உலகளாவிய நன்னெறிகள் என்றால் என்ன?

Uv what are universal values

உலகளாவிய நன்னெறிகளின் அர்த்தம்

“உலகளாவிய நன்னெறிகள்” என்கிற ஒன்றை நாம் ஏன் கொண்டுள்ளோம்? உலகமயம் என்பது நம்பிக்கை உள்ளவர் நம்பிக்கை இல்லாத அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்கிற பொருளைக் கொண்டுள்ளது. ஒருவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தர், யூதர் அல்லது ஜைனர் என யாராக இருந்தாலும் சரி, மதிப்புகளை ஏற்றுக்கொள்ளலாம். விஞ்ஞானியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், படித்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும் இந்த மதிப்புகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அவற்றைப் பின்பற்றுவது முக்கியம் என்பதைக் காணலாம். அதுவே உலகமயத்தின் ஒரு அங்கம். நன்னெறிகள் என்பது நடத்தையின் ஒரு வழியாகும், அதில் ஈடுபடுவதன் மூலம், உங்களை மகிழ்ச்சியான நபராக ஆக்குகிறது மேலும் மற்றவர்களின் மகிழ்ச்சியை ஆதரிக்கிறது. சமூகம் மகிழ்ச்சியாக மாறும், நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இவை இரண்டும் இணைந்ததே உலகளாவிய நன்னெறிகள்.

ஒரு மனிதன் முழு பிரபஞ்சத்தின் ஒரு பகுதி, நேரம் மற்றும் இடத்திற்குள் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதி. தன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மற்றவற்றிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்று என்பதை அவன் தனக்குத் தானே உணர்கிறான், அது ஒரு வகையான ஒளியியல் கண்மாயைப் போன்றது. இந்த மாயை நமக்கு ஒரு வகையான சிறை, நமது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் நமக்கு நெருக்கமான சில நபர்களின் பாசத்திற்குள் நம்மை கட்டுப்படுத்துகிறது. அனைத்து உயிரினங்களையும், இயற்கை மொத்ததையும் அதன் அழகில் அரவணைக்கும் வகையில் நமது கருணை வட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த சிறையிலிருந்து நம்மை விடுவிப்பதே நமது பணியாக இருக்க வேண்டும். - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நாம் அனுபவிக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம், தான் என்கிற சிறைக்குள் அடைபட்டு இருக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனைகளே, அது தன்னைப் பற்றிய ஒரு குறுகிய உள்வட்டத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து பிரபஞ்சத்தின் மற்றவற்றை சிந்திக்க வைப்பதை மறந்துவிடுகிறது. ஒரு சிறிய உள் வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருப்பது ஒரு மாயைப் போன்றது என்று ஐன்ஸ்டின் கூறுகிறார். ஏன்? ஏனெனில் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். இந்தச் சிறைக்குள் இருந்து நாம் எப்படி வெளியே வரலாம்? மற்றவர்களையும் சேர்க்கும் விதத்தில் இரக்க வட்டத்தை நாம் கட்டாயம் விரிவுபடுத்த வேண்டும், அதே போல மற்றவர்களும் அவர்களின் கருணை வட்டத்தை நம்மையும் உள்ளடக்கி விரிவுபடுத்தினால், அதன் பின்னர் நாம் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கலாம். அதைத் தான் அவர் ஊக்குவிக்கிறார். 

நன்னெறிகளை ஏன் பயிற்சிக்க வேண்டும்?

நன்னெறிகள் என்பது மனசாட்சியுடன் செய்யப்படும் மனித செயல்களாகும், மேலும் அவை தனிநபருக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் அதிக நல்லிணக்கம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு இன்பம் அல்லது துன்பம் ஏற்பட்டாலும், அதை நாம் தேடும் இயல்புடன் ஒத்துப்போகும் நமது செயல்களின் விளைவாகக் காணலாம். எல்லா செயல்களும் நம் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் இயக்கப்படுகின்றன. நெறிமுறையற்ற எண்ணங்கள் மோசமான செயல்களுக்கு வழிவகுக்கின்றன, இதன் விளைவே இன்று இந்த உலகில் நாம் காணும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. கீழ்காணும் இந்த மூன்றிற்கும் இடையில் உள்ள சரியான காரண உறவைப் புரிந்து கொள்ளத் தவறியதே இதற்குக் காரணம்:

  • எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள்
  • நமது செயல்கள்
  • விளைவுகளினால் ஏற்படும் மகிழ்ச்சி அல்லது வலி.

