பௌத்தர்களின் ஒரு நாள் வாழ்க்கை

Day%20in%20the%20life%20of%20a%20buddhist

அன்றாட வாழ்க்கையை எப்படி மேற்கொள்வது என்பதற்கு பௌத்த போதனைகள் எண்ணிலடங்கா அறிவுரைகளைத் தருகிறது. அவற்றை கீழே பாருங்கள்

நாம் எழும் போது

கண்விழித்து எழுவதற்கு முன்னர், புதிய நாளை எதிர்கொள்ளத் தயாராக நாம் நம்பமுடியாத மகிழ்ச்சியை உணர்வதோடு, நாம் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நன்றியோடு இருக்க வேண்டும், உறுதியான நோக்கங்களான கீழே இருப்பனவற்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்:

  1. அன்றைய தினத்தை அர்த்தமுள்ளதாக்குதல்.
  2. நமக்குள் செயலாற்றுவதோடு பிறருக்கும் உதவும் அருமையான வாய்ப்பு கிடைத்தால் அதனை தவற விடாதிருத்தல்.

வேலைக்கு செல்கிறோம் என்றால், வேலையில் கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமாக பணியாற்ற நம் மனதை தயார் படுத்த வேண்டும்.

சக பணியாளர்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் ஆனால், அர்த்தமற்ற அரட்டைகள் மற்றும் வீண் பேச்சு பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது. குடும்பத்தை கவனித்துக் கொண்டு, வேலைக்குச் சென்றாலும் பொறுமையை இழக்கக் கூடாது. குடும்பத்தினரின் வெளித்தேவைகள் மற்றும் உணர்வுகளுக்கு உரிய கவனம் செலுத்தி முடிந்தவரை அன்போடு கவனித்துக்கொள்வோம்.   

காலை தியானம்

பொதுவாக, நாங்கள் காலை சிற்றுண்டிக்கு முன்னர் சிறிது நேரம் தியானிப்போம். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, சுவாசத்தில் கவனம் செலுத்துவோம்.  மனதை ஒருமைப்படுத்த இது உதவும்.

நம்முடைய வாழ்க்கை எப்படி நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரோடும் பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதை நாங்கள் பிரதிபலிக்கிறோம். அவர்களின் உணர்வு மற்றும் செயல் நம்மையும் மற்றவர்களையும் எப்படி பாதிக்கிறது, இதமான உணர்வான அன்பை நாங்கள் உருவாக்குகிறோம்: “அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்”, அதே போன்று: “வேதனைகள், பிரச்னைகளில் இருந்து அனைவரும் விடுபடட்டும்.” இன்றைய நாளில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் ஒரு வழியில் பிறருக்கு உதவ வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொள்வோம், அப்படி உதவ முடியாவிட்டால் முடிந்தவரை பிறருக்கு துன்பம் ஏற்படுத்துவதைத் தவிர்ப்போம்.

 நாள் முழுவதும் விழிப்போடு இருத்தல்

நாள் முழுவதும் நாங்கள் எப்படி செயல்படுகிறோம், பேசுகிறோம், சிந்திக்கிறோம், உணர்கிறோம் என்பதில் விழிப்புடன் இருக்க முயற்சிப்போம். குறிப்பாக கோபம், பேராசை, பொறாமை, பிடிவாதம் உள்ளிட்ட கலக்கம் தரும் உணர்வுகள் ஏற்படுகின்றனவா என்று நாங்கள் உற்றுநோக்குவோம், அப்போது தான் அதனை கடந்து செல்ல முடியும். சுயநலத்துடனோ அல்லது சுயபச்சாதாபம் மற்றும் காழ்புணர்ச்சியோடு நடந்து கொள்ளும் போது நாங்கள் குறிப்பெடுத்துக் கொள்வோம். நுட்பமான அளவில், பொதுவான சூழல்களில் பிறரைப் பற்றியோ, எங்களைப் பற்றியோ நகைப்புக்குரிய கதைகளைச் சொல்லும் போது எங்களின் இலக்கு விழிப்புடன் இருத்தல். எங்களைப் போன்றவர்களை யாரும் விரும்பமாட்டார்கள், அந்த நிமிடங்களை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம், நீண்ட வரிசையில் காத்திருக்கும் எங்களுக்கான வாய்ப்பு கிடைக்காது என்றே கற்பனை செய்வோம், “நாங்கள் ஏழைகள்” என்றும் கூட சில நேரங்களில் உணர்வோம். 

