கர்மா குறித்த அறிமுகம்

அன்றாட வாழ்வில் நான்கு மேன்மையான உண்மைகள்

அலப்பாவில் மீண்டும் ஒரு முறை உங்களுடன் இங்கே இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் பேசுவதற்காக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு கர்மா. நிச்சயமாக, பௌத்தத்தில் நாம் சில தலைப்பை படிக்கும் போது அதை நாம் ஏன் படிக்க வேண்டும் அதில் முக்கியமானது என்ன, அது எவ்வாறு பௌத்தத்தின் ஒட்டு மொத்த சூழலுடன் பொருந்துகிறது என்ற எண்ணம் இருக்க வேண்டியது முக்கியம்.  நாம் வாழ்க்கையில் என்ன அனுபவிக்கிறோம், என்ன நடக்கிறது என்று ஒவ்வொருவரின் அனுபவத்தை பற்றி புத்தர் அடிப்படையில் பேசுகிறார். நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் மிக அடிப்படையான விஷயம் என்ன? அது என்னவென்றால் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியின்றியும் சில நேரங்களில் மகிழ்ச்சியோடும் இருக்கிறோம். இந்த முறையில் தான் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்கிறோம், இல்லையா?

சில நேரங்கள் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியின்றியும் இருக்கும் சூழலை நாம் ஆராய்ந்தால், அதனுடன் ஏராளமான பிரச்னைகளை இணைந்திருப்பதை நம்மால் காண முடியும். நாம் மகிழ்ச்சியின்றி இருந்தால், நிச்சயமாக, அது துயரம். மகிழ்ச்சியின்றி இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள், அப்படி இருப்பார்களா? நண்பர் விட்டுச் செல்கிறார், அல்லது கேட்கும் விஷயங்கள், இன்பமில்லாத வார்த்தைகள், விஷயங்களைப் பார்க்கும் போதும் கூட நாம் மகிழ்ச்சியின்றி இருக்கலாம், பல்வேறு உணர்வுகளையும் பல்வேறு விஷயங்களுடன் சிந்திக்கும் போது கூட நாம் மகிழ்ச்சியின்றி இருக்க முடியும். ஆனால் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியின்றி உணர்வோம், நாம் உண்மையில் பார்க்கும் அல்லது கேட்கும் அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இருக்க வேண்டியதில்லை. இது ஒரு பிரச்னை, இல்லையா?

ஆனால் மகிழ்ச்சியைப் பற்றி என்ன? சில சமயங்களில் நாம் மகிழ்ச்சியாக உணர்வோம், இல்லையா? விஷயங்களைப் பார்த்தல், கேட்டல், பிடித்தவரிடம் இருந்து கேட்டலால் நாம் மகிழ்ச்சியாக உணரலாம், அதே போன்று யாரோ ஒருவருடன் நாம் இருந்த அற்புதமான நேரத்தை நினைத்துப் பார்ப்பதைப் போல சிலவற்றை பற்றி சிந்திக்கும் போதும் கூட நாம் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் நாம் ஆழமாகப் பார்த்தால், நாம் அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சியில் கூட சில பிரச்னைகள் அதனுடன் ஒருங்கிணைந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம். முதலில், அது நீடித்து இருக்காது மேலும் எவ்வளவு காலம் இது நீடித்திருக்கும் என்றும் நமக்குத் தெரியாது.  

அது எப்போதும் போதுமானதாகத் தோன்றாது. ஒரு ஸ்பூன் உணவை முழுவதுமாக உண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் அது போதாது – நாம் மேலும் மேலும் அதிகமாக உண்ண விரும்புவோம். உண்மையில், இது மிக சுவாரஸ்யமான கேள்வி – ஒரு உணவை சாப்பிட்டு முழுவதுமாக மகிழ்ச்சியை அடைய முறையே நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? அந்த ஒன்றைப் பற்றி சிந்தியுங்கள். மற்றொரு தவறு, இந்த மகிழ்ச்சியின் மற்றொரு குறைபாடு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நமக்குத் தெரியாது. அடுத்த நிமிடமும் இந்த மகிழ்ச்சி தொடர விரும்புகிறோம், இல்லாவிட்டால் நாம் வருத்தப்படுகிறோம். இது மாறக்கூடியது, எனவே மகிழ்ச்சிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை பற்றிய இந்த வகையான நுண்ணறிவு பகுப்பாய்வு உண்மையில் பௌத்தத்திற்கு தனித்துவமானதல்ல; உலகின் பல்வேறு மிகப்பெரிய சிந்தனையாளர்கள் இதனை ஆராய்ந்து போதித்திருக்கின்றனர். ஆனால் புத்தர் என்ன போதித்தார், என்ன உணர்ந்தார் என்றால் பிரச்னை வகையின் ஆழம் அல்லது துயரம். அவர் இதனை மிக ஆழமாகப் பார்த்தார் ஒவ்வொருவர் வாழ்வின் ஏற்ற இறக்க சூழல், மேடு பள்ளமாகச் செல்லும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை, மேலும் அவர் என்ன புரிந்துகொண்டார் என்றால் மகிழ்ச்சிக்கான அந்த காரணம் உண்மையில் ஒவ்வொரு நொடியிலும் நாம் அனுபவிப்பதன் ஒரு பகுதி. மற்றொரு விதமாகச் சொல்வதானால், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை என்று நாம் ஏற்ற இறக்கங்களோடு அனுபவிக்கும் விஷயங்களால் அதிருப்தியான சூழல் நிலைத்திருக்கும்.  

ஆகவே புத்தர் அதன் பின்னர் ஒவ்வொரு நொடிக்குப் பின்னாலும் இருக்கும் காரணம் என்ன, அதிருப்தியான சூழலை நிலைத்திருக்கச் செய்வது எது என்று பார்த்தார், யதார்த்தம் குறித்த குழப்பமே அதற்கான காரணி என்பதை புத்தர் கண்டறிந்தார். மற்றொரு விதமாகச் சொல்வதானால், நாம் எப்படி இருக்கிறோம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள், உலகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய குழப்பம். 

மற்றவர்கள் சொல்லியிருப்பதை விட புத்தர் கூறி இருப்பது முற்றிலும் வித்தியாசமானது. உதாரணமாக ஏற்ற இறக்கங்களுடன் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை வெகுமதி மற்றும் தண்டனை அடிப்படையிலானது என்று சிலர் கூறி இருக்கிறார்கள்: சட்டங்களை பின்பற்றுதல் அல்லது சட்டங்களைப் பின்பற்றாதவர்கள் என்று பாகுபடுத்துகிறார்கள். பல ஆசிரியர்களும் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை உணர்வின் அடிப்படை பிரச்னை கீழ்படிதல் தொடர்புடையது என்கின்றனர். ஆனால் புத்தர் கூறி இருக்கிறார்: உண்மையான காரணம் நம்முடைய குழப்பம், கீழ்படிகிறோமா இல்லையா என்பது பிரச்னை இல்லை; இது வாழ்க்கையைப் பற்றிய குழப்பத்தில் இருப்பது தான். குழப்பம் என்பது வாழ்வின் உள்ளார்ந்த மற்றும் அடிப்படையான ஒன்று இல்லை, நாம் எப்படி விஷயங்களை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்தது.

குழப்பம்- அது அங்கே இருந்திருக்க வேண்டியதல்ல: அது அகற்றப்பட வேண்டிய ஒன்று, அதனை முழுவதுமாக அகற்ற முடியும், ஆதலால் அது எப்போதும் திரும்பி வராது. உண்மையிலேயே இதனை அகற்றுவதற்கான வழியாக புத்தர் கூறியது நாம் விஷயங்களை அனுபவிக்கும் முறையை மாற்றுவதில் இருந்து வருவது என்கிறார். 

குழப்பத்தில் இருந்து விலகுவதென்றால் நமக்காக யாரோ ஒருவரை விலகுமாறு கேட்பதல்ல, மாறாக யதார்த்தம் பற்றிய நம்முடைய சொந்த அணுகுமுறைகள், நம்முடைய சொந்த புரிதலை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதாகும். தவறான புரிதலை சரியான புரிதலால் இடமாற்றம் செய்தால், பின்னர் அந்தப் புரிதலையே நாம் அனைத்து நேரமும் கொண்டிருப்போம், இந்த நிலையான ஏற்ற- இறக்கத்துடன் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை இருப்பதில்லை என்பதை நாம் கண்டறியலாம், மேலும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் ஏற்ற இறக்கங்களும் நம்மிடம் நிலைத்திருக்காது. ஆகவே புத்தரின் மிக அடிப்படையான போதனை அதுவே, இதனை நாம் தினசரி செயல்மொழியில் புகுத்த வேண்டும். 

நடத்தையின் அடிப்படை மற்றும் தாக்கத்தை கர்மா எவ்வாறு கையாள்கிறது

நம்முடைய அனுபவங்களான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை ஏற்ற இறக்கத்துடன் எப்படி ஏன் செல்கிறது என்பதன் அடிப்படை விளக்கமே கர்மா. இன்னோரு விதமாகச் சொல்வதானால், நம்முடைய குழப்பம் எவ்வாறு இந்த ஏற்ற இறக்கத்துடன் கூடிய மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை, இன்பம் மற்றும் இன்பமில்லாத அனுபவங்களை உருவாக்குகிறது? வேறு விதமாகச் சொன்னால், இது காரணம் மற்றும் விளைவுடன் கையாள்கிறது, இங்கே காரணம் மற்றும் விளைவு என்பது மிகவும் கடினமான தலைப்பு. புத்தர் கூறியது போல, ஒரு பக்கெட் முழுவதும் முதல் சொட்டு மற்றும் கடைசி நீராலேயே நிரம்பி விடாது; அது மொத்த நீர்த்துளிகளின் தொகுப்பால் நிறைகிறது. அதே போன்று தான், நாம் வாழ்க்கையில் அனுபவிப்பவை ஒரே ஒரு காரணத்தின் விளைவல்ல – உடனடியாக சற்று முன்னர் செய்த ஒரு காரியமோ அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் செய்ததன் காரணமோ அல்ல. அது மிகப்பெரிய அளவிலான சாதாரண காரணிகள் மற்றும் நிபந்தனைகளின் முடிவாகும். 

