இன்றுள்ள முக்கிய அமைப்புகளின் பிரதிநிதியாக புத்த மதத்தின் தேரவாதம், சீன மற்றும் திபெத்திய வடிவங்களின் சில தனித்துவமான அம்சங்களைப் பார்ப்போம்.
தேரவாதம் (Theravada)
தென்கிழக்கு ஆசியாவில் நடைமுறையில் உள்ள தேரவாதம், நினைவாற்றல் தியானத்தின் பயிற்சியை வலியுறுத்துகிறது. மெல்ல நடக்கும் போது அசைவுகள் மற்றும் நகர்வதற்கான நோக்கம், உடல் அமர்ந்த நிலையில் இருக்கும் போது சுவாசம் மற்றும் உணர்வுகளில் கவனம் செலுத்தி செய்யப்படுகிறது. நினைவாற்றலுடனான ஒவ்வொரு கணத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியால், ஒருவர் நிலையாமையின் அனுபவப்பூர்வமான உணர்வைப் பெறுகிறார். அனைவரின் அனுபவங்களை பகுப்பாய்வு செய்ய இந்தப் புரிதல் பயன்படும் போது நிரந்தரம் என்ற ஒன்றே இல்லை என்பதை ஒருவர் உணர்கிறார், மாறாதா சுயம் என்று இருப்பவை எல்லாவற்றிலிருந்தும் எல்லோரிடமிருந்தும் தனித்தவை. அனைத்துமே நிமிடத்திற்கேற்ப மாறக்கூடியவை. இந்த வழியில், ஒருவர் தன்னை மையப்படுத்தியே இருக்கும் அக்கறையிலிருந்தும், அது கொண்டு வரும் மகிழ்ச்சியற்ற நிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும் யதார்த்தத்தைப் பற்றிய புரிதலைப் பெறுகிறார்.
அளவில்லாத அன்பு, இரக்கம், சாந்தம் மற்றும் மகிழ்ச்சிக்கான தியானங்களையும் தேரவாதம் போதிக்கிறது, ஆனால் கடந்த தசாப்தங்களில் மட்டுமே இது “உறுதி செய்யப்பட்டுள்ள பௌத்தம்” என்ற அழைக்கப்படும் இயக்கமாக இருந்தது, பௌத்தர்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களில் உதவுவதற்காக தாய்லாந்தில் இருந்து தொடங்கப்பட்டது. தேரவாத துறவிகள் பௌத்த வேதங்களைப் படித்து ஜெபித்து, பொதுமக்களுக்காக சடங்குகளைச் செய்தார்கள். துறவிகள் நாள்தோறும் அமைதியான முறையில் கையேந்தி யாசகம் கேட்டு சுற்றி வருவார்கள், குடியானவர்கள் அவர்களுக்கு உணவு வழங்கி தங்களது தாராள மனதை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
கிழக்கு ஆசிய மகாயனா
சீனாவில் இருந்து பெறப்பட்ட கிழக்கு ஆசிய மகாயனா பாரம்பரியத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன: பரிசுத்த நிலம், ஜப்பானில் இது ஜென் என்று அறியப்படுகிறது.
- பரிசுத்த நிலப் பாரம்பரியமானது அமிதாபா பெயரை நினைவுபடுத்தலை வலியுறுத்துகிறது, புத்தரின் எல்லையில்லா ஒளி, அவரது பரிசுத்த நிலமான மகிழ்ச்சிக்கு செல்வதற்கான ஒரு வழிமுறை, ஒரு வகையான சொர்க்கம் அங்கு அனைத்துமே புத்தராக மாறுவதற்கு உகந்ததாக இருக்கும்.
- ஜென் கடுமையான தியானத்தை வலியுறுத்துகிறது அங்கு ஒருவர் தன்னுடைய மனதின் அனைத்து கருத்தியல் சிந்தனைகளையும் அமைதிப்படுத்துகிறார் இதனால் மனிதின் பரிசுத்த இயல்பு இரக்கம் மற்றும் ஞானத்துடன் கூடியதாக எப்போதும் இருக்கும்.
- இரண்டு பாரம்பரியத்திலும் உள்ள துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வேத நூல்களை ஜெபிக்கின்றனர், மேலும் கன்பூசிய கலாச்சாரத்திற்கு ஏற்ப, குறிப்பாக சாதாரண சமூகத்தின் இறந்த மூதாதையர்களுக்காக விழாக்களை நடத்துகிறார்கள்.