திடீரென பிரச்னை தரக்கூடிய நபர்களை அணுகும்போது, எங்களது செயல், பேச்சு அல்லது சிந்தனை ஆகியவற்றை கவனிப்போம். விழிப்புணர்வின் அடுத்த கட்டத்தை பயன்படுத்துவோம். முதலில் அந்தச் செயலை செய்வதற்கு முன்னரே தடுக்க முயற்சிப்போம் அல்லது இதனால் பின்னர் வருத்தப்படுவோம் என்று சொல்லிக்கொள்வோம். ஏற்கனவே அந்தச் செயலை செய்துவிட்டால், அதனை செய்வதற்கு முன்னரே உடனடியாக நிறுத்துவோம் அல்லது இது மிகமோசமானது என்று சொல்லிக்கொள்வோம்.  எதிர்மறை சிந்தனை சுழற்சி எங்களுக்குள் ஏற்படுவதாக அறிந்தால் நாங்களும் இதையே தான் செய்வோம். மன மற்றும் உணர்வுகளில் கலக்கம் ஏற்படுத்துபவற்றை வெல்வதற்கும், அமைதிப்படுத்தவும் மாற்று மருந்தை நாங்கள் எங்கள் மனதில் வைத்திருப்போம், எங்களுக்கான மனஅமைதியை திருப்பப்பெறும் வரை அதனை செயல்படுத்தி, நிலைநிறுத்துவோம்.

உதாரணத்திற்கு யாரேனும் வேலையாகவோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ நம்மை விமர்சனம் செய்தாலோ அல்லது நாம் வெறுப்படையும்படி ஏதாவது செய்வதை பார்த்திருப்போம். அப்போது நாம் செய்யவேண்டியது:

திட்டுதுதல் எந்த பலனையும் தரப்போவதில்லை அதனால், காலையில் செய்த சுவாசப் பயிற்சியைப்போல், மூச்சை கவனித்து மனதை ஒறுங்குபடுத்தவேண்டும்

  1. ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறார்கள்; துன்பத்தை அல்ல. ஆனால், பெரும்பாலானோர் குழப்பமடைந்து, பிரச்னைகளை ஏற்படுத்திக்கொள்ளும்வகைகளில் செயல்படுகிறார்கள்
  2. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சிதரும் காரணிகள் இருக்க வாழ்த்துவோம்
  3. நமது அறிவுரையை திறந்த மனதுடன் ஏற்கத் தயாராக இருந்தால், அவர்களின் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தும் நடத்தைகளை சுட்டிக்காட்டி அதனை நிறுத்தச் சொல்லுங்கள்.
  4. அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், அமைதி காக்கவேண்டும், அந்த நிகழ்வை பொறுமைக்கான பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். இருப்பினும் நாம் செயலற்றவர்களாக நிற்கக் கூடாது, நம்மால் முடிந்தவரை சஞ்சலங்களை தீர்த்துவைக்கலாம்.

நம்மை பிறர் விமர்சிக்கும்போதுதான், உள்ளுணர்வைக் கொண்டு தற்காத்துக்கொள்வது மிக அவசியமாகிறது. நாம் அமைதி காத்து, அவர்கள் கூறியதில் எது சரி என நேர்மையாக ஆராய்ந்து – அது உண்மையானால், நாம் மன்னிப்பு கேட்டு நமது நடத்தையை சரிசெய்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் சொன்னது முட்டாள்தனமானது என்றால், தவிர்த்துவிடலாம். ஆனால், முக்கிய பிரச்னையாக இருந்தால், கோபப்படாமல், அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி, சிந்தனையை தூண்டலாம்

மாலை தியானம்

உறங்கச் செல்லும் முன், அன்றைய தினத்தின் செயல்களிலிருந்து விடுபட, மூச்சை கவனித்து மீண்டும் தியானம் செய்வோம்.

அன்றைய நாளின் நிகழ்வுகளை மதிப்பாய்வு செய்து, அதனை நாங்கள் எவ்வாறு கையாண்டோம் என்பதை ஆய்வு செய்வோம். நாங்கள் எங்காவது பொறுமை இழந்தோமா? அல்லது ஏதேனும் முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறோமா? அப்படி இருந்தால், எங்களால் எங்களையே கட்டுப்படுத்த முடியவில்லை என்று வருத்தப்படுவோம், குற்றஉணர்வின்றி மறுநாளில் அதனை சரிசெய்ய தீர்மானிப்போம். அதே போன்று சூழ்நிலைகளை புத்திசாலித்தனமாகவும், தயவோடும் அணுகி இருந்தால், அதனை கொண்டாடுவோம், அந்த திசையை நோக்கியே மேலும் பயணிக்க தீர்மானிப்போம். அடுத்த நாளில் தொடர்ந்து எங்களுக்காகவும் பிறருக்காகவும் செயல்படுவதை எண்ணிப் பார்த்துவிட்டு உறங்கச் செல்வோம். விலைமதிப்பில்லாத எங்களது வாழ்க் கையை அர்த்தமுள்ளதாக்கினால் உண்மையில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

Top