அறியாமை
புத்தர் இதனை நான்கு மேன்மையான உண்மைகள் என்ற விதத்தில் போதிக்கிறார். இந்த நான்கு உண்மைகளும் சரியானவை என்று உயர்நிலை உணர்வாளர்களான ஆரியர்ளால் கண்டறிப்பட்டது. அடிப்படையில் அவை,
- நாம் அனைவரும் வாழ்வில் பிரச்னைகளை சந்திக்கிறோம்.
- இந்தப் பிரச்னைகள் காரணங்களில் இருந்து வருகிறது.
- இந்தப் பிரச்னைகள் திரும்ப ஏற்படாதவகையில் அந்தப் பிரச்னைகளை முழுவதுமாக நிறுத்துவது சாத்தியமே.
- அது போன்ற நிறுத்தலானது பிரச்னைகளுக்கான காரணங்களை அகற்றும் புரிதல் மூலம் அடையலாம்.
நம்முடைய பிரச்னைகளுக்கான ஆழமான காரணங்கள் பற்றி நாம் பேசினால், அது "மடமை" என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுவதாக எடுத்துக்கொள்ளப்படும். ஆங்கிலத்தில் "அறியாமை" என்பத சற்றே சிறந்ததாகும். மடமை என்றால் நீங்கள் ஒரு முட்டாள் என்று பொருள், அதனால் அது நல்ல வார்த்தை இல்லை. அதற்காக நாம் முட்டாள் என்று அர்த்தப்படுத்தவில்லை.
இரண்டு வெவ்வேறு வகையான அறியாமை உள்ளன. முதலாவதில் நம்முடைய நடத்தையின் காரணம் மற்றும் பலன் பற்றிய நம்முடைய அறியாமை, அழிவுகரமான விதத்தில் நாம் செயல்பட்டால், அது நமக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆழ்மட்டத்தில், நாம் யதார்த்தத்தின் அறியாமை பற்றி பேசுகிறோம். என்ன நடக்கிறது என்றால் இயல்பான இருத்தலுடன் பொருட்கள் இருப்பதாக கற்பனை செய்கிறோம், அதை நாம் "சுய- நிறுவல் இருத்தல்" என்று மொழி பெயர்க்கலாம். இயல்பான இருத்தலை அடையும் பழக்கம் இது. இந்தப் பழக்கத்தினால், பின்னர் தானாகவே ஒவ்வொரு கணத்திலும், நம்முடைய மனங்கள் விஷயங்கள் இயல்பாகத் தோன்றுவதாக உருவாக்குகின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால் விஷயங்கள், தன்னுடைய சுய சக்தியில், அவை எப்படித் தோற்றமளிக்க வேண்டுமோ அப்படி இருத்தலுக்கான நிறுவலை எதையும் யாரையும் சாராமல் இருப்பதாகத் தோன்றுகிறது. இவ்வகையான இருத்தல் உண்மையான எதற்கும் வழிவகுக்காது என்ற அறியாமையால், நாம் விஷயங்கள் இவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொள்கிறோம்.
புரிந்து கொள்வதற்கு அது எளிதானதல்ல. பின்வரும் உதாரணத்துடன் இது எதைப்பற்றி பேசுகிறது என்பதை விளக்குகிறேன். நாம் நம்முடைய காரை ஓட்டிக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். சாலையின் மற்றொரு வழியில் ஒருவர் ஹாரனை ஒலித்து நம்மைக் கடந்து செல்ல முயற்சிக்கிறார். அந்த நபர் நமக்கு எப்படித் தோன்றுவார்? நம்மை கடந்து செல்ல முயற்சிக்கும் அந்த நபர் முட்டாளைப் போலத் தோன்றுவார். அந்த நபர் இயல்பாக முட்டாளாக இருப்பதாகத் தோன்றலாம்; அவருடைய சொந்த வாழ்வில் எதையும் புரிந்துகொள்ளாத நிறுவப்பட்ட முட்டாளாக அவர் தோன்றலாம். மற்றொரு விதமாகச் சொன்னால், நம்மைக் கடந்து செல்ல முயற்சிக்கிறார் மற்றும் ஹாரனை ஒலிக்கிறார் நிச்சயமாக அவரிடம் தவறாக ஏதோ இருக்கிறது என்று அவரை உண்மையிலேயே முட்டாளாக்குகிறோம். ஹாரன் ஒலிப்பதை கேட்டு, அந்த நபரைப் பார்த்ததும், தானாகவே "அவர் ஒரு முட்டாள்!" என்று நினைக்கிறோம். அவர் அப்படித் தோன்றலாம் மேலும் இந்தத் தோற்றம் யதார்த்தத்துடன் ஒத்துப் போவதாக நாம் நம்புகிறோம்: இது தான் உண்மையில் முட்டாள்தனம்.
வெற்றிடம் (வெறுமை) எதை செல்லததாக்குகிறது
இந்த மனிதர் முட்டாளாகத்தான் இருக்கிறார் என்ற கருத்தியல் அறிவாற்றலின் மறைமுகமான கருத்தியல் பொருள் என்ன? கருத்துருவானது மறைமுகமாக அந்த நபர் உண்மையில் முட்டாளாக இருக்கிறார் என்ற அறிவாற்றலை காட்டுகிறது; உண்மையில் அந்தக் காரில் இயல்பிலேயே முட்டாளான ஒருவர் இருக்கிறார் என்று கருத வைக்கிறது. அது தான் இந்தத் தோற்றத்தினாலும் நம்முடைய மனதை இந்த வழியில் எடுத்துச் செல்வதும் உணர்த்துகிறது. உதாரணமாக, மற்றொரு அறையில் யாரோ இருக்கிறார் என்று நான் நினைத்தால்; கருத்துருவானது மறைமுகமான யாரோ அந்த அறையில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது; அந்தச் சிந்தனையே யதார்த்தத்துடனும் ஒத்துப் போகிறது. "கருத்தியல் ரீதியில் மறைமுகமான பொருள்" என்பது மத்யமாகா (இடைநிலை) கல்வியில் மிக முக்கியமான தொழில்நுட்ப முறையாகும்.
எந்த கருத்தியல் அறிவாற்றலிலும், பல விஷயங்கள் சேர்ந்திருக்கிறது. “zhen-yul,” என்ற வார்த்தைக்குள் இருக்கும் "சென்", கருத்தியல் மறைமுகப் பொருள் என்பதற்கான திபெத்திய பதம், "பற்றிக்கொள்ளுதல்" ஒரு வினைச்சொல்லாக பயன்படுத்த முடியும், பெயர்ச்சொல்லாக zhen-pa, என்பது சக்யா போதனையின் நான்கு பற்றுதல்களில் இருந்து பிரிதல் என்பதில் இருந்து "பற்றுதல்" என்று அர்த்தப்படுத்துகிறது. உருவகமாக, கருத்துரீதியாக மறைமுகமானது ஒரு கருத்தியல் அறிவாற்றலை "பற்றிக் கொள்ளுதல்" என்று பொருளாகும். பற்றிக்கொள்ளுதல் என்றால் கருத்தியல் அறிவாற்றலுக்கு ஒத்துப் போகின்ற ஏதோ ஒன்றுடன் யதார்த்தத்தில் இணைந்து இருத்தல் என்று அர்த்தம். மறைமுகமாக அங்கே சுய - நிறுவலுக்கான ஈர்த்தல் இருந்தால், இயல்பான இருத்தல் என்பது, ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றும் விதம் உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது என்ற அனுமானிக்கப்படுகிறது. நம்முடைய உதாரணத்தில், மற்றொரு காரில் ஹாரனை ஒலிக்கும் நபர் இயல்பிலேயே முட்டாளாக இருக்கிறார் என்று நாம் கற்பனை செய்கிறோம். அந்தக் கற்பனையினால், அங்கே முட்டாள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது, எனவே உண்மையிலேயே அங்கே ஒரு முட்டாள் இருப்பதாக அனுமானிக்கிறோம்; நாம் நம்முடைய முன்நிறுத்தலை நம்புகிறோம். இந்த அறிவாற்றல் மற்றும் இந்த தோற்றத்தின் கருத்தியல் ரீதியாக மறைமுகமாக காரில் உள்ளவர் ஒரு உண்மையான முட்டாளாக இருப்பதாகத் தோன்றுகிறது.
