விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை மீதான தியானம்

அறிமுகம்

இன்றைய மாலை நேரத்தில் நாம் விவாதிக்கப்போகும் தலைப்பானது தியானப் பகுப்பாய்வு. வாழ்வில் பாதுகாப்பான, நேர்மறை திசையை நோக்கிச் செல்வதற்காக நமக்கு நாமே செயலாற்றுகிறோம், போதிசிட்டா அதனை மூன்று – நிலை வளர்ச்சிகளை சுட்டிக்காட்டுகிறது:

  • போதனைகளை நாம் கேட்க வேண்டும்
  • பின்னர் அதில் மூழ்கி அதனைப் பற்றி சிந்திக்க வேண்டும். 
  • பிறகு நாம் அதைப் பற்றி தியானிக்க வேண்டும். 

அனைவருமே இதனை ஒப்புகொள்கிறார்கள். இதுவே பௌத்த போதனையின் மிகச்சரியான நிலையாகும். 

அமைதியடைதல்

அமைதியடைவதற்கு சுவாசித்தலில் கவனம் செலுத்துவது என்பது முழு நீட்சி ஷமதாவின் தொடக்கம் மட்டுமே என்று சிலர் நம்புகின்றனர். போதனைகளைக் கேட்பதற்கு முன்னர் நாம் அமைதியடைய வேண்டும்; அது பற்றி சிந்திப்பதற்கு முன்னர் நாம் அமைதியடைய வேண்டும்; தியானிப்பதற்கு முன்னர் அமைதியடைய வேண்டும், எனவே சுவாசித்தலில் கவனம் செலுத்துவதால் இதனைச் செய்ய முடியும். அமைதியடைவது மட்டுமே நம்மை ஒற்றை எண்ணம் கொண்ட ஒருநிலைப்படுத்துதல் நிலைக்கு கொண்டு செல்லாது, அதே போல அது நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கும் காரணியாக இருக்காது (இருப்பினும் இது தடைகளை சிறப்பாக தெளிவான மனநிலையோடு கையாளுபவராக்கும்).

சுவாசித்தலில் கவனம் செலுத்துவதென்பது நிச்சயமாக முழு ஒருநிலைப்படுத்துலுக்கான ஒரு கருவியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் அமைதியடைவதற்கு அந்த கவனத்தை மட்டுமே பயன்படுத்துவது நம்மை ஒருநிலைப்படுத்துதல் நிலைக்கு கொண்டு செல்லும் வழியல்ல. உண்மையில் நாம் இதனை சற்றே ஆழ்ந்து பார்த்தால், சுவாசித்தலில் கவனம் செலுத்துவதன் மூலம் நம்மால் முழு ஒருநிலைப்படுத்துதலை அடைய முடியும் என்று தேரவாத போதனைகளில் மட்டுமே உள்ளது. சுவாசித்தலில் கவனம் செலுத்துவது புலன் உணர்தல் – இது உடலானது உணர்வை உணர்கிறது – திபெத்திய பாரம்பரியம் பின்பற்றும் மகாயனா போதனைகளைப் பொறுத்தவரையில், முழு ஒருநிலைப்படுத்துதலைப் பெறுவதற்கு நீங்கள் புலன் அறிதலை பயன்படுத்தாமல் மன அறிதலைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது. 

எனவே நாம் திபெத்திய பௌத்த பாரம்பரியத்தில் தியானத்தை பார்த்தால், சுவாசித்தலில் கவனம் செலுத்துவதில் அமைதி அடைதலைக் கடந்து நாம் பார்க்க வேண்டும். இதுவே முதன்மையானது. 

கேட்டல்

சரி, நாம் போதனைகளைக் கேட்க வேண்டும், அதைப் பற்றி சிந்தித்து தியானிக்க வேண்டும். இந்த மூன்று நிலைகளிலும், நாம் பாகுபடுத்தும் விழிப்புணர்வின் ஒரு வகையைப் பெறலாம் (பொதுவாக அது ஞானம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் ஞானம் என்பது மிகவும் தெளிவில்லாத ஒரு வார்த்தை). முதலில் நாம் ஒன்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இது பொதுவாக "அங்கீகாரம்" என்று அழைக்கப்படுகிறது. காட்சிப் புலன் துறையில் இருப்பதைப் போல ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டுமானால் அது பற்றிய ஆழ்ந்த விவரம் தேவையெனில் அதன் வடிவம் நிறம் உள்ளிட்டவற்றை நீங்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஆக அதுவே வேறுபடுத்துவதில் முதல் நிலையாகும். பாகுபடுத்தும் விழிப்புணர்வு என்ன செய்கிறது, அது அதற்கு ஒரு தீர்க்கமான தன்மையைச் சேர்க்கிறது: "இது நிச்சயமாக இதுதான், அது அல்ல." பாகுபடுத்தும் விழிப்புணர்வு என்பதன் பொருள் அதுவே (நான் சொல்வது போல், இது பொதுவாக ஞானம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் ஞானம் உண்மையில் நாம் இங்கு பேசுப்படும் அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தாது).

சில போதனைகளைக் கேட்டல், கவனித்தலில் இருந்து நாம் பெறுவது என்னவெனில் கேட்டலில் இருந்து எழும் பாகுபடுத்தும் விழிப்புணர்வு, அதாவது பௌத்த போதனைகளின் வார்த்தைகளை வேறுபடுத்துதல். அதன் பொருள் என்னவென்றால் பௌத்த கூற்றுகளை இதர கூற்றுகளோடு வேறுபடுத்துகிறோம் (பௌத்தம் அல்லாத கூற்றுகள் என்ற வைத்துக் கொள்வோம்), “புத்தரின் போதனை இது தான்” என்று அதைப் பற்றி நாம் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்கு வருகிறோம். போதனைகளுடன் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு, இவை தான் பௌத்த போதனைகள் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும், இல்லையா?

எனவே இங்கே இந்த நிலையில் நாம் பெறுவது என்னவெனில் தர்மம் என்கிற வார்த்தைக்கான கருத்து, ஆனால் அதன் பொருள் என்ன என்று நமக்கு எந்த திட்டமும் இல்லை. உதாரணமாக, நான் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறேன். அதனை பௌத்தம் அல்லாத கூற்றுகளுடன் நம்மால் பாகுபடுத்தி பார்க்க முடியும் என்பது நல்லது. நாம் விலைமதிப்பற்ற மனித வாழ்வை கொண்டிருக்கிறோம், புத்தர் மீது உள்ள மரியாதை காரணமாக அது சரி என்று நாம் கருதுகிறோம், ஆனால் இந்த கட்டத்தில் அதன் உண்மைப் பொருள் என்ன என்பதை நாம் உணரவில்லை. இந்த மனித வாழ்க்கை அர்த்தமற்றது, எந்த நோக்கமும் இல்லாதது, வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை என்று பௌத்த போதனைகள் கூறவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. "நம்மிடம் ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை உள்ளது என்பதே பௌத்த கூற்று”: நாம் அதனை பாகுபடுத்துகிறோம். 

சிந்தித்தல்

இப்போது நாம் அடுத்த நிலைக்கு செல்வோம், அதன் பொருளை உணர்ந்து கொள்வதற்கு அதைப் பற்றி சிந்திக்கும் நிலைக்குச் செல்வோம். அதாவது விலைமதிப்பற்ற மனித வாழ்க்கைக்கான விளக்கத்தைப் பற்றி சிந்தித்தல் என்று பொருள் – அதன் அர்த்தம் என்ன? – அது ஏன் விலைமதிப்பற்றது என்று சொல்கிறோம்? என்பதை பகுத்தறிதல். நாம் அதனை புரிந்து கொண்டால், பிறகு போதனையை புரிந்து கொள்வோம், இல்லையா? எனவே நாம் இதனுடன் செயலாற்ற வேண்டும். நாம் அது பற்றி சிந்திக்க வேண்டும். விலைமதிப்பற்ற மனித வாழ்வின் பதினெட்டு அம்சங்கள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நான் விலங்கல்ல. நாம் உயிரியல் உணர்வின் மூலம் பேசவில்லை – நாம் தாவரங்களோ, விலங்குகளோ அல்ல. நாம் அவற்றைப் போல உணர்வதில்லை. மனிதன் என்பவன் நீண்ட காலத்திற்கு எது பயனுள்ளதாக இருக்கும், எது தீங்கு விளைவிக்கிறது என்பதை வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய ஒரு உயிரினம், மேலும் அவனால் புரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் முடியும்.