இது உண்மையில் ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்துடன் மிகவும் ஒத்துப்போகிறது, ஏனென்றால் நிகழ்வுகள் தனிமையில் ஏற்படாது, உண்மையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மிக எளிய உதாரணத்தை பயன்படுத்துவோம், ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு வரவில்லை என்றால் நாம் அனைவரும் இந்த அறையில் இந்த சொற்பொழிவைக் கேட்க மாட்டோம், இல்லையா? நாம் இங்கே இருப்பதற்கான ஒரு காரணம் அது. அதே போன்று தான் பல்வேறு வெவ்வேறு நேரடி மற்றும் மறைமுகக் காரணங்கள் இருக்கின்றன, அவை இப்போது அல்லது எந்த நேரத்திலும் நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு பங்களிக்கின்றன.

இருப்பினும், கர்மா நம்முடைய சொந்த மனதுடன் குறிப்பிட்டு தொடர்புபட்டிருப்பதன் காரணங்களை விளக்குகிறது. ஆனால் வேறு பல காரணங்களும் இருக்கின்றன அவை நாம் என்ன அனுபவிக்கிறோமோ அதற்கு பங்களிப்பாற்றுகின்றன– எடுத்துக்காட்டாக, வானிலை உள்ளிட்ட உடல் ரீதியிலான காரணங்கள். நம்மை பாதிக்கும் பல விஷயங்கள் நம்முடைய சொந்த மனதில் இருந்து மட்டும் வருவதில்லை, பிறரின் மனதில் இருந்தும் கூட வருகிறது. நம்மை பாதிக்கும் பல்வேறு கொள்கைகளை முடிவு செய்யும் அரசியல்வாதிகளை எடுத்துக்கொள்வோம், அவற்றில் சில குழப்பமும் கூட கலந்திருக்கின்றன, இல்லையா?

கர்மா என்பது நம்பிக்கை குறித்து பேசுவதில்லை, அது விதி மற்றும் ஊழ்வினை போன்றவற்றை பற்றியும் கூட பேசவில்லை, மாறாக அவை நாம் எப்படி விஷயங்களை அனுபவிக்கிறோம், நம்முடைய அணுகுமுறைகள் எப்படி வாழ்வில் நாம் அனுபவிப்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. கர்மா என்ற வார்த்தை நடத்தையின் காரணம் மற்றும் தாக்கம் என்ற ரீதியில் இங்கே இணைந்திருக்கின்ற அனைத்தையும் குறிப்பிட்டு மிகப்பொதுவாக அர்த்தப்படுத்தப்படுகிறது; மற்றொரு விதமாகச் சொல்வதானால், நம்முடைய நடத்தை மற்றும் அணுகுமுறைகளில் இருந்து வரும் காரணம் மற்றும் விளைவு உறவுமுறை. நடத்தையின் காரணம் மற்றும் தாக்கம் என்ற ஒட்டு மொத்த தலைப்பிலும் பொதுவாக “கர்மா”வை குறிப்பிட்டுக் காட்ட முடியும், அல்லது ஒட்டு மொத்த செயல்முறையிலும் ஒரே ஒரு அம்சத்தை மிகக் குறிப்பாக ஒப்பிட்டு அதைச் சொல்ல முடியும். ஆகவே கர்மாவின் இயக்க முறையை புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் அதை இன்னும் கொஞ்சம் துல்லியமாக, விரிவாகப் பார்க்க வேண்டும்.

கர்ம விளக்கத்தின் பல அமைப்புகள்

பௌத்தத்தை மிக துல்லியமான விளக்கங்களுடன் பார்க்கத் தொடங்கினால், ஒரே ஒரு விளக்கம் மட்டுமல்ல என்பதை மிக விரைவில் கண்டறியலாம். சில மேற்கத்தியர்களுக்கு அது சிறிது அசவுகரியமாக காணப்படும். ஆனால் நாம் சூழ்நிலை அல்லது பிரச்னையைக் கொண்டிருந்தால், நம்முடைய பார்வையின் அடிப்படையில் நாம் அதனை வேறு சில வழிகள் மூலம் விளக்க முடியும். 

மேற்கத்திய நாடுகளில் நாங்கள் இதைச் செய்கிறோம், சமூகப் பார்வை, உளவியல் பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வையில் இருந்து விஷயங்களை விவரிக்கிறோம்- அது ஆச்சரியமானதல்ல. மேலும் என்ன நடக்கிறது என்ற ஒவ்வொன்றையும் விளக்கும் வழிகள் சில குறிப்பிட்ட சிந்தனை அமைப்பு– ஒரு உளவியல் அமைப்பு, ஒரு அரசியல், பொருளாதாரம் உள்ளிட்டவற்றின் அமைப்பு. பௌத்தத்திலும் இதே போன்ற சில இருக்கின்றன, எனவே வெவ்வேறு தத்துவ கொள்கை அமைப்புகளில் இருந்து கர்மா எப்படி செயல்படுகிறது என்று பல விளக்கங்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். 

மேற்கிலும் கூட ஒரே கொள்கையை நாங்கள் கொண்டிருந்தோம், உளவியல் என்றால் பிராய்டியனின் உளவியல் பார்வையிலான விளக்கம், யுங்கேயன் உளவியல் பார்வையிலான விளக்கம் என்பதைப் போன்று பார்ப்போம்; ஒருவர் விஷயங்களை சோசியலிச வழியிலோ அல்லது சர்வாதிகார வழியிலோ தான் விளக்க முடியும். அதனை நாம் பௌத்தத்தில் கண்டோம், உண்மையில் இது போன்ற சில அமைப்புகளைப் பார்ப்பது, மிகவும் உதவிகரமானது, ஏனெனில் கர்மா எப்படி செயலாற்றுகிறது என்று அவை பல்வேறு நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. நம்முடைய நோக்கங்களுக்கு வெவ்வேறு அமைப்புகளைப் பற்றி விரிவாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன என்று விழிப்புடன் இருப்பது உதவிகரமானது. 

உண்மையில் இதன் அர்த்தம், மறைமுகமாக நாம் என்ன அனுபவிக்கிறோம் என்பதுடன் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கும் மேற்கத்திய முறைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். அது நாம் கூறும் கர்மாவுடன் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

ஒரு தூண்டுதலின் மன காரணியாக கர்மா

கர்மாவும் கூட, நாம் அதனை ஒரு குறிப்பிட்ட இனம், ஒரு குறிப்பிட்ட விஷயம் என்று ஒப்பிட்டு பேசினால் – நாம் ஒரு முறையிலான விளக்கத்தைப் பின்பற்றினால் – ஒரு மனக் காரணி. “மனக் காரணி” என்று நாம் அர்த்தப்படுத்துவது என்ன? மனக்காரணி என்பது சிலவை குறித்து விழிப்புடன் இருப்பதற்கான வழி. உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொள்வோம்: நாம் யாரையோ பார்க்கிறோம் அவரை நோக்கி நடந்து செல்கிறோம். அந்த அனுபவத்தில் பல்வேறு மனக்காரணிகள் இணைந்து இருக்கின்றன. நாம் அந்த நபர் குறித்து எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோம் என்ற வேறுபட்ட கோணங்கள் இவை. இந்த நபரை வேறொருவரிடமிருந்தோ அல்லது சுவரிலிருந்தோ வேறுபடுத்துவது போன்ற சில மிக அடிப்படையானவை. ஆர்வம் - இது ஈர்க்கும் நபரைப் பற்றி அறிந்திருப்பதற்கான ஒரு வழியாகும். ஒருநிலைப்படுத்துதலும் இருக்கலாம்; பலவிதமான உணர்வுகளும் இருக்கலாம். இவை அனைத்துமே மனதின் காரணிகள், ஒரு நபரை பார்க்கும் போதும் அவரை நோக்கி நடந்து செல்லும் போதும் அந்த நொடியில் அனைத்தும் ஒன்று சேர்கின்றன. 

எந்த மனக்காரணி கர்மா எனப்படுகிறது? கர்மா என்பது மனதின் காரணி அது நம்மை அந்த நபரிடம் இழுத்துச் செல்கிறது; அந்த நபரை பார்ப்பதற்கும் அவரை நோக்கிச் செல்வதற்குமான ஒரு தூண்டுதல் அது. எனவே தான், சில கோட்பாடுகளில், கர்மா என்பது ஏறத்தாழ உடல் சக்தி என்று விளக்கப்படுகிறது. நிச்சயமாக, நோக்கம் போன்ற இதர மனதின் காரணிகளும் இருக்கின்றன. அந்த நபருடன் நமக்கு என்ன நோக்கம் இருக்கிறது? நாம் அவரை கட்டித்தழுவவோ அல்லது அவரின் முகத்தில் ஒரு குத்து விடுவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கலாம். பல்வேறு இதர காரணிகளும் இதில் இணைந்திருக்கின்றன, ஆனால் கர்மா என்பது எளிதாகச் சொன்னால் அந்த நபரைப் பார்க்கும் போது அவரை நோக்கிச் செல்லும் போது அவரை அணைக்கவோ அல்லது குத்தவோ செயலில் இறங்கச் செய்யும் மனத் தூண்டுதல். அதே போன்று இதையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த மனத் தூண்டுதலானது வெறுமனே உடல் ரீதியிலான செயல்களான அணைத்தல் அல்லது குத்துதலுக்கு மட்டுமல்ல.  எதைப்பற்றியாவது நாம் சிந்திக்கும் போது மனதைத் தூண்டிச் செல்லும் வேறு இயக்கமும் அதில் இருக்கிறது; இது வெறுமனே உடல் ரீதியில் எதையோ சொல்வது அல்லது செய்வது மட்டுமல்ல. நாம் எதைப் பற்றியாவது சிந்திக்கும் போது, எதைப்பற்றியாவது சொல்லும் போது, உடல் ரீதியில் எதையாவது செய்யும் போது – இந்த அனைத்து விஷயங்களுமே சில விதமான மன தூண்டுதலுடன் சேர்ந்துள்ளது.   