வெற்றிடம் (வெறுமை) என்பது இல்லாமை; ஏதோ ஒன்று இல்லை. இந்த விஷயத்தில் மொத்தமாக இல்லாதது மறைமுகமான கருத்தியல் பொருள். இயல்பிலேயே உண்மையான முட்டாள் என்ற தோற்றம் யதார்த்தத்திற்கு ஒத்துபோகவில்லை. அங்கே ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு சென்றாலும், அவர் இயல்பிலேயே முட்டாளாக இல்லை. இயல்பிலேயே யாரும் முட்டாளாக இல்லை, ஏனெனில் இயல்பிலேயே அப்படி முட்டாளாக யாரும் இல்லை. எனவே அந்தக் காரில் இயல்பிலேயே முட்டாள் என்று யாரும் இல்லை. அது ஒரு பொதுவான எண்ணம். எவ்வாறாயினும், நாம் அதைச் செம்மைப்படுத்த வேண்டும், ஏனெனில் அது அவ்வளவு சரியானது அல்ல.
மிக எளிமையான, குறைந்த துல்லியமான உதாரணத்தைப் பயன்படுத்துவோம். ஒருவேளை ஒரு குழந்தை மெத்தைக்குக் கீழே பேய் இருப்பதாக நினைத்தால். மறைமுகமாக கருத்துரு செய்யப்படும் பொருளானது உண்மையில் மெத்தைக்குள் அடியில் பேய் இருக்கிறது என்பதாகும். இந்த குழந்தைக்கு இருக்கும் பயம் உண்மையான எதையும் குறிக்கவில்லை. எனவே, நாம் வெற்றிடத்துடன் பேசுவது முற்றிலும் இல்லாத குறிப்பிடப்படும் ஒன்று. இது இருக்கவே முடியாத ஏதோ ஒன்றின் இல்லாமை. இது முற்றிலும் சாத்தியமற்றது.
இருப்பினும், வெற்றிடத்தின் மூலம் நாம் சாத்தியமே இல்லாத பேய் போன்ற ஒன்றைப் பற்றி பேசவில்லை. சாத்தியமில்லாத வழியில் இருத்தலைப் பற்றி நாம் பேசுகிறோம். உதாரணமாக, மெத்தைக்கு அடியில் ஒரு பூனை இருக்கலாம் அதை அந்தக் குழந்தை பேய் என்று நினைக்கால், ஆனால் பூனையால் பேயாக இருக்க முடியாது, ஏனெனில் "பேயாக இருத்தல்" என்பது போன்ற ஒன்றே இல்லை. இங்கே, வெற்றிடம் என்பது பூனை இருப்பதை மறுக்கவில்லை, பூனை பேயாக இருக்கிறது என்பதைத் தான் மறுக்கிறது.
ஒரு அடையாளத்தை செல்லத்தக்கதாக நிறுவுதல்
முட்டாள் என்ற நமது உதாரணத்தை மீண்டும் பார்ப்போம். வழக்கமாக, இந்த நபர் முட்டாள் மாதிரியே உண்மையில் காரை ஓட்டலாம், ஆனால் உண்மையில் நாம் என்னபடி அவரை நம்முடைய "முட்டாள்" கருத்துடன் அவரை அடையாளப்படுத்த முடியும் மற்றும் அப்படி ஒருவரை அழைக்க முடியும்? இந்திய குரு சந்திரகீர்தி செல்லத்தக்க அடையாளத்திற்கு மூன்று அளவுகோல்களை கொடுத்திருக்கிறார்.
முதலில், அங்கே நிறுவப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வழக்கம் இருக்க வேண்டும் அது அடையாளப்படுத்துதல் மூலம் ஏற்கப்பட வேண்டும். ஜெர்மனியில், வாகனம் ஓட்டுவதற்கு சில சமுதாய விதிமுறைகள் இருக்கின்றன நீங்கள் எப்போதும் மற்றவர்களை முந்திச் செல்ல முயற்சிப்பீர்கள் என்பதனால் ஹாரனில் கையை வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுவது சரியானதாக கருதப்படுவதில்லை. அப்படி யாராவது செய்தால் அவர்கள் முட்டாளாகக் கருதப்படுவார்கள். இதே இந்தியாவில், இது சாதாரணமான வாகனம் ஓட்டும் முறையாக இருக்கலாம். நான் ஒரு முறை என்னுடைய இந்திய நண்பருடன் ஐரோப்பா வந்திருந்தேன் முதல் பயணத்தில் அவர் மேற்கு நாட்டிற்கு வந்திருந்தார் அவரை அதிர்ச்சியடையச் செய்த விஷயம் என்னவென்றால் மக்கள் ஹாரன் ஒலிக்காமலே வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்! ஏனெனில் மேற்கில் மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது இப்படி ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர் முட்டாளைப் போல பார்க்கப்படுவார், அந்த கோணத்தில் அவரை அப்படி அழைப்பது சரியானதே.
இரண்டாவது அளவுகோலானது மேலோட்டமான அல்லது வழக்கமான உண்மையை சரியான முறையில் அறியும் மனதுடன் முரண்படத் தேவையில்லை. சார்பின்றிச் சொன்னால், அந்த நபர் முட்டாள்தனமாக ஓட்டுகிறாரா இல்லையா? நான் என்னுடைய கண்ணாடியை சரியாக அணிந்திருக்கிறேனா? நான் என்னுடைய கேட்கும் கருவியை சரியாகக் கொண்டிருக்கிறேனா? நான் சரியாக கேட்கிறேனா பார்க்கிறேனா? என்னைச் சுற்றி இருக்கும் மற்றவர்களும் அந்த நபர் ஒவ்வொருவரையும் கடந்து செல்ல முயற்சிக்கிறார் ஹாரனை ஒலிக்கிறார் என்பதை பார்க்கிறார்கள், எனவே இந்த வழக்கமான அம்சம் சரியானதாக இருக்கலாம் என்பதில் மற்றவர்கள் பார்வையில் மாறுபடவில்லை.
மூன்றாவது அளவுகோலானது இந்த அடையாளமானது சரியான ஆழ்ந்த உண்மையை பார்க்கும் மனதால் முரண்படவில்லை. இந்த நபர் எப்படி முட்டாளாக இருக்கிறார் என்பதை சரியாகப் பார்க்கும் மனதைக் குறிக்கிறது. அவர் எப்படி ஒரு முட்டாளாக இருக்க முடியும்? வழக்கமாகவே அவர் ஒரு முட்டாளா, அவர் எங்கு எப்படி ஓட்டுகிறார் என்பதைப் பொருத்தா, அல்லது நாம் அந்த நபரை இயல்பிலேயே முட்டாள் என்று முன்நிறுத்துகிறோமா? இந்த நபர் உண்மையிலேயே, இயல்பாகவே முட்டாள் என்று நாம் நினைத்தால், விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பது மனதால் முரண்படுகிறது. இந்த நபர் வழக்கமாக முட்டாள் போல காரை ஓட்டலாம். அது துல்லியமானது, அது ஒரு சரியான வழக்கம், சரியான அடையாளம் சரியான மேலோட்டமான உண்மை. அவன் எப்படி ஒரு முட்டாளாக இருக்கிறான் என்பதை நாம் ஊதிப் பெருக்குவதுதான் நடக்கும். பல விஷயங்களைச் சார்ந்து அவர் ஒரு முட்டாளாக இருக்கலாம் - குறிப்பாக மன அடையாளத்தால், அதைப் பற்றி நாம் விரைவில் பேசப் போகிறோம்.
மேலோட்டமான தோற்றத்தை நாம் ஊதிப் பெரிதாக்குகிறோம் மேலும் அங்கே இல்லாத எதையாவது முன்நிறுத்துகிறோம்: அங்கே உண்மையான இருத்தலின் விதம் என்பது இல்லை. நாம் அதை நிதானத்துடன் செய்யவில்லை, அது சுயநினைவின்றி நடந்தது. இது தானாகவே நடந்தது ஏனெனில் நாம் விஷயங்களிள் அப்படி பார்ப்பது நம்முடைய பழக்கம். ஊதிப்பெரிதாக்கியதால் அவர் இயல்பில் முட்டாள் போல இருக்கலாம். இயல்பிலேயே முட்டாளாக இருக்கிறார் என்ற அந்த முறையானது யதார்த்தத்தில் எதையும் குறிப்பிடவில்லை. மீண்டும், நாம் சாத்தியமில்லாத பொருளின் இல்லாமையைப் பற்றியல்ல சாத்தியமில்லாத வழியில் இருக்கும் இல்லாமை பற்றி பேசுகிறோம்.