எனவே நான் விலங்கல்ல என்று சொல்வதன் பொருள் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் – இப்படிச் சொல்வதைப் பகுத்தறிந்து புரிந்து கொண்டு அது ஆய்ந்து நிரூபிக்கிறது என்று நம்ப வேண்டும். இங்கே ஆய்வு செய்வதென்பது நாம் விலங்காக இல்லாமல், மனிதனாகப் பிறந்திருக்கிறோம், பயிற்சிப்பதற்கும் தர்மத்தை உணர்வதற்கும் மதிப்புமிக்க ஒன்று அது என உணர்வதாகும். ஆய்வு செய்தல் என்றால் நாம் அதனை நிரூபிக்க முயற்சிக்கிறோம். விலங்காக இல்லாமல், மனிதப் பிறப்பெடுத்திருப்பது விலைமதிப்பற்ற ஒன்று அது பயிற்சிப்பதற்கும் தர்மத்தை உணர்வதற்குமான வாய்ப்பு.  இங்கே பகுத்தறிந்தது என்னவெனில், நான் விலங்காக இருந்தால் விலங்கின் உள்ளுணர்வின் தீவிரமான ஆளுமையின் கீழ் சிக்கிக் கொள்கிறேன். விலங்கின் உள்ளுணர்வுகள் என்றால் என்ன? அதன் பகுதிக்குள் நுழைந்தால் வேட்டையாடவும் கொல்லவும் தூண்டும் உணர்வு. தான் இருக்கும் இடத்தை பாதுகாக்க, அங்கே யாராவது வந்தால் குறைக்கும் நாயைப் போன்றது. பாலியல் இச்சை வந்தவுடன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மற்ற விலங்குடன் பாலியல் உறவு கொள்வது. விலங்காக இருந்தால் நீண்ட கால நோக்கில் எது உதவிகரமானது எது தீங்கானது என்பதற்கு இடையிலான வேறுபாட்டை அறியும் சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். குறுகிய கால வேறுபாட்டை வேண்டுமானால் அவற்றால் உணர முடியும்  - ஒரு புலி வேட்டையாட வரும்போது தப்பித்து ஓடிவிடலாம் அது உயிரைக் காக்க உதவும். ஆனால் நீண்ட கால நோக்கில் அவற்றால் எது உதவிகரமானது எது தீங்கானது என்று வேறுபடுத்த முடியாது. எனவே நாம் இப்படி இருந்தால், தர்மத்தை பயிற்சிப்பது மிகக் கடினமாகிவிடும்.

நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து அவை எதைப் பற்றி பேசுகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு விலங்காக இருந்தால் அதை நாம் எப்படி அதன் தீமையான உள்ளுணர்வுகளைச் சொல்லி மனமாற்றுவோம் என்பதை கற்பனை செய்து பாருங்கள். எப்போதுமே வேட்டையாட வேண்டும் என்கிற உள்ளுணர்வு எனக்குள் தீவிரமாக இருக்கிறது என்றால்… அதாவது, ஒரு பூனையானது ஒரு பூச்சியையோ அல்லது எலியையோ துரத்திக் கொண்டே இருக்கிறது – அது அவற்றை உண்ணப்போவதில்லை என்றாலும் – அதனை சித்திரவதை செய்து பிடிக்க முயற்சிக்கிறது. தரையில் லேசாக ஏதோ ஒரு உயிரினம் அசைந்தாலே என்னுடைய முதல் தீவிரமான உள்ளுணர்வு உந்துதல் இதுவாக இருந்தால்… அதுவே எனக்குள் தானாக எழும் உள்ளுணர்வாக இருந்தால், அதுவே எனக்குள் அதிகமாக இருந்தால் உண்மையில் நான் எப்படி எனக்குள்ளாகவே செயலாற்றுவது?

நம்முடைய நடத்தையை நாமே உற்றுநோக்குவது என்பது உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது. நம்முடைய அறையில் ஒரு ஈ அல்லது கரப்பான் பூச்சி அல்லது கொசு இருப்பதை கவனிக்கிறோம், அப்போது நாம் நம்முடைய தலையில் ஒரு தொப்பியைப் போட்டுக்கொண்டு, நம்முடைய ஆயுதத்தை வெளியே எடுத்துக் கொண்டு, வேட்டைக்குச் செல்கிறோம், அதைப் பிடித்துக் கொள்ளும் வரை நம்மால் அப்போது தியானிக்கவோ வேறு எதுவுமே செய்யவோ முடியாது. அதைக் கொல்லும் வரை நம்மால் தியானிக்க முடியாது, படிக்க முடியாது, எதுவுமே செய்ய முடியாது. நான் சொன்னது போல, விஷயங்களை அதன் மோசமான முடிவுடன் எடுத்துக்கொள்வது மிகவும் உதவிகரமானது. ஒரு செயலை நாம் செய்வதை நாமே பார்த்தால்,  தலையில் ஒரு கவசத்தை போட்டுக்கொண்டு ஆப்ரிக்க காட்டில் சவாரி செல்வதைப் போல நாம் சிந்தித்து பார்த்தால், நம்முடைய நடத்தை எவ்வளவு மோசமானது என்பதை நாம் காணலாம்.  நாம் தொடர்ந்து நம்முடைய அறையில் இருந்து கொசுவை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தால், குறைந்தபட்சம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதிலாவது நம்முடைய நடத்தையானது மாறும். நாம் ஒன்றும் வேட்டையாடும் விலங்கல்ல. 

அதே சமயம் நாம் விலங்காக இருந்தால் மற்ற உயிரினங்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தால் அவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் – எனவே நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – அதுவும் கூட கற்பதற்காக  அமைதியடைவதற்கு உகந்த சூழல், ஒருநிலைப்படுத்துதலை நமக்குப் பெற்றுத் தராது. 

எனவே, இதைப் போலவே உள்ளிட்ட விலங்குகளின் மற்ற குணாதிசயங்களை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம் – இதுவே நம்மை ஆட்கொள்ளும் தீவிரமான உள்ளுணர்வாக இருந்தால், எந்த வித வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாமல் நம்மை எப்படி மிகச் சிக்கலுக்கு வழிவகுக்கிறது என்பதை காணலாம். 

அல்லது இந்தியாவில் இருப்பதைப் போல நாம் தொடர்ந்து மிக கணமான பொதியை சுமந்து செல்ல வேண்டுமெனில், அதாவது ஒரு எருதானது தொடர்ந்து மிகக்கணமான பொதியை இழுத்துச் செல்ல வேண்டும் (தொடர்ந்து கசையடியும் வாங்கிக் கொள்கிறது) – அதுவும் கூட எந்த நடைமுறை செய்வதையும் மிகக் கடினமாக்குகிறது. இது போலத் தான், நாம் இந்த உதாரணத்தை சிந்தித்துப் பார்த்தால், விலங்ககாகப் பிறந்தால் என்கிற இந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி சிந்தித்தால், நாம் இந்தக் கருத்தை பண்டைய இந்தியச் சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.  நாம் மானைப்பற்றியோ பணக்கார வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாயைப் பற்றியோ சிந்திக்கவில்லை. நாம் தெருநாயைப் பற்றி சிந்திக்காமல் கரப்பான்பூச்சியை பற்றி சிந்திக்கிறோம். நாம் தொல்லையாக இருக்கும் ஒரு விலங்கைப் பற்றி சிந்திக்கிறோம். 