கர்ம நடத்தையின் தாக்கங்கள்

அறிவியலைப் போல பௌத்தம், காரணம் மற்றும் தாக்கம் அடிப்படையில் மிக அதிகமாக போதிக்கிறது. எனவே, கர்மாவால் நாம் ஈர்க்கப்பட்டால் – இந்த தூண்டுதலால் – நாம் விஷயங்களைச் செய்கிறோம், சொல்கிறோம் மற்றும் சிந்திக்கிறோம், பின்னர் அதற்கான முடிவு வரப்போகிறது. நம்முடைய நடத்தை பிறர் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கர்மா அதிகம் பேசுவதில்லை – இருப்பினும், நிச்சயமாக, இதற்கும் மற்றவர்களிடம் தாக்க்ம இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், உண்மையில், நாம் பிறருக்கு என்ன செய்கிறோம் என்பதன் தாக்கமானது, மிக அதிகமாக அந்த நபரைப் பொருத்தது தான். மற்றவர்களுக்கு நாம் என்ன செய்கிறோமோ அதன் சில தாக்கங்கள் உடல் காரணிகளால் வருபவை: நீங்கள் யாரையோ அடித்தால் தோளில் காயம் ஏற்படும். இது வெறுமனே உடல் ரீதியான காரணம் மற்றும் தாக்கம்; நாம் அதைப்பற்றி கர்மாவுடன் பேசவில்லை. ஆனால், நாம் சொல்வது அல்லது செய்வதை எப்படி அனுபவிக்கிறார்கள் மற்ற நபருக்கு அது ஏற்படுத்தும் விளைவு என்ன என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தது, இல்லையா? நாம் ஒருவரிடம் மிகவும் கொடூரமான ஒன்றைச் சொல்லலாம், எடுத்துக்காட்டாக, அவர்களின் உணர்வுகள் மிகவும் புண்படுத்தக்கூடும்; அவர்கள் மிகவும் வருத்தப்படலாம்.

ஆனால் நாம் முழுவதும் முட்டாள்கள் என்று அவர்கள் நினைக்கக் கூடும், அதனாலேயே அவர்கள் நம்மை நம்புவதில்லை, நம்மை தீவிரமாக எடுத்துக்கொள்வதும் இல்லை. அல்லது அவர்கள் நாம் சொல்வதை காது கொடுத்து கேட்கமாட்டார்கள் அல்லது நாம் கூறியதை தவறாக கேட்டிருப்பார்கள். அவர்களுடைய மனமானது ஏதோ ஒன்றால் ஏற்கனவே நிறைந்திருக்கும். எனவே, அந்த நபரின் உணர்வுகளை காயப்படுத்தும் பயங்கரமான நோக்கத்தை நாம் கொண்டிருந்தாலும் கூட, உண்மையில் அது நடக்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை – இருப்பினும் பௌத்தம் யாரையும் நாம் புண்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பதை போதிக்கிறது. ஆனால் இத்துடன் கர்மாவை இணைத்துப் பேச வேண்டியதில்லை. 

ஏதோ ஒன்றின் கர்ம முடிவுகளைப் பற்றி நாம் பேசினால், இந்த கர்ம தூண்டுதல்களுடன், மனக்கிளர்ச்சி, நிர்பந்தமான வழியில் செயல்படுவதன் விளைவாக நமக்கு நாமே அனுபவிக்கும் கர்ம முடிவுகள் தான்.

நமக்குள்ளாகவே இருக்கும் தாக்கங்கள் என்ன? தாக்கங்களில் ஒன்று – இது மேற்கத்திய அறிவியலில் என்ன சொல்கிறோம் அதோடு மிகவும் பொருந்திப்போகிறது - ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கவும், ஒரு குறிப்பிட்ட வழியில் பேசவும், ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படவும் நாம் நம்மை நிலைநிறுத்துகிறோம், எனவே இது மீண்டும் மீண்டும் நடந்துகொள்ளும் ஒரு போக்கை உருவாக்குகிறது. அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்வற்கான போக்கின் முடிவு மற்றும் திறனால் கூட அந்தச் செயலை மீண்டும் செய்கிறோம் – நம்மால் சாத்தியங்கள் மற்றும் போக்குகள் இடையே சில வித்தியாசத்தை உருவாக்க முடியும், அது குறித்து ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்றாலும் – அதன் விளைவாக, நாம் அந்தச் செயலை மீண்டும் செய்ய விரும்புகிறோம். 

உண்மையில் அது உருவாக்கியது என்ன, இந்த போக்கா அல்லது சாத்தியமா? இந்த போக்கானது உணர்வை உருவாக்குகிறது – உதாரணமாக உங்களிடம் வருவது மற்றும் உங்களை கட்டித் தழுவுவது போன்ற உணர்வு, அல்லது உங்களிடம் வருவது மற்றும் மோசமான ஏதோ ஒன்றை சொல்வதைப் போன்ற உணர்வு. அதன் பின்னர், நாம் அதனை செய்வது போன்ற உணர்வு, நிச்சயமாக நாம் அதைச் செய்யலாமா வேண்டாமா என்ற தேர்வு நம்மிடம் இருக்கிறது. நாம் என்ன செய்யலாம் அல்லது செய்யக் கூடாது என்று உணர்கிறோமோ அதனை செய்யாமல் தவிர்ப்பதற்கான தேர்வு இருப்பதை உணர்வது ஒரு மிக முக்கியமான விஷயம். ஆனால் நாம் அதனை செய்வதாக முடிவு செய்து விட்டால், அல்லது நாம் அதைச் செய்யப்போகிறோமா இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் இருந்தாலும் கூட, நாம் செயலாற்றி விடுகிறோம், அதன் பிறகான அடுத்த கட்டம் கர்மா எங்கிருந்து வருகிறது என்பதாகும். கர்மா என்பது நாம் உண்மையில் அதைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல், உந்துதல், நிர்ப்பந்தம்.

பின்னர், அந்த போக்குகளில் இருந்து கனிய வைக்கும் பல்வேறு இதர விஷயங்கள் இருக்கின்றன. அடிப்படையில் ஒரு விஷயம், நாம் என்ன அனுபவிக்கிறோம் என்ற உள்ளடக்கம். “உள்ளடக்கம்” என்பது ஒரு பெரிய வார்த்தை; நாம் இன்னும் கொஞ்சம் திட்டவட்டமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக நாம் அந்த நபரை சந்திக்கிறோமா இல்லையா? மக்கள் நம்மை நோக்கி எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதையும் கூட இது உள்ளடக்கியது. இன்னும் துல்லியமாக இருக்க, அதை எப்படிச் சொல்வது என்று நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய கர்மாவானது மற்றவர்கள் நம்மிடம் கூச்சலிடக் காரணமாக இருக்கக் கூடாது – மற்றவர்களிடம் கத்த வேண்டிய போக்குகளின் விளைவாக அவர்கள் நம்மிடம் கத்துகிறார்கள். ஆனால் மற்றவர்கள் நம்மைக் கத்துவதை அனுபவிப்பதற்கு நம்முடைய சொந்த கர்மாவே பொறுப்பு.

புரிந்து கொள்ள அது எளிதான விஷயமல்ல, நிச்சயமாக, ஆனால் புரிதலை அணுகும் ஒரு வழி இந்த உதாரணத்துடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு குழந்தை டயபர் அணிந்திருக்கிறது, அதில் கழிவு செய்த பின்னரும் கூட அந்தக் குழந்தை அதனுடனே இருக்க வேண்டும்; அந்தக் குழந்தை தான் வெளியேற்றிய கழிவுடனேயே இருக்கிறது. யாரோ ஒருவர் அந்தக் குழந்தையின் டயபரை மாற்றினாரா இல்லையா என்ற மற்ற மொத்த விஷயத்தையும் வெளியே வையுங்கள், இங்கே விஷயம் என்னவென்றால் நீங்கள் ஒரு அசிங்கத்தை செய்தால் அதனை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். நாமும் வாழ்வில் குழப்பங்களை செய்கிறோம், வாழ்க்கை செல்லும் போது, நாம் மேலும் மேலும் அதிக குழப்பங்களைப் பெறுகிறோம்; அடிப்படையில் இது அவ்வாறே செயல்படுகிறது. குறிப்பாக, நாம் மற்றவர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுகிறோம், மற்றவர்களும் நம்மை நோக்கி அவ்வாறே செயல்படும் விதத்தையே நாமும் அனுபவமாகக் கொள்வோம். ஆனால் இங்கே கர்மாவுடனான மற்றொரு முக்கியமான கொள்கை இது உடனடியாகச் செயல்படாது. நம்மால் ஒருவரிடம் மிகவும் கனிவாகவும் மென்மையாகவும் பேச முடியும், இருப்பினும் அவர்கள் இன்னும் மிகவும் பைத்தியக்காரத்தனத்தோடு, கோபத்துடன் நம்மிடம் கத்துகிறார்கள்.

இதனால்தான் கர்மாவை உண்மையில் புரிந்து கொள்ள, மறுபிறப்பு பற்றிய முழு விவாதத்தையும் ஒருவர் கொண்டு வர வேண்டும், அந்த விஷயங்கள் ஒரு விளைவை உருவாக்கும் முன் மிக மிக நீண்ட நேரம் எடுக்கும், மேலும் அவை இந்த வாழ்நாளில் ஒரு விளைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பெரும்பாலான நேரம் அப்படி இருக்காது. மேற்கத்தியர்களான நமக்கு அதனை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. “இந்த வாழ்நாளில் நல்லவராக இருங்கள், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில், இதற்கான முடிவுகளை நீங்கள் சொர்க்கத்தில் அனுபவிப்பீர்கள்; மோசமாக இருந்தால், பிற்பட்ட வாழ்க்கையில், நீங்கள் நரகத்தில் முடிவுகளை அனுபவிப்பீர்கள் " என்று பௌத்தம் சொல்வது போல சிலருக்குத் தோன்றுகிறது. 

உண்மையில் நாம் இதனை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்ய வேண்டும்: பௌத்தம் ஒரே விஷயத்தைத் தான் சொல்கிறதா, அல்லது அது வித்தியாசமானதா? அது மிக எளிமையான தலைப்பு அல்ல, அது மிக கடினமான தலைப்பு, ஏனெனில் உண்மையில் கர்மாவின் காரணம் மற்றும் தாக்கத்தை புரிந்து கொள்ள, நாம் மறுபிறப்பை புரிந்து கொள்ள வேண்டும் – மறுபிறப்பு பற்றிய பௌத்த கருத்து, மறுபிறப்பு பற்றிய பௌத்தம் சாராத சில கருத்தல்ல. ஒரு கர்ம காரணத்தைச் செய்வது யார், அதன் முடிவை அனுபவிப்பது யார்? வெகுமதி அல்லது தண்டிக்கப்படக்கூடிய ஒன்று "எனக்கு" இருக்கிறதா? 