"பிறவிக்குணம்" மற்றும் "இயல்பு"க்கு இடையேயான வித்தியாசம்
மன அடையாளத்தின் மூலம் இயல்பாக இருத்தல் என்பதன் பொருள் என்ன என்பதை சற்றே கூர்ந்து பார்ப்போம். பிறவிக்குணம் மற்றும் இயல்பு இடையிலான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் பல பிறவிக்குணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, உணர்வுள்ள உயிரினங்களாக இருப்பதன் ஒரு பகுதியாக நம்முடைய மனத்தொடர்ச்சிகள் பிறவியிலேயே உடல், பேச்சு, மனம், புரிதல், உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கின்றன. நாம் புத்த - இயல்பு மற்றும் புத்த - இயல்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கின்றோம். திபெத்தியத்தில் "பிறவி" என்பதன் தொழில்நுட்ப சொல் லான் - ஸ்கைஸ் (lhan-skyes) சமஸ்கிருதத்தில் சஹஜ என்பது சில நேரங்களில் "ஒரே நேரத்தில் எழுதல்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அதாவது இந்த விஷயங்கள் அந்தத் தொகுப்பின் பகுதி மேலும் அவை மனதின் ஒவ்வொரு கணத்துடன் ஒரே நேரத்தில் எழக்கூடியவை என்று பொருள். அனுபவத்தின் ஒவ்வொரு கணத்திலும், நாம் விழித்திருக்கிறோமோ அல்லது தூங்குகிறோமோ நாம் உடல், பேச்சு மற்றும் மனதைக் கொண்டிருக்கிறோம். தூங்கும் போது நாம் பேச மாட்டோம், ஆனாலும் தகவலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, மற்றவர்கள் நம்மை பார்த்து நாம் தூங்குகிறோம் என்பதை அறிகிறார்கள். தூங்கும் போது நாம் குறட்டை விடாவிட்டாலும் மூச்சுவிடுவதில் குறிப்பிட்ட ஒழுங்குமுறை இருக்கிறது, அந்த மென்மை நாம் உறங்குகிறோம் என்ற தகவலை வெளிப்பபடுத்துகிறது. எல்லா நேரமும் நாம் எப்படி தகவலை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கான உதாரணம் இது. இந்த குணமானது பெரும்பாலும் "பேச்சு" என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், அது வாய்ச்சொல் என்ற எல்லைக்குள் சுருக்கிவிட முடியாது. இவை பிறவிக் காரணிகளாகும்.
"இயல்பு" (திபெத்தியத்தில் rang-bzhin) என்பது மிக வித்தியாசமான ஏதோ ஒன்று. இயல்பாகவே ஒன்று இருந்திருந்தால், அது பிறவிக்குணமாக இருக்கலாம், என்று அர்த்தப்படுகிறது, ஆனால், அதன் சொந்த சக்தி மூலம் அது எதையோ இருக்க வைக்கிறது மேலும் அது என்ன தோற்றமளிக்க வேண்டுமோ அதே விதத்தில் இருக்க வைக்கிறது. சில சமயங்களில் இது குணாதிசயம் சார்ந்ததாகவோ அல்லது ஒரு பொருளின் உள்ளார்ந்த சிறப்பை அது என்ன பொருள்படுத்துகிறது என்பதைப் பேசுகிறது. இந்த முட்டாளுடன், உண்மையில் தவறாக ஏதோ இவரிடம் இருக்கிறது, அது அவருக்குள் இருப்பதை காண முடிகிறது, நிரந்தரமாக அங்கே இருக்கிறது, அவருடைய அந்த சொந்த சக்தியே அவரை முட்டாளாக்குகிறது. அடிக்கடி நாம் இப்படி சிந்திப்போம்: "நமது அண்டை வீட்டில் இருப்பவர் மோசமானவர் எப்போதும் இசை ஒலிக்கச் செய்கிறார்..." அல்லது "நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான மனிதர் இவர்..." அந்த நபருக்குள் உள்ளார்ந்து இயல்பாகவே ஏதோ இருக்கிறது அதுவே எல்லா நேரமும் அவனையோ அல்லது அவளையோ இப்படி இருக்கச் செய்கிறது. உணர்ச்சி ததும்பியவற்றை நான் உதாரணங்களாக பயன்படுத்துகிறேன், ஆனால் எல்லாவற்றுடனும் இதுவே தான். இயல்பிலேயே உங்களைப் பற்றி ஏதோ ஒன்று இருக்கிறது அதுவே உங்களை இயல்பான மனிதராக இருக்கச் செய்கிறது.
கார் ஓட்டுபவருக்கு உள்ளார்ந்து இருக்கும் அந்த விஷயமே இயல்பிலேயே அவர் முட்டாளாக இருப்பதாக காட்டுகிறது எதையும் சாராமல் தன்னுடைய சொந்த சக்தியில் இந்த விதத்தில் அவர் இருப்பதாகக் காட்டுகிறது. அப்படித் தோன்றினாலும் நாம் உண்மையில் பகுப்பாய்ந்தால் நாம் சரியானதைக் கண்டறிந்து அதனை சுட்டிக் காட்ட முடியும். நிச்சயமாக, நாம் பகுத்து ஆராய்ந்தால் அந்தப் பொருள் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை அதன் பக்கத்தில் இருந்து நம்மால் எதையும் கண்டறிய முடியாது. காரில் இருக்கும் இந்த நபரின் அணுக்கள் மற்றும் இயக்கத்தினை ஆராய்ந்தால், அவரை முட்டாளாகக் காட்டும் திடமான எந்த விஷயத்தையும் உங்களால் கண்டறிய முடியாது. இந்த நபரின் செயல்களை நுண்நிமிடங்களாக கணக்கிட்டு ஆராய்ந்தால், ஒரு மில்லிமீட்டருக்கு விரலை இந்த விதத்திலும் அடுத்த மில்லிமீட்டரில் இந்த விதத்திலும் அடுத்தது அந்த விதத்திலும் என்றும் இருக்கும், எனவே அஅந்த நபரை முட்டாளாக்குவது எது? அவரை முட்டாளாக்கும் எந்த ஒரு நுண்நிமிடத்தையும் உங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியாது, முடியுமா உங்களால்? அங்கே சுய சக்தி மூலம் உட்கார்ந்திருக்கும் பொருளின் பக்கத்தில் இருந்து அவரை முட்டாளாக இருக்க வைக்கும் எதையும் அவர் முட்டாளாகத் தோன்றினாலும் கூட நம்மால் கண்டறிய முடியாது.
சாதாரணமாக, அவர் முட்டாள் போல நடந்து கொள்கிறார். மேலோட்டமான தோற்றத்தின் துல்லியத்தையும் அவர் வழக்கமாக இந்த விதத்தில் நடப்பதன் துல்லியத்தையும் மறுக்காமல் இருக்க நமக்கு இங்கே கவனம் தேவை. அவர் முட்டாள் போல நடந்து கொள்கிறார், அது சரி தான். இங்கே சிக்கல் என்னவெனில் அவர் எப்படி முட்டாளாகத் தோன்றுகிறார். இதர காரணிகள் அடிப்படையில் அவர் முட்டாள் போல நடந்து கொள்கிறார்; அவரை மட்டுமின்றி இந்தத் தோற்றம் மற்ற விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது. அவருக்குள் இருக்கும் ஏதோ ஒரு சக்தியால் அவர் முட்டாளாக நடந்த கொள்ளவில்லை. அந்த நபரின் உடல் பாகங்களின் (அவருடைய கை அப்படி நகர்ந்திருக்கலாம்) அடிப்படையிலும், காரணங்கள் (போக்குவரத்தில் இருப்பதாலோ அல்லது அவசரத்தினாலோ) அடிப்படையிலும் முட்டாள் போல நடந்து கொள்கிறார். இயல்பாகவே அவர் முட்டாளாக இருந்தால், கார் ஓட்டாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட அவர் முட்டாள் தான். அவர் இருக்கும் சூழ்நிலை அடிப்படையில் அவர் முட்டாள் போல நடந்து கொள்கிறார். கலாச்சார, உளவியல் மற்றும் சொந்தக் காரணிகள் காரணமாகக் கூட அவர் அப்படி முட்டாள்தனமாக காரை ஓட்டி இருக்கலாம். ஒருவர் முட்டாள்தனமாக காரை ஓட்டுவது இந்த அனைத்து விஷயங்களைச் சார்ந்தும் இருக்கலாம்.