வரையறுக்கும் பண்புகளை நாம் இங்கே சரியாகப் பெறுகிறோம், விலங்கைப் போல நாம் இல்லை என்பதை புரிந்து கொள்கிறோம். நான் அந்த உணர்வுகளில் இருந்து விடுபடுகிறேன், ஏனெனில் எனக்கு சுதந்திரமாக தர்மத்தை பயிற்சிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்னிடம் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை இருக்கிறது. 

இந்த முறையை செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்கலாம். விலங்குகளைப் பற்றி பேசும் போது நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை உணர்கிறோம், நாம் அவற்றில் இருந்து விடுபட்டு இருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்கிறோம், நாம் ஏன் அவற்றில் இருந்து விடுபட்டிருக்கிறோம் என்றால், நமக்கு பயிற்சிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

நாம் முழுவதும் விலங்கு உள்ளுணர்வுகளின் சக்தியின் கீழ் இல்லை என்பதை பார்க்கிறோம். 

  • தரையில் நகரும் எந்த சிறிய உயிரைப் பார்த்ததும் அதை அடிக்க நான் ஓடிச் செல்ல வேண்டியதில்லை.
  • மற்ற எல்லா விலங்குகளும் குரைக்கும் போது நான் குரைக்க வேண்டியதில்லை, அவைகள் செய்வதையே நானும் செய்ய வேண்டியதில்லை.
  • என்னை ஈர்க்கும் ஒன்றை பார்க்கும் போதெல்லாம், அதனோடு இணைந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் வருவதைப் போல - நான் வேறொரு விலங்கின் மீது பாயத் தேவையில்லை. 

விலங்குகளின் உள்ளுணர்வுகள் என்னிடம் சிறிதளவேனும் இருந்தாலும், நான் அப்படி செயல்படத் தேவையில்லை. நான் ஒரு மனிதன். எது சரி எது தவறு என்று வேறுபடுத்திப் பார்க்கும் திறன் எனக்கு இருக்கிறது. எனவே இந்த காரணத்திற்காக நான் விலைமதிப்பற்ற மனித வாழ்வையும், ஒரு நோக்கத்திற்காகவும் விலைமதிப்பற்ற மனித வாழ்வை கொண்டிருக்கிறேன். அந்த நோக்கமானது தர்மத்தை கற்று பயிற்சிப்பது, விலைமதிப்பற்ற இந்த வாழ்க்கை ஏராளமான பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமானதல்ல.

இந்த நிலையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தர்மத்தை பற்றி சிந்தித்து அதை பகுப்பாய்வு செய்கிறோம். நாம் வார்த்தைகளை மட்டும் நம்பியில்லை. அது முதல் நிலை.  பண்புகள் அல்லது விலைமதிப்பற்ற மனித வாழ்வை விவரிக்கும் தன்மைகள் மற்றும் நம்முடைய சொந்த சூழல், நம்முடைய சொந்த குறிப்பிட்ட சுற்றுப்புறம், பகுத்தறிவை நம்பி இருப்பதால் நாம் அனுமானித்து புரிந்து கொள்கிறோம். அனுமானம் என்றால் பகுத்தறிவை நம்பி இருப்பது என்று அர்த்தம் - இதனால் அது எனக்கு தெரிந்தது என்கிற அனுமானம். சிந்தனையில் இருந்து எழக்கூடிய பாகுபடுத்தும் விழிப்புணர்வை நாம் பெறுகிறோம், அர்த்தமற்ற வார்த்தைகளின் சிந்தனையாக இல்லாமல், ஒரு திட்டம் அர்த்தத்தை கொண்டுள்ளது என்று அதில் கவனம் செலுத்துகிறது. எனவே அர்த்தத்தை கொண்டிருக்கும் அந்த திட்டமானது இங்கே “நான் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறேன் ஏனெனில் நான் விலங்காக இருப்பதில் இருந்து விடுபட்டிருக்கிறேன்.” மற்ற காரணங்கள், துல்லியமில்லாத விளக்கங்களில் இருந்து வேறுபடுத்தும், அது குறித்து தீர்மானமாக இருக்கச் செய்கிறது.

பாகுபடுத்தும் விழிப்புணர்வில் கவனம் செலுத்த முயற்சிக்கலாம்: “நான் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறேன் ஏனெனில் நான் விலங்காக இருப்பதில் இருந்து விடுபட்டிருக்கிறேன்.” நாம் அந்தப் புரிதலில் கவனம் செலுத்துவோம். உண்மையில் இந்த வரிசையானது வேறு விதமாக இருக்க வேண்டும்: “நான் ஒரு விலங்காக இருந்து விடுபட்டவன். அதனால் நான் விலைமதிப்பற்ற மனித உயிரைக் கொண்டுள்ளேன்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் ஒரு காரணத்தை நம்பி இருக்கிறோம், அதன் பின்னர் முடிவுக்கு வருகிறோம், மீண்டும் மீண்டும் அந்த பகுத்தறிவையே நாம் நம்பியிருக்கிறோம்.

இந்த முதல் இரண்டு நிலைகளான கேட்டல் மற்றும் சிந்தித்தல் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பெறும் பாகுபடுத்தும் விழிப்புணர்வானது முற்றிலும் வேறுபட்டது.

  • முதலாவது: “நான் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறேன்.” உங்களுக்குத் தெரியும் அது பௌத்த போதனைகள் என்று – அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை – ஆனால் அது சரி என்று நாம் மட்டுமே கருதுகிறோம். அது ஏன் என்று உண்மையில் நமக்குத் தெரியாது. அதன் அர்த்தம் என்ன என்று உண்மையில் நாம் புரிந்து கொள்ளவில்லை. 
  • ஆனால் இரண்டாவதுடன், விலைமதிப்பற்ற மனித வாழ்வின் அர்த்தம் என்ன என்பது நமக்குத் தெரிகிறது, நாம் ஏன் அதைக் கொண்டிருக்கிறோம் (அதற்கான காரணம்), அதனை விலைமதிப்பற்றதாக உருவாக்குவதற்கான நோக்கத்தை நாம் அறிவோம் (தர்மத்தை பயிற்சிப்பதற்கான விலைமதிப்பற்றவராக மாற்றக்கூடியது). எனவே புரிந்து கொள்ளாமல் அதனை உண்மை என்று ஊகிப்பதற்கு பதிலாக, இதனை அனுமானத்தின் மூலம் செல்லத்தக்கதாக்கலாம் என்று தெரிந்து நாம் இந்த முடிவுக்கு வரலாம். அதாவது பகுத்தறிவு மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். மேலும் பாகுபடுத்து விழிப்புணர்வை நாம் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் அதைப் பற்றி தீர்மானத்துடன் இருக்கிறோம். “ஏதோ ஒரு காரணம் மற்றும் நோக்கத்திற்காக உண்மையில் நான் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறேன்” என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

விவாதம்

இங்கே விவாதம் என்பது உறுதியான நம்பிக்கையைப் பெறுவதற்கு மிகவும் உதவிகரமான வழியாகும், ஏனென்றால் விவாதம் என்ன செய்கிறது என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாத அலைச்சலை அகற்றவோ அல்லது அர்த்தத்தைப் பற்றிய துல்லியமான யோசனையைப் பெறவோ உதவுகிறது. நாங்கள் உறுதியற்றவர்களாக இருக்க மாட்டோம். என்னிடம் அது இருக்கிறதா? என்னிடம் அது இல்லையா? இதன் பொருள் இதுதானா? இதன் பொருள் அதுவா?  என்று நாம் அலைந்து கொண்டிருக்க மாட்டோம். ஏனென்றால், நம்மால் செய்ய கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அதிகமான தவறுகளை மற்றவர்கள் நம் சிந்தனையில் கண்டுபிடிப்பார்கள். நீங்கள் உட்கார்ந்து கொண்டு உங்களது புரிதலை சோதித்து பார்த்தால், “அடடே போதுமான அளவு புரிதல் இருக்கிறது” என்பதை நீங்கள் மிக எளிதாகப் பெறலாம்.  மற்றவர்களால் நம்முடைய சிந்தனையில் இருக்கும் தவறுகளையும் குறைபாடுகளையும் மிகச்சரியாக கண்டறிய முடியும், மேலும் அவர்களால் முடிந்தவரையில் அதை வெளியே  சொல்லாமல்வைத்திருக்கப் போகிறார்கள். சில நேரங்களில் விவாதத்தில், உணர்ச்சிவசப்பட்ட நிலையை நீங்கள் அடையும் போது, “போதும் என்கிற வரை பொறுத்துவிட்டேன், என்னைத் தனியாக விடு” என்று நீங்கள் சொல்லலாம். தியானத்தில் உங்களுக்கு நீங்களே இதைச் செய்தால், நிச்சயமாக நீங்கள் முன்கூட்டிய நிறுத்தி இருக்கலாம். எனவே இந்த காரணத்திற்காகத் தான் திபெத்திய பாரம்பரியம் விவாதிக்கும் முறையை மிக அதிகமாக ஊக்குவிக்கிறது.  நமது புரிதலைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லாமல் உறுதியான நம்பிக்கையைப் பெற இது உதவும்.