ஆனால், மறுபிறப்பு பிரச்னையை விட்டுவிட்டு, அதற்கு அப்பாற்பட்டதை யார் அனுபவிக்கிறார்கள், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, சட்டங்களின் கீழ்ப்படிதலின் அடிப்படையில் வெகுமதி மற்றும் தண்டனை பெறும் முறையைப் பற்றி பௌத்தம் பேசவில்லை. இந்த வாழ்க்கை சில வகையான பரிசோதனை, இந்த பரிசோதனையின் முடிவுகளை நாம் அடுத்த ஜென்மத்தில் பெறுவோம் என்று பௌத்தம் கூறவில்லை. விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்த வெகுகாலம் எடுக்கும் என்று எளிதில் கூறிவிடலாம். சுற்றுச்சூழல் விதிமுறைகளில் கூட நாம் அதை பார்க்கலாம். நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுகிறோம் மேலும் அது நம்முடைய வாழ்நாளில் சில தாக்கத்தை உருவாக்குகிறது, ஆனால் எதிர்கால தலைமுறையின் வாழ்நாளில் மோசமான ஏராளமான கூடுதல் விளைவுகளை உருவாக்கப் போகிறது. அதைப் போன்றது தான் இதுவும். 

மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை

கர்மா எப்போது உயிர்ப்பெடுக்கும் என்பதில் பெரிய வித்தியாசமிருக்கிறது – அதாவது வேறு மாதிரி சொல்ல வேண்டுமெனில் உச்சத்தை தொடுவது என்பது கர்ம காரியங்களின் அடிப்படையில் நடப்பது – இந்த உரையின் தொடக்கத்திலிருந்து பேசிவருவதைப் போல், கர்மாவின் வினையே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையை முடிவு செய்கிறது. 

குறிப்பிட்ட செயல்களை திரும்பத் திரும்பச் செய்வதன் விளைவாக, சில குறிப்பிட்ட விஷயங்கள் நமக்கு நடப்பதை அனுபவிக்கிறோம் – மக்கள் நம்மை நோக்கி குறிப்பிட்ட வழியில் செயல்படுகின்றனர், அல்லது ஒரு மலை உச்சி பெயர்ந்து நம் தலையில் விழுவதைப் போன்று உணர்கிறோம். நாம் இந்த விஷயங்களை மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையுடன் அனுபவிக்கிறோம். இதைப் பற்றி சிந்தியுங்கள். சிலர் இருக்கின்றனர், கரப்பான்பூச்சியை நசுக்கிவிட்டால், அவர்கள் மிக மகிழ்ச்சியாக உணர்வார்கள் – எனக்கு இந்த பயங்கரமான விஷயம் கிடைத்திருக்கிறது! மற்றவர்கள், கரப்பான்பூச்சியை மிதித்தால் வெறுப்படைந்து மிகவும் துன்பமாக உணர்கிறார்கள். “ஆமாம் நான் பாவம் செய்தவன்; நான் நல்லவனல்ல; நான் மோசமானவன்; நான் கத்தப்படவும் அடி வாங்கவும் தகுதியானவனே” சிலர், யாராவது அவர்களை அடித்தால், அல்லது அவர்களிடம் கத்தினால், மிகவும் துன்பமாகவும் சேகமாகவும் உணர்கிறார்கள், மற்றவர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.

உங்களுக்கு இந்த சொற்றொடர் தெரிந்திருக்கும், இது மெக்சிகோவில் இருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன், அல்லது யாராவது இந்தக் கதையை உருவாக்கி இருக்கலாம், அதனை நாம் நம்பி இருக்கலாம், அது இவ்வாறு செல்லும்: “என் கணவர் என்னை அடித்தார் அதற்கு அர்த்தம் அவர் என்னை விரும்புகிறார்; அவர் என்னை அடிக்கவில்லை என்றால் அவர் என் மீது அக்கறை காட்டவில்லை என்று அர்த்தம்.” 

இந்த மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை முற்றிலும் வேறுபட்ட வகையான பரிமாணம், இல்லையா? ஒரு பரிமாணத்தின் அடிப்படையில் நமக்கு என்ன நடக்கிறது என்பது நாம் கட்டாயமாக என்ன செய்கிறோம், மறுபடியும் மறுபடியும், நாம் அனுபவிப்பது, நமக்கு நடக்கும் விஷயங்கள் - இது ஒரு கோணம்; உண்மையில் நாம் அதனை மகிழ்ச்சி அல்லது துன்பத்துடன் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பது மற்றொரு பரிமாணம். நாம் அனுபவிக்கும் இந்த விஷயங்கள், இந்த இரண்டு பரிமாணங்கள், இரண்டுமே கடந்த காலக் கர்மச் செயல்களில் இருந்து ஆனால் வேறுபட்ட ஒன்றில் இருந்து கனிந்து வந்துள்ளவையே.  நாம் வெறுமனே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை என்ற பரிமாணத்தில் பார்த்தால், இது வெறுமனே மிகப் பொதுவான பரிமாணம். நாம் அழிவுகரமான அல்லது ஆக்கப்பூர்வமான வழியில் செயல்படுவதில் இருந்து இது வருகிறது. நாம் அழிவுகரமாக செயல்பட்டால், அதன் முடிவு துன்பத்தை அனுபவித்தல்; நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், அதன் விளைவாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். 

ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான நடத்தை

பௌத்தத்தின் அர்த்தம் என்ன என்று ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான விதத்தில் ஆராய்ந்தால் அது மிக சுவாரஸ்யமானதாக இப்போது மாறுகிறது. இது பற்றி சில விளக்கங்கள் இருக்கின்றன, இயல்பில் அதுவே போதுமானவை. ஆனால் நாம் பார்த்தால், நம்மால் ஒரு செயலின் இயல்பை யார் மீதாவது அது செய்யும் தாக்கத்தை வைத்து உண்மையில் சுட்டிக்காட்ட முடியாது, ஏனெனில் விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும்: அதனோடு இணையப்போகும் பல இதர காரணிகளும் இங்கே இருக்கின்றன. எனவே ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமானது என்பது மனநிலையுடன் நாம் செயல்படுவதாகும். நம்முடைய செயலானது பேராசை, அல்லது இணைப்பு, அல்லது கோபம், அல்லது முழு அப்பாவித்தனம் அடிப்படையில் என்றால் அது அழிவுகரமானது. மற்றொரு புறம், நம்முடைய செயல் கோபம், பேராசை, இணைப்பு, அப்பாவியாக இல்லாமல் இருப்பதாக இருந்தால், அது ஆக்கப்பூர்வமானது. நிச்சயமாக, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு, கருணை மற்றும் பெருந்தன்மை உள்ளிட்டவற்றையும் அடிப்படையாகக் கொண்டது, இதுவும் கூட ஆக்கப்பூர்வமானவையே. 

இதர சில காரணிகள் கூட இருக்கின்றன. ஒரு செயலை ஆக்கப்பூர்வமாக அல்லது அழிவுகரமாக உருவாக்குவதற்கான இதர காரணிகளை பகுப்பாய்ந்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு காரணி நன்னெறி சுய-கண்ணியம், அல்லது தார்மீக சுய – கண்ணியம். இது நம்முடைய சுய- தோற்றம் மற்றும் சுய-மரியாதையுடன் செயலாற்றுவது. நம் மீதே நாம் மரியாதை கொள்ளவில்லையெனில், அதன் பின்னர் நம்முடைய நடத்தையின் விளைவைப் பற்றி நாமே அக்கறைப்பட மாட்டோம். “என்ன நடந்தால் என்ன?”என்ற அணுகுமுறை அது. அந்த வகையான குறைந்த சுயமரியாதையுடன், அழிவுகரமாக செயல்பட்டோம். மற்றொரு விதமாகச் சொல்வதானால், என்னைப் பற்றியே நான் நேர்மறை வழியில் சிந்தித்தால், நான் ஒரு மனிதன் என்று என் மீதே நான் மரியாதை வைத்திருந்தால், அதன் பின்னர் நான் ஒரு முட்டாள் போல நடந்து கொள்ளமாட்டேன். நான் முட்டாள்தனமாக, கொடுமையான வழியில் நடந்து கொள்ளப் போகிறேன், ஏனெனில் அந்த வகையில் செயல்பட்டு என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு நானே உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருக்கிறேன். நாம் இங்கே பேசப்போவதும் இந்தக் காரணியைப் பற்றித் தான்: ஒன்று நன்னெறி சுய-கண்ணியத்தைக் கொண்டிருத்தல் அல்லது நன்னெறி சுய-கண்ணிய உணர்வின்றி இருத்தல். நாம் ஆக்கப்பூர்வமான அல்ல அழிவுகரமான வழியில் செயல்படப்போகிறோமா என்பதை தீர்மானிக்க இது மிக, மிக முக்கியமான காரணியாகும்.  

மற்றொரு காரணியானது நம்முடைய நடத்தை மற்றவர்கள் மீது எம்மாதிரியாக பிரதிபலிக்கிறது என்ற அக்கறையைப் பற்றியது. நாம் எதைப்பற்றி பேசுகிறோம்? நாம் பயங்கரமான வழியில் செயல்பட்டால், அது நம்முடைய குடும்பத்தின் மீது எப்படி பிரதிபலிக்கும்? அது நம்முடைய நாட்டின் மீது எவ்வாறு பிரதிபலிக்கும்? நான் பயங்கரமான வழியில் செயல்பட்டால், மக்கள் மெக்சிகன்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாம் பௌத்தர்களாக இருந்தால், நாம் வெளியே சென்று குடித்துவிட்டு, சண்டையிட்டால், அது பௌத்த மதம் மீதும் பௌத்தர்கள் மீதும் எவ்வாறு பிரதிபலிக்கப்போகிறது? ஏனெனில் நாம் நம்முடைய குடும்பம், நம்முடைய குழு, எந்த மதம், நாடு, நகரமாக இருந்தாலும் போதுமான மரியாதை கொண்டிருக்கிறோம் – நம்முடைய நடத்தையின் விளைவு குறித்த அந்த அக்கறை உணர்வுடன், மற்றவர்கள் மீது நம்முடைய நடத்தை என்ன பிரதிபலிக்கப்போகிறது என்பது பற்றிய அக்கறையுடன், நாம் அதைக் கொண்டிருந்தால், நாம் அழிவுகரமாகச் செயல்படுவதில் இருந்து விலகலாம்; நாம் அந்த உணர்வை கொண்டிருக்காவிட்டால், நாம் அழிவுகரமாகச் செயல்படுகிறோம். இது பௌத்த மதத்தில் அசாதாரணமான ஆழமான நுண்ணறிவாகும். முக்கியமான காரணி என்ன? சுய-மரியாதை, சுய-கண்ணியம் மற்றும் நமது சமுதாயத்திற்கான மரியாதை உணர்வு. 