மன அடையாளப்படுத்துதல்
அதே போல, மேலும் கூடுதலாக அடிப்படையில் அந்த நபரின் அறிவாற்றலில் முட்டாள்தனமாக காரை ஓட்டுவது என்பது "முட்டாள்" என்ற கருத்தின் அடிப்படையிலானதாக இருக்கலாம் என்று நாம் கூற முடியும். அப்படி ஒரு கருத்தே இல்லையெனில், அவர் முட்டாள்தனமாக காரை ஓட்டுகிறார் என்று நாம் சொல்லமாட்டோம், அப்படிச் சொல்வோமா? அது நம்மை அடையாளப்படுத்தும் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
மன அடையாளப்படுத்துதல் என்பது சற்றே குழப்பமானது. நாம் இந்த நபரை முட்டாள் என்று அழைத்தால், அதற்காக அவர் முட்டாளாகிவிடப் போவதில்லை, அப்படித்தானே? சிறுபிள்ளைகள் ஒருவருக்கொருவர் "நீ ஒரு முட்டாள்!" என்று கூச்சலிட்டுக் கொள்வதைப் பற்றி நாம் பேசவில்லை. அடையாளங்களும் பெயர்களும் ஒரு விஷயத்தை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்ற சக்தியை கொண்டிருக்கவில்லை. பலரும் மன அடையாளம் என்றால் நாம் விஷயங்களை வார்த்தைகள் மற்றும் கருத்துகள் மூலம் உருவாக்குவதாக நினைக்கிறார்கள். பௌத்தத்தில் மன அடையாளப்படுத்துதலின் பொருள் நிச்சயமாக அப்படி இல்லை.
அதைப் பற்றி சிந்தியுங்கள். நாம் அந்த நபரை முட்டாள் என்று அடையாளப்படுத்துகிறோமோ இல்லையோ, அவரை "முட்டாள்" என்று நினைக்கிறோமோ இல்லையோ, சாலையில் வேறு யாராவது இந்த நபரின் ஓட்டுநர் திறனை பார்த்தார்களோ இல்லையோ, இப்போது வரை அவர் முட்டாள் போலவா காரை ஓட்டுகிறார்? சாலையில் அவர் தனியாக சென்று கொண்டிருக்கிறார், யாரும் அவரை முட்டாள் என்று அழைக்கவில்லை, அப்போதும் கூட அவர் அப்படித் தான் ஓட்டுகிறாரா?
முட்டாள் என்ற கருத்தை கொண்டிருக்கும் ஒரு குழுவிற்கும், அப்படியான கருத்து இல்லாதவர்களுக்குமான வித்தியாசம் இருப்பதை நீங்கள் சொல்ல வேண்டும். எனவே குழுவினர் மற்றும் அவர்களின் கருத்தியல் கட்டமைப்பைச் சார்ந்தது அது. நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட வழக்கத்தினால் இந்த நபர் முட்டாள்தனமாக காரை ஓட்டுகிறார், ஆனால் அவர் நிச்சயமாக இயல்பிலேயே முட்டாள் போல காரை ஓட்டுபவரல்ல என்று கூற வேண்டும். யாராவது அவரைப் பார்க்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டங்கள் மற்றும் பழக்க வழக்கங்களைச் சார்ந்தது இது. இது வேறு எதனையும் சாராதது மற்றும் அந்த நபர் ஓட்டும் விதத்தில் இருந்து முற்றிலும் சுதந்திரமானது என்று நாம் கூறினால், அது சாத்தியமற்றது. மன அடையாளப்படுத்துதல் அடிப்படையில் மக்கள் மிகவும் குழப்பமடையும் விஷயங்கள் இவை.
அதன் பின்னர் நீங்கள் ஆச்சரியப்படலாம், "இந்த நபர் எப்படி காரை ஓட்டுகிறார் என்பதை நம்மால் நோக்கத்துடன் கூற முடியுமா?" பகுப்பாய்வதற்கு இது சிறந்த கேள்வி. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சிக்கல் அதுவே. உண்மையிலேயே அவர் முட்டாள்தனமாக ஓட்டினாரா இல்லையா? உண்மையில் அவர் யார் என்ற உலகிற்குள் நம்மால் செல்ல முடிந்தால், நாம் இயல்பான இருத்தல் உலகில் இருக்கிறோம். இந்த நபர் "முட்டாள்" என்ற கருத்தைச் சார்ந்து, மேற்கத்திய நடைமுறைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முட்டாள்தனமாக காரை ஓட்டுகிறார். அது சுய- நிறுவலின் இயல்பான இருத்தல்; அதுவே சாத்தியமில்லாதது என்பதாகும்.
இந்தக் குழப்பமானது நம்மில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை குறிப்பிடுவதற்கான தொடக்கம் இது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் உண்மையில் விஷயங்கள் எப்படி இருக்கிறது உண்மையில் அவை அப்படி இருப்பதற்கான ஒரு வழி இருப்பதை நாம் அறிய விரும்புகிறோம், இல்லையா? "இது ஒரு அற்புதமான வீடு", அல்லது "இன்று மாலை சிறப்பானதாக இருந்தது" என்று நாம் சொல்கிறோம், அப்படியானால் இயல்பாகவே ஏதோ ஒன்று இருந்திருக்கிறது மேலும் எல்லோரும் அதே விதத்தில் பார்க்க வேண்டும். நாம் இதற்கு மிகவும் பழக்கமாகிவிட்டதால், எல்லாமே தானாகவே அப்படித் தோன்றும், அதை நாம் அப்படி நினைக்கிறோம். இது "ஏமாற்றும் தோற்றம்" என்று அழைக்கப்படுகிறது, சில சமயங்களில் "இரட்டைத் தன்மையின் தோற்றம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கே "இரட்டைத் தன்மை" என்பதன் பொருள், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் போல இல்லாமல் அது முரண்பாடானதாக இருக்கிறது. அது தோன்றும் விதமானது உண்மையில் இருக்கும் விதத்துடன் ஒத்துப்போகவில்லை. கெலுக்-பிரசங்கிகா என்ற சொல்லின் பயன்பாட்டில் இரட்டை தோற்றம் என்பது இதுதான்.
இங்கே விஷயம் என்னவென்றால் இந்த நபர் முட்டாள் போல ஓட்டினாரா இல்லையா? சாதாரணமாக அது சரியே. யாரும் ஏற்றுக் கொள்ளாத அல்லது மற்றவர்களில் யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்ளக் கூடிய பைத்தியக்காரத் தனமான கருத்தை நாம் கொண்டிருக்கலாம். இங்கே ஜெர்மனியில் மற்றவர்கள் இந்த நபர் முட்டாள்தனமாக ஓட்டுகிறார் என்பதை ஏற்பார்கள், ஆனால் அதற்காக உண்மையில் அவர் முட்டாள் என்று அர்த்தமல்ல. ஒரு நாய் ஓட்டுவதாக நாம் கருத்தை கொண்டிருக்கலாம், ஆனால் மற்றவர்கள் யாரும் அதை ஏற்கமாட்டார்கள். மூர்க்கமான மற்றும் சரியான கருத்துகளும் இருக்கின்றன.