பகுப்பாய்வு தியானம்

பகுப்பாய்வு தியானம் என்பது போதனைகளைப் பற்றி சிந்திப்பது. பின்னர் அது பற்றி நாம் தியானம் செய்ய வேண்டும். அதாவது பெரும்பாலான மக்கள் தியானத்தை இரண்டாம் நிலை என்று கருதுகின்றனர், ஆனால் உண்மையில் அது போதனைகளைப் பற்றி சிந்திப்பதாகும். தியானித்தல் என்பது இதற்கு அப்பாற்பட்டது. ஆனால் நிச்சயமாக இந்த இரண்டாவது நிலையைச் செய்யாமல் நம்மால் தியானிக்க முடியாது. போதனையை நீங்கள் புரிந்து கொண்டு அது சரி என்று நம்பிக்கை வைக்காத நிலையில், உண்மையில் உங்களால் அது குறித்து தியானம் செய்ய முடியாது. உங்களால் எதையோ புரிந்து கொள்ள முடிகிறது அது தவறு என்று நம்புகிறீர்கள், ஆனால் நாம் இங்கே புரிதல் மற்றும் அது சரி என்று நம்புவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், தியானம் என்பது, இந்த புரிதலையும், நம்பிக்கையையும், நமது அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்கும் ஒரு நிலையாகும். 

முதலில் நாம் பகுப்பாய்வு தியானத்தைச் செய்வோம், நான் அதை பகுத்தறிவு தியானம் என்றும் நிலைப்படுத்தும் தியானம் என்றும் சொல்லவே விரும்புவேன். இந்த இரண்டும் போதனைகளை ஒருங்கிணைக்கவும் நமக்குள் கொண்டு சேர்க்கவும் உதவுவது. பகுத்தறிவு தியானத்தை பொருத்தவரையில் நாம் முதன்மையாக இரண்டு மனக்காரணிகளைப் பயன்படுத்துவோம் (இதில் வலியுறுத்தல் உள்ளது; இதர பல மனக் காரணிகளும் உள்ளன, நிச்சயமாக, நாம் ஒருநிலைப்படுத்துதல் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த வேண்டும்). நான் அவற்றை மொழிபெயர்க்க விரும்பும் வழி மொத்த கண்டறிதல் (rtog-pa) மற்றும் நுட்பமான பகுத்தறிவு (dpyod-pa). சில சூழல்களில் இந்த இரண்டு சொற்களும் "விசாரித்தல்" மற்றும் "ஆய்வு செய்தல்" என்று பொருள்படும்.

இந்த இரண்டு மனக்காரணிகளை நாம் எப்படி புரிந்து கொள்வது? ஒரு நூலை திருத்துவதை உதாரணமாக வைத்துக் கொள்வோம், நீங்கள் எழுதியது அல்லது வேறு யாரேனும் எழுதியதில் ஏதேனும் பிழைகள் உள்ளதா என்று பார்க்கிறீர்கள். முதலில் மேலோட்டமாக பார்த்து, அச்சிடப்பட்ட இந்தப் பக்கத்தில் பிழைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவோம். நீங்கள் மேலோட்டமாக பார்க்கிறீர்கள், உங்களால் கண்டறிய முடியும். பின்னர் நீங்கள் நன்றாக ஆராய்ந்து குறிப்பிட்ட விவரங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். இரண்டிற்குமான வித்தியாசம் தெரிகிறதா? அதனால் என்ன நடக்கிறது என்பதை மொத்தமாகக் கண்டறிவது, பின்னர் மிகக் கவனமாக ஆராய்வது, இது ஒரு நுட்பமானது. அதுவே விசாரித்தல், என்ன நடக்கிறது என்பதற்கான முழுமையையும் கண்டறிதல் அதன் பின்னர் மிகக் கவனமாக ஆராய்வது என்ன நடக்கிறது என்பதற்கான நுட்பமான பகுத்தறிவு ஆகும்.

விலைமதிப்பில்லாத மனித வாழ்வை கொண்டிருக்கும் நாம் பகுப்பாய்வு தியானத்திற்காக என்ன செய்கிறோம்? நம் மீதே நாம் கவனம் செலுத்தி, விசாரித்து விலங்காக இல்லாமல் இருப்பதை விவரிக்கும் குணாதிசயங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று ஆராய்கிறோம். ஆக நாம் மேலோட்டமாக ஆராய்கிறோம், அதில் நாம் அப்படி இல்லாமல் சுதந்திரமாக இருப்பதை கண்டறிகிறோம். சரி, ஆராயும் போது நாம் என்ன கண்டறிகிறோம்? நம்மால் கற்றுக்கொள்ள முடியும், நம்மால் தொடர்புகொள்ள முடியும், விலங்கை விட மிக அதிக சவுகரியமான நிலையில் நம்மால் செயல்பட முடியும் என்பதை நாம் கண்டறிகிறோம். சரியா? அதையே செய்யுங்கள். வெறும் வார்த்தைக்கா இல்லாமல் நீங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்கிறீர்கள். நாங்கள் இரண்டாவது நிலையைச் செய்திருக்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் உள்ளது என்பது நினைவிருக்கிறதா? இதுபோன்ற விஷயங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்:

  • என்னால் கற்றுக்கொள்ள முடியும்.
  • என்னால் தொடர்பு கொள்ள முடியும்.
  • ஒரு மிருகத்தை விட மிக நுட்பமான அளவில் என்னால் செயல்பட முடியும்.

சரி, விலங்காக இருப்பதில் இருந்து சுதந்திரம் இருப்பதை நாம் கண்டறிந்திருக்கிறோம். அதன் பின்னர் நாம் மிகக் கவனமாக ஆராய்ந்தால், பகுத்தறிவோடு இருந்தாலும் சில நேரங்களில் நாம் விலங்காக செயல்படலாம் – உதாரணமாக, நம்முடைய பாலியல் நடத்தைகள் நாம் டிஸ்கோக்களுக்குச் செல்கிறோம், ஆடவர்களின் பின்னால் நுகர்ந்து பார்த்து அவர்களில் ஒருவரை இணையாகத் தேர்வு செய்து, ஒரு இரவை மட்டும் அவருடன் கழிக்கும் உறவை வைத்துக்கொள்கிறோம் – நாம் அப்படியே தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நாம் வேறுபடுத்தி நம்முடைய நடத்தையை மாற்ற முடியும். எனவே நாம் ஒரு விலங்கு அல்ல என்ற பகுத்தறிவில் கவனம் செலுத்துகிறோம். நமது நடத்தையின் அடிப்படையில் இவை சிறந்த விவரங்கள். 

ஒரு ஜோடியைத் தேடி நாம் சுற்றிக் கொண்டிருக்கலாம் அல்லது நம்முடைய வேட்டைக்காக கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை நம்முடைய வீட்டில் தேடிக்கொண்டிருக்கலாம், அல்லது எதுவாக இருந்தாலும், நல்லது, நான் ஒருவேளை அப்படி செயல்படலாம், ஆனால் உண்மையில் நான் கட்டாயப்படுத்தப்படவில்லை.