திபெத்திய மகாயனா
மத்திய ஆசியா முழுவதும் காணப்படும் மகாயனா பௌத்தத்தின் திபெத்திய வடிவம் இந்திய பௌத்தத்தின் முழு வரலாற்று வளர்ச்சியையும், குறிப்பாக நாலந்தா போன்ற பெரிய துறவற பல்கலைக்கழகங்களின் பாரம்பரியங்களையும் பாதுகாக்கிறது. எனவே, இது ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, குறிப்பாக மனதின் இயல்பு நிலை, உணர்ச்சிகள் மற்றும் யதார்த்தம், தர்க்கம் மற்றும் விவாதத்தின் ஊடாக, இந்த தலைப்புகளில் தீவிர தியானத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அணுகுமுறை திபெத்தில், இந்திய பௌத்த பாரம்பரியமான தந்திர நடைமுறையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதில் ஒருவர் கற்பனையின் சக்திகளைப் பயன்படுத்துகிறார், மேலும் தன்னை ஒரு புத்தராக மாற்றிக் கொள்ள உடலின் நுட்பமான ஆற்றல்களுடன் செயல்படுகிறார். வெற்றிடத்தை (வெறுமை) மற்றும் இரக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது, மேலும் அந்த சூழலில், ஒருவர் குறிப்பிட்ட புத்த வடிவமாக மாறிவிட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இத்தகைய வடிவங்கள் சில சமயங்களில் “தியான தெய்வங்கள்” என்று அழைக்கப்பட்டாலும், அவை செயல்பாட்டில் அல்லது அர்த்தத்தில் கடவுளுக்கு சமமானவை அல்ல, பௌத்தம் எந்த வகையிலும் பலதெய்வ நம்பிக்கை கொண்டதல்ல. ஞானம் அல்லது இரக்கம் போல ஒவ்வொரு புத்த வடிவமும் புத்தரின் ஞானமடைதலுக்கான ஒரு அம்சமான குறியீட்டு பிரதிநிதித்துவமாகும். அத்தகைய வடிவத்தில் தன்னைப் பார்ப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய புனிதமான எழுத்துக்களை (மந்திரங்கள்) பாராயணம் செய்வது ஒருவரின் ஏமாற்றப்பட்ட, எதிர்மறையான சுய பிம்பத்தை வெல்லவும், அந்த உருவத்தால் பொதிந்துள்ள குணங்களை வளர்க்கவும் உதவுகிறது. இத்தகைய பயிற்சிகள் மிகவும் மேம்பட்டவை மற்றும் முழு தகுதி வாய்ந்த ஆசிரியரின் நெருக்கமான மேற்பார்வை தேவை.
திபெத்திய பௌத்த மதத்திலும் ஏராளமான ஜெபங்கள் மற்றும் சடங்குகள் உள்ளன, பெரும்பாலும் எதிர்மறை சக்திகளை அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற சடங்குகளைச் செய்யும் போது, சிரமங்களைத் தாண்டுவதற்கான ஆற்றலையும் நம்பிக்கையையும் பெறுவதற்கான ஒரு தியான உதவியாக ஒருவர் தன்னை மிகவும் வலிமையான வடிவத்தில் கற்பனை செய்து கொள்கிறார். அன்பு மற்றும் இரக்கத்தை வளர்ப்பதற்கான தியான நுட்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது, மேலும் காட்சிப்படுத்தல் பயன்பாட்டையும் உள்ளடக்கியது.
சுருக்கம்
ஒருவர் தேரவாத நினைவாற்றல் பயிற்சிகளைச் செய்தாலும், சீனாவின் அமிதாபா புத்தரின் பெயரை ஜெபித்தாலும் அல்லது விவாதித்தாலும், மற்றும் திபெத்தில் காட்சிப்படுத்தல் பயிற்சி செய்தாலும், எல்லா பௌத்த வடிவங்களும் ஒரே கருத்தியல் சூழலில் பொருந்துகின்றன. அவை ஒவ்வொன்றும் துன்பத்தை வெல்வதற்கும் ஒருவரின் ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கும் பயனுள்ள வழிமுறைகளை வழங்குகின்றன, ஒருவரின் சொந்த நலனுக்காக மட்டுமல்லாமல், முடிந்தவரை மற்றவர்களுக்கு பயனளிக்கும் திறனோடு இருப்பதற்கும்.