இது பயங்கரவாதத்தை கையாள்வதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகளைப் பற்றிய பெரிய பார்வையை நமக்கு வழங்குகிறது. ஒரு நபரையும் அவர்கள் சமூகத்தின் சுயமரியாதை உணர்வையும் நீங்கள் இழந்துவிட்டால், அவர்களின் வாழ்க்கையை மிகவும் கொடூரமானதாக மாற்றி, அவர்களைப் பற்றி பயங்கரமான விஷயங்களை சிந்திக்கிறீர்கள் என்றால், அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் சுய-மதிப்பு அல்லது அவர்கள் சமூகத்தின் மதிப்பிற்கான அர்த்தத்தை கொண்டிருக்காவிடில், பின்னர் ஏன் வெளியே செல்லாமல் அழிவுகரமாக இருக்காமல் இருக்க வேண்டும்? இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். மற்றவர்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும், குறிப்பாக உலகில் பிரச்னைக்குரிய சூழ்நிலைகள் வரும் போது இவற்றை நினைவில் கொள்வது உதவிகரமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒருவர் எப்போதும் சுய-கண்ணிய உணர்வையோ அல்லது தனது சமூக மதிப்பின் உணர்வையோ இழக்காமல் இருப்பது முக்கியம். 

ஒரு செயலை எது அழிவுகரமாக்குகிறது அல்லது ஒரு செயலை எது ஆக்கப்பூர்வமாக்குகிறது என்பதுடன் இங்கே இணைந்திருக்கும் சில மனக் காரணிகள் இவை. மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவர்களை நோக்கிய நம்முடைய நடத்தை அவர்களை பாதிக்கப் போகிறது போன்ற விஷயங்களையும் கூட தீவிரமாக எடுக்க வேண்டும். இது கருத்தில் கொள்தல் அல்லது அக்கறை உணர்வை கொண்டிருத்தலை குறிக்கிறது – நான் இதனை “அக்கறை அணுகுமுறை” என்று அழைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் நாம் மிகவும் அப்பாவியாக, மற்றவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அது ஒரு பொருட்டல்ல என்று நினைக்கிறோம். உண்மையில் நான் உங்களின் உணர்வுகளை தீவிரமாக எடுக்கப்போவதில்லை. பின்னர் நாம் அக்கறை அணுகுமுறையை இழக்கிறோம். 

பேராசை, கோபம், சுய- மதிப்பின் உணர்வில்லாமை – உள்ளிட்ட இந்த வகையான மனக்காரணிகளுடன் நாம் செயல்பட்டால், மற்றவர்கள் மீது அது என்ன பிரதிபலிப்பை எப்படி ஏற்படுத்தப் போகிறது, அக்கறையின்மை, நாம் செய்யும் ஒன்று மற்றவர்களிடமும் நம்மிடமும் கூட என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை தீவிரமாக எடுக்காதது– அதன் முடிவு என்ன? மகிழ்ச்சியின்மை. மகிழ்ச்சியின்மையாக இருப்பினும், அது தண்டனையல்ல.   

நாம் இதைப் பற்றி உண்மையில் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த அனைத்து எதிர்மறை காரணிகளுடனான மனநிலை உண்மையில் மகிழ்ச்சியான மனநிலையா, உண்மையில் இந்த மனநிலை நம்மிடம் மகிழ்ச்சியான உணர்வை உருவாக்குமா? அல்லது அது மகிழ்ச்சியின்மையை மட்டும் உருவாக்குமா? நாம் இதைப் பற்றி மேலும் அதிகமாக யோசித்தால், உண்மையில் அது ஒரு அர்த்த உணர்வை ஏற்படுத்தும், அது எதிர்மறை மனநிலை, அதன் முடிவு மகிழ்ச்சியற்ற அனுபவத்தை கொடுக்கிறது, நாம் எதிர்மறை மனநிலையைக் கொண்டிருந்தால், பேராசை, கோபம் மற்றும் இதர விஷயங்கள் இன்றி, அது மகிழ்ச்சியை உருவாக்கலாம். எனவே, நடத்தையின் இந்த பொதுவான வகைகளைக் கொண்டிருக்கிறோம் –ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான- மேலும் இவை நம்முடைய மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற அனுபவத்தில் முடிவை கொடுக்கப் போகின்றன.

பின்னர், கூடுதலாக, நாம் செய்பனவற்றிற்கு குறிப்பிட்ட வகையான செயல்கள் இருக்கின்றன: யாரிடமாவது கத்துவது, அல்லது யாரிடமாவது கணிவோடு இருத்தல் உள்ளிட்டவை,  இந்த நடத்தை மற்றும் மற்றவர்கள் நம்மை நோக்கி நடந்து கொள்ளும் சூழ்நிலைகளில் இறங்குவதற்கான போக்குகள் ஆகியவற்றை மீண்டும் செய்வதற்கான போக்குகளின் அடிப்படையில் இவை அவற்றின் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

நம்முடைய கர்ம நடத்தையின் மற்றொரு முடிவு – ஆனால் அதற்கு நாம் அவ்வளவு ஆழமாக இங்கே செல்ல வேண்டிய தேவையில்லை- எந்த வகையான மறுபிறப்பை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை கருத்தில் கொள்தல்; நாய், கரப்பான்பூச்சி, மனிதனின் அடிப்படை உடல் மற்றும் மனதுடன் நாம் மறுபிறப்பு எடுக்கப் போகிறோமா. இங்கே இதர பல விவரங்களும் இருக்கின்றன, ஆனால் நான் அதனை இந்த தொடக்க பேருரையில், பெரும்பாலான பொதுக் கொள்கைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறேன்.

தீர்மானித்தல் அல்லது சுயவிருப்பம்

ஆக, ஒரு விதத்தில், நாம் சில வகைகளான குறிப்பிட்ட நடத்தையை திரும்பத் திரும்பச் செய்கிறோம் மேலும் விஷயங்கள் நமக்கு நடக்கின்றன; மற்றொரு புறம், நாம் இவை அனைத்தையும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை என்ற ஏற்ற இறக்கத்துடன் அனுபவிக்கிறோம், சில சமயங்களில் நம்முடைய நடத்தையோடு ஒத்துபோகிறது மேலும் சில சமயங்களில் அவை பொருந்துவதாகத் தெரியவில்லை. இவை அனைத்தும் மேலும் கீழும் செல்கின்றன, எல்லா நேரமும் ஏற்ற இறக்கம் இருக்கிறது அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பது நமக்குத் தெரியாது. நிச்சயமாக, நமக்கு என்ன நடக்கிறதோ அதற்கு நாமும் நம்முடைய கர்மாவும் மட்டுமே காரணமல்ல. பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற ஒவ்வொருவரும் மற்றும் அவர்களின் கர்மாவுடன் என்ன நடக்கிறது என்பதாலும் கூட தாக்கம் ஏற்படுகிறது, மேலும் அவை என்ன செய்கின்றன, அதனுடன் உடல் பிரபஞ்சத்தில் அதற்குள்ளாகவே என்ன நடக்கிறது –வானிலை, பூகம்பம், இவை போன்ற பிரபஞ்சத்தின் கூறுகள். ஏனெனில், இவை காரணமாக அடுத்தது நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பதை கணிப்பது மிகக் கடினம் – தாக்கத்தை தரும் காரணிகள் மிக, மிக கடினமானவை, மேலும் உண்மையில் புத்தர் சொன்னது எதையும் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலான விஷயம்.

நாம் இங்கே மிகவும் தெளிவைக் கொண்டிருக்கிறோம், ஏனெனில் பலர் இந்த கர்மா பற்றி கேட்கிறார்கள் – இது தீர்மானித்தலா அல்லது நாம் சுயவிருப்பத்தால் கொண்டிருக்கிறோமா? இரண்டில் எதுவும் சரியல்ல, இரண்டுமே உச்ச நிலைகள். தீர்மானித்தல் என்பது பொதுவாக நமக்கு என்ன நடக்கப் போகிறது என்று நமக்காக யாரோ தீர்மானித்திருக்கிறார்கள் அல்லது நாம் என்ன அனுபவிக்கப்போகிறோம் – சில வெளி ஆற்றல், உயர்ந்த ஆற்றல், அல்லது எதுவாயினும். அப்படி இல்லை என்று பௌத்தம் கூறுகிறது; நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை யாரோ ஒருவர் முடிவு செய்கிறார், நாம் வெறும் பொம்மைகளைப் போல யாரோ ஒருவர் நமக்காக எழுதிய கதையில் நடிக்கிறோம்.

சுயவிருப்பம், மற்றொரு வகையில் பார்த்தால், யாரோ உணவு விடுதியில் அமர்ந்து கொண்டு, மெனு கார்டை தனக்கு முன் வைத்துக்கொண்டு என்ன சாப்பிடலாம் என்று தீர்மானிப்பதைப் போன்றது அது. வாழ்க்கை அப்படியானதல்ல. வாழ்க்கை அப்படியானது என்று கற்பனை செய்தால், இது தவறவானது, குழப்பமானது என்று பௌத்தம் சொல்கிறது. அது பார்ப்பதற்கும் உணர்வதற்கும் தனியாக “நான்” – வாழ்க்கை, அனுபவத்தில் இருந்து பிரிந்து, தற்போது என்ன நடக்கிறதோ அதில் இருந்து வெளியே நின்று வாழ்க்கையை மெனு கார்டு போலவும் அதில் தேர்வுகளைச் செய்வதைப் போலவும் பார்ப்பவர். வாழ்க்கையில் இருந்து அல்லது அனுபவத்தில் இருந்து தனியாக பிரிந்து “நான்” என்ற ஒன்றே இல்லை, நமக்கு என்ன நடக்கப் போகிறதோ அது மெனு கார்டில் இருக்கும் சிறிய உருப்படிகளைப் போல நாம் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என்பதைப் போன்று இருக்காது, நாம் ஏற்கனவே உட்கார்ந்து கொண்டு ஒரு பொத்தானை அழுத்தினால் அது பொருள் வழங்கும் எந்திரத்தின் வழியாக வந்துவிடும், என்பதைப் போன்றதும் இல்லை. இது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்று பார்ப்பதற்கு பயனுள்ள படம் இது என்று நான் நினைக்கிறேன். அனுபவங்கள் ஒன்றும் பொருள் வழங்கும் எந்திரத்தில் இருக்கும் மிட்டாய்கள் போன்றதல்ல உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ள; பொத்தானை அழுத்தி பணத்தை உள்ளே அனுப்பினால், மிட்டாய் உங்கள் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் வாழ்க்கை அப்படியல்ல, சரிதானே?