நான் ஒரு தேர்வு செய்ய முடியும். நான் அப்படி இருக்க விரும்பவில்லை. நான் ஒரு மனிதன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு விலங்கல்ல. மற்ற நாய்களைப் போல நானும் குறைக்கத் தேவையில்லை. யாராவது நீ இப்படித்தான் உடை அணிய வேண்டும், இப்படித் தான் முடியை வைத்துக் கொள்ள வேண்டும், இப்படித் தான் பாட வேண்டும் என்று சொன்னால், நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. நாம் விலங்குகலல்ல, உங்களுக்கேத் தெரியும் மற்ற நாய்கள் குறைத்தால் பின்னர் நாமும் குறைக்கிறோம்.” உரு சரியான பொருந்தக்கூடிய விஷயத்தை இங்கே பார்ப்போம். எல்லோருமே போர், போர், போர் என்று கத்திக் கொண்டிருந்தால் நாமும் போர், போர் என்று கத்த வேண்டிய அவசியமில்லை, நாம் அப்படி இருக்கிறோமா? மற்ற விலங்குகள் குறைத்தால் பதிலுக்கு நாமும் குறைப்பதற்கு நாம் விலங்குகலல்ல.

எனவே இந்த நுட்பமான விவரத்தில் "நான் உண்மையில் ஒரு விலங்கு அல்ல" என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அதை செய். “போய் எலும்பை எடுத்து வா” என்று எஜமானர் இடும் கட்டளைக்காக காத்திருக்கும் நாயைப் போல அங்கே உட்கார்ந்திருக்க வேண்டிய விலங்குகள் அல்ல நாம். நம்மால் சிந்திக்க முடியும்.

கண்டறிதல் மற்றும் பகுத்தறிவை பராமரிப்பதனால், குறிப்பாக நாம் ஒரு விலங்கு அல்ல என்ற பகுத்தறிவு, மீண்டும் பகுத்தறிவை நோக்கிச் செல்கிறோம்:

  • நாம் விலங்குகளாக இருந்தால், நம்மால் தர்மத்தை முழுமையாக கடைப்பிடிக்க முடியாது.
  • விலங்குகளாக இல்லாமல் இருப்பதற்கான சுதந்திரம் நமக்கு உள்ளது.
  • எனவே தர்மத்தை கடைப்பிடிக்க நமக்கு விலைமதிப்பற்ற மனித உயிர்கள் உள்ளன.

பின்னர் நாம் அந்த அனுமானப் புரிதலில் கவனம் செலுத்துகிறோம், மேலும் ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையைப் பெற்றுள்ளோம் என்று பகுத்தறிவதில் கவனம் செலுத்துகிறோம்.

ஆகவே இவற்றை தயவு செய்து செய்யுங்கள்:

  • நாம் விலங்குகளாக இருந்தால், நம்மால் தர்மத்தை முழுமையாக பயிற்சிக்க முடியாது.
  • விலங்குகளாக இல்லாமல் இருப்பதற்கான சுதந்திரம் நமக்கு உள்ளது. என்னால் அதை பகுத்தறிய முடிகிறது.
  • எனவே தர்மத்தை கடைப்பிடிக்க நமக்கு விலைமதிப்பற்ற மனித உயிர்கள் உள்ளன.
  • இப்போது நாம் ஏன் ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை கொண்டிருக்கிறோம் என்பதை அனுமானித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

சரி. இந்த பகுத்தறிவு இருப்பதால், இது பகுத்தறிவு தியானம் என்று அழைக்கப்படுகிறது. நான் சொன்னது போல், இது பொதுவாக பகுப்பாய்வு தியானம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் பகுப்பாய்வு என்பது அந்த அர்த்தத்தை வெளிப்படுத்தாது, இல்லையா? தியானம் செய்வதில் இருந்து எழக்கூடிய பாகுபடுத்தும் விழிப்புணர்வு இங்கே உள்ளது. இது மிகவும் தீர்க்கமானது, ஏனென்றால் இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை ஏதே ஒரு காரணத்திற்காக நம்மிடம் இருப்பதை நாம் பகுத்தறிய முடியும். மேலும் நாம் கவனமாக ஆய்வு செய்கிறோம். நிச்சயமாக ஏதோ ஒரு காரணத்திற்காக  அதை வைத்திருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

தியானத்தை நிலைப்படுத்துதல்

தியானத்திற்கு இரண்டு நிலைகள் உள்ளன, ஒன்று பகுத்தறிவு மற்றொன்று நிலைப்படுத்துதல். தியானத்தை நிலைபடுத்துவதன் மூலம், விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை அதன் விவரங்களை தீவிரமாக பகுத்தறியாமல் கவனம் செலுத்துகிறோம் - இங்கே முக்கியமான வார்த்தை தீவிரம் - "எதனால் இப்படி எனில் நான் ஒரு மிருகம் அல்ல" "நான் ஒரு விலங்காக இருந்தால், நான் தியானம் செய்ய முடியாது உள்ளிட்டவற்றை பகுத்தறியாமை. எனவே நாம் என்ன செய்கிறோம் என்றால், நமக்கு ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் உள்ளது என்ற உணர்வில் கவனம் செலுத்துகிறோம். இங்கே உணர்வு என்பதன் பொருள் உறுதியான நம்பிக்கை – நாம் அதை உண்மையாக நம்புகிறோம். அதனாலேயே நீங்கள் அதில் கவனம் செலுத்துகிறீர்கள். இது விவரங்களை பகுத்தறியவில்லை. இந்த விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையைப் பெறுவதற்கான உறுதியான நம்பிக்கை மற்றும் உணர்வு. நிச்சயமாக, அது என்ன என்பதைப் புரிந்துகொள்வதையும், அதைக் கண்டறிவதையும் அடிப்படையாகக் கொண்டது.

இப்போதைக்கு இப்படியும் செய்யலாம்.

இந்த வகை தியானத்தின் மூலம் நமது குறைபாடுகள் மற்றும் நேரத்தை வீணடித்தல் போன்ற பிரச்சனைகளை நாம் போக்குகிறோம், மேலும் இந்த வகையான தியானத்தின் மூலம் நமது விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையை உணர்ந்து, அதை தர்மத்திற்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் மூலம் நமது நல்ல குணங்களை வளர்த்துக் கொள்கிறோம்.  ஏனெனில் நம்மைப் பற்றி நாம் ஏதாவது புரிந்துகொண்டு, அதை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்; நாம் அதை உணர்கிறோம். இது மாற்றத்தைக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது பிரச்சனைகளுக்கான காரணத்தை நீக்கி நல்ல குணத்தை வளர்க்கிறது.

எந்தப் புரிதலையும் சேர்த்துக்கொள்ளாமல் சுவாசித்தலில் கவனம் செலுத்துவதன் மூலம் இதை நாம் வேறுபடுத்திப் பார்க்கலாம். அது நம்மை அமைதிப்படுத்தலாம், அதனால் தூக்க மருந்தை சாப்பிட்டதைப் போல தூங்கச் செல்லலாம். ஆனால் ஒரு போதும் இது நம்முடைய பிரச்சினைகளுக்கான காரணங்களை நிறுத்தாது. மறுபுறம் நாம் புரிதலோடும் நிலையற்ற தன்மை, தற்காலிக மாற்றங்கள் போன்ற விஷயங்களைப் பகுத்தறிந்து புரிந்துகொள்வது, சுவாசத்தை கட்டுப்படுத்துபவர் அல்லது வளர்ச்சியின் நீக்கப்பட்ட பார்வையாளராக நான் திடமாக இல்லை- பகுத்தறிவோடும் சுவாசித்தலில் கவனம் செலுத்தினால் அது செயல்படத் துவங்கும். அதன் பின்னர் நம்முடைய பிரச்னைகளுக்கான காரணங்களில் இருந்து விடுபடுவதற்கான காரணமான அது செயல்படத் தொடங்கும். 