மையப்புள்ளி என்னவென்றால், விஷயங்கள் என்ன என்பதை வழக்கமாக அறிய சரியான அறிவாற்றல் உள்ளது. அது மிகவும் முக்கியமானது. இந்த வேறுபாட்டிற்கு திபெத்திய புத்த மதத்தின் பல்வேறு பள்ளிகள் தனித்துவமான விளக்கங்களைக் கொண்டுள்ளன. கெலுக் முறையானது மேலோட்டமான உண்மைகளின் துல்லியமான மற்றும் தவறானவற்றின் அடிப்படையில் பேசுகிறது. ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான மேலோட்டமான உண்மை அது வழக்கமாக இருக்கும் விதத்துடன் ஒத்துப்போவதில்லை. வழமையான ஒன்று என்பதற்கும், அது எப்படி இருக்கிறது என்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
ஸ்வதந்திரிகா மற்றும் பிரசங்கிகாவின் கெலுக் கலந்துரையாடலில் சரியான அடையாளப்படுத்துதல்
ஒரு கருத்து சரியானது என்று நாம் எப்படி அறிகிறோம்? சந்திரகீர்த்தியின் மூன்று அளவுகோல்களை சரியான அடையாளப்படுத்துதலுக்கு நாம் பயன்படுத்தலாம். இங்கே ஸ்வதந்திரிகா -மத்யமாகா மற்றும் பிரசங்கிகா -மத்தியமாகாவிற்கு இடையே தோன்றும் வித்தியாசத்தை கெலுக் விவரிக்கிறது. கெக்யூ இரண்டு பள்ளிகளையும் சற்றே வித்தியாசமாக விளக்குகிறது. மத்தியமாகாவின் முக்கிய அம்சமானது அனைத்து மன அடையாளப்படுத்துதலை சார்ந்து இருக்கிறது என்பதாகும். அதற்காக அவர்கள் மன அடையாளத்தை உருவாக்குகிறார்கள் என்று பொருளல்ல. மத்யமாகா வழங்கலின் முக்கிய அம்சமானது அனைத்தும் மன அடையாளப்படுத்துதலைச் சார்ந்தே இருக்கிறது என்கிறது. மன அடையாளப்படுத்துதலின் மத்யமாகா வழங்கலானது, சித்தமாத்ரா போன்ற இந்திய பௌத்த கோட்பாடுகளின் குறைவான நுட்பமான பள்ளிகள், மனதுக்கும் பொருட்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி விளக்குவதைச் சுத்திகரிக்கிறது. கோட்பாடுகளின் பள்ளிகளை சரியான வரிசையில் படிப்பதன் முக்கிய புள்ளிகளில் ஒன்று, மனதுக்கும் பொருள்களுக்கும் இடையிலான உறவை படிப்படியாக மிகவும் நுட்பமான மட்டத்தில் புரிந்துகொள்வதாகும்.
புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உதாரணங்கள் ஒருவரை "மன்னர்" என்று அடையாளப்படுத்துகிறது. யாரோ ஒருவர் கருத்து மற்றும் வார்த்தை அடிப்படையில் "மன்னர்" ஆக இருக்கிறார். சமுதாய நடைமுறையில் மன்னர் என்ற ஒன்று இல்லாவிட்டால், நிச்சயமாக மன்னர் என்று யாரும் இருக்க மாட்டார்கள். கேள்வி என்னவெனில்: ஒரு அடையாளம் எதனால் சரியாகிறது? விஷயங்கள் தன்னுடைய சொந்த பக்கத்தில் கண்டறியக்கூடிய இயல்பான குணத்தின் விளக்கத்தை கொண்டிருக்கிறது அது என்ன என்பதோடு விஷயங்களை நாம் சரியாக அடையாளப்படுத்தவும் நம்மை அனுமதிக்கிறது என்று ஸ்வதந்திரிகா சொல்கிறது. மன்னருக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அவரை அரசராக்குகிறது அதனால் அவர் "மன்னர்" என்று சரியாக அடையாளப்படுத்தப்படுகிறார். அப்படி இல்லாவிட்டால், ஒரு நாயையோ அல்லது துப்புரவாளரையோ "மன்னர்" என்று நம்மால் அடையாளப்படுத்த முடியும் இதுவே அவற்றை மன்னர்களாக்கும். இதற்குப் பின்னால் சில அரசியல் சிந்தனை இருப்பதையும் நாம் பார்க்கலாம். உண்மையில் அது நகைச்சுவையல்ல. இந்த தத்துவம் இந்தியாவில் வளர்ந்தது, அங்கு சாதிய அடிப்படையில் சிந்தனை மிகவும் முக்கியமானது, எனவே யாரோ ஒருவரை அவரை அல்லது அவளை அரச சாதியின் உறுப்பினராக்குவதில் உள்ளார்ந்த ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அதுதான் ஸ்வதந்திரிகா.
ஒரு நபரிடம் எந்தக் குறையும் இல்லாதவுளுக்கு இருப்பதே அவரை மன்னராக்கும் என்கிறது பிரசங்கிகா. நிச்சயமாக, வழக்கமாக வரையறுக்கும் பண்புகள் உள்ளன. யாரோ ஒருவர் அரச முறையில் நாட்டை ஆட்சி செய்தால் அவர் மன்னர். மன்னர் என்றால் என்ன என்பதற்கு வரையறுக்கப்பட்ட பண்புகள் உள்ளன. அப்படி எதற்கும் வரையறை இல்லை என்றால், விஷயங்கள் செயல்படுவது சாத்தியமற்றது - ஆனால் அவை வழக்கமானவை மட்டுமே. எடுத்துக்காட்டாக, பொருளின் உள்ளே கண்டறியக்கூடிய ஏதோ ஒன்று வரையறுக்கும் குணாதிசயங்கள் உள்ளன, அவற்றின் சொந்த சக்தியால் ஒரு நபரை அரசனாக ஆக்குகிறது என்பதல்ல.
இந்த அடையாளம் சரியானது என்று நாம் எப்படி அறிவது? மீண்டும் நாம் சந்திரகீர்த்தியின் மூன்று அளவுகோல்களுக்கு வருவோம். புரிந்து கொள்வதற்கு இவை முக்கியமானதாக இருப்பதால், மீண்டும் மற்றொரு உதாரணத்துடன் விளக்கமாகக் காண்போம். முதலாவதாக, அங்கே நிறுவப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கம் இருக்கிறது. நாம் வீட்டிற்கு வந்து நம்முடைய இணையரை பார்க்கிறோம். கலந்துரையாடலை எளிதாக்குவதற்காக, அந்த இணையர் ஒரு பெண் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய முகத்தில் குறிப்பிட்ட தோற்றம் இருக்கிறது: அவருடைய புருவம் சுருங்கி, வாய் கோணலாக இருக்கிறது, இந்தத் தோற்றம் நம்மை வருத்தம் மற்றும் கோபமடைய வைக்கிறது. அங்கே வழக்கமான நிறுவல் தேவை. அதுவே முதலாவது அளவுகோலாகும். மனிதர்களிடத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது, குறிப்பாக மேற்கத்திய கலாச்சரத்தில் அவர்கள் வருத்தமாக இருந்தால் புருவத்தை சுருக்கி, வாயை கோணலாக வைத்திருப்பார்கள். நாய்கள் ஊளையிடும், ஆனால் மனிதர்கள் தங்களுடைய வருத்தத்தை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார்கள். மனிதர்கள் வழக்கமாக கோபமாக இருந்தால் என்ன செய்வார்களோ அதையே நம்முடைய இணையரும் பின்பற்றுகிறார். தோற்றத்தை சரியாக்குவதற்கான ஒரு வழி அது. அவளுடைய வெளிப்பாடு அவளது வழக்கமான வடிவத்துடன் ஒத்துப்போகிறதா என்று சோதிப்பதற்காக அவள் வருத்தப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களுடனும் நாம் அதை ஒப்பிடலாம்.
இரண்டாவது அளவுகோலானது மேலோட்டமான உண்மைகளை சரியாக பார்ப்பதனால் மனதால் முரண்படுவதில்லை. நாம் நம்முடைய கண்ணாடிகளை அணிந்து, விளக்கை ஒளிரச் செய்து முகபாவத்தை சரியாகப் பார்க்கிறோம் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இருளாக இருந்தது, நான் சரியாகப் பார்க்கவில்லை அல்லது நாங்கள் கண்ணாடி வைத்திருக்கவில்லை என்று சொல்லக் கூடாது. இந்த அளவுகோலானது மிக நடைமுறையான மற்றும் வெளிப்படைத்தன்மையை குறிக்கிறது.
புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டாலும், நாம் மற்ற அளவுகோளை இரண்டாவது புள்ளியுடன் சரி பார்க்க முடியும், அதாவது ஒரு பயனை உருவாக்குவதற்கான திறன் போன்றவை. உதாரணமாக, நாம் "ஹலோ"என்று சொன்னால், பதிலுக்கு அவர் எதுவும் நம்மிடம் சொல்லவில்லை. இந்தத் தோற்றமே அவர் வருத்தமாக இருக்கிறார் என்பதற்கான துல்லியமான ஆதாரமாகும். வருத்தத்துடன் சேர்ந்து அவருடைய இதர நடத்தைகள் அவர் கோபம் மற்றும் வருத்தத்துடன் இருக்கிறார், வழக்கமாக அப்படி இருந்தால் ஹலோ சொல்லமாட்டார் என்பதை உறுதிபடுத்துகிறது. மற்றொரு விதமாகச் சொல்வதானால், கோபமானது தன்னுடைய வழக்கமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாம் உண்மையிலேயே சரிபார்க்க வேண்டும் என்றால் அவளிடம் நீங்கள் வருத்தமாக இருக்கிறீர்களா என்று கேட்கலாம்.
நாம் அப்படியே விட்டுவிட்டு, "அவள் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார், பல காரணிகள் அடிப்படையில் இன்று அவளுக்கு மகிழ்ச்சியில்லாத ஏதோ நடந்திருக்கலாம்," என்று மட்டுமே சொல்கிறோம், பின்னர் நம்முடைய அறிவாற்றல் நிச்சயமாக சரியே. ஆழமாகச் சென்று விஷயங்கள் எப்படி இருக்கின்றன, எப்படி நம்முடைய இணையர் கோபமாக இருக்கிறார் என்பதைச் சரியாகக் காணும் மனதுக்கு இது முரண்படாது.
நம்முடைய இணையர் ஏதோ ஒரு காரணத்திற்காக கோபமாக இருக்கிறார் என்று மட்டும் நமக்குத் தோன்றவில்லை, மாறாக, அடக் கடவுளே, மீண்டும் அவள் கோபமாக இருக்கிறாள். அவள் ஒரு முன்கோபி, எல்லாவற்றிற்கும் எப்போதும் வருத்தப்படுகிறாள். என்னால் அதை சமாளிக்க முடியாது!" என்று நினைக்கிறோம் ஆழமான உண்மையை பார்க்கும் மனதுடன் இது முரண்படுகிறது. யாரும் இயல்பிலேயே அப்படி இருக்கவில்லை.
இதன் மூலம் ஒரு நபர் கோபமாக இருப்பதற்கான உள்ளார்ந்து ஏதோ தேவை இருக்கிறது அது இல்லாமல் ஒருவர் வருத்தம் மற்றும் கோபமாக இருக்கிறார் என்று அடையாளப்படுத்துவதை நாம் சரிபார்க்கிறோம். வெற்றிடம் பற்றி நாம் பேசினால், அவள் மோசமானவர் என்று நினைக்கும் போது அதைப் பற்றி பேசுகிறோம். வெற்றிடம் என்பது அந்த விதத்தில் இருப்பதற்கான இல்லாமை: இந்த நபருடன் உண்மையில் ஏதோ தவறு இருக்கிறது அது அவளுக்கு உண்மையான வலியை கொடுத்து அதனுடன் வாழவைக்கிறது என்ற இல்லாமை அங்கே இருக்கிறது. அவர் அப்படி இருக்கிறார் என்று உண்மையில் நாம் நம்பினால், நாம் தொந்தரவான விதத்தில் நடந்து கொள்கிறோம். நாம் அவளுடனும் அவளுடைய பொறுமையின்மையுடனும் வருத்தப்படுகிறோம்.
“நம்முடைய இணையர் ஏன் கோபப்படுகிறார் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் நாம் புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் சூழ்நிலையைக் கையாள்வது சார்ந்து இருக்கிறது அல்லவா?” என்று நீங்கள் கேட்கலாம். சரி, அவள் ஏன் கோபமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, காரணங்கள் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலேயே அப்படி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; எப்போதும் கோபமாக இருப்பது அவளுடைய இயல்பு அல்ல. ஏதேனும் சூழ்நிலை மாற்றமா இருக்கலாம் என்று பார்ப்பதற்கு இது நம்மை அனுமதிக்கிறது. இருப்பினும், "என்னுடைய இணையர் கோபம் மற்றும் வருத்தமாக இருக்கிறார்" என்று சொல்வது சரியாக இருக்கும். இது மிக முக்கியமானது. நம்முடைய இணையர் வழக்கமாக வருத்தமாக இருக்க மாட்டாள் என்பதை நாம் ஏற்காவிட்டால், எதன் அடிப்படையில் நாம் இரக்கப்பட்டு அவளுக்காக உதவி செய்வோம்? பயனுள்ள முறையில் அவளை அணுகுவதன் முலம் அனைத்தும் வீழ்ந்துபோகிறது மேலும் சுயமில்லா தத்துவத்தின் உச்சத்திற்கு வீழ்கிறோம்.
மேலோட்டமான உண்மை என்ன என்பதை துல்லியமாக அங்கீகரிப்பதன் வலியுறுத்தலானது வெற்றிடம் மற்றும் வெறுமை இடையேயான மிக நெருக்கமான தொடர்பை புரிந்து கொள்ள அனுமதிக்கிறது. அது இல்லாமல், மற்றவர்களை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் அது மற்றவர்களின் பிரச்னைகளில் இணைவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் உண்மையில் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது. இது மிகச் சிறிய விஷயமே, ஆனால் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
சார்ந்து எழுதல் மற்றும் கர்மா
சார்ந்து எழுதலை நீங்கள் புரிந்து கொண்டால், உண்மையில் நேர்மறை மற்றும் எதிர்மறை செயல்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையானவை என்பதால் அவற்றை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது. அது மிகச் சரியானது. நாம் சார்பியல் பற்றி பேசும்போது, எதுவாக வேண்டுமானால் இருக்கலாம் என்ற நிலைக்கு நாம் விஷயங்களைக் குறைக்கூடாது. உந்துதல் எதுவாக இருந்தாலும் கொல்வது அழிவுதான். படகில் இருந்த 499 வணிகர்களைக் கொல்லச் சென்ற படகோட்டியை புத்தர் கொன்றது மிக உறுதியான இரக்கத்துடன் என்றாலும் ஒருவரைக் கொல்வது என்பது அழிவுகரமான செயலே. அதுவே துன்பப்படுவதற்கான அனுபவமாக கனிந்து விடும்: புத்தர் தன்னுடைய காலில் முள்ளை குத்திக் கொண்டார். வலுவான இரக்க உந்துதல் காரணமாக துன்பம், எதிர்மறையான விளைவுகள் மிகவும் சிறியதாக இருக்கின்றன, ஆனாலும் அது ஒரு அழிவுகரமான செயலே, கர்மாவின் விதிகளின் பிடிமானம் இன்னும் இருக்கிறது: அழிவுகரமான செயல் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்மறை செயலின் உறுதியானது தொடர்புடையது, ஆனால் அது முற்றிலும் தொடர்புடையது அல்ல - ஒரு அழிவு நடவடிக்கை ஆக்கபூர்வமான ஒன்றாக மாற முடியாது. பிரபஞ்சத்தில் ஒரு முறை இருக்கிறது என்பதை பௌத்தம் ஒப்புக்கொள்கிறது.
சாதாரணமாக, கொலை செய்தல் என்பது அழிவுகரமான செயல். ஆனால் அதை அழிவுகரமாக்குவது என்ன? நம்மால் சொல்ல முடிந்தது என்னவென்றால் கொல்லும் செயலில் அதன் சுய சக்தியில் அழிவுகரமான செயலாக்கும் எதுவும் இல்லை. யாரோ ஒருவர் அங்கே கொலையை செய்திருக்கிறார், யாரோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் அதனால் தாக்கம் அடைந்திருக்கும் மனத்தொடர்ச்சியானது முடிவில் துன்பத்தை அனுபவிக்கப்போகிறது என்பதைச் சார்ந்தது அது. கொலை செய்தவரின் மனத்தொடர்ச்சியின் பகுதியாக தொடரும் செயலின் எதிர்மறையான கர்ம சக்தியால், கொலை செய்த நபர் அதன் விளைவாக துன்பத்தை அனுபவிக்கிறார். காரணம் மற்றும் விளைவைப் பொருட்படுத்தாமல் "அழிவுபடுத்தக்கூடியது" என்ற அடிப்படையில் நாம் பேச முடியாது. இது வெறுமனே வானளவில் உயர்ந்த அழிவுகரமானது மட்டும் அல்ல. அழிவு என்பது குற்றம் செய்பவருக்கு துன்ப அனுபவத்தில் இருந்து கனியும் ஒரு குறிப்பிட்ட செயலாகும்.