“இன்று நான் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன் எல்லோரும் என்னிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளும் அனுபவத்தை பெறப்போகிறேன்” என்று நாம் முன் கூட்டியே தீர்மானிப்பதில்லை. பின்னர் நாம் நமது பணத்தை வாழ்க்கை எனும் எந்திரத்தில் வைத்தால் நமக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்யும் வாய்ப்பு மேலே வருவதில்லை. நமக்கு என்ன நடக்கப் போகிறது மற்றும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சுயவிருப்பமே தீர்மானிக்கப் போகிறது. ஆனால் நமக்கு என்ன நடக்கிறது என்பது இந்த இரண்டு உச்சநிலை நிர்ணயம் அல்லது மொத்த சுயவிருப்பத்தை விட மிகவும் நுட்பமான மற்றும் அதிநவீனமானது. 

கர்மாவின் ஆதாரமான குழப்பம்

நான் ஏற்கனவே இந்த பேருரையில் குறிப்பிட்டேன் உண்மையில் பௌத்தத்தில் மிகவும் தனித்துவமானது என்னவென்றால் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையில் நிலைத்திருக்கும் ஏற்ற இறக்கத்திற்கான காரணம் மேலும் நமக்கு நடைபெறும் அனைத்து விஷயங்களும் நடக்க வேண்டாம் என்றே நாம் விரும்புவோம் அதனை கட்டுப்படுத்தும் ஒன்றை நாம் கொண்டிருக்கவில்லை என்று புத்தர் போதித்திருக்கிறார்.  காரணம் என்பது நமது அனுபவத்தின் ஒவ்வொரு கணத்தின் அங்கம் அது இந்த மொத்த நோய்க்குறியையும் நிலைத்திருக்கச் செய்கிறது – அந்தக் காரணம் தான் குழப்பம். அது மட்டுமல்ல, நாம் எப்போதெல்லாம் குழம்பியவராக செயல்படுகிறோமோ –அது ஆக்கப்பூர்வமானதோ அல்லது அழிவுகரமானதோ- அது “நிலையான பழக்கத்தை” வலியுறுத்துகிறது – அதாவது எப்போதும் குழப்பத்துடனே செயல்படும் பழக்கம் – இதனால் ஒவ்வொரு கணமும் நாம் தொடர்ந்து குழப்பத்துடனே செயல்படுவோம்.

இந்தக் குழப்பம் என்றால் என்ன? பௌத்தத்தில் அது மிக ஆழமான தலைப்பு; ஆனால் நாம் அதனை எளிமையான விஷயங்களோடு உண்மையில் பொருத்தினால், நாம் இப்போது குழப்பத்துடன் எப்படி இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, நான் தான் இந்த பிரபஞ்சத்தின் மையம்; நான் தான் மிக முக்கியமான ஒருவன்; நான் எப்போதும் என்னுடைய வழியைப் பெற வேண்டும்; நான் எப்போதும் சரியானவன்; எல்லோரும் எனக்காக எப்போதும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.  நாம் இந்த அணுகுமுறையை செல்போன் உள்ளிட்டவற்றை வைத்து உணர முடியும்: நாம் மற்றவர்களுக்கு எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைக்கலாம், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் குறுக்கீடு செய்யலாம், அவர்கள் எப்போதும் நமக்கு பதில் அளிப்பவர் என்று நினைக்கிறோம், ஏனெனில் அவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பதை விட நான் சொல்லப்போகும் விஷயம் எதுவாக இருந்தாலும் அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். 

இந்த குழப்பத்தின் அடிப்படையில், நாம் யாரை நோக்கியாவது அழிவுகரமாக செயல்படுகிறோம் - அவர்களிடம் கத்துகிறோம், அவர்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறோம் – நாம் அவ்வாறு செய்கிறோம் ஏனெனில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதைச் செய்வதில்லை அல்லது நமக்குப் பிடிக்காத எதையாவது செய்கிறார்கள். எனக்கு பிடித்ததை அவர்கள் செய்ய வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை விட எனக்கு பிடித்தது என்ன என்பதே மிகவும் முக்கியம். அல்லது, அதே குழப்பத்தின் அடிப்படையில், மற்றவர்களுக்கு நல்லதைச் செய்கிறோம், அவர்களிடம் அன்போடு இருக்கிறோம், ஏனெனில் அவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். நான் யாருக்கேனும் எதையாவது செய்வது அவசியம் என்று விரும்புகிறேன், அவர்களுக்கு அது தேவை என்று நினைக்கிறேன், இதனால் நான் என்னுடைய மகளிடம் அவளின் மகளை எப்படி வளர்க்க வேண்டும் வீட்டை எப்படி நிர்வகிப்பது என்று கூறுகிறேன். அது உதவியாக இருக்கிறதா? மகளுக்கு நம்முடைய அறிவுரை தேவையா என்பது விஷயமல்ல, ஆனால் அது மிக முக்கியம் என்று நாம் நினைக்கிறோம், மேலும் இது அவசியமானது நிச்சயமாக என் மகளை விட அதிகமாக நான் அவளின் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரிந்தவன் நிச்சயமாக அவள் என்னிடம் அதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 

எனவே இந்த குழப்பம் உள்ளது, அது அழிவுகரமான மற்றும் ஆக்கபூர்வமான நடத்தைக்கு பின்னால் இருக்கிறது. இந்த குழப்பத்தினால்தான் இந்த மேல் மற்றும் கீழ், ஏற்றம் மற்றும் இறக்க சுழற்சியை நிலைநிறுத்துகிறோம். எனவே அதை எவ்வாறு அகற்றுவது என்பதை நாம் ஆராய வேண்டும்.

நமக்குள்ளான குழப்பத்தை நீக்குதல்

இந்த கர்மப் போக்கு மற்றும் பழக்கங்கள் கனிகின்ற இயக்கமுறை எப்படி என்று நாம் பார்த்தால், குறிப்பாக போக்குகளைப் பார்த்தால், இவை அனைத்துமே நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் துன்பத்தின் ஏற்ற இறக்கத்தை நோக்கிய அணுகுமுறையில் நாம் செய்பவையே. நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற இரண்டு மனக்காரணிகள் உள்ளன, அவை இங்கே குறிப்பிடத்தக்கவை. அதில் முதலாவது “ஏங்குதல்.” நாம் மகிழ்ச்சியை அனுபவித்தால், ஏங்குகிறோம் – அதன் அர்த்தம் அதில் இருந்து பிரிந்து விடக்கூடாது என்று நாம் மிக உறுதியான ஆசையை கொண்டிருக்கிறோம். “என்னை விட்டு தள்ளிப் போகாதே, எல்லா நேரமும் என்னுடனே இரு! நீண்ட நேரம் உங்களால் இருக்க முடியுமா?”- யாருடனாவது மகிழ்ச்சியாக இருக்கும் போது இந்த வகையான விஷயங்கள் எண்ண ஓட்டம் பிடிக்கின்றன. அல்லது நாம் சாக்லேட் கேக் சாப்பிடும் போது ருசித்து மகிழ்கிறோம். ஆதலால் அந்த மகிழ்ச்சியில் இருந்து பிரிந்து வர நாம் விரும்புவதில்லை. ஏனெனில் இதனால், நாம் மேலும் மேலும் அதிகமாக தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம் இல்லையா? அதுவே ஏக்கம். பின்னர், நாம் மகிழ்ச்சியற்ற நிலையை அனுபவிக்கிறோம், சாத்தியம் இருக்கும் வரை நம்மால் முடிந்தவரை அதில் இருந்து விரைவில் பிரிய வேண்டும். இவை இரண்டின் கீழே இருப்பது இரண்டாவது மனக்காரணி – உறுதியான அணுகுமுறையால் அடையாளம் காணப்படும் “நான்”- வாழ்வை அனுபவிக்கும் “நான்”.

நான் இந்த வாய்ப்பை கொண்டிக்கிறேன் அது எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் மேலும், அதில் இருந்து விலகவே விரும்புவதில்லை. எனக்கு என்ன பிடிக்கவில்லையோ அதில் இருந்து பிரிந்துவிட விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது எனக்கு பிடிக்கவில்லை, எனவே வாயை மூடுங்கள் அதுவே சிறந்தது இல்லாவிட்டால் நான் உங்களிடம் கத்துவேன்.

நம் வாழ்வில் இந்த ஏக்கத்துடன், “நான்” என்ற உறுதியான அடையாளத்துடன் என்ன நடக்கிறதோ அதனுடன் ஏற்ற இறக்கத்துடனான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற நிலையை அனுபவித்தால் – இவை எல்லாமே குழப்பத்தின் அடிப்படையிலானது – இந்தக் காரணங்கள் அனைத்தும் கர்மப் போக்கினை கனியவைக்கிறது. அந்த வழியில், நாம் நம்முடைய ஏற்ற இறக்கம், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற ஏற்ற – இறக்கத்தை நிலைநிறுத்துகிறோம். மேலும் நம்முடைய அனைத்து முந்தைய நடத்தைகளையும் திரும்பத் திரும்பச் செய்கிறோம், ஏனெனில் அந்த போக்குகளில் இருந்து நாம் அறுவடை செய்வது இதையே. உண்மையில் மோசமானது எதுவென்றால் ஒவ்வொரு கணமும் இருக்கும் இந்த குழப்பத்துடனான மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை. மேலும் அவை அதிக கணங்கள் இந்த மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை நிலைத்திருப்பதோடு, குழப்பத்துடனே செல்லப்போகிறது. நாம் இப்போது அனுபவிக்கும் இந்த குழப்பமானது நாம் ஏற்கனவே அனுபவித்த மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மையின் முந்தைய குழப்பத்தின் முடிவு.

கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் நிகழும் சுழற்சி, இந்த சுய- நிலைநிறுத்தல் சுழற்சியைத் தான் பௌத்தம் “சம்சாரியம்” என்று சொல்கிறது. நாம் இந்த குழப்பத்தில் இருந்து விலக முடிந்தால், பின்னர் இந்த மொத்த கர்ம முறையும் கீழே விழுந்துவிடும் நாம் சம்சாரியத்தில் இருந்து விடுதலை பெறுவோம். குழப்பத்தை நாம் சரியான புரிதலுடன் இடமாற்றம் செய்தால் – அதன் அர்த்தம் என்ன என்று நான் ஆழ்ந்து செல்லப்போவதில்லை, பின்னர் “நான்” என்ற உறுதிக்கு எந்த அடிப்படையும் இல்லை- “நான் இதை பெறப்போகிறேன் அதை கொண்டிருக்கப் போவதில்லை” என்ற எந்த அடிப்படையும் இருக்கப்போவதில்லை. அங்கே ஏக்கம் இல்லை, ஆதலால் அந்த போக்குகள் மற்றும் பழக்கங்களை தூண்ட எதுவும் இல்லை. இந்த போக்குகள் மற்றும் பழக்கங்களை தூண்டுவதற்கு எதுவும் இல்லையென்றால், உங்களுக்கு இன்னமும் அந்த போக்கும், பழக்கமும் இல்லை எனக்கொள்ளலாம். 