தர்மத்தின் நோக்கத்தை உண்மையில் கொண்டு வருவதற்கு இந்த பகுத்தறிவு மிகவும் முக்கியமானது: இது நமது பிரச்சனைகளுக்கான காரணங்களை அகற்றி, நமது ஆற்றல்கள், நேர்மறை ஆற்றல்களை உணரச் செய்கிறது.

அறிவார்ந்த, உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி ரீதியாக உணர்ந்த புரிதல்கள்

பகுத்தறிவு மற்றும் நிர்ணயம் செய்யும் தியானம் இரண்டும் கருத்தியல் சார்ந்தவை என்பதை இங்கே கவனிக்கவும். நாம் இங்கு விவரித்த அவை இரண்டும் கருத்தியல் அறிவாற்றல். அவை இரண்டும் கருத்தியல் சார்ந்தவை. அவை இரண்டும் ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை என்றால் என்ன என்ற சிந்தனையின் ஊடகம். கருத்தியல் என்றால் அதுதான் - இது ஒரு ஊடகத்தின் மூலமான சிந்தனை. 

பகுத்தறியும் தியானம் பகுத்தறிவை நம்பி இருந்தது, நிலைப்படுத்துவது பகுத்தறிவை நம்பவில்லை, இருப்பினும் இரண்டும் ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை என்றால் என்ன என்ற யோசனையின் மூலம் நமது விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறது. எனவே சிந்தனை என்பது ஒரு பிரதிநிதித்துவம். அதாவது, சிந்தனை என்றால் என்ன? ஒரு சிந்தனை என்பது விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையின் பிரதிநிதித்துவம். நாம் அதை வார்த்தைகள் அல்லது ஒரு படம் அல்லது உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், ஆனால் இந்த பிரதிநிதித்துவத்துடன் தொடர்புடைய ஒரு அர்த்தம் உள்ளது. வார்த்தையாகவோ அல்லது உருவமாகவோ அல்லது உணர்வாகவோ ஏதோ ஒரு விதத்தில் அதன் பொருள் ஒருங்கிணைந்திருக்கிறது.

நான் இதை ஏன் முன்வைக்கிறேன், என்றால் பௌத்த தியானத்தின் செயல்முறையைப் புரிந்துகொள்வதில் நமக்கு ஏராளமான குழப்பம் உள்ளது, ஏனென்றால் முற்றிலும் மாறுபட்ட மேற்கத்திய அமைப்பிலிருந்து வரும் சொற்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பெரும்பாலும் மேற்கத்திய மொழியில் அறிவுசார் செயல்முறை மற்றும் ஒரு உள்ளுணர்வு செயல்முறைக்கு இடையில் நாம் வேறுபடுகிறோம். அப்படியானால், நமது பௌத்த பகுப்பாய்வில் இது எதனுடன் ஒத்துப்போகிறது?

  • நாம் வார்த்தைகளைக் கொண்டோ - வார்த்தைகளைக் கொண்ட ஒரு சிந்தனையையோ பிரதிநிதித்துவப்படுத்தினால்- வார்த்தைகளை ஊடகமாகப் பயன்படுத்தி எதன் மீதாவது கவனம் செலுத்தும்போது, அதை அறிவார்ந்த செயல்முறை என்று அழைப்போம்.
  • ஒரு உணர்வு அல்லது ஒரு உருவத்தின் மூலம் எதையாவது பிரதிபலிக்கும் போது - ஒரு உணர்வு அல்லது ஒரு உருவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனை - அதில் கவனம் செலுத்தினால், அதை ஒரு உள்ளுணர்வு செயல்முறை என்று அழைக்கிறோம்.

நாம் எதையாவது வார்த்தைகளால் அல்லது ஒரு உருவம் மற்றும் உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இந்த பிரதிநிதித்துவம் துல்லியமான பிரதிநிதித்துவமாகவோ அல்லது தவறான பிரதிநிதித்துவமாகவோ இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த அறிவுசார் செயல்முறை மற்றும் உள்ளுணர்வு செயல்முறை இரண்டும் கருத்தியல் ஆகும், மேலும் வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன அல்லது உணர்வு அல்லது உருவம் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய சரியான புரிதலுடன் இரண்டும் இருக்க வேண்டும். நீங்கள் அதை பின்பற்றுகிறீர்களா?

இந்தப் புரிதலை ஜீரணிக்க நாம் அதை நம்ப வேண்டும், மேலும் உறுதியான நம்பிக்கையுடன் அதில் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் மேற்கு நாடுகளில் உள்ளார்ந்த புரிதல் என்று சொல்வோம். இந்த உள்ளார்ந்த புரிதல் பாராட்டு போன்ற ஆக்கபூர்வமான உணர்ச்சிகளுடன் இருக்கும்போது - ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையின் மதிப்பையும் அரிதான தன்மையையும் நாம் பாராட்டுகிறோம் - நாம் நமது புரிதலால் உணர்ச்சிவசப்படுகிறோம் என்று மேற்கில் நாங்கள் கூறுவோம்.

அதனால்தான் ஆன்மீக ஆசிரியருடன் இரண்டு அம்சங்களில் ஆரோக்கியமான உறவுமுறை உள்ளன. ஒன்று ஆசிரியரின் நல்ல குணங்களில் உறுதியான நம்பிக்கை, மற்றொன்று அவர்களின் கருணையைப் பாராட்டுதல். உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம், அதே போல நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். இவை இரண்டும் நம்மிடம் இருக்கும் போது, அதை வார்த்தைகளால் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் புரிதல் வந்ததா அல்லது ஒரு உணர்வு மூலம் வந்ததா என்பது முக்கியமில்லை; அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

எனவே நாம் நமது மேற்கத்திய பகுப்பாய்விலிருந்து அறிவார்ந்த அல்லது உள்ளுணர்வு வகை அணுகுமுறையைப் பின்பற்றுகிறோமா என்பது முக்கியமில்லை. அதில் உறுதியான நம்பிக்கையும் புரிதலும், பாராட்டும் இருக்கும் வரை, நம்மால் உண்மையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: நாம் சம்சாரியத்தில் இருக்கும் வரை, மாற்றம் தொடர்ச்சியானதல்ல. அது ஏற்ற இறக்கத்துடன் செல்கிறது. இது ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்காது. நீண்ட கால போக்கு முன்னேற்றமாக இருக்கலாம், ஆனால் நாளுக்கு நாள், மணிற்கு மணிக்கு, அது ஏறி இறங்கிச் செல்கிறது. 

ஒரு உள்ளுணர்வு அணுகுமுறை உள்ளிட்டவற்றை நாம் அடையாளம் காண முயற்சிக்கும்போது, புரிந்துகொள்வதற்கும் நம்பிக்கையுடனும் இருக்க, நாம் இன்னும் ஒரு பகுத்தறிவை நம்பியிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், நமக்கு ஏதாவது ஒரு உணர்வு இருந்தால், அது மிகவும் துல்லியமாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும், அதன் அர்த்தம் என்னவென்று நமக்குப் புரியாது. ஆனால் நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தினால், நமக்குள்ளேயே பல்வேறு விஷயங்களைப் பகுத்தறிந்து, அதைப் புரிந்து கொண்டால், அதை நாம் உறுதியாக நம்புகிறோம், வரையறைகளை அறிந்திருக்கிறோம், அதை நமக்குள் அடையாளம் காண முடியும். 

நாம் ஒரு அறிவார்ந்த வகையாக இருந்தால், இதைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம், வார்த்தைகள் மூலம் கவனம் செலுத்தலாம், அல்லது நாம் மிகவும் உள்ளுணர்வு வகையாக இருந்தால், அதைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உருவம் அல்லது உணர்வு அடிப்படையில் கவனம் செலுத்தலாம். அது முக்கியமில்லை. இரண்டும் செல்லுபடியாகும் இரண்டும் கருத்தியல் சார்ந்தவை. ஆனால் நமது அறிவாற்றல் கருத்தியல் அல்லாததாக இருக்கிறது - அது மிக மிகக் கடினமானது. அது எதையாவது உணர்ந்துகொள்வது – அது பற்றிய ஒரு சிந்தனை, உணர்வின் மூலம் இல்லாமல், நேரடியாகவே நமக்கு ஒரு விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்கிறோம். 

