்வு. அதுதான் இது. மேலும் அந்த மனச் செயல்பாடு, அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர் அல்லது அதைக் கட்டுப்படுத்தி அதைச் செயல்படுத்துபவர் என்று தனித்தனியாக ஒரு "நான்" இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நடக்கும். எனவே அந்த மன ஹாலோகிராமின் ஒரு பகுதி "நான்" - "அந்த குரல் நானே." யார் சிந்திக்கிறார்கள்? நான் யோசிக்கிறேன். யோசிப்பது நீங்கள் அல்ல - நான் யோசிக்கிறேன். ஆனால் இது இந்த முப்பரிமாணங்களின் முழு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

நம்முடைய தலைக்குள் கேட்கும் இந்த குரலுக்கான ஆதாரம் என்ன? அனைத்து மனச்செயல்பாடுகளும் எப்படி செயல்படுகின்றன என்பது அவசியமல்ல. அந்தக் குரலானது எந்த நேரமும் கேட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை, அப்படி இருக்க ஒரு புழு அந்தக் குரலைக் கேட்டு சிந்திக்கிறதா என்று நான் சந்தேகப்படுகிறேன். கடைசியில் புழுவிற்கென ஒரு மூளை, மனம் இருக்கிறது, விஷயங்களை பார்த்து அவற்றை செய்கிறது.

சொல்லப்போனால் நாம் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினால் அது மிக சுவாரஸ்யமானதாக மாறும். முப்பரிமாணக் குரலின் சத்தமானது ஒரு விதமான தொடர்பு வடிவம், இல்லையா? இது ஒரு வகை கருத்தாக்கமாகும், இது ஒரு சிந்தனையை வார்த்தைகளின் மன ஒலியின் வடிவத்தில் வெளிப்படுத்துகிறது அல்லது தொடர்பு கொள்கிறது. சுவாரசியமான கேள்வி என்னவென்றால்: பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் ஊமையாக இருப்பவர் மற்றும் ஒலியைப் பற்றிய கருத்து இல்லாதவர் - அவர்களின் தலையில் குரல் இருக்கிறதா, அல்லது அவர்கள் சைகை மொழியின் அடிப்படையில் சிந்திக்கிறார்களா? இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. அதற்கான பதிலை நான் ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை.

எனவே அது குரலோ, சைகை மொழியோ, எதுவாக இருந்தாலும் – அல்லது புழு எப்படி சிந்தித்தாலும் – மாய பிம்பமானது ஒரு தனித்த “நான்” இருக்கிறது அதற்குப் பின்னால் யார் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு, பேசுகிறார்கள் மற்றும் கண்கள் வழியாக தகவல் திரையில் வருகிறது, அவர்கள் வைத்திருக்கும் மைக்ரோஃபோனில் பேசி, கைகளையும் கால்களையும் அசைக்க பொத்தானை அழுத்துகிறார்கள் என்பது ஒரு முழுமையான மாயை. ஆனால் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்திருக்கும் அந்த வகை "நான்" "ஓ, மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கப் போகிறார்கள்?" மற்றும் "நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" இதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம், என்று கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் இந்த  வகையான "நான்".

இந்த "நான்" ஒரு மாயை போன்றது என்பதை நாம் உணர்ந்தால், கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் பேசுகிறோம், செயல்படுகிறோம். நிச்சயமாக நான் தான்: நான் பேசுகிறேன், நான் செயல்படுகிறேன். மக்கள் அதை விரும்பவில்லை என்றால், அவர்கள் அதை விரும்பவில்லை. அதனால் என்ன? புத்தர் அனைவரையும் மகிழ்விக்கவில்லை. எல்லோருக்கும் புத்தரைப் பிடிக்கவில்லை, அதனால் நான் என்னிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?புரிதல், அன்பு, இரக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாம் செயல்படுகிறோம். அவ்வளவு தான். மேலும் அதற்காக கவலைப்பட வேண்டாம்: "அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கப் போகிறார்கள்?" சொல்வதைப் போல் செய்வது அவ்வளவு எளிதல்ல.

மற்றவர்கள் கோபத்தில் இருக்கும் போது நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளுதல்

மற்றவர்க நம் மீது கோபத்தில் இருக்கும் போது, நம்மை நாமே எப்படி கட்டுப்படுத்திக் கொள்வது?

அடிப்படையில் நாம் அவர்களை ஒரு சிறு குழந்தையைப் போல பார்க்க வேண்டும். “இது உறங்குவதற்கான நேரம்” என்று நாம் சொல்லும் போது இரண்டு வயது குழந்தை நம் மீது கோபப்பட்டு, “நான் உங்களை வெறுக்கிறேன், நீங்கள் கொடூரமானவர்” என்று சொல்லி, ஒரு பெரிய களேபரத்தை உண்டாக்கினால், நாம் கோபம் அடைவோமா?

சிலர் கோபமடைய மாட்டார்கள்? ஆனால் அது இரண்டே வயது குழந்தை, அதனிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நீங்கள் அந்தக் குழந்தையை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்கள். இரண்டு வயதுக் குழந்தையுடன் இருப்பதைப் போல மென்மையாக இருங்கள். இப்படி சிந்தியுங்கள்: அப்படியான இரண்டு வயதுக் குழந்தையை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்? பொதுவாக ஒரு இரண்டு வயதுக் குழந்தை மிகக் கொடூரமாக நடந்து கொண்டால், நீங்கள் அந்தக் குழந்தையை தூக்கி, கையில் வைத்து, அதனிடம் அன்பு காட்டினால், அது அமைதியாகி விடும், இல்லையா? அதனிடம் போய் கத்தினால் அது மேலும் அதிகமாக அழ மட்டுமே செய்யும். எனவே மக்களும் அப்படித் தான் -வளர்ந்த குழந்தைகள்.

Top