நான் ஒரு உதாரணம் கொடுக்க முயற்சிக்கிறேன். டைனோசரை பார்க்கும் ஒரு காலம் இருந்தது, பின்னர் டைனோசர் அழிந்துபோனது, காட்டுக்குள் நடந்து போகும் போது எங்குமே டைனோசரை பார்க்க முடியவில்லை, இல்லையா? 

அங்கே அந்த போக்கை பயன்படுத்தி இருக்கிறோம்: நான் காட்டில் நடந்து சென்ற போது எப்போதும் டைனோசரை பார்ப்பேன். ஆனால் இப்போது டைனோசரே இல்லை, ஆகையால் டைனோசரை பார்க்கும் வாய்ப்பு இல்லை. அந்த உதாரணத்தை பயன்படுத்தி, கனிய வைக்கும் போக்கை ஏற்படுத்த எதுவுமில்லை - ஒரு டைனோசர் உங்களுக்கு முன்னால் நடந்து போகிறது, ஒரு டைனோசரை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது - போக்கைச் செயல்படுத்த எதுவும் இல்லை என்றாலும், உங்களுக்கு இனி அந்த வாய்ப்பு இல்லை. கர்ம போக்குகள் கனிவதற்கான வாய்ப்புகள் இனி இல்லை ஏனெனில் அங்கே போக்குகள் இல்லை, பின்னர் இந்த மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மைக்கான அனுபவம் இருக்காது, குறிப்பாக நாம் எந்த குழப்பதையும் இனி அனுபவிக்கப் போவதில்லை; அது நம்மைவிட்டு போய்விடும். 

மொத்த சம்சாரியச் சூழலில் இருந்து விடுபடுவதற்கான வழியும் இதுவே. நாம் இந்த அதிருப்தியை இனியும் அனுபவிக்கப்போவதில்லை, மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மைக்கான பாதுகாப்பிற்ற நிலை, ஆனால் அதற்கு மாறாக மிக வெவ்வேறு வகையான மகிழ்ச்சி, மிக வேறுபட்ட தரம், மிக நிலையான அனுபவத்தை கொண்டிருக்கிறோம் – குழப்பத்துடன் கூடிய ஒரு வகை மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது, நான் வென்று விட்டேன் அதனால் இங்கே என்னுடைய வெகுமதி இருக்கிறது என்னும் வகையான மகிழ்ச்சி இல்லை. 

அது ஒரு வகை மகிழ்ச்சி ஒருவர் கடினமான சூழலில் இருந்து விடுபடும் ஒரு அனுபவம். நான் ஒரு எளிமையான உதாரணத்தை நினைக்கிறேன், அது துல்லியமான உதாரணமாக இல்லாவிட்டாலும், மகிழ்ச்சி என்றால் என்ன என்று நாம் பேசுவது பற்றிய அணுகுமுறையில் நாம் நம்முடைய இறுக்கமான ஷூவில் இருந்து அன்றைய தினத்தின் முடிவில் விடுபடுவதைப் போன்றது – அந்த வலியில் இருந்து நாம் விடுபட்டுவிட்டோம் என்பது போன்ற ஒரு இன்பமான துயர்நீக்கம் அது.

மேலும், விடுதலையுடன் நாம் அனுபவிப்பது என்னவென்றால், நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படும், சில விஷயங்களை அனுபவிக்கும் கர்மாவின் இந்த வலுக்கட்டாய தூண்டுதல்களால் நம் செயல்கள் இனி இயக்கப்படுவதில்லை. மாறாக, புத்தராக மாற நாம் விடுதலைக்கு அப்பாற்பட்டு செயல்பட்டால், நம்முடைய செயலை இயக்குவது என்னவென்றால் இரக்கம் – மற்றவர்கள் துன்பத்தில் இருந்தும் அதற்கான காரணங்களில் இருந்து விடுபடவும் விரும்புதல்.

நிறைவுரை

கர்மாவுடன் சேர்ந்த சில கொள்கைகளுக்கு இவை அடிப்படை அறிமுகம். சொல்லப்பட்டுள்ளவை மற்றும் விளக்கப்பட்டுள்ளவற்றை விட மேலும் மேலும் இன்னும் அதிகமானவை இருக்கின்றன. இவற்றில் சில குறிப்பிட்ட பொதுக் கொள்கைகளுடன் விளக்கப்பட்டுள்ளது, இவ்வகை செயல்களின் முடிவு இவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்றவை, மேலும் அந்தக் காரணி அங்கே இருந்தால், முடிவானது உறுதியாகவும், அது அங்கே இல்லாவிடில் - நோக்கத்திற்காக ஏதாவது செய்வதை எதிர்த்து நீங்கள் தற்செயலாக ஏதாவது செய்தால் - விளைவு வித்தியாசமாக இருக்கும். அங்கு ஏராளமான விவரங்கள் உள்ளன.

மேலும், உண்மையில் இப்போது கனியப்போவதைப் பொறுத்தவரை, கொள்கைகளுடன் பொதுமைப்படுத்துவது மிகவும் கடினம், ஏனென்றால் அது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பாதிக்கிறது. நமக்கு இப்போது என்ன நடக்கிறது, நாம் அவற்றை பொதுவான கொள்கைகளில் இருந்து வெறுமனே பொதுமைப்படுத்த முடியாது, ஏனெனில் இப்போது என்ன நடக்கிறதோ அவை நடந்த எல்லாவற்றாலும் தாக்கம் ஏற்படுத்தப்பட்டது. சாலையில் நீங்கள் விபத்தில் சிக்கிக்கொள்வதைப் பற்றி நினைத்துப் பாருங்கள், அது உணர்த்துவது என்ன? சாலையில் இருந்து அனைவரையும் தங்கள் பக்கத்தில் இருந்து கொண்டு வந்தது, போக்குவரத்து நிலைமைகள், வானிலை மற்றும் சாலையின் நிலை என அனைத்தும் கர்மா.  இப்போது கனிய வைக்கும் விபத்து என்ற குறிப்பிட்ட விஷயத்தை பல விஷயங்கள் கொண்டு வந்துள்ளன.

இந்தத் தலைப்பில் நாம் ஆர்வமாக இருந்தால், அதன் பல்வேறு வெவ்வேறு அம்சங்களை ஆராய்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. கர்மாவைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அது கர்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதைக் கடப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இதனால் நாம் சம்சாரிய துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது மட்டுமல்லாமல், மற்ற அனைவருக்கும் உதவக்கூடிய ஒரு சிறந்த நிலையிலும் கூட இருக்கிறோம். 

உங்களுக்கு என்ன கேள்விகள் இருக்கிறது?

கேள்விகள்

இந்தச் சூழலில், குற்ற உணர்ச்சி காட்சிக்கு வெளியே இருக்கிறதா? குற்ற உணர்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

சரிதான். கர்மா குறித்த பௌத்த விளக்கத்திற்கு குற்ற உணர்வோடு எந்த தொடர்பும் இல்லை. குற்ற உணர்வு என்பது மிக உறுதியான “நான்” என்ற அடிப்படையில் தனி உருபொருளாகவும், வேறு சில தனித்தனி உருபொருள்களாகவும், இரண்டு பிங்-பாங் பந்துகள் அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வதையும் அடிப்படையாகக் கொண்டது. அதன் பின்னர் அந்த உருபொருள் “நான்” என்று நம்புவது மிகவும் மோசமானது மேலும் உருபொருளால் “நான் என்ன செய்தேன்” என்பதும் மிக மோசமானது. ஆகவே இவை இரண்டிற்கும் ஒரு முடிவு இருக்கிறது வெளித்தோற்றத்தில் திடமான உருபொருள்கள் அதன் பின்னர் போக விடுவதில்லை – அதுவே குற்ற உணர்வு. இது எப்படி என்றால் குப்பையை உங்கள் வீட்டில் இருந்து எப்போதும் வெளியே தூக்கி எறியாமல் மாறாக வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனை வெளியே கொட்டாமல் இது எவ்வளவு பயங்கரமானது, எவ்வளவு மோசமாக வாடை வீசுகிறது, எவ்வளவு அழுக்கானது என்று சொல்லிக்கொண்டு இருப்பதைப் போன்றது.

இது கேட்பதற்கு மிக தெளிவாகவும் மிக தர்க்கமாகவும் இருக்கலாம், மேலும் நான் இந்த முழு முறையையும் புரிந்து கொள்கிறேன், குழப்பம், வேண்டுதல், போக்குகள் மற்றும் அனைத்தில் இருந்தும் எப்படி வெளியேறுவது. ஆனால் அதைப் புரிந்துகொள்வது அனுபவத்திலிருந்தோ அல்லது கட்டாயமாக செயல்படும் தூண்டுதலிலிருந்தோ விடுபட போதுமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். 

ஆம், சரிதான். அதனால் தான் முதலில் நாம் நன்னெறி சுய-கட்டுப்பாட்டை பயிற்சிக்க வேண்டும். “எவ்வளவு அசிங்கமான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று நான் சொல்ல நினைப்பதற்கும், உண்மையில் அதைச் சொல்வதற்கும் இடையில் லேசான இடைவெளி இருக்கிறது என்று நாம் குறிப்பிட்டதை நினைவில் வையுங்கள். நம்மால் அந்த இடத்தை பிடிக்க முடிந்தால், அந்த நபரிடம் அவர் அசிங்கமான ஆடையை அணிந்திருப்பதைக் கூறினால் என்ன தாக்கம் ஏற்படப்போகிறது என்பதையும் நம்மால் தீர்மானிக்க முடியும். அப்படி சொல்வதனால் உருப்படியான எதுவும் நடக்கப்போவதில்லை என்று பார்த்தால், நாம் அதைச் சொல்வதில்லை. அங்கிருந்து தான் நாம் நன்னெறி ஒழுக்கம் மற்றும் சுய-கட்டுப்பாட்டுடன் தொடங்குகிறோம். 