ஆகவே நாம் இந்தத் தெளிவைக் கொண்டிருந்தால், நாம் அறிவார்ந்த வகையா அல்லது உள்ளுணர்வு சார்ந்த வகையா என்பதை நம்மால் காண முடியும், இருப்பினும் எந்த ஒரு முன்னேற்றத்தை உருவாக்கவும் இவ்வகையான செல்லத்தக்க அறிதல் மூலம் செல்ல வேண்டும்: நீங்கள் எதையோ கேட்கிறீர்கள்; அது சரி என்று கருதுகிறீர்கள். அதன் பின்னர் புரிந்து கொண்டு, பறுத்தறிகிறீர்கள்; அனுமானத்தின் பேரில் ஒரு புரிதலைப் பெறுகிறீர்கள். அதன் பின்னர் நீங்கள் அதில் கவனம் செலுத்தலாம். பாதையில் சரியான முன்னேற்றத்தை எப்படி பெறுவது என்பதற்கான செயல்முறை இதுவேயாகும். அது கேட்டல், சிந்தித்தல் மற்றும் தியானித்தல் மூலம் நிகழ்கிறது. பகுப்பாய்வு தியானம் என்பதும் அதைப் பற்றியதே. 

இதற்கு சிறிது காலம் எடுக்கும். ஒருவேளை நீங்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அதன் பின்னர் அது பற்றி சிந்தித்து அதை மனதில் அசை போட வேண்டும். பகுப்பாய்வு தியானம் என்றால் என்ன என்பது பற்றி ஏற்கனவே நீங்கள் மேலோட்டமாக புரிந்துகொண்டிருக்கலாம், இந்த விவாதத்தின் மூலம் இப்போது இன்னும் கொஞ்சம் தெளிவை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மெதுவாக அதைப் பற்றிச் செல்லுங்கள்.

வினாக்கள்

பகுப்பாய்வு தியானத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் ஆசிரியர்களுடனான உறவுமுறையில் அது எவ்வாறு தொடர்புடையது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எனக்கு புரியாத ஒரு விஷயம் நாம் ஏன் ஆசிரியர்களை கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள், அவர்கள் என்ன சொன்னாலும், எப்படி நடந்து கொண்டாலும், அமைதியாக, எந்த சந்தேகமோ அல்லது கேள்விகளோ கேட்கக் கூடாது என்று ஏன் சொல்லப்படுகிறது. 

உண்மையில் தர்மத்தில் நாம் காணும் உண்மையான போதனைகள் அப்படி இல்லை. குறிப்பாக வினயா பார்வையான நன்னெறி ஒழுக்கத்தில் பார்த்தால்: ஒரு ஆசிரியர் நன்னெறி ஒழுக்கத்திற்கு எதிராக நடந்து கொண்டால், அவர் ஏற்ற உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டால், நாம் அவற்றை சுட்டிக்காட்டலாம். நாம் அவர் சொல்வது போலவே செயல்படத் தேவையில்லை. ஒரு ஆசிரியர் நன்னெறி போதனைகளுக்கு எதிராக நடந்து கொள்ள வேண்டும் என்று நம்மை பணித்தால், நீங்கள் முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்லாம் என்று அது கூறுகிறது. 

சூத்திரம் மற்றும் தந்திர போதனைகளை ஆழ்ந்து பார்த்தால்: ஒரு ஆசிரியர் போதனைகளுக்கு பொருந்தாத ஏதோ ஒன்றைச் சொன்னால், நாம் அவரிடம் “இது எனக்குப் புரியவில்லை. நீங்கள் ஏற்கனவே சொன்னதும் இதுவும் முரண்படுகிறது. இன்னும் ஆழமாக விளக்க முடியுமா” என்று கேட்கலாம். “இன்னும் ஆழமாக விளக்க முடியுமா? என்கிற வார்த்தைகள் முரண்பாட்டை காட்டுகிறது.” ஏனெனில் மற்றவர்களைப் போல ஆசிரியர்கள் வாய் தவறி ஏதேனும் சொல்லி இருப்பார்கள்.  

புத்தரின் முன் ஜென்ம வாழ்க்கை என்கிற ஒரு பழைய உதாரணம் போல: புத்தரையும் மற்ற மாணவர்களையும் வெளியே சென்று திருடுமாறு அவருடைய ஆசிரியர் சொன்ன போது, புத்தர் வெளியே சென்று அப்படி செய்யவில்லை. உடனே அந்த ஆசிரியர் ஏன் திருடச் செல்லவில்லை? என்று கேட்டார், அதற்கு புத்தர் “திருடுவது எப்படி ஒருவருக்கு உதவும்?” என்று கேட்டார். “சிறப்பு, நீ ஒருவன் மட்டுமே பாடத்தின் மையப்புள்ளியை புரிந்து கொண்டிருக்கிறாய்” என்று அவருடைய ஆசிரியர் கூறினார்.

உயரிய தந்திரப் புள்ளியில் இருந்து பார்த்தால்: ஆசிரியர் முரணாக நடந்து கொண்டாலோ, தர்மத்திற்கு எதிராக ஆசிரியர் நடந்து கொண்டாலோ, ஆசிரியரிடம் அது குறித்து கேள்வி கேட்கும் போது, அவர் அதை ஏற்றுக் கொண்டு அவர் மாறவில்லையெனில் – இந்த அனைத்து தவறுகளையும் நாம் பார்த்தால், ஆசிரியரிடம் இருந்து நாம் தாந்திரீக உள்ளுணர்வையே பெற்றிருந்தாலும் கூட, நமக்கு அறிவுறுத்தப்படுவது என்னவெனில் அந்த ஆசிரியரிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும். அந்த ஆசிரியருடனே தொடர்ந்து இருப்பதற்கோ அவரிடமே படிப்பதற்கோ எந்த அவசியமும் இல்லை. ஆனால் அமைதியாக, ஒரு மரியாதையுடன் விலகி இருத்தல் நல்லது. அவதூறுகளை பரப்பாமல், அந்த ஆசிரியர் எவ்வளவு மோசமானவர் என்று சிந்திக்க வேண்டாம். அவரிடம் கற்றுக்கொண்டவற்றை பாராட்டுங்கள், நாம் அவரிடம் கற்றுக்கொண்ட நல்ல குணங்களை பாராட்டுங்கள் மற்றவற்றை சமநிலையோடு விட்டு விடுங்கள். 

என்னிடம் எந்தக் கேள்வியும் இல்லை என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? புத்தரின் இயல்பு இருக்கும் ஆசிரியரை நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதால் ஆசிரியரின் பொருத்தமற்ற அறிவுறுத்தல்களையும் எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று அர்த்தமல்ல. திலோபா நரோபாவை மலை உச்சியில் இருந்து குதிக்கச் சொன்ன போது அவர் குதித்தார் என்பது போன்ற உதாரணங்களை நாம் பார்க்கும் போது: புனிதர் தலாய் லாமா எப்போதும் சொல்வார், இதை நன்றாக பகுப்பாய்வு செய்யுங்கள். திலோபா உயிருடன் ஒரு மீனை சாப்பிட்டு அதன் முள்ளை மட்டும் வெளியே எடுத்து வைக்கக் கூடியவர், ஒரு சொடுக்கு போட்டால் அடுத்த நிமிஷமே அந்த மீன் மறுஜென்மம் பெறக்கூடிய நிலையை அடைந்த ஒரு ஆசிரியர். எனவே நம்முடைய ஆசிரியர் திலோபா போன்ற நிலையிலும் நாம் நிரோபா போன்ற நிலையிலும் இருந்தால், நரோபா சுயசரிதையில் இருந்து வந்த இந்த உதாரணம் பொருத்தமானதாக இருக்கும். நாமும் நம்முடைய ஆசிரியரும் அந்த நிலையை அடையவில்லையெனில் அப்போது இந்த விஷயமே வேறுவிதமாக பார்க்கப்பட வேண்டும். எனவே நாம் எப்போதும் அதை சரிபார்க்க வேண்டும். ஆசிரியர் என்ன செய்கிறார் அது தர்மத்திற்கு பொருந்துகிறதா?அந்த ஆசிரியரின் போதனை தர்மத்துடன் பொருந்திப் போகிறதா? என்பதை நாம் எப்போதும் சரி பார்க்க வேண்டும். இனி அதைச் செய்ய வேண்டும். 