நமக்கு மகிழ்ச்சியைத் தேடும் ஆசை இருக்கலாம், ஆனால் எண்ணங்களின் தொகுப்பால் உந்தப்பட்டு, வலியையும் துன்பத்தையும் மட்டுமே தரும் செயல்களில் மூழ்கிவிடுகிறோம். எனவே, நினைவாற்றல் என்றால் என்ன? எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் என்றால் என்ன? இறுதியாக இந்த எண்ணங்கள் மற்றும் நனவின் வகைகள் ஒரு குறிப்பிட்ட முடிவை உருவாக்க நமது செயல்களை நிர்வகிக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றிய சரியான அறிவு நமக்குத் தேவை. நாம் விரும்பிய முடிவுகளைத் தரும் செயல்களை எளிதாக்கும் அந்த மனநிலையை வளர்த்து, நமது செயல்களை இழிவுபடுத்தும் மன வர்க்கத்தை கைவிடுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இதுதான் நன்னெறிகள்; மேலும் நன்னெறிகளின் அனைத்துக் கொள்கைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுவது கருணை.

அப்படியானால், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்துவது நம் மனம்தான். இது உந்துதல் உணர்ச்சிகள் மற்றும் உணர்ச்சி காரணிகளைப் பொறுத்தது. உணர்ச்சிகள் நம் எண்ணங்களை இயக்குகின்றன, நம் எண்ணங்கள் நம் செயல்களை இயக்குகின்றன. நம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உணர்ச்சிகள் "நேர்மறை உணர்ச்சிகள்." உலகளாவிய அர்த்தத்தில், "கார்டினல் சின்" அல்லது கார்டினல் பற்றி நாம் பேச முடியாது. நாம் மிகவும் உலகம் முழுவதையும் கருத்தில் கொண்டு பேச வேண்டும். உலகளவில், உண்மையான மகிழ்ச்சியைத் தருவது நேர்மறை உணர்ச்சிகள் என்றும், துன்பத்தைத் தருவது அழிவு உணர்ச்சிகள் என்றும் சொல்லலாம். மன வரைபடத்தின் ஒரு பகுதியாக இவற்றைப் படித்துக் கற்க வேண்டும்; அத்தகைய வரைபடத்துடன் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

உலகளாவிய நன்னெறிகளை பள்ளி அமைப்பில் கற்பித்தல்

தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ளவற்றைக் கற்பிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக மக்களை எவ்வாறு மாற்றுவது? கடவுள் பய உணர்வை அடிப்படையாகக் கொண்ட நன்னெறியாளர்களும் உள்ளனர். கடவுளை நம்பாமல், ஆனால் கர்மாவில் நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள், கர்மாவின் அடிப்படையில், அவர்கள் நன்றாக நடந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கடவுளையோ கர்மாவையோ நம்பாதவர்களும் இருக்கிறார்கள். கடவுள் மற்றும் கர்மாவின் கருத்து இல்லாமல், நன்னெறிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்று மக்களை எவ்வாறு நம்ப வைக்க முடியும்? இதற்காக, புனிதர் தலாய் லாமா இந்த மூன்று விஷயங்களைக் கொண்டு வந்துள்ளார்:

  • பொதுவான அனுபவம்
  • பொது அறிவு
  • அறிவியல் கண்டுபிடிப்புகள்.

இவற்றின் அடிப்படையில், நவீன கல்வி முறையில் உலகளாவிய நன்னெறிகளைக் கற்பிக்க மூன்று நிலைகளை அவர் முன்மொழிந்துள்ளார்.

நம்பிக்கை இருப்பவர்களோ இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் சரி, பொதுவான அனுபவத்தின் அடிப்படையில் கற்பித்தலின் உதாரணம், சிறு குழந்தைகளாக இருக்கும் போது நமக்கு தாய்மார்களால் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. இது எந்த மதப்பற்றோ தத்துவமோ இல்லாத ஒரு பொதுவான அனுபவம் - இது நம் தாய்மார்களிடமிருந்து நாம் பெறும் தூய அன்பும் பாசமும் ஆகும். இந்த அன்பும் பாசமும் தாய்க்கும் குழந்தைக்கும் ஒருவருக்கொருவர் அத்தகைய பற்றையும் நம்பிக்கையையும் தருகிறது, அங்கிருந்து மற்ற அனைத்தும் கரைந்துவிடும். அழிவு உணர்ச்சிகள் கரைந்து, உலகின் அனைத்து குழப்பங்களும் கரைந்துவிடும். அன்பும் பாசமும் மட்டுமே மிஞ்சி இருக்கும். பயங்கரவாதம், பாலினப் பாகுபாடு, பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி அனைத்தும் பிறர் மீது அன்பும் பாசமும் இல்லாததால் உள்ளன.