கூடுதலாக, எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமானால் எனக்கு என்ன உணர்வு இருக்கிறது என்பதையும் நம்மால் பகுப்பாய முடியும்? பேராசை போன்ற சிக்கலான உணர்வு அடிப்படையில் நான் எதையாவது செய்ய விரும்புகிறேனா? கோபத்தின் அடிப்படையில் எதையாவது செய்ய விரும்புகிறேனா; அப்பாவித்தனம் அடிப்படையிலானதா? உங்களுடைய ஆடை அசிங்கமாக இருக்கிறது உங்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று நான் சொல்வதற்கு முன்னர் சிந்தித்தேனா? அல்லது எதையாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பம் கருணை மற்றும் இந்த கூடுதல் நேர்மறை விஷயங்கள் அடிப்படையிலானதா? இதனால் தான் சிக்கலான உணர்வுக்கான வரையறை அல்லது அணுகுமுறை மிகவும் உதவிகரமானது: இது ஒரு மனநிலை, எப்போது, எங்கே தோன்றினாலும், நாம் மன அமைதி மற்றும் சுய-கட்டுப்பாட்டை இழக்க காரணமாகிறது.  

உங்களால் சொல்ல முடியும் நீங்கள் மன அமைதியை இழந்தால்: நம்முடைய இதயம் சற்றே கூடுதல் வேகமாக துடிக்கிறது; நாம் சிறிதேனும் அசவுகரியத்தை உணர்கிறோம். எனவே நாம் கவனிக்க முயற்சிக்கிறோம், உதாரணமாக, நுட்பமான விஷயங்கள், நான் பெருமையுடன் எதையாவது சொல்கிறேனா என்பதைப் போன்றது? எடுத்துக்காட்டாக, “எனக்கு அது புரியவில்லை” என்று சிலர் சொல்லலாம், “அப்படியா, ஆனால் எனக்கு புரிகிறது!” என்று நீங்கள் சொல்லலாம், அப்போது சிறிதேனும் அசவுகரியத்தை நீங்கள் கவனிக்கலாம், அதற்குப் பின்னால் சில பெருமை, சில ஆணவம் இருக்கலாம், எனவே நீங்கள் பார்க்க வேண்டியது இதைத் தான்.

ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொள்ள, அதாவது வெற்றிடப் புரிதலைப் பெறுவதன் அர்த்தம், மிக, மிக கடினம், மேலும் நாம் பெற்றாலும் கூட, அதற்கு ஏற்றாற் போல நாம் மாற வேண்டும், அப்போது தான் எல்லா நேரமும் நாம் அதனைக் கொண்டிருக்க முடியும். எனவே தான் நாம் நன்னெறி சுய- கட்டுப்பாட்டுடன் தொடங்கி, அழிவுகரமாக செயல்படுவதில் இருந்து நம்மை நாமே தடுக்கிறோம். 

நான் சிறிது கவனிக்காமல் விட்டுவிட்டேன்.  மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின்மை ஏற்ற இறக்கங்களை நிலைநிறுத்தும் இரண்டு உணர்ச்சிகள் உள்ளன, என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இவற்றில் ஒன்று ஏக்கம் என்று கூறினீர்கள், அப்படியானால் மற்றொன்று என்ன?

கர்ம போக்குகளைத் தூண்டும் இரண்டு காரணிகளை நான் விளக்கினேன் – இவை சார்ந்து எழுதலின் பனிரெண்டு தொடர்புகள் பற்றிய போதனைகளில் இருந்து வருகிறது. ஒன்று ஏக்கம், மற்றொன்று – நான் சுருக்கமாக சொல்கிறேன் – மற்றொன்று உண்மையில் "பெறுபவர் அணுகுமுறை அல்லது உணர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது சுமார் ஐந்து வெவ்வேறு சாத்தியக்கூறுகளின் பட்டியல். இதுதான் முடிவைப் பெறும், எனவே மிக முக்கியமானது, நாம் என்ன அனுபவிக்கிறோம், என்ன நடக்கிறது என்பதோடு ஒரு திடமான “என்னை” அடையாளம் காண்பது.

ஏதாவது உறவுமுறையில் திடமான “என்னை” காண்பதா இது? இங்கே குழப்பம் உள்ளது என்பதும், அதை நாங்கள் கவனித்துக் கொண்டு குழப்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதும் தெளிவாகிறது. ஆனால் நாம் சரியாக என்ன குழப்பமடைகிறோம், எதனுடன் குழப்புகிறோம்?

எளிமையான வழியில் பதில் சொல்ல எளிய கேள்வியல்ல அது. இல்லாத "என்னை", வழக்கமான "என்னை", இல்லாத தவறான "என்னை" உடன் குழப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பது உண்மையான "என்னை" சில சாத்தியமற்ற வழியில் உள்ளது என்று கற்பனை செய்வது, அதை மிகைப்படுத்தல். இது இல்லாத ஒன்றைச் சேர்க்கிறது. உதாரணமாக: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அல்லது நான் மகிழ்ச்சியின்றி இருக்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால்; நானும் மகிழ்ச்சியின்றி இருக்கிறேன் என்பதல்ல. மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற அனுபவம் இருக்கும் போது, அதனை நாம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றே குறிப்பிடுகிறோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அல்லது மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதல்ல – நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த “நான்” அல்லது “என்னை” என்பது வழக்கமான “என்”, என்பதைக் குறிக்கிறது அது இருத்தலாகும். 

வழக்கமான “என்னை” என்பதற்கு நான் ஒரு உதாரணத்தை பயன்படுத்துகிறேன். ஒருவேளை நாம் ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அந்தப் படம் “Gone with the wind” என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மகிழ்ச்சியான காட்சி, அதன் பின்னர் மகிழ்ச்சியற்ற காட்சி, பிறகு மற்றொரு மகிழ்ச்சியான காட்சி இருக்கிறது. சரி, இங்கே என்ன நடக்கிறது? இந்த மகிழ்ச்சியான காட்சியும், மகிழ்ச்சியற்ற மற்றொரு காட்சி என இரண்டுமே அந்த திரைப்படத்தில் இருந்தது தான். “Gone with the Wind” என்பது மொத்த விஷயத்தையும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்றவை என அனைத்து காட்சிகளையும் நாம் எப்படி வழக்கமாக அடையாளக்குறியீடு செய்கிறோம் என்பதே விஷயம். “Gone with the Wind” என்பது வெறும் தலைப்பு, வெறும் பெயர் மட்டுமே. ஆனால் நாம் “Gone with the Wind” பற்றி பேசினால் அது வெறும் தலைப்பை பற்றி மட்டும் பேசுவதல்ல. நாம் அந்தப் படத்தைப் பற்றி பேசுகிறோம் – அந்தத் தலைப்பு எதைக்குறிக்கிறது. இது வழக்கமாக இருக்கும் படம்: அது இருக்கிறது.  திரைப்படம் அந்த ஒவ்வொரு காட்சிகளிலிருந்தும் தனித்தனியாக இல்லை - அந்த காட்சிகளிலிருந்து தனித்தனியாகவும் சுயாதீனமாகவும் இருக்கும் ஒரு திரைப்படம் தவறான திரைப்படமாக இருக்கும். அதனால் இருக்க முடியாது. வழக்கமாக இருக்கும் திரைப்படம் என்பது காட்சிகளின் அடிப்படையில் பெயரிடப்படவோ அல்லது கணக்கிடவோ முடியும்.

அதைப்போலவே, நாமும் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியற்ற நிமிடங்களைக் கொண்டிருக்கிறோம் மேலும் அவை அனைத்தையும் நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம்? நாம் அதனை “என்னை” என்று குறிப்பிடுகிறோம் – வழக்கமான “என்னை”, அது உயிர்ப்புடன் இருக்கிறது: அது நீங்கள் இல்லை, அது “நான்.” அதே போன்று, அந்த திரைப்படம் “Gone with the Wind” அது “ஸ்டார் வார்ஸ்” இல்லை. ஆனால் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியின்மையையும் அனுபவிக்கும் தருணங்களிலிருந்து தனித்தனியாகவும், அந்த தருணங்களை அனுபவிப்பது “நான்” இல்லை. அது ஒரு தவறான "நான்", இல்லாத "நான்". “நான்” என்பது ஒரு சொல் மட்டுமே; எனவே "நான்" என்பது ஒரு வாழ்க்கையின் அனுபவத்தின் அனைத்து தருணங்களின் அடிப்படையிலும் அந்த வார்த்தையை குறிக்கிறது.

குழப்பம், அப்படியானால், இந்த உடலுக்குள் ஏதேனும் ஒரு தனி “நான்” இருப்பதாக நினைத்து, அதில் வசிப்பதும், எப்படியாவது அதனுடன் இணைக்கப்படுவதும், பொத்தான்களை அழுத்தியதும், இப்போது “நான்” என் காலில் வலியை அனுபவித்து வருகிறேன், நான் மிகவும் மகிழ்ச்சியற்றவன், எனக்கு அது பிடிக்கவில்லை. உடல் என்று அழைக்கப்படும் அந்த அன்னிய விஷயத்திற்குள் அந்த முழு அனுபவத்திலிருந்தும் ஒரு தனி "நான்" இருப்பது போலாகும்.

பின்னர், இந்த தனி “என்னை” - இந்த பொய்யான “நான்” - வழக்கமான “நான்” உடன் குழப்பமடைந்து, அந்த பொய்யான “என்னை” அடையாளம் காண்பதன் அடிப்படையில், “நான் இந்த மகிழ்ச்சியின்மையில் இருந்து, இந்த வலியிலிருந்து, நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியில்லாத உடல் வலியில் இருந்து பிரிய வேண்டும். " நிச்சயமாக, ஒரு திடமான "என்னை" பற்றிய தவறான எண்ணம் நம்மிடம் இல்லாதபோது, நாம் அங்கே உட்கார்ந்து தொடர்ந்து வலியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நமது காலில் தீப்பிடித்தால், நிச்சயமாக நாம் நமது பாதத்தை நெருப்பிலிருந்து வெளியேற்று எடுப்போம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் “நான்” என்ற கருத்து முற்றிலும் வேறுபட்டது. எந்த பீதியும் அங்கே இல்லை.

ஆனால் ஒரு வழக்கமான "எனக்கு" எதிராக ஒரு தவறான "என்னை" என்ற கருத்து மிகவும் சிக்கலானது மற்றும் மேம்பட்டது. எனவே, இப்போதைக்கு விட்டுவிடுவோம். அதற்கு பதிலாக, இந்த மாலைப்பொழுதை ஒரு அர்ப்பணிப்புடன் இங்கே முடிப்போம். நாங்கள் நினைக்கிறோம்: எந்தவொரு புரிதலும், எந்தவொரு நேர்மறையான சக்தியும் இதிலிருந்து வந்தாலும், அது ஆழமாகச் செல்லலாம், வலுவாக வளரலாம், மேலும் அனைவரின் நலனுக்காகவும் ஞானத்தை அடைவதற்கு ஒரு காரணமாக செயல்படலாம்.

Top