பிறகு கொலை செய்யும் செயலை அழிவுகரமாக்குவது எது? மற்றவற்றை விட காரணிகள் அடிப்படையில் அந்தச் செயல் அழிவுகரமானது - இந்த விவகாரத்தில், செயலின் கர்ம வினை. அதன் பக்கத்தில் இருந்து அந்தச் செயல் இயல்பிலேயே அழிவுகரமானதல்ல, அதனுள் காணப்படும் ஏதோ ஒன்றின் அடிப்படையில் அப்படி உருவாக்கப்பட்டுள்ளது.
அன்றாட சூழ்நிலைகளில் அடிப்படி செயல்படுத்தும் விஷயத்தை மற்றொரு உதாரணமாக பயன்படுத்துவோம். நம்முடைய நாயானது சமையலறையில் எதிர்பாராத ஒன்றை செய்வதனால் நாம் கோபமடைந்து "கெட்ட நாயே! நீ தரையை அழுக்காக்கிவிட்டாய்! நீ மோசமான இந்த விஷயத்தை செய்துவிட்டாய்!" என்று கத்துகிறோம். அந்தச் செயல் வேறு எதையும் சாராமல் தானே சுயாதீனமாக மோசமானதாக இருக்கிறது. இந்த உதாரணத்தில், கர்ம வினையால் அந்த நாய் அனுபவிக்கப்போவதை விட அச் செயலால் "மனிதன்-உருவாக்கியுள்ள" விளைவை எளிதாகச் சிந்திக்க முடியும். கர்ம வினைக்கும் மனிதன் -உருவாக்கியுள்ள வினைக்கும் இடையிலான வேறுபாட்டை தயவு செய்து கவனியுங்கள். மனிதன்- உருவாக்கியுள்ள, அல்லது இந்த விஷயத்தில் நாய்- உருவாக்கியுள்ள செயலின் வினையானது நாய் அசுத்தம் செய்த விட்டது நாம் சுத்தம் செய்ய வேண்டும். அந்த அளவுகோளின் அடிப்படையில் தரையில் அந்த நாய் செய்த செயல் நல்லதல்ல.
சார்ந்து எழுதல் மற்றும் விருப்பங்கள்
சரியான அடையாளப்படுத்துதல் மற்றும் விருப்பம் என்றும் இந்த கலந்தரையாடலின் வெளிச்சத்தில், சரியான முடிவுகளை எடுப்பதற்கு நாம் என்ன பரிந்துரைக்க முடியும்? எந்த முடிவை எடுப்பதானாலும் அதில் பல வெவ்வேறு காரணிகள் சேர்ந்து இருக்கின்றன. இது வெறுமனே ஒன்று அல்லது மற்றொன்றுன்னு மாற்றாக ஒரு இக்கட்டான நிலைக்கு பதில் அல்லது தீர்வு என சரியாக அடையாளப்படுத்துவது அல்ல. வழக்கமாக மிகச் சரியான முடிவு என்ன என்பதை தீர்மானிக்க நமக்குத் தேவை, உதாரணமாக, முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அது ஒரே விஷயத்தால் நடக்கவில்லை. நம்முடையச் செயல்கள் மற்றும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற நமது முடிவுகளின் முக்கியத்துவம் பற்றி ஊதிப்பெரிது படுத்தாமல் இருப்பது முக்கியமானதாகும். நாம் எதாவது சொன்னால், உதாரணமாக, யாராவது வருத்தம் அடைகிறார் என்றால் நாம் சொன்னது மட்டுமே காரணமல்ல அவரை வருத்தமடையச் செய்ய மேலும் இதர பல காரணிகளும் இருக்கின்றன.
"நல்ல நோக்கங்களைக் கொண்டிருக்கும் வரையில், நாம் என்ன செய்ய முடிவெடுத்தாலும் அது சரியே" என்று சொல்வது சற்றே எளிதானது, ஆனால் "நரகத்திற்கு போகும் பாதையும் நல்ல நோக்கத்துடனே அமைக்கப்பட்டிருக்கிறது" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இருப்பினும், நாம் பல நோக்கங்கள் மற்றும் உந்துதல்களைக் கொண்டிருக்கிறோம் மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு மாற்று நடவடிக்கையின் பின்னாலும் ஒன்று மட்டுமே இல்லை, அதனால் அது மிகவும் சிக்கலானது.
"தன்னிச்சையாக செயல்படு" என்று சிலர் சொல்வார்கள், ஆனால் தன்னிச்சையாக என்றால் பெரும்பாலும் பதற்றமான என்று அர்த்தம். நம்முடைய குழந்தை அழுதால் முதலில் நம்முடைய மனதில் தோன்றும் விஷயம் அதனை அடிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது, தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால் அது சிறந்த முடிவு என்று நம்மால் சொல்ல முடியாது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் சாத்தியமுள்ள பல வெவ்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள முயற்சிக்க வேண்டும், குறிப்பாக ஒரு உறவுமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் அல்லது பணியை மாற்றும் முடிவில் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன், நான் என்ன செய்ய வேண்டும், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த நான்கும் வித்தியாசமாக இருக்கலாம்.
உதாரணமாக, நாம் உணவுக் கட்டுப்பாட்டில் செல்ல வேண்டும், என்னுடைய உணவு முறையில் நான் பிடிமானமாக இருக்க வேண்டும், ஆனால் எனக்கு ஒரு துண்டு கேக்கை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. அப்படிச் சாப்பிட்டால் பின்னால் குற்ற உணர்வுக்கு ஆளாவேன் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. முடிவின் நான்கு அம்சங்களையும் அதே சமயம் ஒவ்வொன்றிற்கான காரணங்களையும் நாம் பகுப்பாய வேண்டும். கேக் மீதான பேராசையால் சாப்பிட வேண்டும் என்று தோன்றி இருக்கலாம். நாம் ஏன் உடல் எடையை குறைக்க வேண்டும்? ஆரோக்கியத்திற்காகவா, தற்பெருமைக்காகவா, அல்லது ஜோடியை தேடுவதற்கு மேலும் ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவா? நாம் செய்யும் செயல்களின் விளைவுகளையும் நாம் எடைபோட வேண்டும், பின்னர், ஒரு வகையில், அனைத்து வெவ்வேறு காரணிகளையும் எடைபோட்டு, எது சரி எது தவறு என்பதைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, "நான் இப்போது சாப்பிட வேண்டாம், எனக்கு சாப்பிட விருப்பமில்லை, ஆனால் நான் இப்போது சாப்பிடவில்லை என்றால், நாள் முழுவதும் சாப்பிட வாய்ப்பு கிடைக்காது. எனவே, நான் இப்போது ஏதாவது சாப்பிடுவது நல்லது".
இந்த விதத்தில், அனைத்து வெவ்வேறு காரணிகளுக்கும் முடிந்தவரை உணர்திறன் கொண்ட முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம். குறிப்பாக கடினமான முடிவுகளை எடுக்கும் போது இது மிகவும் முக்கியமானதாகும். நான் கறுப்பு அல்லது நீல நிற சட்டையை அணியலாமா, உணவுவிடுதியில் இருக்கும் மெனுவில் இருந்து எதைத் தேர்ந்தெடுப்பது போன்ற முடிவுகளில் - ஏதோ ஒன்றை தேர்ந்தெடுங்கள், அது பெரிய விஷயமல்ல. நாம் அதிகமாக சென்று ஆராயத் தேவையில்லை. முடிவெடுப்பது எளிதானதல்ல.