ஒரு நபர் அதிக அன்பானவராக இருந்தால், அவருக்கு அதிக நண்பர்கள் இருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் வீட்டில் இருப்பதைப் போல உணர்கிறார்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன்னுடைய சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள் என உணர்கிறார்கள் அதுவே பொது அறிவு. மற்றவர்களிடம் இந்த அன்பையும் பாசத்தையும் நாம் உணராதபோது, நம் சொந்த வீட்டில் கூட நாம் வீட்டில் இருப்பதைக் கூட வீட்டில் இருப்பதைப் போன்று உணர மாட்டோம். நமது சொந்த உடன்பிறந்தவர்கள் கூட எதிரிகளாக பார்க்கப்படுகிறார்கள். பொது அறிவுக் கண்ணோட்டத்தில், அன்பும் பாசமும் உலகளாவிய நன்எனறிகளின் அச்சாரம் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

கடைசியாக, விஞ்ஞான கண்டுபிடிப்புகள், எடுத்துக்காட்டாக, குட்டி குரங்குகள் தங்கள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, அந்த நேரத்தில் தங்கள் தாய்களால் பராமரிக்கப்படுவதை அனுபவிக்காத சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் வளர்ந்த குட்டிக் குரங்குகள் பின்னர், பெரிதான போது, அவை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றன. மற்ற குரங்குகளுடன் எப்படி விளையாடுவது என்று அவற்றிற்குத் தெரியாது, ஆனால் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் மற்றவர்களுடன் சண்டையிடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கின்றன. மறுபுறம் தாய் அரவணைப்பில் வளர்ந்த குரங்குகள் மகிழ்ச்சியாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருக்கின்றன.

இந்த மூன்று கருத்துகளின் அடிப்படையில், உண்மையான அன்பும் பாசமும் - உலகளாவிய நன்னெறிகளின் அச்சாரம் - அனைவரின் மனங்களிலும் வளர்க்கப்பட வேண்டியவை என்று புனிதர் வாதிடுகிறார்.

மனிதனாக இருப்பதை உலகமய அடையாளமாகக் கொண்டிருத்தல்

உலகளாவிய நன்னெறிகளின் அறிமுகத்தை எதிர்கொள்ளும் ஒரு சவால் நமது அடையாளங்கள். “நான் திபெத்தியன், நான் சீனன், நான் பௌத்தன், நான் இந்து” என்று நாம் உணரும்போது, ¬– நம்முடைய சொந்த அடையாளங்களில் இத்தகைய பற்றுதல்கள் தோன்றும் தருணத்தில், மற்றவர்கள் மீது வெறுப்பு ஏற்படுவது நிச்சயம். இது மிகப் பெரிய சவாலாகவும், மிகவும் தீவிரமான விஷயமாகவும் உள்ளது.

ஒரு தனி நபர் நூற்றுக்கணக்கான வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, நான் ஒரு மனிதன் என்று சொல்லலாம், இந்த அடிப்படையில், ஆண் பேரினவாதம் எழுகிறது. ஆண் பேரினவாதத்தின் அடிப்படையில், பெண்ணியம் வருகிறது. நான் ஒரு பௌத்தன் என்று நினைத்தால், நீங்கள் பௌத்தர் அல்லாதவர். நான் இந்து அல்லது முஸ்லீம் என்றால், நீங்கள் இந்து அல்லாதவர் அல்லது முஸ்லீம் அல்லாதவர். ஒரு நபர் மிகவும் பரிணாம வளர்ச்சியடையாத வரை, குறைவான முக்கியத்துவம் வாய்ந்த அடையாளத்தை மிக முக்கியமான அடையாளமாக வைத்திருப்பதற்கான ஆபத்து அல்லது போக்கு உள்ளது. அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் அனைத்தும் உயர்ந்ததாக குறைவான முக்கியத்துவம் வாய்ந்த அடையாளத்தை வைத்திருப்பதால் உருவாகின்றன.

நாம் அனைவரும் மனிதர்கள் என்று ஏன் அடையாளப்படுத்துவதில்லை? வேற்றுகிரகவாசிகள் வந்து நம்மைச் சுடத் தொடங்கினால், நாம் பூமியில் இருந்து வருகிறோம் என்று சொன்னால், நாம் அனைவரும் பூமியிலிருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தைப் பெறுவோம், நாம் அனைவரும் ஒன்றுபட்டுவிடுவோம். நமது அடையாளத்தை உருவாக்க மூன்றாவது காரணிக்காக நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? நாம் ஏன் இப்போது நம் அடையாளத்தை உருவாக்கக் கூடாது? எந்த அடையாளம் நம்மை மகிழ்ச்சியாகவும், உலகத்தை மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறது? மனிதன் என்கிற அடையாளத்தை வைத்துக் கொண்டு, நாம் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்கிறோம், அனைவரையும் நம் சகோதர சகோதரிகளாகப் பார்க்கிறோம்.

Top