நான் முதல் நிலை மாணவன். நான் இந்த மையத்திற்கும் போதனைகளுக்கும் புதியவன். என்னுடைய குறைபாடுகள் மற்றும் புரிதல் குறைவால் நான் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறேன் என்பது எனக்குத் தெரிகிறது, ஆனால் அதனை புரிந்து கொள்வதும் மறுஜென்மம் மற்றும் மகிழ்வான வாழ்நாள் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதை மிக மிகக் கடினமானதாக நான் காண்கிறேன், பௌத்த போதனைகளில் இது மிக முக்கியமானது என்பதை புரிந்து கொள்கிறேன். நான் என்னுடைய விலைமதிப்பற்ற மனித வாழ்க்கைக்காக தியானம் செய்வதை உதாரணமாக வைத்துக் கொள்வோம் - அதை நான் எவ்வளவு ஆழமாகச் செய்ய விரும்புகிறேனோ அவ்வளவு ஆழமாகச் செய்கிறேன்- அதை ஒரு பரிசாக, ஒரு சாத்தியமாக, மாற்றுவதற்கான வாய்ப்பாகப் பார்க்கும்போது, எதிர்வரும் ஜென்மங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்தாலும், இது எனக்கு மிகவும் கடினம். எனவே எவ்வளவு ஆழமாகச் சென்று தியானித்தாலும் என்னுடைய விலைமதிப்பற்ற மனித வாழ்க்கைக்காக எவ்வளவு அடிக்கடி தியானித்தாலும் எதிர்கால ஜென்மங்கள் பற்றிய புரிதல் இல்லாமல், என்னுடைய விலைமதிப்பற்ற மனித வாழ்வானது எப்போதுமே முழுமையடையாது என்று கருதுகிறேன். இது தான் எனக்குள் இருக்கும் குழப்பம். நான் இதை எப்படி கடந்து வருவது?

நீங்கள் உங்களை மிகவும் நன்றாக கவனித்து பார்த்திருக்கிறீர்கள். நாம் ஞானம் அடையும் வரை எதையும் புரிந்து கொள்வதில் திருப்தி அடையக்கூடாது என்பது தந்திர வாக்குகளில் ஒன்று. இதன் பொருள் என்னவென்றால், விலைமதிப்பற்ற மனித வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் பற்றிய நமது புரிதல், நாம் பாதையில் முன்னேறும்போது ஆழமாக சென்று கொண்டே இருக்கப் போகிறது. எனவே நாம் இப்போது மறுபிறப்பைப் புரிந்து கொண்டாலும், விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்வதில் நீங்கள் அதைவிட மிக ஆழமாகச் செல்லலாம். அதற்காக முந்தைய புரிதல் நிலை பயனளிக்காது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நிலை புரிதலும் அதன் பாதையில் நன்மையைத் தரும், குறிப்பாக இப்போது நாம் புரிந்து கொள்ளும் நிலை மேலும் ஆழமான புரிதலுக்கான பாதையில் ஒரு படிக்கல் என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்திருந்தால், அந்தப் பணிவுடன், அது சரியானது.

போதனைகளில் இது மிகவும் தெளிவாக உள்ளது: நீங்கள் அதை ஆழமாக புரிந்து கொண்டதாக ஒருபோதும் நினைக்க வேண்டாம். “ஆஹா, இப்போது நான் அதைப் பெற்றுவிட்டேன். விலைமதிப்பற்ற மனித உயிரைப் பற்றி நான் இனி சிந்திக்க வேண்டியதில்லை” என்று கருதினால் அது ஒரு பெரிய தவறு. நீங்கள் எப்போதும் மிக ஆழமாகச் செல்லலாம்.

நீங்கள் விளக்கியதைப் போல, மனிதர்களாகிய நம்மிடம் பகுத்தறியும் திறன் உள்ளது. நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களையும் செய்யாமல் அல்லது அதற்காக கத்தாமல் இருப்பதை நாங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் நமக்கு இந்த பகுத்தறியும் திறன் இருந்தால், நமக்கு சில திறன்கள் உள்ளன என்று அர்த்தம். அப்படியானால், நாம் மீண்டும் விலங்குகளாகப் பிறந்தால், அந்த ஆற்றல்களை நாம் எப்படி இழக்கிறோம்? அதாவது, நாம் ஒரு விலங்காக மறுபிறவி எடுத்தால், அந்த ஆற்றல்களை, பகுத்தறிவுக்கான திறனை நாம் இழக்க நேரிடும் என்பது எனக்கு நியாயமற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் தெரிகிறது. அங்கே என்ன நடந்தது?

நீங்கள் ஒரு சாத்தியமான மற்றும் ஒரு உண்மையான வெளிப்படையான திறனை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். ஒரு குழந்தைக்கு நிறைய திறன்கள் உள்ளன. அது ஒரு காரை ஓட்டும் திறன் கொண்டது, ஆனால் அது அதனுடைய உண்மையான திறனைக் கொண்டிருக்கவில்லை. நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, தெளிவாகச் சிந்திக்கவும், வேலை செய்யவும் மற்றும் பலவற்றைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் நம்மிடம் உள்ளன, ஆனால் அந்த நேரத்தில் ஒரு தடுப்பு உள்ளது, எனவே வெளிப்படையான திறன் நம்மிடம் இல்லை. அதைப்போலவே ஒரு விலங்கைப் போன்ற ஆற்றல்கள் இன்னும் உள்ளன - புத்தர்-இயல்பு திறன்கள் இன்னும் உள்ளன - ஆனால் உண்மையான வெளிப்படையான திறன்கள் இல்லை (அல்லது அவை இருந்தால், அவை மனிதனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன).

அர்ப்பணிப்பு

சரி இந்த அமர்வை ஒரு அர்ப்பணிப்புடன் முடிப்போம்.  முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் இங்கே கேட்டல் மற்றும் தியானித்தல் போன்ற செயல்களால் உருவாக்கும் நேர்மறை சக்தியை - ஞானத்திற்காக அர்ப்பணிக்கவில்லை என்றால், எதையும் செய்யாமல் என்ன நடக்கும், ஒரு வகையான இயல்புநிலை அமைப்பு, இது சம்சாரியத்தை மேம்படுத்த ஒரு காரணமாக செயல்படுகிறது. உதாரணமாக, நிறைய பணம் சம்பாதிப்பதற்காக நமது மனித வாழ்க்கையைப் பயன்படுத்துவோம். எனவே இது ஞானம் பெறுவதற்கு ஒரு காரணமாக செயல்பட, நாம் உண்மையில் அதை அர்ப்பணிக்க வேண்டும். எனவே நாம் அதை மிகவும் விழிப்புணர்வுடன் செய்கிறோம். "புத்தரின் மனம், உடல், பேச்சு மற்றும் பலவற்றை நான் அடைய இது ஒரு காரணமாக இருக்கட்டும், அனைவருக்கும் நன்மை பயக்கும்" என்று நாம் கூறுகிறோம். பின்னர் அது உண்மையில் ஒரு காரணமாக செயல்படும். மேலும் "இந்த புரிதலும் பாராட்டும் மேலும் மேலும் ஆழமாக செல்லட்டும் இதனால் ஞானமடைவதற்கான அனைத்து வழிகளும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எனது நடத்தையின் முடிவுகள் தரத் தொடங்கும்.

Top