சிக்கலான உணர்ச்சிகள் மற்றும் மனப்பான்மைகளின் ஆறு வேர்களில் ஒன்று நம் மனதைத் தீர்மானிக்க முடியாமல் அலைந்து திரிவது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பலவீனப்படுத்தும் இந்த மனநிலையை வெல்வதற்கு, நாம் எதையாவது செய்யவோ அல்ல செய்ய விரும்பும் காரணிகளின் ஆழமான தர்ம பகுப்பாய்விற்கு நாம் திரும்ப வேண்டும். கர்மா மற்றும் மனதின் செயல்பாடுகள் பற்றிய போதனைகள் இந்த காரணிகளின் எழுச்சியை மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன முறையில் விளக்க முடியும். அதற்குள், திபெத்திய புத்த மதத்தின் பல்வேறு பள்ளிகள் சரி மற்றும் தவறானவை என்று கூறும் காரணிகளை நாம் பகுப்பாய்வு செய்யலாம்.
எனவே சரியான முடிவை எடுத்திருக்கிறோம் என்று நாம் எப்படி அறியலாம்? நாம் புத்தர்களாக இல்லாவிட்டால், நாம் சரியான முடிவை எடுத்திருக்கிறோமா என்பதை நாம் எப்போதும் அறிய முடியாது. நம்முடைய செயல்களின் விளைவுகள் நமக்குத் தெரியாது. அதே போல ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள மாற்றங்களுக்கு நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும், குறிப்பாக உறவுமுறையை முடித்துக்கொள்ளும் முடிவுகளில். இது கஷ்டமான ஒன்று. சாத்தியமுள்ள பல காரணிகளை மதிப்பிட்ட பின்னர், மற்ற நபருடன் நாம் கலந்துரையாடி அது எப்படி வளர்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
வெற்றிடத்தின் நம்முடைய கலந்துரையாடலில், இந்தச் சூழலில் வெற்றிடம் என்பது அதன் பக்கத்தில் இருந்து சரியான முடிவை எடுப்பதற்கு சூழ்நிலையில் இயல்பாகவே இருக்க வேண்டிய ஏதோ ஒன்று இல்லை. அது அப்படி இருக்கவில்லை; அதுபல வெவ்வேறு விஷயங்களைச் சார்ந்தது. நாம் முடிவெடுக்கும் அல்லது சொல்லும் ஒன்று, அதன் சொந்த சக்தியால், என்ன நடக்கிறது என்பதன் விளைவைக் கொண்டு வரப் போவதில்லை. என்ன நடக்கிறது என்பது, நாம் செய்வதிலிருந்து மட்டுமல்லாமல் ஒரு மில்லியன் வெவ்வேறு காரணங்களால் எழுகிறது.
நாம் செய்த காரியம் ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றலாம், அதனால் நாம் குற்றவாளிகளாக இருக்கிறோம், நமது செயல் இயல்பாகவே இருப்பது போலவும் அதன் சொந்த சக்தியால் விஷயங்களைக் குழப்பியது போலவும் இருக்கலாம். நமக்கு அப்படித் தோன்றுகிறது நாமும் அதை நம்பி குற்றஉணர்ச்சி கொள்கிறோம். வழக்கமாக, குழப்பத்திற்கு நாமும் பங்காற்றுகிறோம், ஆனால், நிச்சயமாக, நாம் என்ன செய்தோமோ, அதன் சுய சக்தியில், எதையும் சாராமல் சுயாதீனமாக, எந்த குழப்பத்தையும் உருவாக்கவில்லை. பல காரணங்கள் இருக்கின்றன. புத்தர் சொன்னது போல ஒரு வாலி முதல் சொட்டு நீராலோ கடைசி சொட்டு நீராலோ நிரம்பிவிடாது; ஒட்டுமொத்த நீர்த்துளிகளாலேயே வாலி நிரம்புகிறது. ஒரு விளைவை கொண்டு வருவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணிகள் இருக்கின்றன என்ன நடந்ததோ அதற்கு அவையும் பொறுப்பானவை.
பொறுப்பு மற்றும் குற்றஉணர்வு
உதாரணமாக, ஒரு கிளாஸ் நீரை நான் தரையில் சிந்தி அலங்கோலமாக்கிவிடுகிறேன். இந்த அலங்கோலமானது நான் கிளாஸை கொட்டியதால் மட்டுமல்ல, அந்த கிளாஸை மேசையின் நுனியில் வைத்த நபராலும் தான் நடந்திருக்கிறது, உயரத்தில் இருந்தது, வெளிச்சம் இல்லாததால் என்னால் பார்க்க முடியவில்லை - என்பன போன்ற மில்லியன் காரணங்கள் அடங்கி இருக்கிறது.
இப்போது நிச்சயமாக அந்த மேசையை உருவாக்கியவர் அல்லது கிளாஸை நுனியில் வைத்தவர்தான் அளங்கோலத்திற்கு காரணம் என்று நாம் சொல்ல முடியாது. நாம் குற்றஉணர்வு கொள்ளவில்லை மாறாக பொறுப்பு ஏற்கிறோம். நான் தண்ணீரை கொட்டிவிட்டேன் அதற்காக அது என்னை இயல்பிலேயே அருவருப்பான முட்டாளாக்கவில்லை - அதனால் நீங்கள் என்னை எங்கும் அழைத்துச் செல்ல மாட்டீர்கள் ஏனெனில் நான் பொருட்களை சிந்திவிடுவேன். மக்கள் இது போன்ற விஷயங்களை தங்கள் அடையாளமாக்கி கொள்கிறார்கள்: "நான் அருவருப்பானவன்" அல்லது "உடையாமல் அந்த பல்பை என்னால் மாற்ற முடியாது, அதனால் எனக்கு உதவுங்கள்" என்பன. இவையெல்லாம் மிகப் பொதுவான சிந்தனைகள். நாம் அனைவரும் கொண்டிருக்கிறோம். நாங்கள் சில அதிநவீன தத்துவ விஷயங்களைப் பற்றி பேசவில்லை; நாம் அன்றாட வாழ்க்கையைப் பற்றி பேசுகிறோம்.
"குற்றஉணர்வு" என்பதன் பொருள் இயல்பிலேயே நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நம்மை மோசமானவராக்குகிறது மேலும் நாம் என்ன செய்தோமோ அது இயல்பிலேயே மோசமானது. நாம் ஏதோ செய்திருக்கிறோம், நாம் என்ன செய்தோமோ அது இயல்பிலேயே தவறானது மற்றும் நமக்குள்ளாகவே மோசமான நபர்களாக இயல்பிலேயே அடையாளப்படுத்துகிறோம், மேலும் அந்த குறியீடுகளைப் பிடித்துக் கொண்டு அதனைப் போக விடுவதில்லை. வெற்றிடத்தின் புரிதலுடன், அவர்களின் பக்கத்தில் சுயாதீன நிறுவலுடன் இயல்பிலேயே யாராலும் "கெட்டவராக" இருக்க முடியாது. நாம் இதை ஆழமாக புரிந்து கொண்டால், நாம் குற்றஉணர்வாக உணர மாட்டோம், ஆனால் வெற்றிடத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், நம்முடைய செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்வோம்.
சுருக்கம்
வெற்றிடத்தின் புரிதலுடன், நமக்கு பக்கத்தில் காரை ஓட்டிச் செல்பவர் ஹாரனை ஒலிக்கச் செய்தாலும் நம்மை கடந்து செல்ல முயற்சித்தாலும், நமக்கு முட்டாள் போல தோற்றம் அளித்தாலும், இது யதார்த்தத்திற்கு ஒத்து போகிறது என்பதை நாம் உண்மையில் நம்ப மாட்டோம். "இது" அல்லது "அது" என்ற கருத்து மற்றும் "முட்டாள்" என்ற வார்த்தை மற்றும் பல காரணிகளைச் சார்ந்து எப்படி விஷயங்கள் எழுகின்றன என்பதைப் பார்க்கிறோம். இந்தப் புரிதலுடன், நபருடன் நாம் கோபமடையவில்லை பொறுமை இழக்கவில்லை. ஜெர்மானியர்களின் பார்வையில் அவர் சாராணமாக முட்டாள்தனமாக ஓட்டுவதாகத் தோன்றலாம், ஆனால் இயல்பிலேயே அவர் மோசமான நபராக இருக்கிறார் என்று அவரை குற்றஉணர்விற்கு ஆளாக்கவில்லை.